தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by rammalar

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by rammalar

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by rammalar

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by rammalar

» தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
by rammalar

» உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
by rammalar

» கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்
by rammalar

» இருபது வயது, மூணு மாசம்’ன்னு சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க!!
by rammalar

» இணையத்தில் ரசித்தவை - தொடர் பதிவு
by rammalar

» நகைச்சுவை- ரசித்தது (தொடர்பதிவு)
by rammalar

» எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்...!!
by rammalar

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by rammalar

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by rammalar

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by rammalar

» முல்லா நஸ்ருதீன்!
by rammalar

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by rammalar

» முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சா
by rammalar

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by rammalar

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by rammalar

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by rammalar

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by rammalar

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by rammalar

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by rammalar

» பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்
by rammalar

» நெட் ஜோக்
by rammalar

» கந்தல் – கவிதை
by rammalar

» நினைவுகள் – கவிதை
by rammalar

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar

» இருபது வயது, மூணு மாசம்’ன்னு சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க!!
by rammalar

» ஒரே இடத்தில் 108 திவ்ய தேசம்
by rammalar

» இரண்டும் ஒரே திசையில்....
by rammalar

» ஜன்னல் தத்துவம்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாத்திரம் அறிந்து பசியாறுவோம் !

View previous topic View next topic Go down

பாத்திரம் அறிந்து பசியாறுவோம் !

Post by முழுமுதலோன் on Tue Jan 19, 2016 4:19 pmமண்சட்டியில் தொடங்கி இரும்பு, செம்பு, வெண்கலம், பித்தளை, ஈயம் போன்ற உலோகப் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிட்டுவந்த காலம் மலையேறிவிட்டது. 'எண்ணெய் சேர்க்காமலேயே சமைக்கலாம். உணவும் பாத்திரத்தில் ஒட்டவே ஒட்டாது, சுத்தம் செய்வதும் சுலபம்’ என்பதால், நான்ஸ்டிக் பாத்திரங்கள்தான் இன்று பெரும்பாலானவர்களின் சமையலறையை ஆக்கிரமிக்கின்றன. 

''மண்சட்டி, இரும்பு, வெண்கலப் பாத்திரங்களில் சமைத்த உணவால் உடலுக்குப் பலன் உண்டா? நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் நாம் இழந்தது என்ன?'' என சித்த மருத்துவர் சொக்கலிங்கத்திடம் கேட்டோம்.

''அந்த காலத்தில், வசதியற்றவர்கள் மண்சட்டியில் சாதம் செய்வார்கள். மணமாய் இருக்கும். ஓரளவுக்கு வசதியுள்ளவர்கள் உலோகத்தால் ஆன பாத்திரங்களைச் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பாயாசம், அரிசி உப்புமா போன்ற உணவு வகைகளை வெண்கலத்தாலான பானைகளில் செய்வார்கள். டம்ளர், கரண்டி என அனைத்துமே பித்தளை, வெண்கலம் போன்ற உலோகத்தால் ஆனவையாக இருக்கும்.

வெண்கலப் பாத்திரங்களில் உணவு உண்பதால், பலவித நோய்கள் குணமாகும் என்கிறார் போகர். ஆனால், நெய் மற்றும் புளிப்புச் சுவையுடைய பொருட்களை வெண்கலப் பாத்திரங்களில் தவிர்க்க வேண்டும் என்கிறார். குறிப்பிட்ட இந்த உணவு வகைகளைத் தவிர்த்து மற்ற உணவுப் பொருட்களை இதில் தயாரித்து உண்பதால், அவை அமிர்தத்துக்கும் மேலான பொருளாகும் என்கிறார். 'சமையல் அறையில் நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் மருத்துவருக்குச் சமம்’ என்கிற மருத்துவர் சொக்கலிங்கம், உலோகப் பாத்திரங்களின் பலன்களை அடுக்கினார்.

''இரும்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் உடல் வெப்பம் தணியும். சோகை நீங்கி உடல் சுகம் பெறும். இரும்புச் சட்டியில் தாளித்தவுடன், அதில் சாதத்தைப் போட்டுப் பிசைந்து சாப்பிடும்போது உணவின் வாசம் அதிகரிப்பதுடன் சுவையும் கூடும். தாமிரப் பாத்திரங்களில் உணவு சமைக்கும்போது, அது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். திருப்பதி லட்டு தாமிரப் பாத்திரங்களில்தான் செய்யப்படுகிறது. தாமிரப் பாத்திரங்களில் தயாரிக்கப்பட்ட தேநீரை அருந்தும்போது, உடலில் உள்ள கிருமிகள் நீங்கும். வெண்புள்ளி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அண்டாது. காய்ச்சலில் அவதிப்படுபவர்கள், பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கும்போது தாகம் குறைந்து, உடல் வலுப்பெறும். நீர்க்கடுப்பு உள்ளவர்களுக்கு உடல் குளிர்ச்சியடையும். ஈயம் மற்றும் வெளிப்பூச்சாக ஈயம் பூசப்பட்ட பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டால் தோல் தொடர்பான நோய்கள், கண் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும். இதில் உணவு சமைக்கும்போது வாசனை மிகுந்து இருக்கும். சுவையும் அதிகமாக இருக்கும்.

அலுமினியப் பாத்திரங்கள் எடை குறைவாக இருக்கும். இதில் சமைத்துச் சாப்பிடுவதால், உணவு எளிதில் செரிமானம் ஆகும். இருப்பினும், தொடர்ந்து அலுமினியப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது அல்ல. அலுமினியப் பாத்திரத்தில் தக்காளி, புளி, எலுமிச்சை போன்ற புளிப்புச் சுவையுள்ள உணவுப் பொருட்களைச் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். புளிப்புச் சுவையில் உள்ள அமிலத்தன்மை பாத்திரத்தை அரிக்கத் தொடங்கிவிடும். இதனால் உணவும் நச்சுத் தன்மை அடைந்து, உடலுக்குக் கேட்டை விளைவிக்கும்.

பிளாஸ்டிக், நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தி உடலுக்கு நோயை வரவழைத்துக்கொள்ளாமல், முடிந்தவரை நம் முன்னோர்கள் பயன்படுத்திய உலோக, மண் சட்டிகளைப் பயன்படுத்துவதே உடல் நலத்திற்கு நல்லது'' என்கிறார் சொக்கலிங்கம்.

நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சாதக பாதக விஷயங்களைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணரும், விரிவுரையாளருமான செல்வராணி ரமேஷிடம் கேட்டோம். ''நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும்போது, எண்ணெயின் அளவு மிகக் குறைவாகத்தான் தேவைப்படும். அதனால், கொழுப்பு சேராது என்று நினைத்துப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நான்ஸ்டிக் பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் றிதிளிகி PFOA (Perfluorooctanoic Acid) என்ற வேதிப்பொருள் தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவது இல்லை. எனவே இந்த வகைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். லைபோபுரோட்டீன் என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது. எனவே, சமைக்கும் பாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதிலும் பழமையைக் கடைப்பிடிப்பதே ஆரோக்கியத்துக்கான வழி!'' என்கிறார் செல்வராணி ரமேஷ்முகநூல் 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: பாத்திரம் அறிந்து பசியாறுவோம் !

Post by kanmani singh on Wed Jan 20, 2016 1:16 pm

கட்டுரைக்கு நன்றி!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum