தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar

» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாற்றுத்தொழிலுக்கு மாறுங்கள் விவசாய நண்பர்களே...

View previous topic View next topic Go down

மாற்றுத்தொழிலுக்கு மாறுங்கள் விவசாய நண்பர்களே...

Post by N.Nagarajan on Tue Nov 08, 2016 4:23 pm


தஞ்சாவூர்:
முப்போகம் விளைந்த தஞ்சை உட்பட காவிரி டெல்டாவில் தற்போது ஒருபோகம் விளைவிக்க முடியாத நிலை. கண்ணீர் விடும் விவசாயிகள் தங்கள் நிலங்களை தரிசாக போடுகின்றனர்.

என்ன செய்வது மாற்றுத் தொழில் தெரியாதே என்பதுதான் அவர்களின் பதிலாக உள்ளது. செக்குமாடு உழவுக்கு உதவாது என்பார்கள். அதுவும் மாடு வகைதானே... அதை செக்கில் கட்டியதும் நாம்தானே... பழக்கம் கைகூடினால் வளம் கொழிக்கலாமே...

வானம் பெய்யவில்லை... காவிரியிலும் தண்ணீர் வரவில்லை... விவசாயத்தை என்ன செய்வது... கைகழுவிவிட்டு போகும் விவசாயிகள் தற்போது தஞ்சை உட்பட பல பகுதிகளில் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்பனை செய்துவிட்டு கட்டிட வேலைகளுக்கு செல்லும் அவலம்தான் அதிகரித்து வருகிறது.

என்ன வளம் இல்ல நம் நாட்டில்... எதற்காக விளைநிலங்களை பிளாட் ஆக்க வேண்டும். இருக்கு... மாற்றுத் தொழிலாக பல உள்ளது. இதில் வெற்றிக் கண்டு தற்போது லட்சங்களில் சம்பாதிக்கும் விவசாயிகள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளவே இந்த சிறப்பு கட்டுரை...

நம் மக்கள் எதை வேண்டுமானாலும் விட்டுத் தருவார்கள்... ஆனால் இறைச்சி சாப்பிடுவதை... ம்ஹீம்... கண்டிப்பாக கிடையாது. அப்புறம் என்ன இதோ உங்களுக்காக காத்திருக்கிறது ஒரு மாற்றுத் தொழில். எதற்காக எதுவும் இல்லை என்று அழ வேண்டும். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இருக்கிறதா?

ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சிகளை அடுத்து அசைவப் பிரியர்களின் சாய்ஸாக எப்போதும் இருப்பது வான்கோழிதான். விலை குறைவான அதே நேரத்தில் ஆரோக்கியமான இறைச்சியாக வான்கோழி இருக்கிறது.

அதுவும் விசேஷ காலங்களில் எப்போதும் மட்டன், சிக்கன் என்பதில் இருந்து மாற்று இறைச்சியாக வான்கோழி இருக்கிறது. அதெல்லாம் அந்த காலம் பாஸ்... இப்போ எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும் என்கின்றனர்.

முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் மட்டுமே அசைவ ஓட்டல்களில் கிடைக்கும் வான்கோழி பிரியாணி, இப்போது அனைத்து நாட்களிலும் கிடைக்கிறது. இப்படி பல பிஸினஸ் வாய்ப்புகள் பெருகி இருக்கிற அதே நேரத்தில், ஈமுக் கோழிகளில் முதலீடு செய்துவிட்டு ரத்தக் கண்ணீர் விடுபவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது வான்கோழி வளர்ப்புத் தொழில்.

அதிக இடம், அதிக முதலீடு தேவைப்படாத வான்கோழி வளர்ப்புத் தொழிலை வீட்டுக்கு அருகில் உள்ள காலி இடங்களிலேயே செய்யலாம் என்றால் ஆச்சரியமாக உள்ளதா... ஆனால் அதுதான் உண்மை.

மேய்ச்சல் முறையில் வளரும் கோழிகள், கொட்டகையில் வளரும் கோழிகளைவிட எடை குறைவாகத்தான் இருக்கும். ஆனால், தோப்புகளில் இருக்கும் புல், பூண்டு, பூச்சிகளையெல்லாம் கொத்தி காலி செய்வதுடன் தனது கழிவை நிலத்துல போடுவதால் களை, உரச் செலவு குறைகிறது.

இந்த முறையில் குறைந்த செலவில் அதிக வருமானம் பார்க்கலாம். பெரிய இடவசதி இல்லாதவர்கள் வீட்டின் பின்புறத்தல் வளர்க்கலாம். நகரத்தில் இருப்பவர்கள், வீட்டை சுற்றி உள்ள காலி இடங்களில் மேய்ச்சல் முறையில் வான்கோழிகளை வளர்க்கலாம்.

10 வான்கோழி குஞ்சுகளை வாங்கி விட்டால், சிந்தியது, சிதறியவற்றைச் சாப்பிட்டே வளர்ந்துவிடும் என்றால் நம்ப முடிகிறதா. இதற்காக அதிகம் மெனக்கெடத் தேவயில்லை. ஆனால் இவற்றின் எதிரிகளான நாய், கீரி போன்றவற்றிடமிருந்து பாதுகாப்பது அவசியம். இதை கூட செய்யாவிட்டால் எப்படிங்க...?

அதிர்ஷ்டத்துடன் பிறந்தவன், வளர்க்கும் ஆண் கோழி கூட முட்டை போட்டு பணத்தை அள்ளிக் கொடுக்கும் என்பது ரஷ்ய தேசத்து நாட்டுப்புற பழமொழி.

ஆனால் அதிர்ஷ்டமும் வேண்டாம்… ஆண்கோழி முட்டையிடவும் வேண்டாம்… பொறுமையும், திறமையும் இருந்தால் போதும் வான்கோழி வளர்த்து வாழ்வில் செழிக்கலாம்’ என்கின்றனர் இந்த தொழிலில் அபார வெற்றி பெற்ற விவசாயிகள்.
avatar
N.Nagarajan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

Re: மாற்றுத்தொழிலுக்கு மாறுங்கள் விவசாய நண்பர்களே...

Post by N.Nagarajan on Wed Nov 09, 2016 4:19 pm

சுவையாகவும், மாலை நேர சிறு உணவாகும் அமெரிக்கன் சுவீட்கார்ன்


தஞ்சாவூர்:
தேடி வந்தவர்களை வாழவைத்து அழகுபார்க்கும் இடம் தமிழகம் என்றால் மிகையில்லை. நம் மக்கள் பட்டினி கிடந்தாலும் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை நல்லபடியாக விருந்தளித்து கவனிப்பது என்பது தமிழகத்திற்கே உரித்தான ஒன்று.

அப்படித்தான் சோளம் என்பது நம் நாட்டில் விளையும் மக்காச்சோளம் மட்டுமே என்று இருந்த நம்மை சற்றே திசை திருப்பி அமெரிக்கன் சுவீட்கார்ன் மெதுவாக தன் காலடியை எடுத்து வைக்க ஆரம்பித்தது.

கடந்த 10 ஆண்டுகாலத்தில் அமெரிக்கன் சுவீட் கார்ன் விற்பனை தமிழகம் எங்கும் வியாபித்துள்ளது என்றால் மிகையில்லை. அனைத்து மாவட்டங்களிலும் பெரிய பெரிய மால்கள், பஸ்ஸ்டாண்டுகள் ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளது இந்த அமெரிக்கன் சுவீட் கார்ன்.

நம்ம நாட்டு மக்காச் சோளத்திற்கும், இதற்கும் என்ற வித்தியாசம். நிறைய இருக்கு. இது மிகவும் மென்மையானதாக இருக்கிறது. ஆவியில் நன்றாக வெந்து உண்பதற்கு ஏற்றதாக இருப்பதால் மக்கள் இதை கொஞ்சம், கொஞ்சமாக விரும்ப ஆரம்பித்தனர்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக விற்பனையை அதிகரிக்க ஆரம்பித்ததால் பெங்களூரு வழியாக இந்த அமெரிக்கன் சுவீட் கார்ன் அதிகளவில் தமிழ்நாட்டிற்கு வர ஆரம்பித்துள்ளது. மொத்த விற்பனையாளர்கள் அதிகரித்து காய்கறி விற்பனை நிலையங்களிலும் இதை விற்பனைக்கு கொண்டு வந்து விட்டனர்.

தமிழ்நாட்டில் சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், சிவகாசி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், நாமக்கல், சேலம், அரியலூர், ராமநாதபுரம், ராமேஸ்வரம் என்று இக்கரையில் இருந்து அக்கரை வரை அமெரிக்கன் சுவீட் கார்ன் விற்பனை அதிகரித்துள்ளது.

மாவட்ட தலைநகர்களில் குறைந்தது 20லிருந்து 25 கடைகள் வரை இந்த அமெரிக்கன் சுவீட் கார்ன் விற்பனை செய்கின்றன. அமெரிக்க சோளத்தை சுட்டும், வேக வைத்தும் பலவிதமான உணவுகள் தயாரிக்கவும் உபயோகிக்கிறோம்.

இதுவே இளசாக இருக்கும்போதே பறித்து ‘பேபிகார்ன்’ என்று பலரும் மிக விரும்பும் காய்கறியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பேபிகார்ன் குருமாவில் ஆரம்பித்து ப்ரை வரை என பலவகையிலும் உணவாக சமைக்கப்படுகிறது. சரி இந்த அமெரிக்கன் சுவீட் கார்ன்னில் அப்படி என்னதாங்க இருக்கு என்கிறீர்களா?

100 கிராம் அமெரிக்க சோளத்தில் இருக்கும் சத்துகள் என்னவென்று பார்க்கலாமா! 86 கி. கலோரி, நார்ச்சத்து - 2.7 கிராம், புரதம் - 3.2 கிராம் (18 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன.)

வைட்டமின் ஏ - 187 மைக்ரோ கிராம், போலிக் ஆசிட் - 46 மைக்ரோ கிராம் வைட்டமின் சி - 6.8 மி.கிராம், தயாமின் - 0.2 மி.கி., நயாசின் - 1.7 மி.கி. உள்ளது. சத்துக்கள் நிறைந்ததுதான். இருப்பினும் இதை அதிகம் உட்கொள்ள கூடாது.

அமெரிக்க ஸ்வீட்கார்ன் 7-10 அடி உயரம் வரை வளரும். ஒரு செடியில் 2ல் இருந்து 6 கரு வரை கிடைக்கும். 90 நாட்களுக்குள் அறுவடை செய்யப்படும். நீரிழிவுக்காரர்கள் அமெரிக்கன் சுவீட் கார்னை தவிர்ப்பது நல்லது. இதன் பயன்கள் என்ன தெரியுங்களா?

தோலின் சவ்வுத் தன்மையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. நுரையீரல் புற்று, வாயில் ஏற்படும் புற்று இரண்டையும் தடுக்கும் ப்ளேவனாய்ட்ஸ் கொண்டது. நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைக்கும். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது எடை குறையாது. நமது உடலை இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.

இப்போது பலரும் அமெரிக்கன் சுவீட் கார்ன்னை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதில் உள்ள ‘க்ளூட்டமிக் ஆஸிட்’ எனப்படும் அமினோ அமிலம் இதற்கு ஒரு சுவையைத் தருவதால் அடிக்கடி உண்ண வேண்டுமென ஆவலைத் தூண்டுகிறது.

இந்த அமெரிக்கன் சுவீட் கார்ன் எப்போதும் மிதமாக உண்ண வேண்டிய உணவு. பல முக்கிய தாதுஉப்புகள் இதிலும் உள்ளன.
இந்த ஸ்வீட் கார்ன் சாப்பிட வெகு சுவையாக இருக்கும். பக்க விளைவுகள் இல்லாதது. இதன் மேல் உப்பையும், வெண்ணெயையும், லெமன் கலந்த மிளகாய்பொடியையும் தடவி தருவார்கள்.

அதைத் தவிர்த்து விட்டுச் சாப்பிட்டாலும் சுவை அருமையாக இருக்கும். பஸ்ஸ்டாண்டுகளில் அமைந்துள்ள இந்த அமெரிக்கன் சுவீட் கார்ன் மாலை வேளையில் பஸ்களில் பயணம் செய்பவர்களுக்கு மிதமான மாலை நேர உணவாக அமைகிறது.

இதை வேக வைத்து உண்பதால் நல்ல உணவாக அமைகிறது. சுத்தமான நீரில் வேக வைக்கப்படுவதாலும் கைகளால் தொடாமல் இடுக்கி போட்டு எடுப்பதாலும் இது ஹைஜீனிக் உணவாக இருக்கிறது. மேலும் இதன் சுவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இழுத்து வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூப், சுண்டல், மசாலா கலந்தும் இந்த சுவீட்கார்ன் சமைக்கப்படுகிறது.
avatar
N.Nagarajan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

Re: மாற்றுத்தொழிலுக்கு மாறுங்கள் விவசாய நண்பர்களே...

Post by N.Nagarajan on Wed Nov 09, 2016 4:21 pm

படம் உண்டு

அதிரடி நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திரமோடி...
ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது... செல்லாது... மக்கள் திணறல்


புதுடில்லி:
''கறுப்புப் பணம் மற்றம் கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது,'' என்று , பிரதமர் நரேந்திர மோடி நேற்று அதிரடியாக அறிவிக்க தற்போது நாடே இதை பற்றிதான் பேசி வருகிறது. இந்த நடவடிக்கையால் நடுத்தர மக்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமடைந்து வரும் நிலையில் இந்தியாவில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புழக்கத்தில் விட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் நம்நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது. இதையடுத்து 'டிவி' மூலம், நாட்டு மக்களிடையே, பிரதமர் மோடி நேற்று பேசினார்.

கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிராக புதிய போரை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதற்காக எடுக்கப்பட்டுள்ள பல அதிரடி முடிவுகள் இவை என்று அவர் கூறியது: 1,000, 500 ரூபாய் நோட்டுகள் இனி செல்லுபடியாகாது.

இனி, இந்த நோட்டுகளுக்கு எந்த மதிப்பும் கிடையாது; அவை வெறும், வண்ண காகிதங்களே. 100, 50, 20, 10, 5, 2 மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள, 1 ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் வழக்கம் போல் செல்லுபடியாகும்

கையில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, மாற்றிக் கொள்ள, 50 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதாவது, டிசம்பர் 30 வரை மாற்றி கொள்ளலாம். நவம்பர், 10 முதல் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம்.

புதிய டிசைனில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உடைய புதிய, 2,000 மற்றும், 500 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இவை 10ம் தேதி முதல் புழக்கத்துக்கு வருகிறது

ஏ.டி.எம்.,களில் இனி அதிகபட்சம் நாள் ஒன்றுக்கு, 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். வங்கிகளில் இருந்து, நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாயும் ஒரு வாரத்தில் அதிகபட்சமாக, 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்.

500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் செலுத்தி கொள்ளலாம் அல்லது அதன் மதிப்புக்கு மற்ற நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு மாற்றிக் கொள்வதற்கு அரசு கொடுத்துள்ள, வருமான வரி நிரந்தர கணக்கு எனப்படும், 'பான்' அட்டை அல்லது ஆதார் அட்டை அல்லது தேர்தல் அட்டையை பயன்படுத்தலாம்.

நவம்பர் 10 முதல், நவம்பர், 24ம் தேதி வரை, நாள் ஒன்றுக்கு, அதிகபட்சமாக 4,000 ரூபாய் மதிப்புள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.

டிசம்பர் 30ம் தேதிக்குள் மாற்ற முடியாத, 1,000, 500 ரூபாய் நோட்டுகளை அடுத்த ஆண்டு மார்ச், 31ம் தேதி வரை ரிசர்வ் வங்கி அறிவிக்கும் இடங்களில், கால தாமதத்துக்கான காரணத்தை தெரிவித்து மாற்றிக் கொள்ள முடியும்.

நவம்பர், 11, 12ம் தேதி வரை, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, விமானம், ரயில்வே டிக்கெட், அரசு பஸ்கள், மருந்தகங்களில் பயன்படுத்த முடியும். இப்படி ஒரு அதிரடியை பிரதமர் அறிவிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த அறிவிப்பால்
அனைத்து ஏ.டி.எம்.களிலும் கூட்டம் அலை மோதியது. இதனால், ஏ.டி.எம்., மிஷின் களில் பணம் காலியானது.

பெட்ரோல் பங்குகளில் நேற்று, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால், பெட்ரோல், டீசல் நிரப்ப முடியாமல் வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டனர்.

புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் தற்காலிக கஷ்டங்களை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். கறுப்புப் பணத்தால், இந்திய பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படுவதால் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

படம் உண்டு

கருத்துக்கணிப்புகள் பொய்யாக அமெரிக்க அதிபரானார் டிரம்ப்


வாஷிங்டன்:
கருத்துக்கணிப்புகள் பொய்யாக... அரசியல் பின்புலம் இல்லாத ஒருவர் அமெரிக்க அதிபராகி இருக்கிறார் குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கிய டொனால்ட் டிரம்ப். இவர் அமெரிக்காவின் 45வது அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணங்களைக் கைப்பற்றி குடியரசு கட்சி டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பிற்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் கருத்துக்கணிப்புக்கள் அனைத்தும் ஹிலாரிக்கு ஆதரவாக இருந்தன.

இந்நிலையில் அனைத்தையும் பொய்யாக்கி டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 ஓட்டுக்கள் தேவை. டிரம்ப் 276 ஓட்டுக்கள் பெற்றார்.

இதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரசியல் பின்புலம் இல்லாத ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல் முறையாகும். அதேபோல் அதிபர் தேர்தலில் பெண்களும், இளைஞர்களும் ஹிலாரிக்கு அதிகளவில் ஓட்டுக்கள் அளித்திருந்த போதிலும் 218 ஓட்டுக்களை மட்டுமே அவர் பெற்றிருந்தார்.

அமெரிக்க அதிபரான டிரம்ப்க்கு 70 வயது. நியூயார்க் நகரில் பிறந்தவர். பென்சில்வேனியா பல்கலை.,யில் பொருளாதார பட்டம் பெற்ற இவர் தனது தந்தை பிரட் டிரம்ப்பின் ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில்களை கவனித்து வந்தார்.

பின்னர் தொழில்கள் அனைத்தையும் விரிவுபடுத்தி, அனைத்திற்கும் தனது பெயரை சூட்டினார். 2000 ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது சீர்திருத்த கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால் அப்போது தேர்தலுக்கு முன்னதாகவே அவர் வாபஸ் பெற்றார்.

புதிய தொழில் துவங்கினாலும், திருமணம் செய்தாலும் அதனை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தும் பழக்கம் வாயிலாக அமெரிக்க மக்களிடையே பிரபலமானவர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் உண்டு

எப்படி? எப்படி? வெளியானது 2 நாட்கள் மவுனம் காத்த மத்திய அரசு... விசாரணையில் குதித்தது
புதுடில்லி:
ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்துவதற்கு முன்பே இணையத்தில் ரூ.2000 நோட்டுக்கள் வெளியானது குறித்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு புதிதாக ரூ.2000 நோட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் நாளை (10ம் தேதி ) முதல்தான் நாடெங்கும் அறிமுகம் ஆக உள்ளது.

11ம் தேதி முதல் புதிய ரூ.2000 நோட்டுகள் ஏ.டி.எம்.கள் மூலம் நாடெங்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த ரூபாய் நோட்டுகள் படம் இணையத்திலும், பேஸ்புக், வாட்ஸ் அப்புகளிலும் கடந்த 6ம் தேதியே வெளியானது. ஆனால் அப்போது மவுனம் காத்த மத்திய அரசு தற்போது விசாரணையை தொடங்கி உள்ளது.

லட்சக்கணக்கானோர் ரூ.2000 நோட்டின் கலர் மற்றும் வடிவத்தை பார்த்தனர். பெரும்பாலானவர்கள் அந்த படங்கள் போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளன என்று நினைத்தனர். ஆனால் பிரதமர் மோடி நேற்று அறிவித்த பிறகுதான் புதிய ரூ.2000 நோட்டு படங்கள் உண்மையானவை என்று தெரியவந்தது.

இந்நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியில் வரும் முன்பு ரூ.2000 நோட்டு படம் இணைய தளங்களிலும், வாட்ஸ்ஆப் குரூப்களிலும் பரவியது மத்திய நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரிண்டிங் இடத்தில் பிடிங்கப்பா...


படம் உண்டு

வரலாறு திரும்புகிறது.... முதலில் மொரார்ஜி தேசாய்... இப்போ மோடி...


புதுடில்லி:
தனது அதிரடி நடவடிக்கையால் உலக நாடுகளின் பார்வையை தன் பக்கம் திருப்பி உள்ளார் நம் நாட்டு பிரதமர் நரேந்திர மோடி என்று சொல்லவேண்டும். துணிச்சலான முடிவு எடுத்த 2வது பிரதமர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக உத்தரவிட்டார் பிரதமர் மோடி. கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.

பெரிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுவது இது இந்தியாவில் 2-வது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 1978-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனதா கட்சிஆட்சியில் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் ரூ.100-க்கு மேல் இருந்த நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். ரூ.1000, ரூ.2000, ரூ.10,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

அப்போது கறுப்பு பணமும், கள்ளநோட்டுகளும் தான் இந்த முடிவை எடுக்க அவருக்கு தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இப்போதும் வரலாறு திரும்பி உள்ளது. கறுப்பு பணத்திற்கு எதிரான போராக இதை முன்னிறுத்தி உள்ளார் பிரதமர் மோடி. இந்த முடிவுகளை அறிவித்த இரண்டு பிரதமர்களும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

1938-ம் ஆண்டு இந்தியா, இங்கிலாந்து வசம்இருந்த போது ரூ10,000 நோட்டை வெள்ளையர் அரசு அறிமுகப்படுத்தியது. அதன் புதுவடிவம் பின்னர் 1954-ல் வெளியானது. இதை பிறகு 1946 மற்றும் 1978ல் இந்திய அரசுகள் ஒழித்தன.

மொரார்ஜி தேசாய் 1000, 5,000 மற்றும் 10,000 ஆகிய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். பின்னர் 1987-ம் ஆண்டு 500 ரூபாய் நோட்டு மீண்டும் அறிமுகம் ஆனது. இதே போல் 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1000 ரூபாய் நோட்டும் திரும்பி வந்தது.

தற்போது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்பி போய் விட்டது. 500 ரூபாய் புதிய வடிவிலும், ரூ.2 ஆயிரம் நோட்டும் புதிதாக வருகிறது. வரலாறு திரும்புகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


படம் உண்டு

டிரம்ப் அதிபர்... கனடா குடியேற்ற இணையதளம் முடங்கியது...

கனடா:
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் கனடா குடியேற்ற இணையதளம் முடங்கியது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் (70) வெற்றிப்பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஒவ்வொரு மாகாணமும் ஓட்டு எண்ணிக்கையை தொடங்கியது. இதில் டிரம்ப் வெற்றிப் பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் அமெரிக்கர்கள் மீண்டும் கனடாவுக்கு செல்ல தடை விதிக்கப்படுமோ என்ற அச்சம் அமெரிக்க மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இதனால் பலரும் ஒரே நேரத்தில் கனடா குடியேற்ற இணையதளத்தை பார்வையிட்டு, அதில் சந்தேகங்களையும் கவலைகளையும் பதிவிட்டனர். இதனால் கனடா குடியேற்ற இணையதளம் (http://www.cic.gc.ca/) முடங்கியது.

கனடா குடியேற்ற இணையதளத்தில் இத்தகைய பிரச்னை ஏற்பட்டுள்ளதாக டுவிட்டரில் பலரும் குறிப்பிட்டதை அடுத்து, விபரம் அறிந்த குடியேற்ற அதிகாரிகள் இணையதளத்தை சீரமைக்கும் பணியில் இறங்கி உள்ளனர்.

கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் அவர்களின் கலாச்சார பாரம்பரியங்களை கொண்டு வந்து, தங்கள் நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்ளும்படி கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
avatar
N.Nagarajan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

Re: மாற்றுத்தொழிலுக்கு மாறுங்கள் விவசாய நண்பர்களே...

Post by N.Nagarajan on Wed Nov 09, 2016 4:22 pm

இயற்கை வைத்தியர் அருகம்புல்... சாறு எடுத்து சாப்பிட்டு வர கொழுப்பு கரையும்...

தஞ்சாவூர்:

கோயிலுக்கு போறீங்க... முக்கியமா... பிள்ளையார் கோயிலுக்கு... அங்கு சுவாமிக்கு போட அருகம்புல் மாலை வாங்குறீங்க... அந்த அருகம்புல்தாங்க இன்னைக்கு கட்டுரையின் முக்கிய பொருள்.

எல்லோருக்கும் ரொம்ப ஈசியா கிடைக்கும் அருகம்புல்லில் உள்ள சத்துகள் பற்றி எல்லாருக்கும் தெரியுமா... அட போங்கப்பா...என்று சொல்வாங்க... ஆனால் இதன் அருமையை உணர்ந்தவர்கள் இதை தினமும் ஜீஸாக்கி அருந்துகின்றனர்...

சரி அருகம்புல் பற்றி பார்ப்போமா! இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்து அருகம்புல் என்றால் அது மிகையில்லைங்க... உண்மையிலும் உண்மை.

அருகம்புல் ஒரு டாக்டர் மாதிரிதான் என்று சொல்ல வேண்டும். பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் அருகம்புல்லுக்கு இருக்குங்க...
விநாயகருக்கு உகந்த வழிபாட்டுப் பொருளாக அருகம்புல்லை நாம் உபயோகப்படுத்துகிறாம்.

இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. அருகம்புல்லில் சாறு எடுத்து சாப்பிட்டால் உங்க உடம்பில் இருக்கும் வியாதிகள் பல தெறிச்சுக்கிட்டு ஓடிடும் என்று தெரியுங்களா?

அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம். ஆரம்பத்தில் ஐயோ என்று சொல்பவர்களும் இதனால் பலன் அடைந்து இதை தொடர்ந்து சாப்பிடுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு மிகப்பெரிய உதவியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க செய்கிறது. ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது. மாத்திரைகள் உட்கொள்பவர்கள் கூட அருகம்புல் ஜீஸை அருந்தலாம். எந்த பக்கவிளைவுகளும் கிடையாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்க...

வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர அதிலிருந்து விடுபட்டு நிம்மதி அடைய செய்கிறது. உடல் சூட்டையும் அருகம்புல் ஜீஸ் தணிக்கிறது. இதேபோல்தான்
நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த மருந்தாக உள்ளது. இது இயற்கை நமக்கு அளித்த பெரும் கொடை என்று உணர வேண்டும்.

நாக்கு வறட்சி, நாக்கு சுவை தெரியாமல் போவது, வாந்தி, எரிச்சல், பித்த மயக்கம், சோர்வு என பல பிரச்னைகளை தீர்த்து வைக்கும் இயற்கை வைத்தியர் அருகம்புல் சாறு என்றால் பார்த்துக் கொள்ளுங்க.

அருகம்புல்லின் வேரை அரைத்து, அந்த விழுதோடு, அரிசி கழுவிய தண்ணீரையையும் கலந்து சாப்பிட்டால், பித்த வாந்தி தணியும் என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை. இவ்வளவுதானா என்று கேட்காதீர்கள்... எவ்வளவோ... இருக்கு.. அருகம்புல் ஜீஸ்க்கு, பித்தப்பையில் ஏற்படும் கல், சிறுநீரகக் கல் ஆகியவற்றை கரைக்கக் கூடிய சக்தி இருக்கு.

அருகம்புல்லை தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்த வேண்டும். பின்னர் சிறிது தண்ணீரைச் சேர்த்து, (தேவைப்பட்டால்) துளசி, வில்வம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுக்க வேண்டும். வீட்டில் மிக்ஸி இருப்பின், அதைப் பயன்படுத்தியும் சாறு தயாரிக்கலாம்.

இதை வெறும் வயிற்றில் காலையில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவில் இதை பருகலாம். காலை நேரங்களில் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வோர் இதை பெருமளவில் வாங்கி பருகுகின்றனர்.

இச்சாறு வாய்துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கிறது. உடலிலுள்ள நச்சுத்தன்மையை அகற்றி கொழுப்பு சத்தை குறைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்க...
avatar
N.Nagarajan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

Re: மாற்றுத்தொழிலுக்கு மாறுங்கள் விவசாய நண்பர்களே...

Post by N.Nagarajan on Wed Nov 09, 2016 4:22 pm

எச்சில் தொட்டு டிக்கெட்டா... தப்பு... தப்பு... அது ரொம்ப தப்பு விழிப்புணர்வின் சிகரமாக விளங்கும் தஞ்சை டவுன் பஸ் கண்டக்டர்

தஞ்சாவூர்:
யாருப்பா... அது படிக்கட்டுல தொங்கிக்கிட்டு இது என்ன உடற்பயிற்சி கூடமா... ஏறி மேல வாப்பா... என்றபடி கூட்டத்தை உள்ளே அனுப்புவதும், டிக்கெட் கிழித்து கொடுப்பதுமாக இருந்தார் அந்த டவுன் பஸ் கண்டக்டர்.

டிக்கெட் கிழிப்பதற்கு முன்பாக பணம் வைக்கும் அந்த பையின் பக்கவாட்டில் எதையோ தொடுவதும்... பின்னர் டிக்கெட்டை கிழிப்பதுமாக அன்னிச்சை செயல் போல் செய்து கொண்டிருந்தார். என்னதான் செய்கிறார் என்று பார்க்க முயன்றோம்... முடியவில்லை. காரணம் பஸ் முழுவதும் மக்கள் நெரிசல்.

அந்த பஸ் தஞ்சாவூர் புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ்ஸ்டாண்ட் செல்லும டவுன் பஸ். சில ஸ்டாப்பிங்கிற்கு பிறகு பஸ்சில் கும்பல் குறைந்தவுடன் மீண்டும் கண்டக்டரை பார்த்தோம்.

இப்போது தெளிவாக அவர் என்ன செய்தார் என்று தெரிந்து. கண்டக்டர் வைத்திருந்த அந்த பணப்பையின் பக்கவாட்டில் ஒரு சிறிய டப்பா அமர்ந்திருந்தது. ஆர்வம் தாங்க முடியாமல் எழுந்து நேரடியாக அவர் நின்றிருந்த இடத்திற்கு சென்றவுடன் நமது ஆர்வம் மேலும் அதிகரித்தது காரணம் என்ன தெரியுங்களா?

பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் கொடுப்பதற்குள் கண்டக்டர்கள் படும் பாடு அவர்களுக்குதான் தெரியும். மிஷின் வந்து விட்டாலும் இன்னும் ஏராளமான பஸ்களில் இன்றும் டிக்கெட்தான் கிழித்து கொடுக்கப்படுகிறது.

இந்த டிக்கெட்டுகளை கண்டக்டர்கள் எப்படி கிழிப்பார்கள் என்று பார்த்தால் அந்த டிக்கெட்டை வாங்கவே யோசிப்பார்கள் பயணிகள். வேறு வழி வாங்கித்தானே ஆகவேண்டும். ஆம் கண்டக்டர்கள் டிக்கெட் இரண்டாக வந்துவிடக்கூடாது என்பதற்காக நெற்றி வியர்வையை தொட்டும், நாக்கு எச்சிலை தொட்டும் டிக்கெட் கிழித்து கொடுப்பது காலம் காலமாக நடந்து வருகிறது.

அசூசையாக இருந்தாலும் டிக்கெட் அவசியம் என்பதால் பயணிகளும் தலையெழுத்தே என்று அதை வாங்கி கொள்வர். பார்த்தாலும் பார்க்காதது போல் முகத்தை திருப்பி கொள்வது வாடிக்கையான சம்பவம். இதை அனைத்து பஸ்களிலும் தவறாமல் பார்க்கலாம். இது தமிழ்நாட்டில் எல்லா ஊரிலும் காணக்கிடைக்கும் ஒரு சம்பவம்தான்.

ஆனால் அந்த டவுன் பஸ் கண்டக்டர் செய்தது பெரிய விஷயம். அவரது பணப்பையின் பக்கவாட்டில் இரு பட்டைகளுக்கு இடையில் அடக்கமாக உட்கார்ந்திருந்த அந்த டப்பாவில் ஒரு ஸ்பான்ஜ் இருந்தது.

அதில் தண்ணீர் ஊற்றப்பட்டு ஈரமாக இருந்தது. இதை தொட்டுதான் அந்த கண்டக்டர் டிக்கெட்டை கிழித்து கொடுத்தார். பணத்தை எண்ணி தருவதற்கும் இதை பயன்படுத்தினார்.

ஆச்சரியம் அல்லவா? உண்மையிலும் இது ஆச்சரியமான விஷயம்தான். மெதுவாக அவரிடம் பேச்சு கொடுத்தோம். இப்படி ஒரு ஐடியா எப்படி உங்களுக்கு வந்தது என்று கேட்டோம்.

அதற்கு அவர் கூறியது பெரிய விஷயம். அந்த கண்டக்டர் பெயர் முருகானந்தம். நானும் ஆரம்பகாலத்தில் மற்ற கண்டக்டர்கள் போல்தான் எச்சில் தொட்டு டிக்கெட் கிழித்து கொடுத்து கொண்டிருந்தேன். இதனால் என்ன பாதிப்பு என்பது தெரியாத வரைதான் இப்படி நடந்தது.

ஒருநாள் எங்கள் பகுதியில் நடந்த சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எச்சிலால் ஏற்படும் தொற்று நோய்கள் பற்றிய விளக்கம் என்னை விழிக்க செய்தது. எத்தனை பேருக்கு நாம் எச்சிலை தொட்டு தருகிறோம்.

அதனால் அவர்களுக்கு ஏதேனும் வியாதி வந்திருந்தால் நாம் அல்லவா அதற்கு காரணமா இருந்திருப்போம் என்று உணர்ந்தேன். இதனால் காசு வைக்கும் பையின் பக்கவாட்டில் ஒரு பட்டையை ரெடி செய்து அதில் இதுபோன்ற டப்பாவில் தண்ணீரில் நனைத்த ஸ்பான்ஜ்சை வைத்து டிக்கெட் கிழித்து கொடுக்க ஆரம்பித்தேன்.

இதேபோல் சில கண்டக்டர்களும் தயார் செய்து கொண்டு விட்டனர். இதை அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்றார்.
அவரது அந்த சமூகத்தின் மீது இருந்த அக்கறைக்கு பாராட்டுக்கள் கூறி புறப்பட்டோம். இதை அரசே செய்து கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

பஸ்சில் பயணிக்கும் பயணிகளும் எவ்வித அசூசையும் படாமல் டிக்கெட் பெற வழி வகுக்கும். இதில் பெரிய செலவு ஏதும் வந்துவிடப்போவதில்லை. கண்டக்டர்களே மனசு வைத்தால் இதை செய்து கொள்ளலாம். யோசிப்பார்களா? யோசித்தால் நலம் பயக்கும்...
avatar
N.Nagarajan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

Re: மாற்றுத்தொழிலுக்கு மாறுங்கள் விவசாய நண்பர்களே...

Post by N.Nagarajan on Wed Nov 09, 2016 4:27 pm

நீங்க சொல்லுங்க... யோசனை... அள்ளுங்க பரிசை... டில்லி அரசு அறிவிப்பு


தஞ்சாவூர்:
என்ன செய்யறது... எங்களுக்கு எந்த யோசனையும் வர்ல... உங்களுக்கு வந்தால் சொல்லுங்க... பரிசும் தர்றோம் என்று டில்லி அரசு அறிவித்துள்ளது.

என்ன விஷயம் தெரியுங்களா? நம்ம தலைநகர் டில்லியையே முடிக்கி உள்ளது காற்று மாசுப்பாடு. இதை கட்டுப்படுத்ததான் உருப்படியான ஐடியா கொடுப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று சொல்லியிருக்காங்க...

டில்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது. கடுமையான பனிப்புகை மூட்டமும் நீடித்து வருவதால் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்றவற்றால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் வீடுகளை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர்.

பள்ளிகளுக்கும் நேற்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காற்றில் மாசுக்களின் அளவு பாதுகாப்பு வரம்பைவிட அதிகரித்து வருகிது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்தான் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த உருப்படியான ஐடியா கொடுப்பவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என டில்லி அரசு அறிவித்துள்ளது. அட ஐடியாவை சொல்லணும்ன்னா... வீட்டை விட்டு வரணுமேப்பா...


பைரவா டீசர் போடும் போடு... இணையம் அதிருது... எதிர்பார்ப்பு எகிறுது...

தஞ்சாவூர்:
பைரவாவின் டீசர் போடும் போட்டில் கபாலிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது.

விஜய் படம் என்றாலே மாஸ் என்று மாறிவிட்டது. இந்நிலையில் தெறி படம் வசூலில் செமத்தியாக கல்லா கட்டியது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்நிலையில் பொங்கலுக்கு வரவிருக்கும் பைரவா தற்போது யு-டியூபிலேயே சாதனை படைக்க ஆரம்பித்துவிட்டது. இந்த டீசர் தற்போது 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்க...

அதுமட்டுமா 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்று கபாலிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஷங்கர் இயக்குனரே இல்லீங்க... வில்லன் நடிகர் அதிரடி பேச்சு

தஞ்சாவூர்:
ஷங்கர் இயக்குனரே இல்லீங்க... என்று அதிரடித்துள்ளார் வில்லன் நடிகர் ஒருவர். என்ன விஷயம் தெரியுங்களா?

ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அற்புத இயக்குனர் என்பது நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவருடைய படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கையே அதிகம். அப்படி இருக்கும் போது ஷங்கர் ஒரு இயக்குனரே இல்லை என்று வில்லன் நடிகர் சொன்னா எப்படி இருக்கும்.

ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தில் சுதான்ஷீ பாண்டே வில்லனாக நடித்து வருகிறார். இவர் அஜித் நடித்த பில்லா-2 படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார். என்ன சொல்லியிருக்கார் என்றால்...

நான் இதுவரை சந்தித்த மனிதர்களிலேயே ரஜினி தான் மிகவும் சிறந்தவர். கிட்டத்தட்ட கடவுளை சந்தித்தது போல் இருந்தது.
ஷங்கரெல்லாம் ஒரு இயக்குனரே இல்லை! அவர் ஒரு விஞ்ஞானி.
ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்... விஞ்ஞானிகளால் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும் என்று சொல்லியிருக்கார்.
ஏற்கனவே இதேபோல்தான் அக்‌ஷய் குமாரும் சொன்னார் என்பது
இங்கு நினைவூட்ட வேண்டிய ஒன்று.

‘ஹர ஹர மஹா தேவகி’ அட படத்து தலைப்புதாங்க... நம்புங்க..!

தஞ்சாவூர்:
தலைப்புக்கு பஞ்சம் வந்துவிட்டதா கோலிவுட்டில் என்றுதான் கேட்க வேண்டியுள்ளது. ஏன் தெரியுங்களா?

கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் தலைப்பை பாருங்களேன். ‘ஹர ஹர மஹா தேவகி’ இதுதான் படத்தின் தலைப்பாம். அட உண்மைதாங்க...

கவுதம் கார்த்திக் தற்போது ‘முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் புதுமுக இயக்குனர் சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க புக் ஆகி உள்ளார். இந்த படத்திற்குதான் இப்படி ‘ஹர ஹர மஹா தேவகி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தை தங்கம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தங்கராஜ் தயாரிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. எல்லாம் சரிதான் படத்தில் தலைப்பை மாத்த மாட்டீங்க இல்லியா?


படம் உண்டு

கவுன் பிரச்னை... கவுதமியை கவுத்து விட்டுடுச்சே... கோலிவுட் ஆதங்கம்...


தஞ்சாவூர்:
ஒரு கவுன் பிரச்னை கவுதமியை கவுத்து விட்டுடுச்சே... இது நியாயமா? என்று கேட்கின்றனர் கோலிவுட் வாசிகள். எதற்காக தெரியுங்களா?


கமல்ஹாசன், ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் சபாஷ் நாயுடு படத்தில் ரம்யா கிருஷ்ணனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஆடை வடிவமைப்பாளர் கவுதமி என்பதை நினைவில் கொள்க.

இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தபோது கவுதமிக்கும், ரம்யாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. காரணம் ஒரு கவுன். கவுதமி வடிவமைத்து கொடுத்த அந்த கவுனை அணிய மாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். மேலும் கவுதமியையும் கடுப்பேற்றி உள்ளாராம்.

இதனால் கவுதமி அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்துவிட்டார். இந்நிலையில்தான் வேற ஒரு மேட்டரும் நடந்துள்ளது. ரம்யா கிருஷ்ணனும், கமல்ஹாசனும் ரிசார்ட் ஒன்றில் தங்கியது குறித்து யாரோ கவுதமியிடம் போட்டுக் கொடுத்துள்ளனர்.

இதனால் கோபம் சுர்ரென்று... உச்சந்தலைக்கு ஏறியதன் விளைவுதான் இந்த பிரிவு என்கின்றனர் விபரமறிந்தவர்கள்... என்னம்மா... இப்படி பண்ணீட்டீங்களேம்மா... அமெரிக்காவில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு நடந்தபோது ஆடை தொடர்பாக கவுதமிக்கும், ஸ்ருதி ஹாஸனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது வதந்தி பரவியதை நினைவில் கொள்க.

avatar
N.Nagarajan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

Re: மாற்றுத்தொழிலுக்கு மாறுங்கள் விவசாய நண்பர்களே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum