தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சந்தோசம்!! சந்தோசம்!!

View previous topic View next topic Go down

சந்தோசம்!! சந்தோசம்!!

Post by முழுமுதலோன் on Fri Sep 16, 2016 4:01 pm

சந்தோசம் என்றால் என்ன?

''உலக அறிஞர்கள் சொன்ன உன்னதக் கருத்துக்கள்''

01. ஒழுங்கான வாழ்க்கை என்பது ஏறும் ஏணி போன்றது. கீழிருந்ததைவிட பாதித் தூரம் ஏறிய பின்னர் காட்சி மேலாகத் தெரிகிறது. மேலும் மேலும் ஏறினால்
தொடுவானம் விரிவடைந்து காட்சி உன்னதமாக விரிவடைகிறது.

02. எதிர்காலத்தில் நேரம் கிடைத்தால் சந்தோசமாக இருக்கலாம் என்று எண்ணியபடி பலர் தங்கள் வாழ்வை எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறார்கள். ஆனால் நிகழ்காலம் மற்ற காலங்களைவிட மேலானது என்பதை பலரது அறிவு கண்டு பிடிக்காமலே இருக்கிறது.

03. சந்தோசமாக இருப்பவனை கூர்ந்து அவதானியுங்கள் அவன்
ஒரு நாளின் 24 மணி நேரமும் எதையோ செய்து கொண்டிருப்பான். தொலைந்துவிட்ட சட்டைப் பட்டனை தேடுவதுபோல சந்தோசத்தை எங்கோ தேடிக்கொண்டிருக்கமாட்டான்.

04. சந்தோசத்தின் ஊற்றை தனக்குள்ளே அதிகம் காணக்காண மனிதன் அதிக இன்பமடைகிறான். மிக உயர்ந்த, பலதரப்பட்ட நீடித்திருக்கும் இன்பங்கள் மனதில் இருந்து எழுபவையே.

05. யார் அதிகம் சிந்தித்து, உயர்ந்த உணர்வுகளை உணர்ந்து, சிறந்து செயற்படுகிறார்களோ அவர்களே உன்னத வாழ்வு வாழ்கிறார்கள்.

06. தன் சக மனிதர்களுக்கான சேவையில் தன் அகந்தையை அர்ப்பணிக்காதவரை யாருமே வாழ்வின் அர்த்தத்தைக் கற்பதில்லை.

07. நல்ல வாழ்விற்கு செயற்பூர்வமான மனித நேயம் என்ற நற்குணம் தேவை. இதுதான் வாழ்விற்கான தங்கமயமான வழி. இதுதான் திருப்திகரமான வாழ்வு, மனிதராய் பிறந்தவர் சந்தோஷமாய் இருக்க இதுதான் வழி.

08. அடுத்தவர்களுக்காக நாம் சிந்தித்து அவர்களுக்காக ஏதாவது செய்யாவிட்டால், சந்தோஷத்திற்கான சிறந்த வழியை இழந்துவிடுகிறோம்.

09. பெறுவதிலோ வைத்திருப்பதிலோ இல்லை தருவதில்தான் சந்தோஷமே இருக்கிறது.

10. சந்தோஷம் என்பது நறுமணம் தரும் திரவியம் போன்றது. உங்கள் மீது அதனுடைய சில துளிகளாவது படாமல் உங்களால் அடுத்தவர் மீது அதைத் தெளிக்க முடியாது.

11. சந்தோசத்தை வாங்க முடியாது, உண்மையில் பணத்திற்கும் அதற்கும் சம்மந்தமே இல்லை.

12. வாழும் சூழல், ஊதிய உயர்வு, பொருளாதாரம், அரசாங்கத்தை மாற்றுவது போன்றவற்றிலேயே மனிதர்கள் கவனமாக இருக்கிறார்கள். தன்னைத்தானே
மேம்படுத்திக் கொள்வதில் அவர்கள் கவனமெடுப்பதில்லை.

13. சந்தோஷம் உள்ளிருந்து வருகிறது. எளிய நல்ல குணம் தெளிவான சிந்தனையால் வருகிறது. மதம் அதற்கு தேவையில்லை, ஆனால் எங்கிருந்தாலும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்காத ஒருவரிடம் அது வந்ததாக சரித்திரம் இல்லை.

14. சுயநலம் சந்தோஷத்தின் எதிரி, அடுத்தவரை சந்தோஷமாக்குவதே தன்னைத்தானே சந்தோஷப்படுத்தும் வழியாகும்.

15. சுயநலமும் பேராசையும் மன அமைதியை அழித்துவிடும். திருப்தி, மேம்படுவதில் அக்கறை, பயனுள்ளவராக இருப்பது, கடுமையாக படிப்பது, அமைதியாக சிந்திப்பது, எதையும் துணிச்சலோடு செய்வது இவைகள் சந்தோஷத்தை எட்டித்தொட சிறந்த படிக்கட்டுக்களாகும்.

16. ஒரு மனிதனிடம் என்னென்ன சொத்து இருக்கிறது என்பது சந்தோஷமல்ல அவன் என்னவாக இருக்கிறான் என்பதே சந்தோஷமாகும்.

17. பணத்தால் உணவை வாங்கலாம் ஆனால் பசியை வாங்க முடியாது. மருந்தை வாங்கலாம் ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது. வேலையாட்களை பெறலாம் ஆனால் விசுவாசத்தைப் பெற முடியாது.

18. ஒரு மனிதன் சந்தோஷமின்றி இருந்தால் அதற்குக் காரணம் அவனுடைய சொந்தத் தவறுதான். ஏனெனில் கடவுள் எல்லோரையும் சந்தோஷமாகத்தான் படைத்துள்ளார்.

19. சந்தோசம் என்பது நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை, என்ன செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.

20. இல்லாத ஒன்றாக தாங்கள் ஆக முயற்சித்து தங்களால் முடியாத ஒன்றை செய்ய முயற்சிப்பவர்கள்தான் அதிருப்தியோடு இருக்கிறார்கள். என்ன செய்ய முடியும் என்பதைவிட என்ன செய்ய முடியாது என்பதை அறிந்து செய்வதுதான் முக்கியம். வாழ்வின் முழுமைக்கு நம்மை நாமே அர்ப்பணித்து, வாழ்வு நம் ஊடாகச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

21. வேறு யாராகவும் இருக்க முயலாமல் தானாகவே, தன் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வதுதான் வீரமும் விவேகமுமாகும்.

22. வாழ்க்கையை எதிர் காலத்திற்கு ஒத்திப் போடுவதுதான் ஆண்களும் பெண்களும் சந்தோஷம் இல்லாமல் இருக்கக் காரணம். இதனால் அவர்கள் நிகழ்காலத்தைப் பார்க்க முடியாமல், சந்தோஷமான வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்.

23. வாழ்வு வாழ்வதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு மணி நேரத்தின் சதையில்தான் வாழ்வு இருக்கிறது என்பதை காலம் கடந்தே அறிகிறோம்.

24. வாழ்வதை ஒத்திப் போடுவதுதான் நமக்குள்ள கெட்ட பழக்கம். தொடுவானத்திற்கு அப்பால் உள்ள மந்திர, மாய, ரோஜாத் தோட்டத்தைப்பற்றி நாம் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். இன்று நம் ஜன்னலுக்கு வெளியே இருக்கும் ரோஜாக்களை அறிவதில்லை.

25. பணத்தையும் வெற்றியையும் பேராசையுடன் தேடுவதால்
துன்பமே மிஞ்சும். காரணம் இப்படிப்பட்ட வாழ்வு தங்களுக்கு வெளியே உள்ள பேராசைக்காரரோடு சம்பத்தப்படுவதால் இறுதியில் துன்பமான முடிவோடு நிற்கிறது.

26. பணத்தைச் சேர்ப்பது, அதிகாரத்தைச் சேர்ப்பது இவைகளால் வாழ்வுக்கு பயனில்லை. வாழ்வு இவை எல்லாவற்றையும் விட மேலானது.

27. சுவையான கருத்துக்களை சிந்திப்பவனே மிகவும் சந்தோஷமான மனிதன். வெறுமையான மனமே சந்தோஷத்தை அற்ப சுகங்களில் தேடுகிறது.

28. சந்தோஷத்தின் அடிப்படை நேர்மையின் அடிப்படையைப் போன்றதுதான். அது பொருட்களை சார்ந்ததல்ல அது ஒருவருடைய ஆளுமையைச் சார்ந்தது.

29. உங்களை சந்தோஷப்படுத்திக் கொள்ளுங்கள் நீங்கள் நினைப்பதைவிட காலம் இன்னமும் குறைவாகவே இருக்கிறது.

30. வாழ்வை அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்கு இதுதான் நேரம். அது நாளையோ அடுத்த வருடமோ, நாம் இறந்த பின்போ வருவதில்லை.

- Sathish Kumar

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: சந்தோசம்!! சந்தோசம்!!

Post by ஸ்ரீராம் on Sat Sep 17, 2016 9:44 am

சிறப்பான கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953  உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum