தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜனவரி 1-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது மும்பையில் ‘குளு குளு’ மின்சார ரெயில்

View previous topic View next topic Go down

ஜனவரி 1-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது மும்பையில் ‘குளு குளு’ மின்சார ரெயில்

Post by rammalar on Thu Oct 26, 2017 5:58 am

மும்பை,

மும்பையில் ஜனவரி 1-ந் தேதி முதல் குளு குளு மின்சார ரெயில் இயக்கப்படும் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் அறிவித்தார்.

நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் தான் அதிகளவில் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குளு குளு மின்சார ரெயில்

மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கள் சார்பில் இயக்கப்படும் இந்த ரெயில் சேவைகளை தினசரி 75 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில், கடந்த 2012-13-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ரெயில்வே பட்ஜெட்டில் குளு, குளு பயணம் செய்யும் வகையில் மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் ரூ.54 கோடி செலவில் 12 பெட்டிகள் கொண்ட ஏ.சி. மின்சார ரெயில் தயாரிக்கப்பட்டது. இந்த ஏ.சி. மின்சார ரெயில் கடந்த ஆண்டு மும்பை வந்தடைந்தது.

சோதனை ஓட்டம்

சில்வர் மற்றும் நீல நிறத்தில் அழகான வடிவமைப்புடன் பயணிகளை ஈர்க்கும் வகையில் இருக்கும் இந்த ஏ.சி. மின்சார ரெயிலில் தொழில்நுட்ப மற்றும் மெக்கானிக்கல் சோதனைகள் குர்லா பணிமனையில் வைத்து நடத்தப்பட்டன. சோதனை ஓட்டங்களும் நடந்தன. ஏ.சி. ரெயில் மும்பையை வந்தடைந்து ஒரு ஆண்டு ஆகிவிட்ட போதிலும் இன்னும் சேவை மட்டும் தொடங்கப்படவில்லை.

முதன்முறையாக மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் சர்ச்கேட்- போரிவிலி இடையே இயக்கப்பட உள்ளது. ஏ.சி. மின்சார ரெயிலை இந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக அது முடியாமல் போனது.

புத்தாண்டு முதல்...

இந்தநிலையில், நேற்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் வரும் ஜனவரி 1-ந்தேதி முதல், அதாவது புத்தாண்டு அன்று ஓடத்தொடங்கும் என்று அறிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘மும்பை ரெயில் நிலையங்களில் 370 நகரும் படிக்கட்டுகள் அமைக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது’ என்றார்.

மும்பையில் இயக்கப்பட உள்ள ஏ.சி. மின்சார ரெயில் கட்டணம் டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகளிடம் வசூலிக்கப்படும் கட்டண தொகைக்கு இணையாக அல்லது தற்போது வசூலிக்கப்படும் மின்சார ரெயிலின் முதல் வகுப்பு கட்டணத்தில் இருந்து 1.5 மடங்கு அதிகமாக இருக்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்பட உள்ள மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் அதன் தலைமை அலுவலகமான சர்ச்கேட் முதல் தகானு வரை 37 புறநகர் மின்சார ரெயில் நிலையங்கள் உள்ளன. தற்போது தினசரி 1,201 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


------------------------------------
-தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum