தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு

View previous topic View next topic Go down

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு

Post by rammalar on Sat Feb 04, 2017 3:09 pm

[img][/img]
-
நியூயார்க்,

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி
கன்னிப்பேச்சு பேசினார். அவர் உக்ரைன் விவகாரத்தில்
ரஷியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

உக்ரைன் விவகாரம்

உக்ரைன் நாட்டில் கிரிமியா தீபகற்ப பகுதி, பொது வாக்கெடுப்பு
நடத்தி ரஷியாவுடன் இணைந்து விட்டது.

இதே போன்று உக்ரைனின் கிழக்கு பகுதியில் வசிக்கிற ரஷிய
ஆதரவு கிளர்ச்சியாளர்கள், தனி நாடு கோரிக்கையை எழுப்பி
கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ரஷியா
ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது.

அங்குள்ள டோன்ட்ஸ்க் நகரம், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்
பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் அங்கு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன்
படைகளுக்கும் இடையே மீண்டும் கடும் மோதல்கள் நடந்து
வருகின்றன. இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்
என்று ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி

இந்த நிலையில், ஐ.நா. சபையின் அமெரிக்க தூதராக
நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளிப்பெண் நிக்கி ஹாலி
பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் கிழக்கு உக்ரைனில் நடந்து
வருகிற மோதல்கள் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
நேற்று முன்தினம் கூட்டிய கூட்டத்தில் முதன்முதலாக பங்கேற்று
பேசினார்.

அவரது கன்னிப்பேச்சு முழுக்க முழுக்க ரஷியாவுக்கு எதிரானதாக
அமைந்தது.

கடும் கண்டனம்

அப்போது அவர் கூறியதாவது:–

முதன்முதலாக இந்த சபையில் நான் தோன்றிப்பேசுகிறபோது,
உக்ரைனில் ரஷியா நடத்தி வருகிற தாக்குதல்களுக்கு கண்டனம்
தெரிவிக்கிற நிலை ஏற்பட்டது, துரதிர்ஷ்டவசமானது என்று
கருதுகிறேன்.

ரஷியாவுடன் நாங்கள் நல்லுறவைக் கடைப்பிடிக்கத்தான்
விரும்புகிறோம். ஆனால் கிழக்கு உக்ரைனில் நிலவுகிற மோசமான
நிலைமை, ரஷியாவின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம்
தெரிவிக்க வைக்கிறது.

மக்கள் தவிப்பு

அங்கு திடீரென சண்டை வலுத்திருப்பதால், ஆயிரக்கணக்கான
பொதுமக்கள் சிக்கி தவிக்கின்றனர். முக்கியமான கட்டமைப்புகள்
உருக்குலைந்து போய் விட்டன. நெருக்கடி பரவி வருகிறது.
பல்லாயிரக்கணக்கானோர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

கிரிமியா, உக்ரைனின் ஒரு அங்கம்தான். எனவே அதை
ஆக்கிரமித்துள்ள ரஷியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து கண்டனம்
தெரிவிக்கத்தான் செய்யும். கிரிமிய ஆக்கிரமிப்பை ரஷியா
உடனடியாக கைவிட வேண்டும். ரஷியா தனது கட்டுப்பாட்டை
கைவிட்டு திரும்புகிற வரையில், கிரிமிய விவகாரத்தில் ரஷியா
மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
-
-------------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum