தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இலக்கிற்காக இணைவோம்!

View previous topic View next topic Go down

இலக்கிற்காக இணைவோம்!

Post by rammalar on Mon Aug 08, 2016 10:17 pm

அக்காலத்தில், இரட்டை புலவர்கள் இருவர் இருந்தனர்.
ஒருவருக்கு பார்வை உண்டு; நடக்க முடியாது. மற்றவருக்கு,
நடக்க முடியும்; பார்வை கிடையாது. நடக்க முடியாதவர்,
பார்வையற்றவரின் தோளில் அமர்ந்து, ‘இப்படி போ,
அப்படி போ…’ என வழிகாட்டுவார்;

அவர்கள் பயணம் தொடரும். இவர்கள் சண்டையிட்டுக்
கொண்டால், எப்படி ஊர் போய்ச் சேர்வது!

மேற்கு சென்னையில், புகழ் மிக்க தொண்டு நிறுவனம்
ஒன்று உள்ளது. ஒரே கருத்துடைய நண்பர்கள் இணைந்து
இதை ஆரம்பித்தனர். சிறிது காலம், நன்றாக தான் போனது.
நிறுவனம் நன்கு வளர ஆரம்பித்ததும், அதிகார பகிர்விலும்,
நற்பெயரை பங்கு போட்டுக் கொள்வதிலும் மற்றும் பண
விஷயத்திலும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, வம்பு, வழக்கு
என, நீதிமன்றம் வரை சென்றனர்.

நீதிமன்றத்தில், வரப்பு தகராறுக்காரர்களோடும், சொத்து
பிரிப்பில் மோதிக் கொண்ட குடும்ப உறுப்பினர்களோடும்,
இக்கும்பலும் மரத்தடியில் ஓரமாய் ஒதுங்கி நின்ற காட்சியை
பார்த்த போது, இவர்களது நோக்கம், சேவை மட்டும் தானா
அல்லது வேறு ஏதுமா என்கிற சந்தேகம், பலருக்கும் வந்து
விட்டது.
இவர்கள் இலக்கை மறந்தவர்கள்!

ஒரு சேவை சங்கத்தின் மாநாட்டில் பேச, சற்று முன்னதாகவே
போய் விட்டேன். மாநாடு துவங்கும் முன், எவ்வளவு கருத்து
மோதல், வாக்குவாதங்கள்! பல சேவை நிறுவனங்களில் நடக்கிற
சம்பவங்களையெல்லாம் கேள்விப் படும் போது, இங்குமா
அரசியலும், அணி இலக்கணமும் என்று எண்ணத் தோன்றுகிறது.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6667

Back to top Go down

Re: இலக்கிற்காக இணைவோம்!

Post by rammalar on Mon Aug 08, 2016 10:18 pm

ஒரு வீட்டில் திருமண விழா; இதற்கான ஏற்பாடுகளில் எத்தனை
கருத்து வேறுபாடுகள்…
‘ஊர்க்கோடியில் மண்டபம் பிடிச்சா, எவன் வருவான்…’ – இது,
மாப்பிள்ளையின் அண்ணன்.

‘ஊருக்குள்ள பிடிக்கலாம்ன்னா வாடகை சில லட்சம் ரூபாய்
அதிகம் கேட்கிறான்…’ – அப்பா.

‘மண்டப அலங்காரம் என் பிரண்டோட அக்கா கிட்ட தான்
குடுக்கணும்…’ – தங்கை.

‘போடி… அவ, செம பில்லு போட்டு தாளிச்சுடுவா… அவகிட்ட
கொடுக்க வேணாம்பா…’ – மற்றொரு தங்கை.

‘சம்பந்திகிட்ட இப்படியா சரண்டர் ஆவீங்க… அவங்க என்ன
சொன்னாலும், பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு வந்து
நிக்கறீங்களே…’ – மனைவி.

‘என்னடி செய்யச் சொல்ற… பொண்ணு வீட்டுக்காரங்க
இப்பெல்லாம் கையை உசத்திடுறாங்க…’ – இது அப்பா.

திருமணம் சிறப்பாக, கூடிய வரை குறைகளற்று நடக்க
வேண்டும் என்பது மட்டுமே அனைவரது இலக்காக இருக்க
வேண்டுமே தவிர, நடந்த உரையாடல்களில் சம்பந்தப்
பட்டவர்கள், தங்கள் கருத்தை கவுரவ பிரச்னையாக ஆக்கி
விட்டால், அது, கலாட்டா திருமணம் தான் என்பதை
சொல்லவும் வேண்டுமா!

ஒரு பெரிய தொழிற்சாலையில், சந்தைப்படுத்தும் மேலாளர்
பெரிய ஆர்டர் ஒன்றை வாங்கி வந்து, தயாரிப்பு மேலாளரிடம்,
‘பாருங்க சார்… சூப்பர் ஆர்டர்; ஒரே போட்டி தெரியுமா…
சிரமப்பட்டு வாங்கிட்டு வந்திருக்கேன்…’ என்கிறார்,
சந்தோஷத்துடன்!

தயாரிப்பு மேலாளரோ, ‘என்ன சார் இது… ஏற்கனவே
புரொடக் ஷன் திணறிக்கிட்டிருக்கு. ஏகப்பட்ட பிரச்னை;
என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா…’ என்கிறார்.
நிறுவனம் வளர வேண்டும் என்கிற இலக்கு இல்லாதவர் இவர்.

இருவரும் முதலாளி அல்லது தலைமை நிர்வாகியிடம் சென்று,
‘சார்… நம்ம மார்க்கெட்டிங் மேனேஜர் பிரமாதமா ஒரு ஆர்டர்
பிடிச்சிருக்காரு. இதைச் செயல்படுத்தறதுல, இன்னென்ன
சிரமம் இருக்கு; உங்க உதவியோட தான், இந்த ஆர்டரை நல்ல
படியா செயல்படுத்தணும்…’ என்பவர் அல்லவா இலக்கு நோக்கிய
தயாரிப்பு மேலாளர்!

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6667

Back to top Go down

Re: இலக்கிற்காக இணைவோம்!

Post by rammalar on Mon Aug 08, 2016 10:18 pm

சிங்கத்தின் பெயர் கொண்ட ஒரு புது கதாநாயகர்,
இயக்குனருடன் சண்டையிட்டுக் கொண்டார். பட தயாரிப்பாளர்
பாடு ஏக சிரமம்; படு தர்ம சங்கடம். கதாநாயகருக்கு படம் நல்ல
படியாக முடிய வேண்டும் என்கிற இலக்கு, ஏனோ நெஞ்சிலிருந்து
அகன்றுவிட்டது தான் காரணம்.

அற்பக் காரணங்களுக்காக அடித்துக் கொள்பவர்கள்,
இலக்குகளை கோட்டை விடுகின்றனர். களாக்காயை பிடித்துக்
கொண்டு, பலாக்காயை நழுவ விடுவது சரிதானா!

கைகளை கோர்த்தால் தான் சாதனை; கைகளை முறித்தால்
இலக்குகள் என்னவாவது!

கருத்து மோதல்கள், வேறுபாடுகள் மற்றும் சண்டை சச்சரவுகளை
இலக்கை நிறைவேற்றிய பின், வைத்துக் கொள்ளுங்களேன்;
யார் வேண்டாம் என்கின்றனர்!

———————————————

லேனா தமிழ்வாணன்
வாரமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6667

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum