தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தங்கத்தின் மீது... மோகமல்ல, பாதுகாப்பு...

View previous topic View next topic Go down

தங்கத்தின் மீது... மோகமல்ல, பாதுகாப்பு...

Post by Powenraj on Thu Jan 10, 2013 9:34 am

அரசின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 38.7 பில்லியன்டாலரை எட்டியிருக்கிறது. ரூபாய் மதிப்பில் சொல்வதாக இருந்தால் சுமார் 2,12,850 கோடி. ஏன் இப்படி ஒரு நிலைமைஏற்பட்டது என்றால் இந்தியாவில் ஏற்றுமதி மிகவும் குறைந்து, இறக்குமதி அதிகரித்துவிட்டதுதான் காரணம். நல்லவேளையாக அன்னியநேரடி முதலீடுகளும், அன்னியநிறுவன முதலீடுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், 1990-இல் ஏற்பட்டது போன்ற நிதி நெருக்கடி ஏற்படவில்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட அரசு எடுக்க இருக்கும் உடனடி நடவடிக்கை தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரிப்பது என்பதாக இருக்கும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். நமதுதங்க இறக்குமதி இன்றைய அளவில் பாதிக்கும் பாதியாக இருந்திருந்தால், பற்றாக்குறை மறைந்து, நமது அன்னியச் செலாவணி இருப்பு மேலும் 10.5 பில்லியன் டாலராக சுமார் ரூ. 57,750 கோடியாக உயர்ந்திருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தங்கத்தில் முதலீடு அதிகரித்திருப்பதுநிஜம். இந்த ஆண்டில் மட்டும் சுமார் 800 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. வரியைக் கூட்டுவதால், அரசுக்கு சற்று கூடுதல் வரிவருவாய் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில், சர்வதேச விலையைவிட இங்கே தங்கத்தின் விலை அதிகரிக்குமானால், மீண்டும் கடத்தல் தங்கம் சந்தையில் உலவும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. கட்டுப்பாடுகள் ஏற்படும் போதெல்லாம், சராசரி இந்தியன் தனது சேமிப்புக்குப் பாதுகாப்பாகக் கருதுவது தங்கத்தை மட்டுமே என்பதால் தங்கத்திற்கான தேவை மேலும் அதிகரிக்கக் கூடும்.
இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர்களுக்கு வங்கிக் கணக்கே கிடையாது. சுய தொழிலில் ஈடுபட்டிருப்போரில் 90% பேர் வங்கிப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதில்லை. அவர்களுக்குத் தங்களது பொருளாதார நிலையைப் பாதுகாத்துக் கொள்ளவும், வியாபார ஏற்றத் தாழ்வுகளில் உதவவும், தங்கம்தான் சிறந்த சேமிப்பாகக் கருதப்படுகிறது.
பங்குச் சந்தையையே எடுத்துக் கொண்டால், கடந்த 2004 முதல் 4000-த்திலிருந்து 19,000 வரை புள்ளிகள் ஏறி இறங்கி வருகின்றன. ஆனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா என்றால் இல்லை. கடைசியாகக் கிடைத்த புள்ளிவிவரப்படி, இந்தியாவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை வெறும் மூன்றரைக் கோடி மட்டுமே. அவர்களும்கூட நமதுஆட்சியாளர்களின் தவறான முடிவுகளாலும், போலி நிறுவனங்களுக்கும், ஏமாற்றுப் பேர்வழிகளுக்கும் இடமளிப்பதாலும், மெல்ல மெல்ல ரியல் எஸ்டேட், தங்கம் என்று தங்களது முதலீடுகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஒரு கணக்கைப் பார்ப்போம். ஆண்டொன்றுக்கு சராசரியாக இந்தியாவில் ஒரு கோடித் திருமணங்கள் நடைபெறுகின்றன. 15 வயது முதல் 35 வயது வரையிலானவர்களின் எண்ணிக்கை சுமார் 45 கோடி. அடுத்த 20 ஆண்டுகளில் இவர்களது திருமணத்திற்காக மட்டும் எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். தங்கத்தின் இறக்குமதியும் குறையாது, தேவையும் குறையாது. கட்டுப்பாடுகள் விதித்தால், வரியை அதிகரித்தால் கடத்தல் தங்கம் சந்தையில் உலவும். அதைக் கட்டுப்படுத்த முடியாது.
இன்றைய மன்மோகன் சிங்கின் கூட்டணி அரசு 2004 ஆட்சிக்கு வந்தபோது ஒரு அவுன்ஸ், அதாவது சுமார் 4 சவரன், தங்கத்தின் விலை ரூ. 17,387. இப்போது, சுமார் ரூ. 90,814. விலை மட்டும் ஏறவில்லை. முதலீட்டுத் தங்கத்திற்கான வரவேற்பும் அதிகரித்திருக்கிறது. இதற்குப் பின்னால் இருப்பது தங்கத்தின் மீதான மோகம் மட்டுமல்ல காரணம். தங்கம் தரும் பாதுகாப்புதான்!
எப்போதெல்லாம், மக்களுக்கு அரசின் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கை குறைகிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் தேசம் சந்திக்க நேரும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சேமிப்பை நாடுகிறார்கள். பாதுகாக்க எளிதான சேமிப்பாக நினைவு தெரிந்த காலம் தொட்டு மனித இனம் ஏற்றுக்கொண்ட சேமிப்பு தங்கம் மட்டுமே!
அரசியல்வாதிகளின் ஆதரவுடன்குண்டர்களும், தாதாக்களும் உலவும் காரணத்தால் நிலத்தில் முதலீடு செய்ய மக்கள் பயப்படுகிறார்கள். முன்புபோல விவசாய நிலங்களில் முதலீடு செய்வதில்லை என்பது மட்டுமல்ல, பலர் தங்கள் விவசாய நிலங்களை விற்று அதையும் தங்கத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம் என்று கருதுகிறார்கள்.
அடுத்தாற்போல, சாமானியனுக்கு முன்பெல்லாம் வங்கிகளில் முதலீடு செய்வதும், அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வதும் பத்திரமான வழியாகத் தெரிந்தது. இப்போது பல தனியார் வங்கிகள் வந்து விட்டதும், வங்கி முதலீடுகளில் கிடைக்கும் வட்டி விகிதம் குறைவாக இருப்பதும், பலரை தங்கத்தைத் தேட வைத்திருக்கிறது.
தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பதற்கு சொல்லப்படாத இன்னொரு காரணம், ஊழல்வாதிகளின் சேமிப்பாகத் தங்கம் மாறியிருப்பது. சமீபகாலங்களில் லஞ்சமாகப் பெறும் பணப் பரிவர்த்தனைகள் தங்கத்தில்தான் நடைபெறுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம்.
தங்கத்திற்கு இறக்குமதி வரியை அதிகரிப்பதன் மூலம் அரசின் பற்றாக்குறையைக் குறைத்துவிட முடியாது. அதற்குப் பதிலாக, குடிமக்களுக்கு நல்லாட்சி உறுதி செய்யப்படுமானால் தங்கத்தின் மீதான மோகம் குறையக்கூடும். அது இந்த அரசுக்கு சாத்தியமில்லை என்கிற நிலையில், தங்கத்தைத் தொடாமல் இருப்பதுதான் நிதியமைச்சகத்தின் தேர்ந்தமுடிவாக இருக்க வேண்டும்.
நிதியமைச்சகத்துக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சரிகட்ட நமக்குத் தெரிந்த ஒரு யோசனை. நமது தேவைக்கும் அதிகமாக, 300 மடங்கு அதிகமாக, சேமிப்புக் கிடங்குகளில் கோதுமை தேங்கிக் கிடக்கிறது. சுமார் 21 பில்லியன் டாலர் விலை மதிப்புள்ள 60 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்தால், பற்றாக்குறை கணிசமாகக் குறையுமே. அதை விட்டுவிட்டு, தங்கத்தின் மீதான வரியை அதிகரித்து, மேலும் தேவையை அதிகரிப்பது புத்திசாலித்தனமல்ல!
:-
தினமணி
avatar
Powenraj
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 46

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum