தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கனவு - கவிதை
by rammalar

» செயல் - கவிதை
by rammalar

» படி! படி! - சிறுவர் கவிதை
by rammalar

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by rammalar

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by rammalar

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by rammalar

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by rammalar

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சமந்தா வரவேற்பு!
by rammalar

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by rammalar

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by rammalar

» தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
by rammalar

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by rammalar

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by rammalar

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by rammalar

» சனீஸ்வரா காப்பாத்து!
by rammalar

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by rammalar

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by rammalar

» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
by rammalar

» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
by rammalar

» கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா
by rammalar

» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
by rammalar

» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
by rammalar

» பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு
by rammalar

» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
by rammalar

» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
by rammalar

» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
by rammalar

» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
by rammalar

» ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
by rammalar

» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
by rammalar

» 17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
by rammalar

» சாயம் – கவிதை
by rammalar

» மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
by rammalar

» காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
by rammalar

» காதலர் தின கொண்டாட்டம்: லக்னோ பல்கலை எச்சரிக்கை
by rammalar

» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
by rammalar

» 7 மொழிகளில் வெளியாகும் தென் இந்திய திரைப்படம்!
by rammalar

» கலகலப்பு 2 - திரை விமர்சனம்
by rammalar

» திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நல்லோர் வழி சேர்தல்

View previous topic View next topic Go down

நல்லோர் வழி சேர்தல்

Post by முழுமுதலோன் on Mon Jun 20, 2016 3:41 pm


உன் மனதைப் பொறுத்து உனக்கு உணர்ச்சிகள் எழலாம்; நீ சேரும் இனத்தைப் பொறுத்தே உன் வாழ்க்கை தீர்மானிக்கப்படும். நெஞ்சம் மகிழ பழக வேண்டும். இதனை வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

குறள் :

முகம்நக நட்பதுநட்பு அன்று; நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு.

பொருள் :

பார்க்கும்போது மனம் மகிழாமல் முகம் மட்டும் மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.

எதைச் சார்ந்து நிற்கிறோமோ அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம். உதாரணமாக, செம்மண்ணில் மழை விழுந்தால், தண்ணீரின் நிறம் சிவப்பு; கரிசல் காட்டில் விழுந்தால் கருப்பு.

நல்லோர் வழி பற்றி இலக்கணம் கூறுவது :

* இலண்டனில் இருக்கும் வரை கீழ்த்தரமானவன் என்று பெயர் வாங்கிய கிளைவ் இந்திய மண்ணுக்கு வந்ததும் வீரனாகி விட்டான்.

* கணிகையாகத் தொழில் நடத்திய ஒருத்தி புத்த பிரானைச் சந்தித்ததும் ஞான தீட்டை பெற்று விட்டாள்.

* ராமனைச் சார்ந்து நின்றதால், ஒரு குரங்குக்குக் கூட நாட்டிலே கோயில்
தோன்றிற்று.

* நல்லோர் உறவைப்போல் துணையும் இல்லை; தீயோர் உறவைப் போல் துன்பமும் இல்லை.

பழமொழி கூறுவது :

* பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.
* பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்.

அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நணபல்லார் நண்பல்லர் எட்டுணையும்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

பொருள் :

பாலைக் காய்ச்சினாலும் சுவை குறையாது. சங்கைச் சுட்டு நீறாக்கினாலும் தன் வெண்மை நிறத்தை தரும். அதைப் போல, மேன்மக்கள் துன்பம் வந்த போதும் தம் உயிர் குணத்திலிருந்தும் மாறுபடார். கீழோர் கலந்து பழகினாலும் நணபராகார்.

Sakthivel Balasubramanian

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum