தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar

» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனஅமைதி பெற என்ன வழி ?

View previous topic View next topic Go down

மனஅமைதி பெற என்ன வழி ?

Post by செந்தில் on Mon Aug 31, 2015 4:21 pm

மனஅமைதி பெற என்ன வழி ?
இது அனைவரின் மனத்திலும் எழும் கேள்வி. உலக பணக்காரன் முதல் பிச்சைக்காரன் வரை அமைதியின்றி வாழ்வதற்கு என்ன காரணம். ? பணம் பொருள் புகழ் என எதுவும் அமைதி தராது என்பதை உலக அனுபவம் உணர்த்துகிறது.
அப்படியிருந்தும் மனிதன் அலைகிறான் ... மன அமைதி தேடி. அமைதி அடைய முடியாமல் கனவிலும் உழல்கின்றான். அப்படி மன அமைதியைக் குலைக்கும் உளக் கூறு என்ன என்பதைப் பாப்போம்.
எல்லா உயிரினங்களும் உடலியல் தேவைக்கே அலைகின்றன. மனிதன் மட்டுமே சமூகத் தேவைகளுக்கு அலைகின்றான். இன்னும் சொல்லப் போனால் உடல் தேவைகளுக்கு விட சமூகத் தேவைகளுக்கே அதிகமாக அலைகின்றான். இதனால் இயற்கை விட்டு விலகிச் செல்ல முற்படுகின்றான்.
அவனின் மனோசக்தி உடலியல் வாழ்வுக்கு விட சமூக வாழ்வுக்கே அதிகம் செலவாகின்றது... தண்ணீர்ப் போல். தாகத்துக்கு விட (உடல், வீடு..) கழுவுவதேற்கே நாம் அதிகமாகத் தண்ணீரை செலவழிக்கிறோம். இப்படித்தான் நமது மனோசக்தி சமூகமாக வீணாகிறது. இதிலிருந்து விடுபட மனிதனால் முடியாது. அதனால் சமூக மனிதன் இயல்பில் நோயாளி ஆகிறான்.
இந்த உண்மை அறிந்த சித்தர்கள் சமூகம் விட்டு விலகிச் சென்றுவிட்டனர், அதனால் அவர்களின் மனோசக்தி வீணாகாமல் ஆன்ம சக்தியாக மாறியது. சமூகத்தில் இருக்கும் வரை அது இயலாத காரியம்.
இருப்பினும் நம்மால் சமூக வாழ்விலேயே ஓரளவுக்கு அமைதி பெற முடியும். அதற்கு எளிய வழி ...மன அமைதி குலைக்கும் இடம், சூழல், எண்ணம், பழக்கம்,உறவுமுறை,பொருள், ஆள் ஆகியோரிடம் இருந்து விலகி இருந்தாலே போதும். அலுவலகச் சூழலில் அன்னவரை விட்டு விலக முடியவில்லை என்றால் மனதளவிலாவது விலகியிருக்க முயலவும். உங்களுள் அவர் இருக்கும் வரை அமைதி இருக்காது. காதல் தோல்வி அடைந்தோர்க்கான ஆலோசனையாகவும் இதைக் கொள்ளலாம்..
உங்கள் வீட்டில் மின்சாரமின்றித் தொலைக்காட்சி இயங்காமல் இருந்தாலே வீடு அமைதி அடையும். அதை உன்னித்துப் பாருங்கள் இழந்த அமைதி மனக் கண்ணில் தெரியும். தற்சமயம் அமைதியின்மைக்கான முக்கிய காரணிகளுள் டி வி இடம் பெற்றுள்ளது. சுற்றுச் சூழல் அமைதியாக இருப்பின் அதுவே மன அமைதிக்கு ஆதாரமாகும். அதனால்தான் மன அமைதி வேண்டி மலை மேல் தங்கச் சொல்வர் உள மருத்துவர்
ஓர் உண்மை .. மனத்தின் இயல்பே அமைதி தான். கருவறையில் அதன் அமைதி ஆழம மிக்கது. கரு தரிக்கும்போது உடலும் மனமும் ஒரு சேரவே தோன்றுகின்றன என்பதை அறியவும். பிறந்த பிறகு கொஞ்சம் நாள் இந்த அமைதி நிலவும். உடல் அசையத் தொடங்கிய பிறகு அமைதி குலையும். நிற்கவும் ஓடவும் முடியும்போது மனமும் ஓடும. பிறகு சமூக வேடமிட்டு அழைக்கழியும். இழந்த அமைதி தேடி லச்சியம் என்கிற பெயரில் ஊடாடும். இதுதான் மனித மனம்.
இன்னொரு குறிப்பு.. நடப்பதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை மன அமைதிக்கு நல்லது. நம்மிடம் நினைத்தது நடப்பதை விட எதிர்ப்பராததே அதிகம் நடக்கின்றன. அவற்றை மாற்ற முயற்சிக்கலாம். தவறில்லை. முடியாமல் போனால் அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியது கட்டாயம்.
ஓர் எளிய புரிதல் ... உடல் அசைய மனம் அசையும். காரணம் நரம்பு மண்டலத் தொகுதிதான் மனம். இதன்படி உடலை அசையாமல் வைக்கப் பழகினால் மன அசைவு கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
மன அசைவு நின்றால் அதுவே மன அமைதி. இதைத்தான் யோகா செய்கிறது.யோகவால் அலை பாயும் மனம் அமைதி பெரும்.
(ஜிம் உங்கள் மனதை அலைபாய வைக்கும்).
யோகா மேற்கொள்ளும் முன் ஒரு சுய பரிசோதனை ..
நமது மனம் அமைதி இழக்க வரம்பு மீறிய ஆசைகளே காரணமாக இருக்கும் என்பதை உணரலாம். தேவைகளைச் சுருக்கிக் கொண்டால் மனநலம் எளிதில் கைக்கூடும்.
உலகின் நெ. 1 உள மருத்துவம் யோகா என்பதை அறியவும்.
காரணம் உள்ளமும் உடலும் ஒரு சேர குணப்படுத்த வல்லது யோகா.
இதைப் பின்பற்ற முடிய வில்லை என்றாள் உங்களிடம் பொறுமை இல்லை என்று பொருள். பொறுமையற்ற மனம் அமைதி மனம் ஆகாது.
நல்வாழ்வுக்கு அடிப்படை மனநலமே.
பணமும் பிறவும் அப்புறம் தான்.
மனம் சுருங்க நலம் உண்டாகும்.
மனம் விரிய அலைச்சல் மிகும்.
மனத்தை எப்படிச் சுருக்குவது..?
மிக எளிது.. தேவைகளைச் சுருக்கினால் மனம் சுருங்கும்.
இதைத்தான் புத்தர் நிர்வாணக் கொள்கை என்றார். ஆசைகளைச் சுருக்கி வந்தால் நிர்வாண நிலை அடையலாம். மனம் அமைதி பெறும்.
ஃப்ராய்ட் இதை ஏற்கிறார். யூங் கூட ஏற்கிறார். அவ்வளவு ஏன் ... திருவள்ளுவர் அன்றே புத்தரை ஏற்றார். நாம் ஏற்றால் என்ன..
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
நன்றி - முகநூல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மனஅமைதி பெற என்ன வழி ?

Post by முரளிராஜா on Mon Aug 31, 2015 4:28 pm

இப்ப உங்க மனம் அமைதி ஆயிடுச்சா செந்தில் புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மனஅமைதி பெற என்ன வழி ?

Post by செந்தில் on Mon Aug 31, 2015 4:37 pm

@முரளிராஜா wrote:இப்ப உங்க மனம் அமைதி ஆயிடுச்சா செந்தில் புன்முறுவல்
எல்லா பதிவுகளும் உங்களுக்காகத்தான் அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மனஅமைதி பெற என்ன வழி ?

Post by முரளிராஜா on Mon Aug 31, 2015 4:40 pm

@செந்தில் wrote:
@முரளிராஜா wrote:இப்ப உங்க மனம் அமைதி ஆயிடுச்சா செந்தில் புன்முறுவல்
எல்லா பதிவுகளும் உங்களுக்காகத்தான் அண்ணா
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மனஅமைதி பெற என்ன வழி ?

Post by செந்தில் on Mon Aug 31, 2015 5:31 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மனஅமைதி பெற என்ன வழி ?

Post by kanmani singh on Tue Sep 01, 2015 11:11 am

நடப்பதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை மன ''அமைதிக்கு நல்லது. நம்மிடம் நினைத்தது நடப்பதை விட எதிர்ப்பராததே அதிகம் நடக்கின்றன. அவற்றை மாற்ற முயற்சிக்கலாம். தவறில்லை. முடியாமல் போனால் அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியது கட்டாயம்.''

பகிர்வுக்கு நன்றி!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: மனஅமைதி பெற என்ன வழி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum