தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
by rammalar

» ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
by rammalar

» சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
by rammalar

» உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
by rammalar

» புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
by rammalar

» காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
by rammalar

» ஒரே பந்தில் ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
by rammalar

» பார்வையில் நனைந்தேன்…! -கவிதை
by rammalar

» நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை…!! – கவிதை
by rammalar

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar

» .மிக அருகில் குழந்தைகள்
by rammalar

» வயலும் வாழ்வும் – எக்ஸ்பிரஸ் கவிதைகள்
by rammalar

» வாழ்வியல் எது? - கவிதை
by rammalar

» வரிசையாய் எறும்புகள்
by rammalar

» மெனோபாஸ் – கவிதை
by rammalar

» பாடல் – கவிதை
by rammalar

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by rammalar

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by rammalar

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by rammalar

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by rammalar

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by rammalar

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by rammalar

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar

» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது

View previous topic View next topic Go down

ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது

Post by rammalar on Sun Jan 15, 2017 8:58 pm


ரயில்வே தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆதார் எண்
கட்டாயமாகிறது. தேர்வறையில் ஆள்மாறாட்டத்தை தடுக்க
விண்ணப்பதாரர்களின் கைவிரல் ரேகை மூலம் வருகைப்பதிவு
சரிபார்க்க ரயில்வே தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக கருதப்படுகிறது
ரயில்வே துறை. இத்துறையில் குரூப்-ஏ அதிகாரிகள் மத்திய அரசு
பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலமாக தேர்வுசெய்யப்
படுகிறார்கள்.

அதேபோல், குரூப்-பி அலுவலர்கள் குரூப்-சி பணியாளர்கள் ரயில்வே
தேர்வு வாரியம் மூலமாக பணிநியமனம் செய்யப்படுகிறார்கள்.
இதற்காக நாடு முழுவதும் 21 ரயில்வே தேர்வு வாரியங்கள் செயல்
படுகின்றன.

தெற்கு ரயில்வே பணியாளர்கள் சென்னை ரயில்வே தேர்வு வாரியம்
மூலம் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கூடத்தில் ஆள்மாறாட்டம் செய்து
தேர்வெழுதும் சம்பவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்து
வருவது குறித்து ரயில்வே தேர்வு வாரியத்துக்கு அவ்வப்போது புகார்கள்
வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில், தேர்வுக்கூடத்தில் ஆள்மாறாட்டத்தை தடுக்கும்
வகையில் ரயில்வே தேர்வு வாரியம் அதிரடி நடவடிக்கை ஒன்றை
எடுத்துள்ளது. அதன்படி, ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண்
விரைவில் கட்டாயமாகிறது. தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்
போதே 12 இலக்க ஆதார் எண் அல்லது ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்த
28 இலக்க ஆதார் பதிவெண்ணை குறிப்பிட வேண்டும்.

ஆதார் விவரத்தில் சம்பந்தப்பட்ட நபரின் முகவரி, கைவிரல் ரேகை,
கண்ணின் கருவிழி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதன்படி,
தேர்வெழுத வரும் விண்ணப்பதாரர்களின் வருகைப்பதிவு அவர்களின்
கைவிரல்ரேகை மூலம் சரிபார்க்கப்படும். இதற்கு ஆதார் சர்வர் பயன்
படுத்தப்படும். இதன்மூலம் எந்த விண்ணப்பதாரராவது ஆள்மாறாட்டம்
செய்து தேர்வுக்கூடத்துக்கு வந்திருந்தால் அவர்கள் கையும்களவுமாக
பிடிபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து சென்னை ரயில்வே தேர்வு வாரியத்தின் தலைவர்
சுனிதா வேதாந்தம் “தி இந்து” விடம் கூறியதாவது:-

ரயில்வே தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் தங்கள் ஆதார்
எண்ணைக் குறிப்பிட வேண்டும். ஆதார் எண் இல்லாவிட்டால் ஆதாருக்கு
விண்ணப்பித்தபோது அளிக்கப்பட்ட ஆதார் பதிவு எண்ணை குறிப்பிட
வேண்டும். ஆதார் எண் மூலமாக விண்ணப்பதாரர்களின் விவரங்களை
ஆன்லைனிலேயே சரிபார்த்துவிடலாம்.

இது விண்ணப்பதாரர்களுக்கும் வசதி, ரயில்வே தேர்வு வாரியத்துக்கும்
வசதி. அதேபோல், தேர்வுக்கூடத்தில் விண்ணப்பதாரர்களின் வருகைப்
பதிவுக்காக அவர்களின் கைவிரல்ரேகை பதிவுசெய்யப்பட்டு ஆதார்
விவரங்களுன் ஒப்பிட்டுப்பார்க்கப்படும். இதன்மூலம் ஆள்மாறாட்டம்
செய்வது முற்றிலுமாக தடுக்கப்படும். எனவே, ரயில் தேர்வுக்கு
விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதார் அட்டை இல்லை என்றால்
இப்போதை அதற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆதார் எண் வரவில்லை என்றால்கூட ஆதார் பதிவு எண் இருந்தாலே போதும்.
இந்த புதிய நடைமுறை இனிவரவிருக்கும் ரயில்வே தேர்வுகளில்
பின்பற்றப்படும்.

இவ்வாறு சுனிதா வேதாந்தம் கூறினார்.
-
----------------------------------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6729

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum