தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகம்

View previous topic View next topic Go down

தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகம்

Post by rammalar on Mon Jan 23, 2017 8:32 am


நாட்டிலேயே முதன்முறையாக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான
தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம்
கோவாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவா சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 4-ஆம் தேதி தேர்தல்
நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆயத்தப் பணிகளை
ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர்
சையத் நசீம் ஜைதி மாநிலத் தலைநகர் பனாஜிக்கு ஞாயிற்றுக்
கிழமை வந்தார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவாவில் ராணுவம், துணை ராணுவப் படைப் பிரிவுகளைச்
சேர்ந்த 822 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கான தபால்
வாக்குகளை தேர்தல் அலுவலர்கள் மின்னணு முறையில் அனுப்பி
வைப்பர். அவற்றை சம்பந்தப்பட்ட வீரர்கள் இணையதளத்திலிருந்து
பதிவிறக்கம் செய்து, அவற்றை நிரப்பிய பின் மின்னஞ்சல் வாயிலாக
தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் மூலம், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தபால்
வாக்குகளை அனுப்பி வைப்பதற்கான நேரம் வெகுவாகக் குறையும்.

இந்த வசதியை பெரும்பாலான வீரர்கள் பயன்படுத்திக் கொள்வர்
என்று நம்புகிறோம். இந்த திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக
கோவாவில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நாட்டிலேயே முதல் முறையாக மாநிலத்திலுள்ள அனைத்து
சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை
சோதனை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதன்மூலம், வாக்காளர்கள் தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு
வாக்களித்ததை உறுதிப்படுத்த முடியும்.

மேலும், தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க "சமாதான்' என்னும்
திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் குறித்து அரசியல்
கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் திருப்தி தெரிவித்துள்ளனர்.

தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதிப்
படுத்தவும், பண விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும் மாநிலத்தின்
எல்லைப் பகுதிகள், விமான நிலையங்கள், சூதாட்ட விடுதிகள்
ஆகியவற்றில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன
என்றார் அவர்.
-
---------------------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum