தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எங்கே செல்கிறோம்? பதிவு 4

View previous topic View next topic Go down

எங்கே செல்கிறோம்? பதிவு 4

Post by vivasayi on Tue Oct 31, 2017 2:59 pm

எங்கே செல்கிறோம்? பதிவு 1 ஐ படிக்க இங்கே கிளிக் செய்யவும்
எங்கே செல்கிறோம்? பதிவு 2 ஐ படிக்க இங்கே கிளிக் செய்யவும்
எங்கே செல்கிறோம்? பதிவு 3 ஐ படிக்க இங்கே கிளிக் செய்யவும்

நம் தமிழ் கலாச்சாரம் தொன்மையானது. தமிழர்களின் பண்புகள் போற்றத்தக்கது.

இன்று சீர் கெட்டு கொண்டிருக்கும் தருணத்தில், சரி செய்ய வேண்டியது நிறைய அம்சங்களை.

அன்பு, அரவணைப்பு, இயற்கை காத்தல், ஈகை, ஒழுக்கம், பெரியோரை மதித்தல்,தன்னம்பிக்கை வளர்த்தல், சுற்றம் பேணல்,தீய சொற்கள் தவிர்த்தல்,குற்றம் காணில் சீற்றம் கொள்ளல், லஞ்சம் தவிர்த்தல் ... இன்னும் .. நிறைய ..  நிறைய ..    
 
பாலைவனத்தில் சிறு தூறலாக, இவற்றை பற்றி மேடை பேச்சுக்களும், சமூக வலைத்தளங்களில் பதிவுகள் காணக்கிடைப்பதும்,  அதை செயல் படுத்தும் விதமாக சில அமைப்புகள் முயல்வதும்,  மானுடம் முற்றிலும் அழிந்து விடவில்லை என்று ஆறுதல் அளிக்கிறது.

கற்றது கைம்மண் அளவு. ஓளவை சொன்னது.
ஆக நமக்கு தெரிந்ததெல்லாம் ஒரு கைப்பிடி மண் அளவே.
அதுவே இவ்வளவு கனமா என்று வியப்பாக உள்ளது. ஒவ்வொரு தலையையும் பார்க்கும் போது.
தலையில் தூக்கி வைத்திருப்பதாலோ?

இறக்கி வைக்க சொல்கிறார் திருவள்ளுவர்.
கற்க கசடற கற்க. கற்றபின் நிற்க அதற்குத் தக.
கற்றபடி நின்றதும்  தலைக்கனம் குறைந்து விடுமோ?
சிறு முயற்சி செய்வோமா?

தூக்கத்தில் காண்பதல்ல கனவு. தூங்க விடாமல் செய்வதே கனவு என்ற அப்துல் கலாமின் வாழ்க்கை வரிகளுக்கு ஒப்ப, இந்த நான்கு குறள்களும் கனவாக என்னை இம்சிக்கிறது.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (குறள் 72)

அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல். (குறள் 1005)

பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.(குறள் 1033)

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

இந்த நான்கு குறள்களுக்கு ஒப்ப நிற்பதற்காக  மூளையிலும், மனதிலும் உருட்டி, உருட்டி ஒரு நடக்க கூடிய காரியம் உருவாகியுள்ளது.  செய்வோமா?

காணி நிலம் வேண்டும் என்று பாரதி சொன்னார். கனவாகவே போனது.

ஆதலால் பத்து காணி நிலம் வேண்டும்.

பத்து நாட்டு மாடும் ஐம்பதாடும் ,
நூறு நாட்டு கோழியும் வாத்தும்,
ஓரிரு கிணறும், ஒரு ஒட்டு வீடும்,
அதனுள்ளே இருந்திட வேண்டும்.  

இளைஞர்கள் வாரம் ஒரு நாள் வந்திட வேண்டும்.
சுற்றிலும் உயிர் வேலி அமைத்திட வேண்டும்.
மக்கும் குப்பைகளை கொணர்ந்திட வேண்டும்.
என் நண்பன் மண் புழு உருவாக்கிட வேண்டும்.

ஆதரவற்ற பெரியோர்களும்,
தண்ட  சோறென போற்றப் பட்டோரும்,
சில மணி  நேரம் கையிலுள்ள  முதியோர்களும் ,
வந்திங்கே வாழ்ந்து  களிப்புற வேண்டும்.

வளம் தரும்  கீரைகளும்,
புத்திளம் காய் கனிகளும்,
இயற்கை விவசாயத்தில்  
விளைந்திட வேண்டும்.

சனியன்றும், ஞாயிறன்றும்
பெற்றோர் தம் பிள்ளைகளுடன்
வந்திங்கே விளையாட்டுடன்
சிலம்பம், மல்யுத்தம் செய்திட வேண்டும்.

நேரடி விற்பனையில் நேர்மையாய்
விளைந்ததை விற்றிட வேண்டும்.
தேவை போக மீந்த பணத்தில்
தேக்கும் சந்தனமும்  நட்டிட வேண்டும்.

மரங்கள் முற்றி காசாகும் போது
நியாயமாக முதல் கொடுத்து உதவியோர்க்கு
முடிந்த தொகை திருப்பும் நேர்மையான
நிர்வாகிகள் அன்று இருந்திடல் வேண்டும்.

இயற்கை விவசாயம் மீட்டெடுக்கவும்,
ஆதரவற்றோர் சகாயம் பெறவும்,
அடுத்த தலைமுறை அறிவுக்கல்வி பெறவும்,
உதவியோர் புண்ணியம் பெறவும்,

ஆடு மாடுகள் மட்டுமின்றி
பூச்சிகளும் புழுக்களும்
பாம்புகளும் பறவைகளும்
பயன் பெறவும் செய்வோமே!

நான் திருச்சி - பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால் இந்த கனவை இம்மாவட்டத்தில் செயல் படுத்த எண்ணியுள்ளேன். (தற்பொழுது துபாயில் உள்ளேன்) விருப்பம் உள்ளவர்கள் தனிமடலில் தொடர்பு கொள்ளலாம்.

காசு சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் உள்ளவர்கள் தவிர்க்கவும்.

இதையோ, இன்னும் மெருகேற்றியோ நீங்களும் உங்கள் பகுதியில் செயல் படுத்துங்களேன்.

-விவசாயி
avatar
vivasayi
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 5

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum