தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar

» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது

View previous topic View next topic Go down

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது

Post by rammalar on Sun May 01, 2016 1:46 pm

சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 2,618 மனுக்கள்
நிராகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை
(மே 2) மாலை 3 மணியளவில் வெளியாகிறது.

சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியின்
அலுவலகத்தில் இந்தப் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும்.
முன்னதாக, தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல்
செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனைக்காக
சனிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டன.

பார்வையாளர் முன்பு…:

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும்
அதிகாரியின் அலுவலகத்தில் காலை 11 மணிக்குத்
தொடங்கியது. இந்த வேட்புமனு பரிசீலனை வெளி
மாநிலங்களைச் சேர்ந்த 122 பொதுப் பார்வையாளர்கள்
முன்னிலையில் நடைபெற்றது.

முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளில்
பிரச்னைகள் எழாமல் இருப்பதற்காக, இந்த
பார்வையாளர்கள் தீவிரமாக அவற்றை கண்காணித்தனர்.

மீதமுள்ள தொகுதிகளில் வேட்புமனு பரிசீலனை
நடவடிக்கைகள் அனைத்தும் விடியோ படம் எடுக்கப்பட்டது.

மொத்தம் எத்தனை? பிரதான கட்சிகளைச் சேர்ந்த
வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் எந்தப் பிரச்னையும்
இல்லை என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில்
போட்டியிட 7 ஆயிரத்து 149 மனுக்கள் தாக்கல் செய்யப்
பட்டிருந்தன.

அதில், ஆண்கள் சார்பில் 6 ஆயிரத்து 351 மனுக்களும்,
பெண்கள் சார்பில் 794 மனுக்களும், மூன்றாம் பாலினத்தவர்
சார்பில் 4 மனுக்களும் அளிக்கப்பட்டிருந்தன.

அனைத்து மனுக்களும் சனிக்கிழமை காலையில்
பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலிதா
போட்டியிடும் ஆர்.கே.நகரில் 45 மனுக்களும்,
திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர்
தொகுதியில் 16 பேரின் மனுக்களும், திமுக பொருளாளர்
மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில்
24 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தாக்கல் செய்யப்பட்ட 7 ஆயிரத்து 149 மனுக்களில்,
4 ஆயிரத்து 531 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2 ஆயிரத்து
618 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
-


Last edited by rammalar on Sun May 01, 2016 1:49 pm; edited 1 time in total

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

Re: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது

Post by rammalar on Sun May 01, 2016 1:47 pm

என்னென்ன காரணங்கள்?

வேட்புமனுக்களில் கையெழுத்து இல்லாதது, பிரமாணப்
பத்திரங்கள் தாக்கல் செய்யாமல் இருப்பது,
முன்மொழிபவர்கள் இல்லாத நிலை, உறுதிமொழி
எடுக்காமல் இருப்பது, வைப்புத் தொகை செலுத்தாமல்
மனுதாக்கல் செய்திருப்பது போன்ற காரணங்களால்
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் துறையினர்
தெரிவித்தனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல்:

வேட்புமனு பரிசீலனையின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட
மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இரண்டு நாள்கள்
அவகாசம் உள்ளன.

மனுக்களை வாபஸ் பெற திங்கள்கிழமை (மே 2) கடைசி
நாளாகும். மாலை 3 மணிக்குள்ளாக மனுக்களை வாபஸ்
பெற்றுக் கொள்ளலாம்.

இதன்பின்பு, தேர்தல் களத்தில் போட்டியிடும்
வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகும். இந்தப்
பட்டியல் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில்
அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படும்.

வாக்காளர்களுக்கு தகவல்: இறுதிப் பட்டியல்
தயாரானவுடன், வேட்பாளரின் பெயர், அவர் சார்ந்துள்ள
கட்சி ஆகியவற்றின் விவரங்கள் வாக்காளர்களின்
செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்
என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி
தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின்
மனுக்கள் ஏற்பு

இதில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக பொதுச்
செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, திருவாரூர்
தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, கொளத்தூர்
தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,
உளுந்தூர்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்,
காட்டுமன்னார்கோவிலில் தொல்.திருமாவளவன்,
பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ்,
விருகம்பாக்கம் தொகுதியில் பா.ஜ.க தலைவர் தமிழிசை
செளந்தரராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தலைவர்களின் வேட்புமனுக்கள், சனிக்கிழமை
நடைபெற்ற பரிசீலனையின் போது, ஏற்றுக் கொள்ளப்பட்டதாக
அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும்
அதிகாரிகள் தெரிவித்தனர்.

-
-------------------------------------

தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum