தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அவ்வை குறள்.

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Sun Jun 19, 2016 6:38 am

First topic message reminder :

அவ்வை குறள்.

1.வீட்டு நெறிப்பால்.
.
உள்ளுடம்பின் நிலைமை.
26.
நல்வினையும் தீவினையும் உண்டு திரிதரும்
செய்வினைக்கு வித்தாம் உடம்பு.
27.
உள்ளுடம்பில் வாழ்வன ஒன்பதும் ஏழைக்குக்
கள்ளடம்பு ஆகி விடும்.
28.
பொய்க்கெல்லாம் பாசனமாய் உள்ளதற்கோர் வித்தாகும்
மெய்க்குள்ளாம் மாய உடம்பு.
29.
வாயுவிளால் ஆய உடம்பின் பயனே
ஆயுவின் எல்லை அது.
30.
ஒன்பது வாசலும் ஒக்க அமைத்தால்
அன்பதில் ஒன்றாம் அரன்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் நூல் – பக்கம் – 78.
தகவல் : ந.க.துறைவன்.
*
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down


Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Tue Nov 15, 2016 8:55 am

அவ்வை குறள்…!!
*
சதாசிவம்.

196.
ஒன்றேதான் ஊழிமுதலாகிப் பல்லுயிர்க்கு
ஒன்றாகி நிற்கும் சிவம்.
197.
மூலம்ஒன் றாகிமுடிஒன்றாய் எவ்வுயிர்க்கும்
காலமாய் நிற்கும் சிவம்.
198.
மண்ணில் பிறந்த உயிர்கெல்லாம் தானாகி
விண்ணாகி ஆகும் சிவம்.
199
தோற்றமது வீடாகி தொல்லைமுதல் ஒன்றாகி
ஏத்தவரும் ஈசன் உளன்.
200.
நிற்கும் பொருளும் நடப்பனவும் தானாகி
உற்றெங்கும் நிற்கும் சிவம்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 89.- 90.
தகவல் ; ந.க. துறைவன்.
*
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Wed Nov 16, 2016 11:06 am

அவ்வை குறள்…!!
*
3. தன்பால்.
குருவழி.

201.
தன்பால் அறியும் தவமுடையார் நெஞ்சகத்துள்
அன்பாய் இருக்கும் அரன்.
202.
சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்
சிந்தித் திருக்கும் சிவம்.
203.
குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு
அருவமாய் நிற்கும் சிவம்.
204.
தலைப்பட்ட சற்குருவின் சன்னதியில் அல்லால்
வலைப்பட்ட மானதுவே ஆம்.
205.
நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிறிவற்று இருக்கும் சிவம்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 90.
தகவல் ; ந.க. துறைவன்.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Mon Nov 21, 2016 6:20 am

அவ்வை குறள்…!!
*
3. தன்பால்.
குருவழி.

206.
நல்லன நூல்பல கற்பினும் காண்பரிதே
எல்லை இல்லாத சிவம்.
207.
நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
தலைப்பிரி யாது சிவம்.
208.
ஒன்றில் ஒன்றாத மனமுடை யார்உடல்
என்றும்ஒன் றாது சிவம்.
209.
நாட்டம்இல் லாதஇடம் நாட்டம் அறிந்தபின்
மீட்டு விடாது சிவம்.
210.
பஞ்சமா சத்தம் அறுப்பவர்க்கு அல்லாமல்
அஞ்சல்என் னாது சிவம்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 90.
தகவல் : ந.க.துறைவன்.
*
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Fri Nov 25, 2016 6:40 am

அவ்வை குறள்…!!
*

அங்கியில் பஞ்சு.

211.
அங்கியில் பஞ்சுபோல் ஆகாயத் தேநினையில்
சங்கிக்க வேண்டா சிவம்.
212.
மெய்ப்பால் அறியாத மூடரதம் நெஞ்கத்தின்
அப்பாலது ஆகும் சிவம்.
213
நெஞ்சத்துள் நோக்கி நினைப்பவர்க்கு அல்லா அல்
அஞ்சல்என் னாது சிவம்.
214.
பற்றிலாது ஒன்றினைப் பற்றினால் அல்லது
கற்றதனால் என்ன பயன்?
215.
தம்மை அறியாரை தாமறிந்து கொண்டபின்
தம்மை அறிவரோ தாம்.

ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 91.
தகவல் : ந.க.துறைவன்.
*
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Mon Nov 28, 2016 6:11 am

அவ்வை குறள்…!!
*
அங்கியில் பஞ்சு.

216.
அசபை அறந் துள்ளே அழல்எழ நோக்கில்
இசையாது மண்ணில்பிறப்பு.
217.
இமையாத நாட்டத்து இருந்துணர் வாருக்கு
அமையாத ஆனந்தம் ஆம்.
218.
துரியம் கடந்து சுடர்ஒளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு.
219.
மதிபோல் உடம்பினை மாசற நோக்கில்
விதிபோய் அகல விடும்.
220.
சீவன் சிவலிங்கம் ஆகத் தெளிந்தவர் தம்
பாவம் நசிக்கும் பரிந்து.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 91.
தகவல் ; ந.க.துறைவன்.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Thu Dec 01, 2016 9:46 am

அவ்வை குறள்…!!
*

மெய்யகம்.

221.
மெய்யகத்தில் உள்ளே விளங்கும் சுடர்நோக்கில்
கையகத்தில் நெல்லிக் கனி.
222.
கரையற்ற செல்வத்தைக் காணும்கா லத்தில்
உரையற்று இருப்பது உணர்வு.
223.
உண்டுபசி தீர்ந்தால் போலுடம் பெல்லாம்அங்
கண்டுகொள் காதல் மிகும்.
224.
உரைசெயும் ஓசை உரைசெய் பவர்க்கு
நரைதிரை இல்லை நமன்.
225.
தோன்றாத தூயவெளி தோன்றியக்கால் உன்னைத்
தோன்றாமல் காப்பது அறிவு.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 91 – 92.
தகவல் ; ந.க.துறைவன்.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Thu Dec 08, 2016 3:28 pm

மெய்யகம்.

226.
வாக்கும் மனமும் இறந்த பொருளில்காணில்
ஆக்கைக்கு அழிவில்லை ஆம்.
227.
கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால்
உன்னகத்தே நின்ற ஒளி.
228.
ஆனந்தம் ஆன அருளை அறிந்தபின்
தானந்தம ஆகும் அவர்க்கு.
229.
மறவாமல் காணும் வகையுணர் வாருக்கு
இறவாது இருக்கிலும் ஆம்.
230.
விண்ணிறைந்து நின்றபொருளே உடம்பதன்
உள்நிறைந்து நின்ற ஒளி.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 91 – 92.
தகவல் ; ந.க.துறைவன்.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Thu Dec 22, 2016 5:58 am

அவ்வை குறள்…!!
*
கண்ணாடி.

231.
கண்ணாடி தன்னில் ஒளிபோல் உடம்பதனுள்
உள்நாடி நின்றது ஒளி.
232.
அஞ்சு புலனின் வழியறிந்தால் பின்னைத்
துஞ்சுவது இல்லை உடம்பு.
233.
நாபிஅகத்தே நலனுற நோக்கிடில்
சாவது இல்லை உடம்பு.
234.
கண்டத்து அளவில் கடியஒளி காணில்
அண்டத்தர் ஆகும் உடம்பு.
235.
ஆர்க்கும் தெரியா உருவதனை நோக்கிப்
பார்க்கும் பரமாம் அவன்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 92.
தகவல் ; ந.க.துறைவன்.
*
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Mon Dec 26, 2016 8:57 am

அவ்வை குறள்…!!
*
கண்ணாடி.

236.
வண்ணம் இலாத வடிவம் அறிந்தபின்
விண்ணவர் ஆகும் உடம்பு.
237.
நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளிகாணில்
முற்றும் அழியாது உடம்பு.
238.
மாதூ வெளியின் மனம்ஒன்ற வைத்தபின்
போதகம் ஆகும் உடம்பு.
239.
சுத்தமோடு ஒன்றி மனமும் இறந்தக்கால்
முற்றும் அறியாது உடம்பு.
240.
உத்தமன் கோயில் உடம்பென்று போற்றிடில்
மெய்த்தவம் மேவும் விரைந்து.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 92 – 93.
தகவல் ; ந.க. துறைவன்.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Mon Jan 09, 2017 5:49 am

அவ்வை குறள்…!!
*
246.
அஞ்சும் அடக்கி அறவோடு இருந்தபின்
துஞ்சுவது இல்லை உடம்பு.
247.
தீயாக உள்ளே தெளிவுற நோக்கினால்
பாயாது பின்னை உடம்பு.
248.
தானந்தம் இன்றி தழலுற நோக்கிடில்
ஆனந்தம் ஆகும் உடம்பு.
249.
ஒழிவின்றி நின்ற பொருளை உணரில்
அழிவின்றி நிற்கும் உடம்பு.
250.
பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திக்க
முற்றும் அழியாது உடம்பு.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 93.
தகவல் ; ந.க.துறைவன்.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Thu Jan 12, 2017 5:54 am

அவ்வை குறள்…!!
*
சிவயோக நிலை.

251.
அடிமிசை வாயு அடுத்தடுத்து ஏகி
மிடிசை ஒடி முயல்.
252.
உண்ணாடி வாயு அதனை உடல்நிரப்பி
விண்ணோடு மெள்ள விடு.
253.
மெள்ள விரேசித்து மெய்விம்மிப் பூரித்து
கொள்ளுமின் கும்பம் குறித்து.
254.
இரேசகம் முப்பத் திரண்டது மாத்திரை
பூரகம்பத் தாறு புகும்.
255.
கும்பக நாலோடு அறுபது மாத்திரை
தம்பித் திடுவது தான்.

ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 93 – 94.
தகவல் ; ந.க.துறைவன்.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Mon Jan 16, 2017 9:00 am

அவ்வை குறள்…!!
*
சிவயோக நிலை.

256.
முன்னம் இரேசி முயலுமின் பூரகம்
பின்னது குடும்பம் பிடி.
257.
ஈரைந்து எழுபத்து ஈராயிரம் நாடியும்
சேருமின் வாயுச் செயல்.
258.
வாசல்ஈ ரைந்து மயங்கிய வாயுவை
ஈசன்தன் வாசலில் ஏற்று.
259.
தயாவினில வாயு வலத்தில் இயங்கில்
தியான சமாதிகள் செய்.
260.
ஆதியாம் மூலம் அறிந்துஅஞ் செழுத்தினைப்
பேதியாது ஓது பினை.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 94.
தகவல் ; ந.க. துறைவன்.
*
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Thu Jan 19, 2017 5:57 am

அவ்வை குறள்…!!
*
ஞான நிலை

261.
தற்புருட மாமுகம்மேல் தன்னில் தனியிருந்து
உற்பன மஞ்சை உரை.
262.
தற்புருட மாமுகம்மேல் தாரகை தன்மேல்
நிற்பது பேரொளி நில்.
263.
ஓதிய தற்புரு டத்தடி ஒவ்வவே
பேதியாது ஓது பினை.
264.
கொழுந்துறு வன்னி கொழுவுற ஒவ்வில்
எழும் தார ரகையாம் இது.
265.
மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே
குறித்துக் கொள்ளும்சீ யைக் கூட்டு.

ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 94.
தகவல் ; ந.க. துறைவன்.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Mon Jan 23, 2017 6:22 am

அவ்வை குறள்…!!
*
ஞான நிலை

266.
காலும் தலையும் அறிந்து கலந்திடில்
சாலவும் நல்லது தான்.
267.
பொன்னொடு வெள்ளி இரண்டும் பொருந்திடில்
அன்னவன் தாளதுவே ஆம்.
268.
நின்ற எழுத்துடன் நில்லா எழுத்தினை
ஒன்றிவிக்கில் ஒன்றே உள.
269.
பேசா எழுத்துடன் பேசும் எழுத்துறில்
ஆசான் பரனந்தி யாம்.
270.
அழியா உயிரை அவனுடன் வைக்கில்
பழியானது ஒன்றில்லை பார்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 94 – 95.
*
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Thu Jan 26, 2017 5:51 am

அவ்வை குறள்…!!
*
ஞானம் பிரியாமை

271.
பிறந்திட மாவிடம் பேராது இருப்பின்
இறந்திடம் வன்னி இடம்.
272.
சாகாது இருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக இரு.
273.
வெளியில் விளைந்த விளைவின் கனிதான்
ஒளியில் ஒளியாய் உறும்.
274.
மறவா நினையா மவுனத் திருக்கில்
பிறவார் இறவார் பினை.
275.
குருவாம் பரனந்தி கூடல் குறித்தாங்கு
இருபொது நீங்காது இரு.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 95.
தகவல் ; ந.க.துறைவன்.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Wed Feb 01, 2017 6:12 am

அவ்வை குறள்…!!
*
மெய்நெறி

286.
மூல நிலமிசை மூன்றா நிலத்தினில்
ஆல மருந்தும் சிவம்.
287.
எழுஞ்சுடர் உச்சியின் மேல்மனம் வைக்கத்
தொழில்ஒன்று இலாத சுடர்.
288.
அடைத்திட வாசலின்மேல் மனம்வைத்துப்
படைத்தவன் தன்னையே பார்.
289.
அறுபதொடு ஆறுவருடம் இதனை
உறுதிய தாகத் தெளி.
290.
அட்டமா சித்தி அடையும்ஓர் ஆண்டினில்
இட்டம் இதனைத் தெளி.
ஆதாரம்; சித்தர் பாடல்கள் – பக்கம் – 96.
தகவல் ; ந.க.துறைவன்.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Thu Feb 09, 2017 5:46 pm

துரிய தரிசனம்
291.
வன்னிய தெட்டு மதியம் பதினாறு
முன்னிய பன்னிரண்டும் உள.
292.
சூரியன் வன்னிஒன் றாகிடில் சோமனாம்
பாரும் இனிது பயன்.
293.
மதியொடு மன்னிஒன் றாகவே வந்தால்
கதிரவ னாம்என்று காண்.
294.
மதிக்குள் கதிரவன் வந்திங்கொடுங்கில்
உதிக்கும் பூரணைச் சொல்.
295.
தோற்றும் கதிரவன் உண்மதி புக்கிடில்
சாற்றும் அமாவாசை தான்.
ஆதாரம் ;சித்தர் பாடல்கள் – பக்கம் – 96.
தகவல் ; ந.க.துறைவன்.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Thu Feb 16, 2017 6:17 am

அவ்வை குறள்…!!
*
296.
வன்னி கதிரவன் கூடிடில அத்தகை
பின்னிவை ஆகும் எலாம்.
297.
அமாவாசை பூரணை ஆகும் அலர்க்குச்
சமனாம் உயிருடம்பு தான்.
298.
அண்டத்திலும் இந்த வாறென்று அறிந்திடு
பிண்டத்திலும் அதுவே பேசு.
299.
ஏறு மதிய இறங்கில் உறங்கிடும்
கூறும்அப் பூரணை கொள்.
300.
உதிக்கும் மதியமும் கண்டங் குறங்கில்
மதிக்கும் அமாவாசை ஆம்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 96 – 97.
தகவல் ; ந.க.துறைவன்.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Mon Feb 20, 2017 3:12 pm

அவ்வை குறள்…!!
*
உயர்ஞான தரிசனம்

301.
கொண்டிடு மண்டலம் மூன்றங்கி தன்னைஇப்
பண்டமும் ஊழிபிரியா.
302.
வெள்ளி புதனோடு இடம்எனத்
தள்ளுமின் கால சரம்.
303.
செவ்வாய் சனி ஞாயிறுவலம் ஆகவே
கொள்ளில்இவ் வாறிடரும் இல்.
304.
வளர்பொன் இடம், பிறைத் தேய்வு வலமாம்
வளர்பிறை என்றே மதி.
305.
வலத்திற் சனிக்கே இராப்பகல் வாயு
செலுத்துப்பே ராது செயல்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 97.
தகவல் ; ந.க.துறைவன்.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் on Thu Feb 23, 2017 5:51 am

அவ்வை குறள்…!!
*
உயர்ஞான தரிசனம்

306.
இயங்கும் பகல்தலம் ராஇடம் வாயு
தயங்குறல் நாடிக்குள் தான்.
307.
அரசறி யாமல் அவன்பேர் உரைத்துத்
தரைதனை ஆண்ட சமன்.
308.
கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடர்
செல்லாத தென்ன செயல்.
309.
திருவருள் பாலைத் தெளித்து தெளியில்
குருவிப்பாம் என்று கொள்.
310.
கற்கிலும் கேட்கிலும் ஞானம் கருத்துற
நிற்கில் பரமவை வீடு.
ஈதல் அறம், தீவினைவிட்டு ஈட்டல் பொருள், எஞ்ஞான்றும் காதல் இருவர்க்கும் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம், பரனை நினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு.
முற்றும்
*
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum