தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar

» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar

» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar

» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar

» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar

» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடவுள் கடவுளாகிப்போனார்!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jan 29, 2013 12:03 pm

First topic message reminder :

கடவுள் – 1

எனக்கு ஏன் இந்த வேலை?
கடவுளைப் பார்தால் கேட்க வேண்டும்
என்பான் சலூன்காரன்.
உண்மையை மறைக்காத கண்ணாடி
சலூன்காரன் முன்
கடவுளின் முகத்தைக்
கண்ணாடியில் பிரதிபலித்தது.
சலூன்காரன்
கடவுளுக்கு
முடிதிருத்தம் செய்துகொண்டே
பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்
தொலைக்காட்சியில்
சேனலை மாற்றி மாற்றி
குத்துப் பாடல்களை!
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 10:38 am

கடவுள் – 14

முதியவன் தோற்றம் தரித்து
கடவுள் முதியோர் இல்லத்தில்
அடைக்கலமானார்!
பணம்தான் குறையாக இருந்தது
அன்பும் பாசமும்
கொட்டிக் கிடைத்த
குடும்ப வாழ்க்கையில்
இன்று அனாதையாகக் கடவுள்!
பெற்றப் பிள்ளைகள்
கையில் பணம் இருக்கிறது என்பதற்காகப்
பெற்றோர்களை அனாதையாக்குவதா? என்றதற்கு
அங்கிருந்தவர்கள்
மகனைத் திட்டாதீர்கள் என்றார்கள்.
அவர்களுக்குப் பாடம்
கற்பிக்க வேண்டும் என்றார்.
அவர்கள்
“நாங்கள் படிக்க வைத்த
ஆங்கிலப் பாடமும் சரி இல்லை
அவர்களாகப் படித்தப் பாடமும்
சரி இல்லை” என்றார்கள்.
பிறகு தண்டிக்காமல் இருப்பதா?
விட்டுவிடுங்கள்… அவர்கள் தம் பிள்ளைகளுக்கு
நாங்கள் தராத கல்வியைத்தானே தருகிறார்கள்.
தாமதமாக அவர்களும் இங்கு வருபவர்கள்தான்!
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by மகா பிரபு on Tue Feb 19, 2013 3:50 pm

ஒவ்வொன்றும் மிகவும் அருமை..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 4:15 pm

மிக்க மகிழ்ச்சி...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Feb 20, 2013 5:34 pm

கடவுள் – 15

கவிதை எழுத
பேப்பர் தேடிக்கொண்டிருந்தார் கடவுள்.
பேப்பர் கிடைத்ததும்
பேனாவில் மை தீர்ந்திருந்தது.
அதையே கவிதையாக்கி
“பேனா இருக்கும்
எழுத மை இருக்காது.
பக்கத்தில் காதலி இருப்பாள்
உதட்டில் முத்தம் இருக்காது” என்று எழுதி
கவிஞராகிவிட்டார்!
அடுத்தடுத்த இரண்டு படைப்புகள்
சாகித்திய அகாதெமி விருதுக்கான
தகுதியைப் பெற்றிருந்தும்
விருது கை நழுவிப்போனது.
ஐந்தாம் ஆண்டு -
கருவற்ற கவிதைத் தொகுதிக்கு
சாகித்திய அகாதெமி விருது கொடுக்கப்பட்டது!
இந்த ஆண்டு
இவருக்குக் கொடுக்க வேண்டும் என்று
ஏதோ ஒரு காரணத்துக்காக
விருது கொடுக்கப்படுகிறது என்பதை உணர்ந்த
கடவுள் மகிழ்ச்சியின்றி
மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி
பேட்டிக் கொடுத்தார்.
பத்திரிகையில்
பணம் கொடுத்து வாங்கிவிட்டாரென்று
மறுநாள் தலைப்புச் செய்தியானது.
இன்றும் பரிசுக்குரிய படைப்புகள்
பரிசு பெறாமல் போவது
அரசியலால்தான் என்பதை உணர்ந்தார்!
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by முரளிராஜா on Thu Feb 21, 2013 7:22 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் சூப்பர்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Feb 22, 2013 8:59 pm

கடவுள் – 16

இளைஞனான
கடவுள் டீவியைப் போட்டான்…
அட என்ன ஒரு விளம்பரம்!
ஒரு பொண்ண பிக்கப் பண்ணணுமுன்னா
ஒரு பைக் வாங்கினாலே போதும்போல
எப்படி லிப்ட் கேக்கிறாள் பாறேன்.
மறு நாளே…
அப்பா காலேஜ் போனனுமுன்னா
பைக் வேணும்…
அதுவும் இந்த மாதிரி பைக் தான் வேணும்…
ஏங்க உங்க புள்ள சாப்பிடமாட்டின்றான்
சரிடா நாளைக்கு வாங்கிக்கலாம்
ஏன் இன்னிக்கே வாங்கிக் கொடுத்தா என்னவாம்
முரண்டு பிடித்தார் கடவுள்.
பைக் வாங்கியாகிவிட்டது…
7 நாள் சுத்தியாகிவிட்டது
காலேஜியில் கூட படிக்கிற
பொண்ணுங்க கூட லிப்ட் கேக்கல…
கோபத்தில் டீவியைப் போட்டார் கடவுள்.
அட அதே பொண்ணுதான்
இப்ப காருல லிப்ட் கேட்டு போறாளே!
ஆசை யாரை விட்டது.
அப்பாவிடம் பிட் போட்டார்
கார் வாங்கியாகிவிட்டது.
பொண்ணுங்க ரோட்டுல
நிற்பதைப் பார்த்தால் சைடாக வந்து
லிப்ட் வேணுமான்னு வாலன்டரியா கேட்டான்
எந்தப் பொண்ணும் ஏறவேயில்லை…
நம்மள இந்த விளம்பரக்காரனுங்க
நல்லாதான் ஏமாத்துறானுங்களோ என்று
நினைத்துக்கொண்டே
டீவியைப் போட்டான்
அடப்பாவி அந்தப் பொண்ணு…
ஆமாம் அதே பொண்ணுதான்!
மேலே போற ப்ளைட்டுக்கு
லிப்ட் கேட்பதுபோல நின்றிருந்தால்!
அப்பாவிடம் ப்ளைட் வேணுமுன்னு
கேட்க முடியாதே என்று
பஸ்லிலேயே போக ஆரம்பித்தார்
ஆச்சரியம்
முதல் பார்வையிலேயே
ஒரு பெண் சிக்கிக்கொண்டாள்!
துள்ளிக் குதிக்க நினைத்ததில்
கடவுளும் அருகில் இருந்தவனும்
பஸ் படிக்கெட்டிலிருந்து விழுந்து
பரிதாபமாகச் செத்தே போனார்கள்
அவரின் அப்பாவும் அம்மாவும்
அழுதுக் கொண்டு நின்றிருந்தார்கள்.
காரியம் முடிந்ததும்
அப்பா டீவியைப் போட்டார்
அதே பைக் விளம்பரம்
ரிமோட்டை எழுத்து வீசினார்
டீவி உடைந்தது.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by Surendhran on Sat Feb 23, 2013 8:55 am

கைதட்டல் கைதட்டல்
avatar
Surendhran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 01, 2013 4:39 pm

கடவுள் - 17

ME படித்து
மாதம்ஒன் லேக் சம்பளம் வாங்கும்
மணப்பெண்ணாக மாறி
பெண் பார்க்கும் படலத்திற்காகக்
கையில் டீ கிளாஸ்களுடன் நின்றிருந்தார் கடவுள்!
இப்படி நிற்பது நான்காவது தடவையென்று
தங்கச்சிக்காரி சிரித்துக்கொண்டாள்.
அதிகம் படிச்சிட்டாகூட
மாப்பிள்ளை அமைவது கஷ்டம்தான்போல…
ஒரு வழியாக மாப்பிள்ளை ஓகே சொல்ல
திருமணம் சிறப்பாக நடந்தேறியது.
பின்னர் அறங்கேறியது நாடகம்.
அதான் ஆச 60 நாள்
மோகம் 30 நாளுன்னு சொல்வாங்களே!
எல்லாம் முடிஞ்சதும்
ஆரம்பமானது சமையல் செய்யும் பிரச்சினை…
என்னத்தான் சமையல் செய்யறையோ?
ஏன் நானும்தான் சம்பாதிக்கிறேன்
நீங்களும் சமையல் செய்யுங்கள்
பொண்ணுங்க மட்டும்தான் செய்யனுமோ?
சரி இல்லையின்னா சமையல்காரியை வைத்துக்கொள்ளலாம்.
பிரச்சினை இப்படி வந்தது:
நீங்க சமையல்காரியை வெச்சிட்ட கீறிங்கன்னு
டவுட்…
லட்ச லட்சமா சம்பாதித்து என்ன பிரயோசனம்
விவாகரத்தில் வந்து நின்றது கடவுளின் வாழ்க்கை.
கணவனுக்குத் துரோகம் செய்யாத
வேலைக்காரியின் கற்பு
களங்கப்படுத்தப்பட்டது.
வேலைக்காரியின் கணவன் சொன்னான்:
நீ ஏன்டி அழற
பாத்திரம் கழுவும்போது
உன் கைகள்தான் கறைபடும்
உன் கற்புக்கு கறை படாது!
நீ வேற வீட்ட பாரு
பையனையும் பொண்ணையும்
படிக்க வெக்க
நமக்கு வேற என்ன வேலை தெரியும்?

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 03, 2013 5:47 pm

கடவுள் - 18

திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டார் கடவுள்.
முதல் வேலையாக
முதிர்க்கன்னி பட்டம் தராத
40 வயது நடிகைக்குத் திருமணம் என்ற
ரகசியத் தகவலை அறிந்ததும்
அவள் வயிற்றில்தான் பிறக்க முடிவெடுத்தார்.
அப்படி முடிவெடுத்ததற்காகப் பின்னர் வருந்தினார்.
மூன்றாம் மாதம் வயிற்றில் இருக்கும்போதுகூட
குத்தாட்டத்துக்கு ஒப்புக்கொண்டதால்
வயிற்றில் இருந்து சிரித்துக்கொண்டார் கடவுள்.
முன்னாள் நடிகையோ
குழந்தை உதைப்பதாகச் சிலிர்த்துப்போனாள்…
பெண் குழந்தையாகப் பிறந்தார் கடவுள்.
பொத்தி பொத்தி வளர்த்ததில்
வளர்ந்து நின்றாள்.
அவளை நடிகையாக்கக்கூடாது என்ற
இறுக்கம் தளர்ந்தது.
முதல் படத்திலேயே
தனக்கு நண்பனாக –
காதலனாக-
கணவனாக-
நான் அவனுக்குத் தாயாக –
பாட்டியாக
நடித்த அந்த நடிகனுக்கு
இவள் காதலனாக நடிக்கும்
வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ந்துபோனாள்.
நான் யாரிடமும் சிபாரிசு கேட்கவில்லையென்று
செய்தித்தாள்களில் பேட்டிகள்…
முதல் படம் பிளாப்…
என்ன காரணம் என்று ஜோசியம் பார்த்தாள்.
கவர்ச்சி குறைவாம்.
தராளமாக்கினாள்
படங்கள் வெள்ளி விழா கொண்டாடப்பட்டன…
பணத் தேவைக்காக
எல்லா மொழிப் படங்களிலும்
நடித்தான்… நடித்தாள்… நடித்தாள்…
திருமண வயதைத் தாண்டியும் நடித்தாள்.
ஐந்தாறு நடிகன்களுடனும்
பத்து பதினைந்து தொழிலதிபர்களுடனும்
நான்கு கிரிக்கெட் வீரர்களுடனும்
கிசுகிசுக்கப்பட்டாள்…
நாற்பது வயதைக் கடந்தாள்…
அம்மா மாதிரியே பொண்ணுன்னு
பேசப்பட்ட சூழ்நிலையில்தான்
செய்தித்தாள்களில் முதல்பக்கச் செய்தியானாள்
தனி அறையில் தற்கொலை!

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 08, 2013 6:57 pm

கடவுள் – 19

பூ பழம் தேங்காய் உடன்
கோயிலுக்குச் சென்றார் கடவுள்!
பீய்ந்த செருப்பை விட
கட்டணமாக 5 ரூபாய் தண்டம் -
கற்பூரம் ஊதுவத்தி 10க்கு வாங்கி
கோயில் வாசப்படிக்கு வந்தவர் அதிர்ந்தார்!
“எந்தச் சாமி இத்தன பேரின்
கண்ணைக் குத்தியிருக்கும்!
பள்ளிக்குச் செல்லாத அவர்கள்
மனப்பாடம் செய்து வைத்திருந்த
டீக்குப் பணம் 5 ரூபாய் கேட்டுக்கொண்டிருந்தார்கள்!
கடவுளுக்கு என்ன அவசரமோ தெரியவில்லை
விரைவு அர்ச்சனை சீட்டை
10 ரூபாய் கொடுத்து வாங்கியவர்
மறுபடியும் அதிர்ந்தார்
அந்த வரிசையிலும் நீண்ட கூட்டம்!
முதியவர்கள் ஏதோ தெரிந்த மந்திரத்தை
முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள்
கோயில் கோபுரத்தில் ஒலிபெருக்கி
அந்த வாரத்தில் புதிதாக வந்த
திரைப்படத்தின் குத்துப்பாடலை
சப்தமாகப் பாடிக்கொண்டிருந்தது!
காதலர்கள் கைகளை இறுக்கமாகப் பிடித்துகொண்டு
தனக்குப் பின்னால் வருபவர்களுக்கு
முன்னால் போக அனுமதியளித்து
நின்ற இடம்விட்டு நகராமல் இருந்தார்கள்.
கடவுள் கொஞ்சம்கொஞ்சமாய் முன்னேறி
4 மணிநேரத்துக்குப் பின்
ஓரிரண்டு வினாடியே தரிசித்துவிட்டு வெளியேறினார்.
பசியெடுத்ததோ என்னவோ
வேற்று மதத்தினர் கொடுத்துக்கொண்டிருந்த
பிரசாத்ததை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டார்!
வெளியேறியபோது வாங்கிவந்த
பிரசாத்ததை 5 ரூபாய் கேட்டவர்களுக்குக் கொடுக்க
கூட்டத்தில் ஒருவர்
முறைத்த பின் வாங்கிக்கொண்டார்!
நெரிசல். அமைதிக்காகச் சென்ற இடத்தில் சப்தம்.
கழிவுகள்.
பயணம் முடிவதற்குள் பேரூந்து விபத்து
நான்கு பேர் பலியாக
அதிஷ்டவசமாக
மயிரிழையில் உயிர்ப் பிழைத்தார் கடவுள்!
வருத்தத்தோடு தெரு முனையில் வந்தபோது
இளைஞன் ஒருவன்
வேப்பமரத்தடியில் இருந்த
கல்லை வணங்கி
மகிழ்ச்சியோடு திரும்பியதைக் கண்டார்.
பேசாம நாமும் இங்கேயே
சாமி கும்பிட்டு
இருக்கும் வேலையைக்
கவனித்திருக்கலாம்…
கடவுளுக்கும் புத்தி வந்தது!!!
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat May 24, 2014 7:06 am

கடவுள் கடவுளாகிப்போனார் - 24

கடவுள் - ஸ்டேட் பஸ்ட்! டாக்டராகி இலவச சேவை!!!

ஆணாகப் பிறந்தால்
நன்றாகப் படிக்கமுடியாது என்றெண்ணி
பெண்ணாகப் பிறக்க நினைத்து
பெண்ணாகப் பிறப்பது பாவமென்று எண்ணி!
ஆணாகப் பிறந்தார் கடவுள்!
அரசு பள்ளியில் சேர மறுத்து
தனியார் பள்ளியில் சேர்ந்தார்.
ப்ரி கேஜியிலிருந்தே
விழுந்துவிழுந்து படிக்கத் தொடங்கினார்.
பத்தாவதில்
ஸ்டேட் பஸ்ட்498/500 எடுத்தார்!
தனியார் பள்ளிக்கூடம் கல்விக்கட்டணமின்றி
இலவசமாகச் சேர்த்துக்கொண்டது!
பன்னிரண்டாவதில் நீங்கள் நினைப்பதுபோலவே
ஸ்டேட் பஸ்ட்1196/1200 எடுத்தார்!
மீடியாக்கள் சூழ்ந்துகொண்டன!
பேட்டி கொடுத்தார் – இலவச மருத்துவம் என்றார்
தொலைக்காட்சியைப் பார்த்த மக்கள்
மெய்ச்சிலிர்த்துப்போயினர் – இலவச மருத்துவமாம்.
கவர்ன்மென்ட்டில் ஈஸியாக சீட்  கிடைத்தது!
முதலாமாண்டும் கவனமுடன் படித்தார்!
இரண்டாமாண்டில் விழுந்தார் காதலில்!!
மூன்று, நான்கு என்று கடந்து
பிரைவேட் மருத்துவமைனையில்
மருத்துவராகிவிட்டார்.
கிராமப்புறத்தில் ஓராண்டு மருத்துவம் பார்க்க
முடியாது என்ற போராட்டத்திற்கு
தலைமை வகித்தார்!
தனியார் மருத்துவமனை என்பதால்
உன்னால் இவ்வளவு வருமானம்
வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்!
தேவையில்லாத எல்லாவற்றுக்கும்
ஸ்கேன், டெஸ்ட், மருந்து, மாத்திரையென்று
எழுதி கொடுத்தார்!
அந்த இலவச சேவை என்ற வார்த்தையை
மறந்தே போனார்!
காதலி வீட்டில் வரதட்சணையாக
மருத்துவமனையே கட்டி
கல்யாணம் செய்து வைத்தார்கள்.
‘கடவுள் மருத்துவமனை’யில்
கடவுள் ஷீப் டாக்டராக அமர்ந்தார்.
போட்ட பணத்தை எடுக்கவேண்டுமென்று
எல்லா மருத்துவமனைகள் போலவே
‘கடவுள் மருத்துவமனை’யும் மாறிப்போனது.
மனைவியோடு செய்தி பார்க்க –
விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டனர்!
ஸ்டேட் பஸ்ட் மாணவன் சொன்னான்:
“டாக்டராகி இலவச சேவை…”
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jun 02, 2014 7:35 pm

காதலியோடு செல்லுங்கள் மனிதநேயம் பெருக! – நான் கடவுள்(25)

கைக்கோர்த்தபடி
காதலியோடு சென்றான் கடவுள்.
சாலையில் ஊனமுற்றோர் நடக்க
அடப் பாவமே என்று
சாலையைக்கடக்க உதவினான்;
இரக்கக்காரன் என மகிழ்ந்தாள்!
அம்மா தாயே! குரல் கேட்க
5 ரூபாயை எடுத்து நீட்டினான்;
அவள் முகம் மலர்ந்தது!
அந்தக் காதலர்கள்
கோயிலுக்குச் சென்றுதான் திரும்பியிருக்க வேண்டும்
வேகமாக பயணத்தால் கீழே விழ,
“யாண்ட வண்டிய மெதுவா ஓட்டுன்னா கேக்கிறியா?
கேள் பிரண்டு வீட்டுக்குப் போறேன்னு சொல்லி,
அப்பப்ப உங்கூட வெளியே வற்றதே தப்பு
அடிப்பட்டு இருந்தா வீட்டுல என்னன்னு சொல்லறது”
ஓடிப்போய்க் காப்பாற்ற
துடித்ததைகண்டு வியந்தாள்!
இத்தனைக்கும் மத்தியில் பூக்காரி வர
ஒரு ரோஜா; ஒரு முழம் மல்லி;
அவள் மனத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி!
சாலையில் கடவுள் உருவம் வரைந்ததற்கு மேலே
ஒரு பத்து ரூபாயை கடவுளிடமே வாங்கி
விட்டெரிந்து நடந்தாள் அவள்!
கடவுளும் மகிழ்ந்தார்!
மறுநாள்…
அதே ஊனமுற்றவன்; பிச்சைக்காரன்;
வேறெரு முதியவர் விபத்தால்
உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கவும்;
பூக்காரி கடவுளைக் கடக்க,
‘அண்ணா பூ வாங்கிட்டு வா’ன்னு சொன்ன
தங்கையின் பேச்சைப் மறந்தும்,
எதையும் கண்டுகொள்ளாமல்
செல்லில் காதலியுடன் பேசியபடியே
எல்லாவற்றையும் கடந்தார் கடவுள்!
(நீங்களும்
காதலியோடு செல்லுங்கள்
காதலி இல்லாதவர்கள்
காதலோடு செல்லுங்கள்
மனிதநேயம் பெருக!)
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடவுள் கடவுளாகிப்போனார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum