தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனக்குழப்பம்

View previous topic View next topic Go down

மனக்குழப்பம்

Post by முழுமுதலோன் on Sun Jan 24, 2016 3:40 pm


சாதாரணமாக நாம் எல்லோரும் 'மனக்குழப்பம்' என்றால் மனம் குழம்பிப்போய் இருப்பது எனக் கருதுகிறோம். எதனால் குழப்பம் ஏற்படுகிறது? மனத்தைக் குழப்புவது எது? மனம் குழம்புகிறதா அல்லது குழப்புகிறதா? என்னென்ன சம்பவங்கள் அல்லது சந்தர்ப்பங்களில் மனம் குழம்புகிறது அல்லது குழப்பத்தை உண்டாக்குகிறது? ஒவ்வொரு முறையும் குழம்புவதற்கு அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அந்தச் சம்பவம் அல்லது சந்தர்ப்பம் காரணமா அல்லது எல்லாவகையான குழப்பத்துக்கும் ஒரே காரணமா? கேள்வி மேல் கேள்வி கேட்டு உங்களைக் குழப்புவதிலும் ஒரு காரணம் உண்டு.


'மனக்குழப்பம்' என்பது பல வடிவங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. தடுமாற்றம், திகைப்பு, வெட்கம், கலக்கம், அச்சம், ஆர்வமின்மை, பலவீனம், தெளிவின்மை, அமைதியின்மை எனப் பல வடிவங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றது. மனக்குழப்பம் என்பது வெவ்வேறான வடிவங்களைப் பெற்றிருந்தாலும் நாம் கவனத்திலும் கருத்திலும் வைத்திருக்க வேண்டிய விடயம் மனம் குழம்புகிறதா அல்லது குழப்புகிறதா? என்பதுதான். இதை நாம் தெளிவாகப புரிந்து கொள்வதற்கு முதலில் 'மனம்' என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வோம்.

மனம் என்பது நினைவுகளின் பண்டகசாலை. நமது நாளாந்த நகர்வில் உள்வாங்கிக் கொண்ட அனைத்தையும் சேகரித்து வைத்துக்கொண்டிருக்கும் பண்டகசாலை. உதாரணமாகக் கூறுவதாயின் இது ஒரு கணணி (computer)போன்றது. ஒரு கணனியில் நாம் சேகரித்து வைக்கும் தரவுகள் போன்று எமது மனமும் தரவுகளைச் சேகரித்து வைக்கும். மனக்குழப்பத்தை மிகவும் இலகுவாகப் புரிந்துகொள்வதற்கு எமது மனத்திற்கும் ஒரு கணனிக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டைக் கவனத்தில் கொள்வது அவசியம். அதாவது நாம் ஒரு தரவை அல்லது பதிலை கணனியிடம் கேட்டால் அதற்குப் பொருத்தமான தரவு அல்லது பதில் ஏற்கனவே இருக்குமாயின் சரியான விடையைத் தரும். மாறாக பொருத்தமான பதில் இல்லாவிடில் 'பதில் இல்லை' என்று கூறும் அல்லது ‘கேள்வியைச் சரிபார்க்கவும்’ என்று எங்களைக் கேட்கும். உதாரணமாக, ஒரு கணனியில் ஐந்தும் எட்டும் சேர்ந்தால் பதின்மூன்று என்று பதிவு செய்திருப்போமாயின் ஏழும் ஆறும் எத்தனை என்று கேட்டால் பதில் கிடைக்காது. ஆனால் மனமானது தான் ஏற்கனவே பதிவு செய்துள்ள விடயங்களில் இருந்து பல்வேறு தெரிவுகளைத் தந்து குழப்பிக்கொண்டிருக்கும். இதுவே மனக் குழப்பத்திற்கான அடிப்படையாகும். எப்படி?

மனக்குழப்பம் ஏற்படுவதற்கான காரணமாக அமைவது எமது மனம் எமது கேள்விக்கு இது தான் விடை என்பதைத் திட்டவட்டமாகத் தராதது தான். திட்டவட்டமான பதிலை மனத்தால் தரமுடியாமல் போவதற்கான காரணம் எமது கேள்விகள் ஏற்கனவே மனம் சேகரித்து வைத்திருக்கும் தகவலுடன் நேரடியான தொடர்பைப் பெறாதிருப்பது தான். வேறொருவகையில் கூறுவதாயின், கேள்விகள் புதிதாக இருக்கும் ஆனால் மனமோ பழைய தகவல்களிலிருந்து விடையைத் தேடும். இந்த நடவடிக்கையே மனக்குழப்பத்திற்குக் காரணமாக அமைகின்றது. அதாவது நமது வாழ்க்கை புதிய கேள்விகளை முன்வைத்துக் கொண்டிருக்கும். ஆனால் மனமோ பழைய தகவல்களில் விடையைத் தேடிக்கொண்டிருக்கும். இந்த முரண்பட்ட செயற்பாடே மனக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. இந்தக் குழப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நாம் கருத்தி கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், நமது வாழ்க்கை முன்வைக்கும் ஒவ்வொரு கேள்வியும் புதிய கேள்வி என்பதுதான். அதாவது வாழ்க்கை ஒரு பொழுதும் ஒரு கேள்வியை ஒரு முறைக்கு மேல் முன்வைப்பதில்லை என்பது தான். கேள்விகள் புதிதாக இருப்பதால் பதில்களும் புதிதாக இருத்தல் வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைக்கும். அதுவரை பொறுமையாக இருப்பது தான் மனக் குழப்பத்தை தவிர்ப்பதற்கான ஒரே வழியாகும்.

Sakthivel Balasubramanian

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: மனக்குழப்பம்

Post by செந்தில் on Wed Jan 27, 2016 8:16 pm

சிறப்பான விளக்கம்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மனக்குழப்பம்

Post by முரளிராஜா on Mon Feb 01, 2016 3:11 pm

நன்றி அண்ணா
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum