தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெற்றிக்கொடி கட்டிய வீராங்கனைகள்! - சிறப்பு பதிவு

View previous topic View next topic Go down

வெற்றிக்கொடி கட்டிய வீராங்கனைகள்! - சிறப்பு பதிவு

Post by ஸ்ரீராம் on Wed Mar 09, 2016 10:50 am

மற்ற நாடுகளில் ஓர் தலைச் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக உருவெடுக்க  திறமையும் உழைப்பும் இருந்தால்போதும், ஆனால் இந்தியாவில்தான் திறமையுடன் பணம், அவமானம், அரசியல் என பல தடை கற்களை தாண்ட வேண்டும். அவ்வாறு பல தடைகளை வென்று மூவர்ணக் கொடியை உலகின் பல இடங்களில் உயர பறக்க விட்ட, பறக்க விடுகின்ற வீராங்கனைகளை பற்றி காண்போம்.
தடகளம்:
பி.டி.உஷா
இந்திய தடகள வீராங்கனைகளின் முன் மாதிரி பி.டி.உஷா.1982-ல்  டெல்லியில் நடந்த ஆசிய தடகள போட்டிகளில் இரு வெள்ளி பதக்கங்கள் வென்றபோது உஷாவிற்கு 18 வயசுதான்.1986 ல் நடந்த ஆசிய போட்டிகளில் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார். 200மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம், 4*400 Relay என  நான்கு தங்கம் வென்று தங்க வேட்டை ஆடினார்.1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில்,  0.01 வினாடியில் வெண்கலப் பதக்கத்தை  தவற விட்டார்.1991ல் திருமணம் செய்து கொண்டு சிறிது காலம் பந்தயங்களுக்கு முழுக்குப் போட்டார். நான்கு வருடங்கள் கழித்து ஓடினாலும் ஹிரோசிமா ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நான்தான் ”பயோலி எக்ஸ்பிரஸ்” என மீண்டும் ஒரு முறை நிரூபித்தார்.

கேரளாவில் பிறந்து வளர்ந்து ஓடிய உஷா, இன்று கோழிக்கோட்டில்  ஓர் பள்ளித் துவங்கி பல தேசிய ஓட்டப் பந்தய வீரர்களை உருவாக்கி வருகிறார். 101 பதக்கங்கள், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தேசிய சாதனை, 33 உலக அளவிலான தடகள பதக்கங்கள் என இவரது எண்ணற்ற  சாதனைகளைப் பாராட்டி, இந்திய அரசாங்கம் அர்ஜுனா விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.
அஞ்சு பாபி ஜார்ஜ்:

உலக சாம்பியன் மைக் பவலிடம் பயிற்சி பெற்று, உலக தடகள போட்டிகளில் நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றவர் அஞ்சு. ( அப்போட்டியில் தங்கம் வென்றவர் ஊக்க மருந்து பரிசோதனையில் தோற்று விட, அஞ்சுக்கு தங்கம் பதக்கம் வழங்கப்பட்டது).பாரிஸில் 2003ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம்  தாண்டுதல்  பிரிவில் 6.70 மீட்டர் தாண்டி வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம்  உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல்  வீராங்கனை என்ற  பெருமை பெற்றார் அஞ்சு. இந்த கேரளத்து வீராங்கனையின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிப்பவர், இவளது கணவர் பாபி ஜார்ஜ். தேசிய சாம்பியனான பாபி ஜார்ஜ், தன் மனைவிக்காக  தனது தடகள வாழ்கையை விட்டுவிட்டு அஞ்சுவின் முழு நேர பயிற்சியாளாரவும் ஆனார். 2004 ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்தாவதாக வந்து  ஒரு பதக்கமும் வெல்ல முடியாவிட்டாலும், 6.83 மீட்டர் தூரம் தாண்டி தேசிய சாதனை படைத்தார். 2002ல் அர்ஜுனா விருது, தொடர்ந்து ராஜிவ் கேல் ரத்னா விருது, பத்ம ஸ்ரீ என இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்றார்.
ஷைனி ஆப்ரகாம்:
1992 பார்சிலோனா ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் கொடியை ஏந்திச் சென்ற முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் ஷைனி ஆப்ரகாம்.கேரளாவில் பிறந்த மற்றுமொரு 800 மீட்டர் ஓட்ட தடகள வீராங்கனை.1985ல் ஜகர்த்தா,1987ல் சிங்கப்பூர்,1989 ல் புதுடெல்லி,1991ல் கோலாலம்பூர்,1993 ல் மணிலா,1995-ல்   ஜகர்த்தா என தொடர்ந்து 6 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.தெற்காசிய போட்டிகளில் பங்கேற்று மொத்தமாக 7 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளார்.1989-ல்  புதுடெல்லியில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கர்ப்பமாக இருந்தும் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாக வந்தார்.1984 ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற  4*400 Relay  குழுவில் ஒருவர் ஷைனி. 14 வருடங்களாக 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாம்பியனாக இருந்த பெருமை இவருக்குரியது. இவரை பெருமைப்படுத்தும் விதமாக அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது இந்திய அரசு.
டிண்டு லூக்கா:

பி.டி.உஷாவின் மாணவியான ஷைனி ஆப்ரகாமின் 14 ஆண்டு கால தேசிய சாதனையை முறியடித்த கேரளத்து தடகள வீராங்கனை. 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் அரை இறுதிக்கு தகுதிப் பெற்றார். 2010 சீனாவில் நடந்த ஆசியப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற போது, இவருக்கு 21 வயதுதான். 2014-ல்  இன்சிலியானில் நடந்த ஆசியப் போட்டியில் 800 மீட்டரில் வெள்ளியும் 4*400 Relay யில் தங்கமும் வென்றார். 2010-ல் கிரோசியாவில் நடந்த காண்டினெண்டல் கோப்பைப் போட்டியில் 800 மீட்டரை 1 நிமிடம் 59.17 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையில் ஒருவர் டிண்டு லூக்கா.
அன்னு ராணி:

இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களில் சிறந்தவர்களை  தேர்ந்து எடுத்து, அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி, ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம்  வெல்லும் முனைப்புடன் பயிற்சி அளிப்பது Olympic Gold Quest. அவ்வாறு பயிற்சி பெறுபவர்தான் அன்னு ராணி. ஈட்டி எறிதல் போட்டியில் தேசிய சாதனைக்குரியவர் அன்னு. உத்திரபிரதேசத்தின் பஹாதிர்பூர் என்னும் கிராமத்தில் பிறந்த அன்னுவின் வெற்றிக்கு காரணம் யாரென்று  கேட்டால், தனது அண்ணன் உபேந்திராவை காட்டுகிறார் அன்னு. ஓர் கிரிக்கெட் போட்டியில் அன்னு பந்தை எறியும் திறனைப் பார்த்த உபேந்திரா, அந்த பந்துக்கு பதில் ஓர் ஈட்டியை  கொடுத்தார். அதுபோக, பெண்களுக்கான கட்டுப்பாடுகளுடைய கிராமத்து வரைமுறைகளை தாண்டி, அன்னுவை 2010 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற காசினாத்திடம்  பயிற்சிப் பெற அனுப்பினார். 2014 ஆசிய போட்டியில் வெண்கலம், 59.53 தூரம் எறிந்து தேசிய சாதனை என வெற்றிகள் குவிய துவங்கியுள்ளது.
துப்பாக்கிச் சுடுதல்:
ஹினா சித்து:

2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க நம்பிக்கை டாக்டர் ஹினா சித்து. பல் டாக்டரான ஹினாவிற்கு உலக தரவரிசையில் முதலிடம் பெற்று தந்தது அவரது கடின உழைப்பும் துப்பாக்கி சுடுதல் மீதிருந்த காதலும் தான். தொழிற்முறை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில்,  உயரிய மதிப்பான ISSF உலகக் கோப்பை இறுதிப் போட்டி,  2013ல் ஜெர்மனியில் நடந்தது. அதில் தங்கம் வென்று சாதனை படைத்தார். ISSF பத்திரிகையின் அட்டையில் இடம் பெற்ற முதல் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரரும் ஹினாதான். துப்பாக்கிச் சுடும் வீரரான ரொனக் பண்டித்தை 2013ல் திருமணம் செய்து கொண்டார். நடுவில் தனது ஃபார்மை இழந்து பதக்கங்கள் வெல்ல முடியாமல் திணறினார். அதற்கு  வட்டியும் முதலுமாக 2015 ல் குவைத்தில் நடந்த ஆசிய சுடுதல் போட்டியில் தங்கம் வென்று,  ரியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிப் பெற்றார். இவரது சாதனைக்கு அர்ஜுனா விருது வழங்கி பெருமைப்படுத்தியது அரசு. ரியோ ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வார் என்ற பலரது எண்ணத்தை நிறைவேற்றுவாரா ஹினா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அஞ்சலி

மும்பைவாசியான இந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை, இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் 12 தங்கம், 4 வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளார். இதுபோக உலக அளவில் 31 தங்கம், 23 வெள்ளி, 7 வெண்கலம் என 61 பதக்கங்கள் வென்றுள்ளார். தேசிய அளவில் 55 தங்கம், 35 வெள்ளி,16 வெண்கலம் என 106 பதக்கங்களுடன் 8 புது சாதனைகள் படைத்துள்ளார். கார்ல் லூயிஸை தனது ஹீரோவாக கருதும் இவர், 21 வயதில்தான் துப்பாக்கிச் சுடுதலை ஆரம்பித்தார். அடுத்த ஒரு வாரத்தில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று, வெள்ளி பதக்கமும் வென்றார். இதுவரை மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, 2000 சிட்னி ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார். ராஜீவ் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, HISA விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரர் அஞ்சலி. ஓர் மராத்திய படத்தில் சிறப்பு தோற்றம், எழுத்தாளர், கண் பார்வையற்றோருக்கு வகுப்பு எடுப்பது, 6 துப்பாக்கிச் சுடும் வீரர்களுக்கு பயிற்சியளிப்பது என பல முகம் கொண்டவர் இந்த தங்க மங்கை.
மலைக்கா கொயல்:
மலைக்காவிற்கு 10 வயது இருக்கும்போது, பஞ்சாப்பில் எஸ்.பி யாக பணிபுரிந்த  அவளது தந்தை, ஏதாவது ஓர் விளையாட்டை தேர்ந்து எடுத்து, அதில் திறமையை வளர்க்குமாறு கூறியிருக்கிறார். தந்தை சொல்லைக் கேட்ட மலைக்கா, துப்பாக்கிச் சுடுதலை தேர்ந்து எடுத்தார். அதை வெறும் பொழுது போக்காக செய்யாமல், அதனை தொழிற்முறையாகவும் ஏற்றுக் கொள்ள தீர்மானித்தார். அதற்காக தனது கல்வியை 6-ம் வகுப்புடன் நிறுத்தி விட்டு தன் முழு கவனத்தையும் துப்பாக்கிச் சுடுதல் மீது திருப்பினார். அதற்கேற்ற பலன் கிட்டியது. 2014 காமன்வெல்ட் போட்டிகளில் தனது ஹீரோவான ஹீனாவை வீழ்த்தி,  வெள்ளி பதக்கம் வென்றார். மலைக்காவால், ஸ்காட்லாந்தில் ஜன கன மன ஒலித்தபோது அவளுக்கு வயது 16. இப்பொழுது Olympic Gold Quest உதவியுடன் ரியோ ஒலிம்பிக்ஸிலும் நம் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்ய தீவிர பயிற்சியில் உள்ளார்.
ஸ்குவாஷ்:
தீபிகா பல்லிகல்:
நம்ம சென்னையில் பிறந்த கேரளா பெண். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சூசனுக்கு பிறந்தவர் தீபிகா. 2006 முதல் ஸ்குவாஷ் விளையாடி வந்தாலும் 2011ல் தான் தீபிகா, உலகப் புகழ் பெற்றார். மூன்று WISPA கோப்பைகளை வென்றும், டாப் 50 வீராங்கனைகள் பட்டியலிலும் இடம் பெற்றார் தீபிகா. சாம்பியன்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற முதல் இந்தியர், ஆஸ்திரேலிய ஓபனின் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என பல சாதனைகளை படைத்ததின் அங்கீகாரமாய், உலக தரவரிசையில் டாப் 10ல் இடம் பெற்றார். 2014 காமன்வெல்த் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பாவுடன் சேர்ந்து தங்கம் வென்றார். அர்ஜுனா விருது வென்ற முதல் பெண் ஸ்குவாஷ் வீராங்கனை. 2015ல் இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார்.
ஜோஷ்னா சின்னப்பா:
சென்னையில் பிறந்த இன்னொரு ஸ்குவாஷ் வீராங்கனை. தற்பொழுது உலக தரவரிசையில் 15-வது இடம் வகிக்கும் ஜோஷ்னா, இதுவரை 7 பட்டங்கள் வென்றுள்ளார். ஸ்குவாஷில் மிக இளம் வயதில் தேசிய சாம்பியனான பெருமை சின்னப்பாவுடையது. சென்னை ஓபன், பிரிட்டிஸ் ஓபன் என பல தொடர்கள் வென்றிருந்தாலும்,  2014 காமன்வெல்த் போட்டியில் தீபிகா பல்லிகலுடன் சேர்ந்து தங்கம் வென்றதுதான் மிக பெரிய சாதனை. நடுவில் தீபிகாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தாலும்,  இப்பொழுது மீண்டும் தீம்மாக விளையாட துவங்கியுள்ளனர். 2024 ஒலிம்பிக்ஸில்  ஸ்குவாஷையும் ஓர் விளையாட்டாக சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யப் பட்டுள்ளது.
குத்துச் சண்டை:
மேரி கோம்:
பாலிவுட் சினிமாவுக்கும் விளையாட்டுக்கும் உள்ள தொடர்பு அழிக்க முடியாதது. ஓர் வீராங்கனையின் வாழ்கையை பயோபிக்காக வெளியிட்டு அதிரிபுதிரி ஹிட் அடித்தால், அந்த வீராங்கனையின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம். அதிகம் கவனிக்கப்படாத மேற்கிந்திய மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் மலை வாழ் இனத்தில் பிறந்த மேரி கோம், மலைத் தோட்டத்தில் மங்கிப்போன பல ஆயிரம் பெண்களில் ஒருவராக போயிருக்கக்கூடும். ஆனால் விடாமுயற்சியும்,  வென்றாக வேண்டும் என்ற வெறியுடனும் மேரி விட்ட குத்துக்கள், நாட்டைத் தாண்டி, உலக அளவில் ஒலிம்பிக்ஸில் வெண்கல பதக்கம் வெல்ல வழி வகுத்தது. 45-50 கிலோ பிரிவில் போட்டியிடும் மேரி கோம்,பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் 5 தங்கம் வென்றுள்ளார். ஆசியப் போட்டிகளில் தங்கம், விட்ச் போட்டியில் தங்கம் என இந்தியப் பெண்களின் ரோல் மாடல் இந்த மேரி கோம். திருமணம், மூன்று குழந்தைகள் என வாழ்க்கையில் செட்டில் ஆனாலும், இன்றும் அவரது குத்துக்கள் பதக்கங்களை வெல்லாமல் இருப்பதில்லை. பத்மஸ்ரீ, பத்ம பூஷண்,அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகள் என அரசும் இவரை கவுரவப்படுத்தியுள்ளது.
சரிதா தேவி:
மணிப்பூரில் பிறந்த மற்றொரு தேசிய சாம்பியன். ஓர் பாரம்பரிய விவசாய குடும்பத்தில் பிறந்த சரிதா, வயல்களில் வேலைசெய்ததே அவரது இன்றைய குத்துசண்டையில் பவர்புல்லான குத்துகள் விட உதவுகிறது.மேரி கோம் 45-50 கிலோ பிரிவை சேர்ந்தவர் எனில், சரிதா 50-55 கிலோ பிரிவில் பட்டையை  கிளப்புவர். ஆசியப் போட்டிகளில் 4 தங்கம், உலக சாம்பியன் ஷிப்பில் தங்கம் என நம் நாட்டின் கொடியை உயர பறக்க விட்டார். 2014 ஆசியப் போட்டிகளில் சில சலசலப்புகள் அரங்கேறியது. வெற்றிப் பெறும் தருவாயிலும் நடுவரின் விவாததிற்குரிய முடிவால், எதிராளியை வெற்றிப் பெற்றதாக அறிவிக்க, பதக்க மேடையில்  பதக்கத்தை வாங்க மறுத்ததினல், போட்டிகளில் பங்கேற்க தடையும் விதிக்கப்பட்டது. வரும் ஒலிம்பிக் போட்டியில், மேரி கோமுடன் சரிதாவும் பதக்கம் வெல்வார் என எதிர்பாக்கப்படுகிறது.
     பேட்மின்டண்:
சாய்னா நேவால்:
17 மார்ச் 1990 ல்,  ஹரியனா மருத்துவமனை ஒன்றில் சாய்னா பிறந்த போது அவரது முகத்தைக் கூட பார்க்க மறுத்தார் அவரது பாட்டி. காலம் மாறியது. 2012ல் இந்தியாவே உச்சரித்த பெயர் சாய்னா. அனைத்து பத்திரிகைகளும் சாய்னாவின் படத்தை முதல் பக்கத்தில் போட்டது. சீனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய இறகுப்பந்து போட்டியில் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றது என்பது சாதாரண காரியம் இல்லை.அத்தோடு ஆட்டம் முடியவில்லை.ஆட்டம் சூடுப் பிடிக்க ஆரம்பித்தது. 2015 -ல் உலகின் நம்பர் 1 ஆக முன்னேறினார் சாய்னா. ஆட்டத்தில் கொஞ்சம் தொய்வு ஏற்பட, பயிற்சியாளரை மாற்றினார். மீண்டும் பழைய வெற்றிகள் குவிய ஆரம்பித்தன. இந்தியா ஓபன், சீன ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், தாய்லாந்த் ஓபன், இந்தோனேசிய ஓபன் என  இதுவரை 21 தனிப்பட்ட பட்டங்கள் வென்றுள்ளார். இதுவரை 444 போட்டிகள் விளையாடியுள்ள சாய்னா, 316 போட்டிகளில் வென்றுள்ளார். 26 வயதுக்கு முன்னே அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், ராஜீவ் காந்தி கேல் ரத்னா என இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதுகள் வென்றுள்ளார்.

பி.வி.சிந்து:
முன்னாள் சாம்பியன் கோபிசண்டிடம் பயிற்சி பெற்று வரும் வருங்கால சாம்பியன். 20 வயதான சிந்துவிற்கு பத்மஸ்ரீ வழங்கபட்டபோது,  வயது 18. முன்னாள் வாலிபால் வீரரான ரமணாவிற்கு பிறந்த சிந்து, பதக்கங்கள் வெல்ல துவங்கியது 2011 ல். தினமும் 56 கிலோமீட்டர் தூரம் தாண்டி பயிற்சி பெற வந்த சிந்துவிடம் கோபிசண்ட் கண்டது வெறும் ஓர் வீராங்கனையை மட்டும் இல்லை, ஓர் சாம்பியனை. தோற்க விரும்பாத,  ஓர் விடாமுயற்சி உடைய வீராங்கனையை. மலேசியன் மாஸ்டர்ஸ், MACAU ஓபன் என 6 உலக அளவிலான போட்டிகளில் சிந்து வென்றுள்ளார். தரவரிசையில் 12 -வது இடத்தில் இருக்கும் சிந்து, சாய்னாவிற்கு சற்றும் சளைத்தவர் அல்ல என நிரூபித்துக் கொண்டே வருகிறார்.
ஜுவாலா கட்டா & அஷ்வினி :
இந்திய தந்தைக்கும் சீன தாய்க்கும் பிறந்த ஜுவாலா,  கடந்த 15 வருடங்களாக இறகுப்பந்து விளையாடிக் கொண்டு வருகிறார்.இடது கை ஆட்டகாரரான ஜுவாலா,முதலில் ஷ்ருதியுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வந்தார். அதன் பின் 2010ல் ஹாக்கி வீரரின் மகளான அஸ்வினியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பல வெற்றிகளை குவிக்க ஆரம்பித்து விட்டது. 2010 காமன்வெல்ட் போட்டிகளில் இரட்டையரில் தங்கம் வென்றனர். 2012 ஒலிம்பிக்கில் ஏற்பட்ட ஏமாற்றத்தால், சிறிது காலம் களத்தை விட்டு வெளியில் இருந்தார் ஜுவாலா. 2014 IBL -ல் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால், மீண்டும் இருவரும் ஜோடி சேர்ந்தனர். 2014 காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி வென்றனர். கனடா ஓபனில் சாம்பியன்ஸ், தரவரிசையில் டாப் 10 க்குள் இடம் என வெற்றி நடை போட ஆரம்பித்தனர்.
டென்னிஸ்:
சானியா மிர்சா:

”சோதனைகள் இன்றி சாதனைகள் இல்லை” என்பதற்கு சானியாவை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள். 2003ல் தொழிற்முறை டென்னிஸ் வீராங்கனையாக விளையாட ஆரம்பித்த சானியா, முதலில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாகவும், பின் உலகின் நம்பர் 1 வீராங்கனையாகவும் உருப்பெற,  பற்பல அவமானங்கள், தடைகளை தாண்ட வேண்டியது இருந்தது. உடை சர்ச்சை, திருமண சர்ச்சை, பயஸ்-பூபதி சண்டையில் தன்னை சீட்டாக உபயோகித்ததாக சர்ச்சை என சானியாவை சுற்றி எப்பொழுதுமே சர்ச்சைகள் இருக்கும். அதுபோன்றே வெற்றிகளும். ஆஸ்திரேலியன் ஓபன், பிரான்ஸ் ஓபன்,விம்பிள்டன், யூ.எஸ் ஓபன் என அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும் வென்றுள்ளார். ஒற்றையர் பிரிவில் யூ.எஸ் ஓபன் நான்காவது சுற்று வரை முன்னேறியதே அவரது சாதனை. அதுபோக தரவரிசையில் 27-வது வரை முன்னேறினார். மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலியன் ஓபன், பிரான்ஸ் ஓபன் வென்றார். பின் 2015 ல் மார்ட்டினா ஹிங்கிஸ்-யுடன் ஜோடி சேர்ந்த சானியாவிற்கு அதன்பின் ஏறுமுகம்தான்.
விம்பிள்டன், யூ.எஸ் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன், WTA பைனல் என தொட்டது எல்லாம் வெற்றி தான். தொடர்சியாக 40க்கும் மேலான போட்டிகளில் தொடர் வெற்றி என 30 வயது சானியா-36 வயது ஹிங்கிஸ் ஜோடி வேற வெலல் மேக்கிங். இப்பொழுது  இரட்டையர் தரவரிசையில் இந்த ஜோடிதான் நம்பர் 1. அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், ராஜீவ் காந்தி கேல் ரத்னா என இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதுகள் வென்றுள்ளார். இந்த இந்திய நாட்டு மகள்,  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மாலிக்கை திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தான் மருமகள் ஆனாள்.
”இந்தியாவில் ஓர் நடுத்தர வருமான குடும்பத்தில் பிறந்த பெண், விளையாட்டுத் துறையில் எளிதில் சாதிக்க முடியாது” என்பது இந்தியாவின் மிக சக்சஸ்புல் விளையாட்டு வீராங்கனையாக திகழும் சானியாவின் சமீபத்திய ஸ்டேட்மெண்ட்
வில்வித்தை:
தீபிகா குமாரி:
 

நம்ம தோனி சொந்த ஊரான ராஞ்சியில் ஜுன் 13 1994 ல் பிறந்தவர்தான் தீபிகா குமாரி. தாய் செவிலியர், தந்தை ஆட்டோக்காரர் என நடுத்தர குடும்ப சூழ்நிலையில், கிராமத்தில் வளர்ந்த தீபிகா, 2010 காமன்வெல்த் போட்டியில் இரு தங்கம் வென்றார். பெரிய பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெற குடும்ப வருமான சூழ்நிலைகள் வழிவகுக்காதபோது, குறிபார்த்து மாங்கா அடிப்பதன் மூலம், தன் வில்வித்தை திறமையை வளர்த்துக் கொண்டார். மூங்கிலில் செய்த வில் மற்றும் அம்பால் பயிற்சி செய்ய துவங்கிய தீபிகா, பின் தன் சொந்தக்காரர் வித்ய குமாரியுடன் டாடா வில்வித்தை அகாடமியில் பயிற்சி செய்ய துவங்கினார். வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தார். 2014ல் சிறு தொய்வு ஏற்பட்டாலும் அதனை சரி செய்து இப்பொழுது  மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார். உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும்  பிடித்தார். இவரது முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருதுகளை வழங்கியுள்ளது இந்திய அரசு. வரும் ரியோ ஒலிம்பிக்கிலும் தங்கத்தின் மீது அவர் வைத்துள்ள குறி சரியாக பாயுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மல்யுத்தம்:
கீதா பகொத்:

சல்வார் கமிஸ் மட்டுமே அணிய வேண்டும்,18 வயதில் திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும், பிறக்கும் முன்பே பெண் சிசுக்களை கருவிலேயே அழித்து விடும் கொடூரமான கட்டுப்பாடுகள் நிறைந்த ஹரியானாவில் உள்ள கிராமத்தில் பிறந்த கீதா, இந்தியா சார்பாக 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் பங்கேற்க  முக்கிய காரணம் அவரின் தந்தை மகாவீர் சிங்தான். அமீர் கான் தன் அடுத்த படமான “பகாலி”யில் இந்த மகாவீர் சிங்  கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கிறார். 55 கிலோப் பிரிவில் போட்டியிடும் கீதா, 2010 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றதன் மூலம், சாதிக்க துடிக்கும் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் ரோல் மாடலாக உருப்பெற்றுள்ளார். ஆண்களுக்கு மட்டுமே உரிய விளையாட்டாக கருதப்பட்ட மல்யுத்ததில் கீதா சாதித்தது மூலம், சக்சஸ்க்கு சாக்குபோக்குகள் என்றுமே பதிலாகாது என நிரூபித்துள்ளார். 2015 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷ்ப் போட்டிகளில் வெண்கலம் வென்றார். இதுபோக இவரது தங்கை பபிதா குமாரியும் 2014 காமன்வெல்ட் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். இவர்களின் வெற்றி, பல பெண்களை மல்யுத்ததை கற்கவும் அதில் சாதிக்கவும் தூண்டியுள்ளது என்றால் மிகையாகாது.
பளுதூக்குதல்:
கர்ணம் மல்லேஸ்வரி:
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண். ஒன்பது ஆண்டுகளாக தேசிய சாம்பியனாக திகழ்ந்தவர். தாய்லாந்தில் நடந்த பளுதூக்குதல் போட்டியில் மூன்று வெண்கல பதக்கங்கள் வென்றார் இந்த ஆந்திராவின் இரும்பு பெண். 2000 சிட்னியில் நடந்த ஒலிம்பிக்கில் 240 கிலோ பளு தூக்கி வெண்கல பதக்கத்தை இந்தியாவிற்குரியதாக்கினார்.1997ல் பளுதூக்கும் வீரரான ராஜேஷ் தியாகியை திருமணம் செய்து கொண்டார்.அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ,ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை வென்றுள்ளார்.
குஞ்சராணி தேவி:
மணிப்பூரில் பிறந்து, இந்திய போலீஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார் குஞ்சனா தேவி. 44, 46, 48 கிலோ என பல்வேறு பிரிவுகளின் கீழ் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார்.1987ல் இரு தேசிய சாதனைகள் படைத்தார்.தொடர்சியாக ஏழு பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றார். இதில் அதிகமாக வெள்ளி பதக்கங்களையே வெல்ல நேரிட்டது.1995 தென்கொரியா போட்டிகளில் 46 கிலோ பிரிவில் இரு தங்கம், ஓர் வெண்கல பதக்கம் வென்றார். அர்ஜூனா விருது, பத்ம ஸ்ரீ, ராஜீவ் கேல் ரத்னா விருதுகள் வென்றுள்ளார்.
சதுரங்கம்:
ஹம்மி:
15  வயது 1 மாதம் 27 நாளில் கிராண்ட் மாஸ்டரான ஹம்மி, மிக இளம் வயதில் இச்சாதனையை படைத்தார். 2589 புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாவது இடம் வகிக்கிறார். 2000 மற்றும் 2002ல் பிரிட்டிஷ் பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றார். 2600 தரவரிசை புள்ளிகளை தாண்டிய முதல் இந்திய பெண். உலக சதுரங்க சாம்பியன்ஷிப்பில் U-10,U-12,U-14 பிரிவுகளில் சாம்பியன்  பட்டம் வென்றுள்ளார். வேதியல் துறை ஆசிரியரான ஹம்மியின் தந்தை அஷோக், தன் மகளின் சதுரங்க வாழ்கைக்காக ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, முழு நேர பயிற்சியாளரானார். அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.
கிரிக்கெட்:
மிட்டாலி ராஜ்:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை கேப்டன்ஷிப் பண்ணும் ராஜஸ்தானில் பிறந்த ஓர் தமிழ் பெண். வலது கை பேட்ஸ் உமன் மற்றும் வலது கை சுழல் பந்து வீச்சாளராக செயல்படும் மிட்டாலி,1999ல் அயர்லாந்து அணிக்கு எதிராக களமிறங்கி,சதத்துடன் தன் கிரிக்கெட் இன்னிங்சை துவங்கினார். ஒரு நாள் போட்டிகளில் 5000 ரன்கள் கடந்த இரண்டாவது பெண் கிரிக்கெட் வீராங்கனை. இந்திய அணியை 2005 உலக கோப்பை இறுதி போட்டிக்கு வழிநடத்திச் சென்ற பெருமைகள் மிட்டாலியிடமே. டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 214 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.ஒரு நாள் போட்டியில் 49 சராசரியாக வைத்துள்ளவர் இவர். அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ விருதுகளை வென்றுள்ளார்.
ஜுலன் கோஸ்வாமி:
பேட்டிங்கில் மிட்டாலி என்றால், பவுலிங்க்கு ஜுலன்.மேற்கு வங்காளத்தில் பிறந்த ஜூலன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டன். இன்றைய அதிவேக பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஜூலன். தற்போது உலகின் நம்பர் 1 பவுலர் இவர்.148 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜூலன்,175 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 2007ல்  ஐசிசியின் சிறந்த பெண்கள் கிரிக்கெட் வீரருக்கான விருதை பெற்றார்.10 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்கள் எடுத்துள்ளார்.அதுபோக அர்ஜுனா விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வென்றுள்ளார்.
பெண்கள் ஹாக்கி அணி:
பல ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ள பெண்கள் ஹாக்கி அணிக்கு இது மறுமலர்ச்சி காலமாக கருதப்படுகிறது. சக் தே இந்தியா படம் போல், 2002 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தனர். தொடர்ந்து    Afro-Asia cup,Hockey asia cup என பட்டங்கள் வென்று வீர நடை போட்டது. தற்போது 13-வது இடத்தில் இருக்கும் பெண்கள் ஹாக்கி அணி, ரியோ ஒலிம்பிக்ஸ்க்கு தகுதி பெற்றதே பெரிய சாதனையாக கருதுகின்றனர். கடந்த காலங்களில் பல முன்னணி அணிகளை வென்றுள்ள இந்திய அணி, சிறப்பாக செயல்படும் என நம்பலாம்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953  உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum