தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு

View previous topic View next topic Go down

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு

Post by rammalar on Fri Sep 22, 2017 2:46 pm

நியூயார்க்,

இந்த பூமிப்பந்தில் பேரழிவை உருவாக்கவல்ல ஆயுதங்களில்
முதன்மையானவை அணு ஆயுதங்கள். இந்த ஆயுதங்களை
ஏராளமான அளவில் வல்லரசு மற்றும் வளரும் நாடுகள்
வைத்திருக்கின்றன.

தற்போதைய நிலையில் 15 ஆயிரம் அணு ஆயுதங்கள் உலகில்
இருப்பதாக நம்பப்படுகிறது.

2-ம் உலகப்போரில் ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய 2 அணுகுண்டுகள்
ஏற்படுத்திய பேரழிவை பார்த்து அதிர்ந்து போன உலக நாடுகள்,
அணு ஆயுத விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையை கடைப்
பிடிக்கின்றன. குறிப்பாக இத்தகைய ஆயுதங்களை ஒழிப்பதில்
பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இதற்காக சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச அளவில்
அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தமும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

எனினும் இத்தகைய ஆயுத பரவலுக்கு தகுந்த கடிவாளம் போட
முடியவில்லை. வடகொரியா போன்ற நாடுகள் தொடர்ந்து அணு
ஆயுத சோதனைகள் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுதான் வருகின்றன.
இது வடகொரியா, அமெரிக்கா இடையேயான பனிப்போருக்கும்
வழிவகுத்து உள்ளது.

எனவே அணு ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் நோக்கில் புதிய
ஒப்பந்தம் ஒன்றை ஐ.நா. சபை தயாரித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில்
கையெழுத்து போடும் நாடுகள் எந்த சூழ்நிலையிலும் அணு
ஆயுதங்களை தயாரித்தல், சோதித்தல், விற்பனை செய்தல், பிற
நாடுகளிடம் இருந்து கொள்முதல் செய்தல், வைத்திருத்தல் போன்ற
நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.

இந்த ஒப்பந்தத்தின் அவசியத்தை சமீபத்தில் விளக்கிய
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், அணு ஆயுதம்
இல்லா ஒரு உலகத்தை உருவாக்குவதற்கான நோக்கத்தில் இது ஒரு
முக்கியமான படிநிலை என குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து போட்டால் மட்டுமே
அதை நடைமுறைப்படுத்த முடியும்.

அந்தவகையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்று வரும்
பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தில்
கையெழுத்து போட்டு வருகின்றனர். அதன்படி பிரேசில், கயானா,
தாய்லாந்து, வாடிகன், இந்தோனேஷியா, அயர்லாந்து, அல்ஜீரியா,
வெனிசூலா என 50 நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன.
மேலும் 120-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்பந்தத்தை ஆதரித்து
வருகின்றன.

இவ்வாறு ஒப்பந்தத்துக்கு ஆதரவாக சிறிய நாடுகள் ஒருபுறம்
அணிவகுத்து நிற்க, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்கா,
பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளும், அவற்றின் நட்பு நாடுகளும்
இந்த ஒப்பந்தத்தை புறக்கணித்து இருக்கின்றன.

இந்த விவகாரத்தில் தடை நடவடிக்கை மூலம் எந்த நன்மையும்
ஏற்படாது என அவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

ஆனால் உலகில் தார்மீக தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும்
நாடுகள் இதுபோன்ற கொள்கை முடிவுகளை ஏற்பதன் மூலம் தார்மீக
தலைமைத்துவம் பெற்றிருத்தல் அவசியம் என அணு ஆயுத
ஒழிப்புக்கான சர்வதேச பிரசாரத்துக்கான செயல் இயக்குனர்
பியாட்ரிஸ் பின் கூறியுள்ளார்.
-
------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6226

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum