தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by முனைவர் ப. குணசுந்தரி

» குவியல்
by முனைவர் ப. குணசுந்தரி

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!

View previous topic View next topic Go down

நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!

Post by பூ.சசிகுமார் on Thu Dec 20, 2012 12:03 pm

நாட்டில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு மீட்புப் பணியில் பொலிஸாரும், முப்படைகளும் தீவிரமாக செயற்பட்டு வருவதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வெள்ளம், மற்றும் மண்சரிவு காரணமாக 46 ஆயிரத்து 627 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்தும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்தார்.

3430 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 625 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி 63 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம் இவ்வெள்ளம், மண் சரிவு காரணமாக கடந்த மூன்று தினங்களில் 23 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 34 பேர் காயமடைந்துள்ளதாகவும், 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கடும் மழை காரணமாக காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, பொலன்னறுவை, பதுளை, மொனறாகலை, மட்டக்களப்பு, குருநாகல், புத்தளம், கேகாலை ஆகிய மாவட்டங்களியே வெள்ளம், மண்சரிவு நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக 172 வீடுகள் முழுமையாகவும், 676 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்து இருக்கின்றன. இம்மழை வெள்ளத்தினால் குருநாகல், மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, புத்தளம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக பெரும்பாலான பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தெதுறு ஓயா பெருக்கெடுத்து அருகிலுள்ள குளங்கள் உடைப்பெடுத்ததால் சிலாபம் நகர் வெள்ள நீரில் மூழ்கியது. அதேநேரம் புத்தளம்- கொழும்பு நெடுஞ்சாலையிலுள்ள ஜயபிம, சவராண, மாதம்பை, மகாவெவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் வெள்ள நீர் நெடுஞ்சாலையை ஊடறுத்துப் பாய்ந்தது. இதனால் கொழும்பு - புத்தளம் நெடுஞ்சாலை ஊடான வாகனப் போக்குவரத்து நேற்று துண்டிக்கப்பட்டது.

இவ்வெள்ள நிலைமை காரணமாக புத்தளம், குருநாகல், தம்புள்ள ஆகிய பிரதேசங்கள் ஊடான வட பகுதிக்கான வாகன போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை மலை சார்ந்த பிரதேசங்களிலுள்ள நெடுஞ்சாலைகளின் ஊடாக இந்த நாட்களில் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு பயணத்தை மேற்கொள்ளுமாறு வாகன சாரதிகளிடம் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவென சுமார் ஐயாயிரம் பொலிஸார் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயகொடி தெரிவித்தார்.

நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் உள்ள பொலிஸார் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பங்கதெனிய பிரதான வீதியில் சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் வண்டி நீரில் அடித்துச் சென்றதை அடுத்து உடனடியாக பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் அதிலிருந்த 50 பயணிகளையும் மீட்டெடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகள், நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் சேதமடைந்த வீடுகளை திருத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக சுமார் 2000 முப்படை வீரர்கள் அவசர சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளப் பாதிப்பு, மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்த பிரதேசங்களில் அவற்றை அகற்றும் பணிகளில் இராணுவத்தின் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

குளங்கள், நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுத்து வெடிப்பு ஏற்பட்டு தரை வழி போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ள நிலைமையில் 106 கடற்படை வீரர்களைக் கொண்ட 15 கடற்படையின் விசேட குழுக்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர், கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

கல்முனை, வாகரை, சிலாபம், பொலன்னறுவை, மன்னம்பிட்டி, வில்கமுவ, அரலகங்வில, மஹாஓயா, நாஉல, வாரியபொல, பக்கமூன, பத்துஹேன ஆகிய பிரதேசங்களில் கடற்படையினர் படகுகள் மூலம் பாதிக்கப்பட்டோரை மீட்டெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சகல பிரதேசங்களிலும் விமானப் படையின் ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் சிராஸ் ஜல்தீன் தெரிவித்தார்.
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!

Post by பூ.சசிகுமார் on Thu Dec 20, 2012 3:08 pm


எனக்கு ரொம்ப ஜாலி
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum