தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

View previous topic View next topic Go down

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

Post by முழுமுதலோன் on Sat Jan 02, 2016 4:43 pm

மேஷம்


புகழ், கௌரவம் தேடி வரும்

குருபகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், ராகு ரண-ருண-ரோக ஸ்தானத்திலும், சனி பகவான் அஷ்டமஸ்தானத்திலும், கேது விரயஸ்தானத்திலும் இருக்கிறார்கள். 8.1.2016 அன்று ராகு பகவான் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் ராசிக்கு சப்தம களத்திர ஸ்தானம், லாப ஸ்தானம், தைரிய வீரிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். அதே நாளில் கேது பகவான் உங்களது லாப ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் உங்களது ராசி, பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். திருமணம், சுபச் செலவுகள் உண்டாகும். சொந்த பூமி, மனை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துகள் கைக்கு கிடைக்கும்.
பொருளாதார நிலை சீராகும். கொடுக்கல்-வாங்கல் நல்ல நிலைமையில் இருக்கும். பிறரை நம்பி பெரிய தொகையைக் கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். உடனிருப்பவர்களே பண விஷயத்தில் துரோகம் செய்யத் துணிவார்கள்; எச்சரிக்கை தேவை. சில வம்பு வழக்குகள் நல்ல முடிவுக்கு வரும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டு வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். வங்கிக் கடன்கள் குறையும்.
உத்யோகஸ்தர்களுக்கு, செய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும். கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும். சிலர், எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் பெரிய கெடுதல் ஏற்படாது. உங்கள் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுக்கும் குறைவிருக்காது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலை கிடைப்பதால், லாபங்கள் பெருகும். பணவரத்தினால் நவீன கருவிகளையும் வாங்க முடியும். சிலருக்கு பூமி, மனை யோகமும் கிட்டும்.
பெண்களின் உடல்நலம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் மங்கள விசேஷங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். பொன் பொருள் சேரும். உற்றார் – உறவினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக வழியில் லாபம் கிட்டும்.
கலைஞர்கள், திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணமும் கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு அமையும். புதிய கார், பங்களா என வாங்குவீர்கள்.
மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பொதுவாக ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளைத் திறம்பட செய்து முடிக்க முடியும். குடும்பத்தாராலும் சில மருத்துவச் செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்க்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வலம் வரவும்.
மலர் பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்மனுக்கு செவ்வரளிப் பூமாலை சாத்தவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஷண்முகாய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

Post by முழுமுதலோன் on Sat Jan 02, 2016 4:46 pm

ரிஷபம்


பணியில் நிம்மதி உண்டாகும்

குருபகவான் சுகஸ்தானத்திலும் ராகு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சனி பகவான் ஸப்தம ஸ்தானத்திலும் கேது லாப ஸ்தானத்திலும் இருக்கிறார்கள். 8.1.2016 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் ராசிக்கு ரண-ருண-ரோக ஸ்தானம் –  தொழில் ஸ்தானம் –  தன வாக்கு குடும்ப ஸ்தானம் –  ஆகியவற்றைப் பார்க்கிறார். அதே நாளில் கேது பகவான் தொழில் ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் ராசிக்கு  அயன சயன போக ஸ்தானம் –  சுக ஸ்தானம் –  அஷ்டம ஆயுள் ஸ்தானம் – ஆகியவற்றைப் பார்க்கிறார். குடும்பத்தில் கணவன் – மனைவியிடையே அடிக்கடி வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பது நல்லது. மணமாகாதவர்களுக்கு சுப காரியங்கள் நடைபெற தாமதமாகலாம். பணவரத்து ஏற்ற இறக்கமாக இருக்கும்.
பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளைக் கையாளாதீர்கள். வாங்கிய பணத்தை திருப்பித் தருவதில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். அதனால் பகை உண்டாகும். வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைத்தாலும், கூட்டாளிகளின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெறமுடியாமல் போகும்.

உத்யோகஸ்தர்களுக்குப்
 பணியில் நிம்மதி உண்டாகும். எதிலும் திறம்படச் செயல்படுவீர்கள். ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், பதவி உயர்வு கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையிடாதீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
அரசியல்வாதிகளே! மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்திசெய்தால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்துக்கொள்ள முடியும். கட்சிப்பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டிவருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும்போது சிந்தித்துச் செயல்படவும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இதனால் சுணக்கம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும்.
பெண்கள், உடல் ஆரோக்கியத்தில் கவனமெடுப்பது நல்லது. குடும்பத்தாரை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்னைகளை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருக்கவும். திருமணத்தடைகள் ஏற்படும். பணவரத்து சுமாராக இருக்கும்.
கலைஞர்களுக்கு பயணங்களால் அலைச்சலும் உடல் சோர்வும் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியாதுபோகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு 
கல்வியில் மந்த நிலை உண்டாகக்கூடிய காலமிது. ஆகவே முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்விரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைகள் ஏற்படும். தேவையற்ற நட்புகள் வேறுபாதைக்கு அழைத்துச்செல்லும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். பொதுவாக தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தாராலும் அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும்.

பரிகாரம்: 
முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று தேங்காய் தீபம் ஏற்றி 11 முறை வலம் வரவும்.

மலர் பரிகாரம்: 
சனிக்கிழமைதோறும் மல்லிகை மலரை அருகிலிருக்கும் நவகிரகங்களுக்கு அர்ப்பணிக்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:
 ‘ஓம் ப்ரக்ருத்யை நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: 
திங்கள்,  புதன்,  வெள்ளி.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

Post by முழுமுதலோன் on Sat Jan 02, 2016 4:48 pm

மிதுனம்


புதிய வாய்ப்புகள் கிட்டும்

குருபகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலும், ராகு சுகஸ்தானத்திலும், சனி பகவான் ரண-ருண-ரோகஸ்தானத்திலும், கேது தொழில் ஸ்தானத்திலும் இருக்கிறார்கள். 8.1.2016 அன்று ராகு பகவான் உங்களது தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் ராசிக்கு  பஞ்சம பூர்வ புண்ணிய   ஸ்தானம் –  பாக்கிய  ஸ்தானம் –  ராசி   ஆகியவற்றைப் பார்க்கிறார்.    அதே நாளில் கேது பகவான் உங்களது பாக்கிய  ஸ்தானத்திற்கு வருகிறார்.   அவர் ராசிக்கு  லாப  ஸ்தானம்,  தைரிய வீரிய  ஸ்தானம்,  ஸப்தம  ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். குடும்பத்தில் கணவன் –  மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்  தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக  இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்படவும்.  கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் தடைகள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், பூர்வீக சொத்துகளால் அனுகூலமற்ற நிலைகள்  தோன்றும்.

தொழில், வியாபாரத்தில்
 முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகள், தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். பல பெரிய மனிதர்களின்  உதவிகளும் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும்.  சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையிடாதீர்கள்.  எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதம் ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டியிருக்கும்.  கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால்தான் முன்னேற முடியும். அடிக்கடி மேற்கொள்ளும்  பயணங்களால் ஓரளவுக்கே ஆதாயம் அடையமுடியும்.

விவசாயிகளுக்கு
 விளைச்சல் ஓரளவுக்குத்தான் இருக்கும். போட்ட முதலீட்டை எடுக்கவே  அரும்பாடு படவேண்டிவரும். வயல் வேலைகளுக்கு தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்கமாட்டார்கள். சந்தையிலும் விளைபொருளுக்கு  சுமாரான விலையே கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பங்காளிகளை அனுசரித்துச் செல்லவும்.

பெண்களுக்கு
 உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். திருமணத்  தடை தாமதம் ஏற்படும். பணவரத்து சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ளவும்.
கலைஞர்கள், தகுந்த  கதாபாத்திரங்களுக்காகக் காத்திராமல் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. போட்டி, பொறாமை அதிகரிப்பதால் நல்ல வாய்ப்புகள் பறிபோகும். ஆடம்பர வாழ்க்கையிலும் பாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.

மாணவர்களுக்கு
 கல்வியில் மந்த நிலை ஏற்படும் என்பதால் ஈடுபாட்டுடன் கல்வி பயில்வது நல்லது. தேவையற்ற பொழுதுபோக்குகளால் மனம்  பாதை மாறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெற இயலாமல் போகும். பொதுவாக உடல் ஆரோக்யத்தில்  அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும்.  மனைவி, பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். நீண்டநாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக்  கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது.

பரிகாரம்: 
முடிந்தவரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று நல்லெண்ணையில் தீபம் ஏற்றி 7 முறை வலம்  வரவும்.

மலர் பரிகாரம்:
 புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு துளசி சாத்தி வழிபடவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:
 ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை தினமும் 5 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: 
திங்கள், புதன்,  வியாழன்.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

Post by முழுமுதலோன் on Sat Jan 02, 2016 4:49 pm

கடகம்


நினைத்தது யாவும் நிறைவேறும்

குருபகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் ராகு தைரிய வீரிய ஸ்தானத்திலும் சனி பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் கேது பாக்கிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள். 8.1.2016 அன்று ராகு பகவான் உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் ராசிக்கு சுக ஸ்தானம், அஷ்டம ஆயுள் ஸ்தானம், அயன சயன போக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். அதே நாளில் கேது பகவான் உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் ராசிக்கு தொழில் ஸ்தானம், தன வாக்கு குடும்ப ஸ்தானம், ரண ருண ரோக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் – மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பொன்பொருள் சேர்க்கை சேரும். சிலருக்கு, பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பொருளாதார நிலை மிகவும் முன்னேற்றமாக இருப்பதால் கொடுக்கல்-வாங்கல் சரளமாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தரும். திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிட்டும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்துமுடிக்க முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும்.
அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் உயரக்கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி தரும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பணவரத்து தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தனவரவு அதிகரிக்கும். நீர்வரத்து திருப்தியாக இருக்கும். புதிய முயற்சிகளால் விளைச்சலைப் பெருக்குவீர்கள். புதிய விளை நிலம், வீட்டுமனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும்.
பெண்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவார்கள். கணவன் – மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். சொந்த கார், பங்களா என்று வாங்குவீர்கள் சேமிப்பும் பெருகும்.
கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடிவரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கைக்கு வராமலிருந்த தொகைகள் தடையின்றி வந்து சேரும். சுகவாழ்விற்கு பஞ்சம் இருக்காது.
மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பரிசுகளைப் பெறுவீர்கள். பொதுவாக உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகள் நலமாக இருப்பார்கள். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். நீண்ட நாளாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று இலுப்பை எண்ணையில் பஞ்சமுக தீபம் ஏற்றி வணங்கி 16 முறை வலம் வரவும்.
மலர் பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு அரளிப்பூமாலை சாத்தி வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

Post by முழுமுதலோன் on Sat Jan 02, 2016 4:51 pm

சிம்மம்


அநாவசிய செலவுகள் கட்டுப்படும்

குருபகவான் ராசியிலும், ராகு தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும், சனி பகவான் சுகஸ்தானத்திலும், கேது அஷ்டமஸ்தானத்திலும் – இருக்கிறார்கள். 8.1.2016 அன்று ராகு பகவான் உங்களது ராசிக்கு வருகிறார். அவர்  ராசிக்கு  தைரிய வீரிய  ஸ்தானம், ஸப்தம  ஸ்தானம், லாப ஸ்தானம் –   ஆகியவற்றைப் பார்க்கிறார். அதே நாளில் கேது பகவான் உங்களது ஸப்தம ஸ்தானத்துக்கு  வருகிறார்.  அவர் உங்களது ராசிக்கு  பாக்கிய  ஸ்தானம், ராசி, பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். குடும்பத்தில் பண வரத்தில் ஏற்ற இறக்கமான நிலை நிலவினாலும்  செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற முயற்சிகளில் தாமதம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் வீண்செலவுகளும், புத்திர வழியில்  மகிழ்ச்சிக் குறைவும் ஏற்படலாம். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உற்றார்-உறவினருக்குத் தேவையற்ற பிரச்னைகளை  உண்டாக்கும். பண வரத்து தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கொடுக்கல்-வாங்கலில் ஈடுபடுத்தும்போது கவனமுடன்  செயல்படுங்கள். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது என்று வீண்பிரச்னைகளில் சிக்கிக்கொள்வீர்கள்.
செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அவ்வப்போது சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது.  கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலம் அடைவார்கள். அபிவிருத்தியும் பெருகும்.
உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன்  செயல்படுவதும் உயரதிகாரிகளிடம் நிதானமாகப் பேசுவதும் நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை  குறைத்துக் கொள்ளலாம். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்திக் கொள்ளவும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம், சில தடைகளுக்குப் பின் நிறைவேறும்.
அரசியல்வாதிகள் பெயர், புகழை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய காலமிது என்பதால் மக்களின் ஆதரவைப் பெற முயற்சி செய்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக சில செலவுகளை செய்ய நேரிடும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்துவிட முடியும். நீர்வரத்து தேவைக்கேற்றபடி இருக்கும். புதிய பூமி,  மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.
பெண்களுக்கு உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. பொருளாதார நிலை  தேவைக்கேற்றபடி இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவி சற்று  விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும்.

கலைஞர்கள்,
 கிடைத்த வாய்ப்புகளை கைநழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரத்து சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச்  செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அனுகூலம் அடையலாம். விளையாட்டுப் போட்டிகளில் கவனமுடன் ஈடுபடுங்கள். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் வீண் அலைச்சலையும், பிரச்னைகளையும் எதிர் கொள்ள நேரிடும். பொதுவாக வயிறு சம்பந்தப்பட்ட  பாதிப்புகள், அஜீரணக் கோளாறு போன்றவை தோன்றும். குடும்பத்தாரால் அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாடப் பணிகளில்  உங்களின் தனித்திறனால் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நல்ல பெயரெடுப்பீர்கள்.

பரிகாரம்: 
ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும். சூரிய உதயத்திற்குப் பின் தூங்குவதைத்  தவிர்க்கவும்.
மலர் பரிகாரம்: பிரதோஷம் தோறும் அபிஷேகத்திற்கு எலுமிச்சைச்சாறு அர்ப்பணிக்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீசிவாய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு. செவ்வாய், வியாழன்.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

Post by முழுமுதலோன் on Sat Jan 02, 2016 4:54 pm

கன்னி


பெருமை, பாராட்டு கிடைக்கும்

குருபகவான் அயன சயன போக ஸ்தானத்திலும், ராகு ராசியிலும், சனி பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலும், கேது ஸப்தம ஸ்தானத்திலும்  இருக்கிறார்கள். 8.1.2016 அன்று ராகு பகவான் உங்களது அயன சயன போக ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் ராசிக்கு தன வாக்கு குடும்ப ஸ்தானம், ரண-ருண-ரோக ஸ்தானம், தொழில் ஸ்தானம் – ஆகியவற்றைப் பார்க்கிறார். அதே நாளில் கேது பகவான் உங்களது ரண-ருண-ரோக   ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் உங்களது ராசிக்கு அஷ்டம ஆயுள் ஸ்தானம் – அயன சயன போக  ஸ்தானம் – சுக ஸ்தானம் – ஆகியவற்றைப்  பார்க்கிறார். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். கணவன் – மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஆகவே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், முன்கோபத்தைக் குறைப்பதும் நல்லது. பண வரத்து சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் முடிந்தவரை பெரிய தொகைகளை கொடுக்கல்-வாங்கலில்  ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு சுமாரான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுங்கள்.  அரசு  வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்குப் 
 பணியில் வேலைப் பளு கூடும். உடன்  பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூல பலனை பெற முடியும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்படும்.
அரசியல்வாதிகள் பெயர் புகழுக்கு இழுக்கு நேராமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நேரம் – எல்லா விஷயங்களிலும் கவனமுடன் செயல்படுங்கள். அரசு வழியில் வீண் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மக்களின் ஆதரவு ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொண்டு  வெற்றிபெற முடியும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராகத்தானிருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்க அரும்பாடுபட வேண்டிவரும். நீர்வரத்து போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்கு கிடைக்கமாட்டார்கள். வாய்க்கால், வரப்பு பிரச்னைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும்.
பெண்களுக்கு  உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணவரத்து  தேவைக்கேற்றபடி இருந்தாலும் வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமதம் ஏற்படும்.  அசையும் -அசையா சொத்துகளை வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.
கலைஞர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு சிறப்பாகவே இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் சிறிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல பெயரினை வாங்கித்தரும். வரவேண்டிய பணத்தில் சற்று இழுபறி நிலை இருக்கும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவர்.  சிறுசிறு இடையூறுகள், தேவையற்ற நட்பு வட்டாரங்களால் ஏற்படுவதால் அவ்வப்போது கல்வியில்  மந்த நிலை தோன்றும். ஆனாலும், எதையும் சமாளித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பயணங்களில் கவனமுடனிருப்பது நற்பலனைத் தரும். பொதுவாக உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகக்கூடும். குடும்பத்தாரால் மருத்துவச் செலவுகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறைவு  உண்டாகும். நீண்டநாள் பிரச்னைகளுக்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது என்றாலும்  பெரிய கெடுதியில்லை.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோயிலுக்குச் சென்று நெய் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி  வரவும்.
மலர் பரிகாரம்: புதன்ஹோரைகளில் பெருமாள் அல்லது விநாயகர் அல்லது சாஸ்தா கோயிலுக்கு மரிக்கொழுந்தை அர்ப்பணிக்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 
‘ஓம் ஸ்ரீஅச்சுதாய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

Post by முழுமுதலோன் on Sat Jan 02, 2016 4:56 pm

துலாம்


விருப்பங்கள் எல்லாம் பூர்த்தியாகும்

குருபகவான் லாப ஸ்தானத்திலும், ராகு அயன சயன போக ஸ்தானத்திலும், சனி பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும், கேது ரண-ருண- ரோகஸ்தானத்திலும் இருக்கிறார்கள். 8.1. 2016 அன்று ராகு பகவான் உங்களது லாப ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் ராசி,  பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய  ஸ்தானம்- ஆகியவற்றைப் பார்க்கிறார். அதே நாளில் கேது பகவான் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் ராசிக்கு ஸப்தம லாப ஸ்தானம், தைரிய வீரிய ஸ்தானம்,- ஆகியவற்றைப் பார்க்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நிம்மதியான செய்தி கிடைக்கும். கணவன் – மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும்  ஒற்றுமை குறையாது. பணவரத்து தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலும் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடிவரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும்  வெற்றிகிட்டும். பொருளாதார உயர்வுகளால் குடும்பத் தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும்.
தொழில், வியாபாரம் அமோகமாக  நடைபெறும். போட்டிகள் குறையும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் தடைகள் விலகி உயர்வுகளும், கௌரவமும், புகழும் மேலோங்கும். வெளியூர், வெளிநாடுகளில் பணி புரிய  விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிகேற்ற வேலை  வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வடையும்.
அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயர்வடையும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய  நேர்ந்தாலும் வரவேண்டிய பணம் வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைக்கும்.
விவசாயிகள் நவீன முறைகளைக் கையாண்டு பயிர் விளைச்சலைப் பெருக்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நீர்வரத்து  தாராளமாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசு வழியில் மானியஉதவிகள் கிட்டும். சுபகாரியங்கள் யாவும் கைகூடும்.
பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணவரத்து தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா  சொத்துகளால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.
கலைஞர்களுக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று உங்களின் நடிப்புத்திறன் வெளிச்சத்திற்கு வரும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால்  மனநிறைவு உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்கு பஞ்சமில்லை. புதிய கார், பங்களா என வாங்குவீர்கள்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். தேவையற்ற நட்புகளையும் பொழுதுபோக்குகளையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் தட்டிச்செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பொதுவாக உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. ஆனால்,  குடும்பத்திலுள்ளவர்கள் அவ்வளவு நலமாக இருப்பார்கள் என்று கூறமுடியாது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் லக்ஷ்மி பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.
மலர் பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் மல்லிகை அல்லது பிச்சிப்பூவை கோயிலுக்கு அர்ப்பணிக்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘தனம்தரும் கல்விதரும்…’ என்று தொடங்கும் அபிராமி அந்தாதி பாடலை தினமும் 5 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள்,  புதன்,  வெள்ளி.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

Post by முழுமுதலோன் on Sat Jan 02, 2016 5:00 pm

விருச்சிகம்


தேவைக்கேற்ப பணம் வரும்

குருபகவான் தொழில் ஸ்தானத்திலும், ராகு லாப ஸ்தானத்திலும், சனி பகவான் ராசியிலும், கேது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும்  இருக்கிறார்கள். 8.1.2016 அன்று ராகு பகவான் உங்களது தொழில்  ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் ராசிக்கு அயன சயன போக  ஸ்தானம், சுக ஸ்தானம், அஷ்டம ஆயுள்  ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். அதேநாளில் கேது பகவான் உங்களது சுக ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் ராசிக்கு ரண-ருண-ரோக ஸ்தானம், தொழில்  ஸ்தானம்,  தன வாக்கு குடும்ப ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். குடும்பத்தில் பணவரத்து தேவைகேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. கணவன் –  மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக்கக்கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உற்றார்-உறவினர்கள் மூலம்  எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும்  கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது  போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளால் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன்  செயல்படமாட்டார்கள். அரசு வழியில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். தொழிலிலும் மந்த நிலை ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பழிச் சொற்களை  எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளை கண்முன்னேயே பிறர் தட்டிச்செல்வர்.
அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. பெயர், புகழுக்கு இழுக்கு நேராதபடி  பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்யவேண்டியிருக்கும். அடிக்கடி பயணங்களையும்  மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.
விவசாயிகளுக்குப் பயிர் விளைச்சல் நன்றாக அமைய கடும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள்  கிடைக்காததால் பயிர் வேலைகள் சரிவர நடக்காது போகும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் தாமதப்படும். புதிய பூமி, மனை  வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துமென்றாலும் அன்றாடப் பணிகளில்  சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.  உற்றார்-உறவினரால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

கலைஞர்கள்
 புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய தொகை இழுபறியாகும். தேவையற்ற  பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். சுக வாழ்க்கை பாதிப்படையும்.
மாணவர்களுக்குக் கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றமிருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். விளையாட்டுப் போட்டிகளில்   கவனமுடன் செயல்படுங்கள். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்குச் சுறுசுறுப்பாக இருக்கும். அவ்வப்போது  ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப் பின் குணமாகும். எந்த காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள  வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பரிகாரம்: 
செவ்வாய்க்கிழமை தோறும் காலையில் அம்பாள் கோயிலுக்குச் சென்று 3 முறை வலம் வரவும்.
மலர் பரிகாரம்: நவகிரகங்களுக்கும் மலர்கள் வாங்கிக் கொடுக்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ஷண்முக கவசம் சொல்வது அல்லது கேட்பது மன உறுதி வளர்க்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு,  செவ்வாய்,  வியாழன்.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

Post by முழுமுதலோன் on Sat Jan 02, 2016 5:01 pm

தனுசு


உயர்வுகள் தடையின்றி கிடைக்கும்

குருபகவான் பாக்கிய ஸ்தானத்திலும், ராகு தொழில் ஸ்தானத்திலும், சனி பகவான் அயன சயன போக ஸ்தானத்திலும், கேது சுகஸ்தானத்திலும்  இருக்கிறார்கள். 8.1.2016 அன்று ராகு பகவான் உங்களது பாக்கிய ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் ராசிக்கு லாப ஸ்தானம், தைரிய வீரிய   ஸ்தானம், ஸப்தம ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். அதே நாளில் கேது பகவான் உங்களது தைரிய வீரிய ஸ்தானத்திற்கு வருகிறார். அவர்  ராசிக்கு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், ராசி ஆகியவற்றைப் பார்க்கிறார். குடும்பத்தில் கணவன் – மனைவியிடையே சிறப்பான  ஒற்றுமை நிலவும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். உற்றார் – உறவினர் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.  பணவரத்து தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார், பங்களா வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும்.  குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் – வாங்கலும் சரளமாகவே இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்கும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது.
செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வெளியூர், வெளிநாட்டு  தொடர்புகளால் லாபம் கிட்டும். அடிக்கடி பயணங்களும் இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். எதிர்பார்த்துக்  காத்திருந்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் வாழ்க்கைத் தரம் மேம்படும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி உண்டாக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளு குறையும். புதிய  வேலை வாய்ப்பு தகுதிகேற்றபடி கிடைக்கும்.
அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற சில போராட்டங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்றாலும் பெயர், புகழுக்குப் பங்கம் வராது.  எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடையில் நிதானமாகப் பேசுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய பயணங்களை  மேற்கொள்வீர்கள். வருவாய் பெருகும்.
விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற முடியும். வேலையாட்களும்  ஒத்துழைப்பார்கள். அரசுவழி உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரத்து சிறப்பாக இருக்கும்.

பெண்களுக்கு
 உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளைத் திறம்பட முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள்  கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றும். பணவரத்து சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். அசையும் –  அசையா சொத்துகளால் ஓரளவுக்கு அனுகூலம் ஏற்படும். சேமிக்க முடியும்.
கலைஞர்கள் இதுவரை பட்ட துயரங்களுக்கு ஒரு முடிவுவரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதால் ரசிகர்களின் ஆதரவு பெருகும். வரவேண்டிய  பணமும் கைக்கு வந்து சேரும். இழந்தவற்றை மீட்க முடியும்.

மாணவர்களுக்கு
 கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.  விளையாட்டுப் போட்டிகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடுங்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். பொதுவாக உடல் ஆரோக்கியத்தில்  அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தாரால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிப்பதால் உடல் நிலை சோர்வடையும்.
பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.
மலர் பரிகாரம்: சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் படிப்பது நிம்மதி தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

Post by முழுமுதலோன் on Sat Jan 02, 2016 5:03 pm

மகரம்


நல்வாய்ப்புகளுக்குக் குறைவிருக்காது

குருபகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும், ராகு பாக்கிய ஸ்தானத்திலும், சனி பகவான் லாப ஸ்தானத்திலும், கேது தைரிய வீரிய ஸ்தானத்திலும்  இருக்கிறார்கள். 8.1.2016 அன்று ராகு பகவான் உங்களது அஷ்டம ஆயுள்  ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் ராசிக்கு தொழில் ஸ்தானம்,  தன  வாக்கு குடும்ப ஸ்தானம், ரண ருண ரோக  ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். அதேநாளில் கேது பகவான் உங்களது தன வாக்கு குடும்ப   ஸ்தானத்திற்கு வருகிறார்.  அவர் ராசிக்கு  சுக ஸ்தானம், அஷ்டம ஆயுள் ஸ்தானம், அயன சயன போக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். குடும்ப சூழ்நிலை ஓரளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் – மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை  குறையாது. அசையும், அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரத்து  சுமாராகவே இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும். பொருளாதாரம் தேவைக்கேற்றபடி இருந்தாலும் பெரிய தொகைகளை பிறரை  நம்பி கடனாகக் கொடுப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்னைகளை  சந்திப்பீர்கள்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் குறைந்தாலும் வரும் வாய்ப்புகளுக்குக் குறைவிருக்காது. நிறைய போட்டிகளையும் சந்திக்க  வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகமாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் அது குறையும். பிறர் விஷயங்களில்  தலையிடாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமதம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வேலையை ஏற்பது  நல்லது.
அரசியல்வாதிகள் மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் பெயர், புகழை காப்பாற்றிக் கொள்ளலாம். கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேடைப் பேச்சுகளில் கவனம் அதிகம் தேவை. உடன்  பழகுபவர்களை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்காமலிருப்பது உத்தமம்.

விவசாயிகளுக்குப்
 பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். உழைப்பிற்கான பலனைப் பெறுவதில் இடையூறுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும்  மானிய உதவிகள் தாமதப்படும். சந்தையிலும் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்காது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகக்கூடிய  காலமென்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும்.
பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தோன்றி மறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடைகள்  ஏற்படும். பணவரத்தில் நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும்.
கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் அது தகுதிக்கேற்றதாக இருக்காது. ரசிகர்களின் ஆதரவுகள் குறையாமலிருப்பதால் எதிலும்  உற்சாகத்துடன் ஈடுபடமுடியும். கார், பங்களா வாங்கும் முயற்சிகளில் கடன்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்குக் 
கல்வியில் சற்று மந்தமான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெற அதிகம் முயற்சித்தல் வேண்டும். தகாத  நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லுமென்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. பொதுவாக உடல்  ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தாரால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உணவு விஷயங்களில் கவனமுடனிருப்பது  நல்லது.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமன் கோயிலை வலம் வரவும்.
மலர் பரிகாரம்: வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும். மல்லிகை மலரை பெருமாளுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்யவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 
ஆஞ்சநேய கவசம் படிப்பது மேன்மை தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள்,  புதன்,  வெள்ளி.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

Post by முழுமுதலோன் on Sat Jan 02, 2016 5:05 pm

கும்பம்


வருவாய், மகிழ்ச்சி அதிகரிக்கும்

குருபகவான் ஸப்தம ஸ்தானத்திலும் ராகு அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் சனி பகவான் தொழில் ஸ்தானத்திலும் கேது தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திலும் இருக்கிறார்கள். 8.1.2016 அன்று ராகு பகவான் உங்களது ஸப்தம ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் ராசிக்கு பாக்கிய ஸ்தானம்,  ராசி,  பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். அதே நாளில் கேது பகவான் உங்களது ராசிக்கு வருகிறார். அவர் ராசிக்கு தைரிய வீரிய  ஸ்தானம், ஸப்தம  ஸ்தானம், லாப  ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். குடும்பத்தில் பணவரத்து மிகச் சிறப்பாக இருக்கும். தேவைகள்  அனைத்தும் பூர்த்தியாவதுடன், குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும்.  குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கக் கூடிய யோகமும் அமையும். புத்திர  வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துகளால் அனுகூலம் போன்றவையும் உண்டாகும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம்  கொடுக்கல்-வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். கடன் பிரச்னைகள் குறையும். வழக்குகளில்  தீர்ப்பு சாதகமாக வரும்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையிருக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியும், லாபங்களும் அதிகரிக்கும்.   வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைப்பதால்  மனநிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்த ஊதிய, பதவி உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிய  விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். சக நண்பர்களிடம் கவனமாக  இருப்பது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு, பெயர், புகழ் உயரும் காலம் இது. மக்களின் ஆதரவு பெருகும். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் தேவைகளையும்  பூர்த்தி செய்யும் ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு எல்லா தரப்பிலிருந்தும் வரவேற்பு இருக்கும். வருவாய் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.
விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளைக் கையாண்டு  விளைச்சலைப் பெருக்குவீர்கள். அரசு வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் – உறவினர்களின்  ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த கதாபாத்திரங்கள் கிடைத்து, திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய  கார், பங்களா வாங்கிச் சேர்ப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.
பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகள் தொய்வின்றி முடியும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். கணவன் –  மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும் என்றாலும் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் – உறவினர்  ஆதரவு மகிழ்ச்சி தரும். பொன் பொருள் சேரும். வீடு வாகனம் வாங்குவீர்கள்.
மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டைப்  பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்குச் செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலம் கிட்டும். பொதுவாக உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக  இருக்கும். இதுவரை இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.
மலர் பரிகாரம்: விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை வாங்கிக் கொடுக்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: சிவபுராணத்தை தினமும் மாலை வேளையில் படிப்பது நல்லது.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு,  புதன்,  வியாழன்.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

Post by முழுமுதலோன் on Sat Jan 02, 2016 5:07 pm

மீனம்
சுபவிசேஷங்களால் நன்மை உண்டு
குருபகவான் ரண-ருண-ரோக ஸ்தானத்திலும், ராகு ஸப்தம ஸ்தானத்திலும், சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திலும், கேது ராசியிலும் இருக்கிறார்கள்.  8.1.2016 அன்று ராகு பகவான் உங்களது ரண ருண ரோக ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் ராசிக்கு அஷ்டம ஆயுள் ஸ்தானம், அயன சயன போக ஸ்தானம், சுக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். அதே நாளில் கேது பகவான் உங்களது அயன சயன போக ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் ராசிக்கு தன வாக்கு குடும்ப ஸ்தானம்,  ரண -ருண -ரோக ஸ்தானம், தொழில் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். குடும்ப ஒற்றுமை சுமாராகத்தான் இருக்கும். அனைவரிடமும் விட்டுக் கொடுத்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உற்றார், உறவினரால் வீண் பிரச்னைகளை சந்திப்பீர்கள். அசையும் – அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத்  தவிர்க்கவும். பணவரவுகளில் நெருக்கடி உண்டாகக்கூடிய காலமென்பதால் கொடுக்கல் – வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். பணவிஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதினால் வீண்பிரச்னைகளில்  சிக்கிக் கொள்வீர்கள்.

தொழில் வியாபாரம் 
சுமாராகத்தான் நடைபெறும். பெரிய முதலீடுகளைச் செய்யும்போது மிகவும் கவனம் தேவை. புதிய கூட்டாளிகளால் தேவையற்ற  மனசஞ்சலங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது நிதானத்தைக் கையாளவும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். செய்யும் பணியில் இடையூறுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து  நடந்து கொண்டால் மேலதிகாரிகளின் விமர்சனத்திலிருந்து தப்பலாம். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.  உயரதிகாரிகளிடம் இனிமையாகவே பேசுங்கள்.
அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக இருந்தாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் தடைகள் உண்டாகும். கட்சிப்  பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்தாலும் எந்தவொரு காரியத்திலும் திருப்தி இருக்காது. உடன் பழகுபவர்களுடன் எச்சரிக்கையுடனிருப்பது  நல்லது.
விவசாயிகளுக்குப் பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்காது. இதனால் பட்ட பாட்டிற்கு பலன்  குறைவாக இருக்கும். நீர்வரத்து குறைவதால் பயிரிட அதிக செலவு ஏற்படும்.
பெண்களுக்கு உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாமல் போகும். திருமண வயதை  அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன் – மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

கலைஞர்களுக்கு
 எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது.  வரவேண்டிய பணத்தில் இழுபறி இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் அது வந்து சேரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடை
பிடிப்பது நல்லது.
மாணவர்களுக்குக் கல்வியில் சற்றே மந்த நிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற  நட்புகளால் வீண் பிரச்னைகளுக்கு ஆளாவீர்கள். வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. பொழுது போக்குகளாலும் கல்வியில்  நாட்டம் குறையும். பொதுவாக உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். மனக்குழப்பங்களும் நிம்மதிக்  குறைவும் உண்டாகும். குடும்பத்தாரால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். அலைச்சல், டென்சன் அதிகரிக்கும்.

பரிகாரம்: 
வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும்  பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.
மலர் பரிகாரம்: சிவ பெருமானுக்கு தாமரை மலரை சமர்ப்பிக்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: கந்த சஷ்டி கவசம் சொல்வது நன்மை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: 
திங்கள்,  புதன்,  வெள்ளி.


_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

Post by முரளிராஜா on Wed Jan 06, 2016 7:15 am

அனைவரும் படித்து பயன்பெற உதவும் பதிவு 
நன்றி அண்ணா
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum