தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முரண்பாடுகள்

View previous topic View next topic Go down

முரண்பாடுகள்

Post by முழுமுதலோன் on Sun Aug 02, 2015 2:47 pm

முரண்பாடுகளின் தோற்றுவாயும் அதன் வடிவமும்


முரண்பாடு என்ற விடயமானது எல்லோருக்கும்  பொதுவானது. இம்முரண்பாடுகள் எல்லா நேரங்களிலும் ஏற்படுகின்றன. இதனை நாம் அன்றாட வாழ்வில் கண்டுகொள்ள முடியும். வீடுகளாக இருக்கட்டும், அல்லது பாடசாலையாக இருக்கட்டும் அல்லது நிர்வாகங்களாக இருக்கட்டும் அல்லது தொழில் செய்யும் இடங்களாக இருக்கட்டும் ஏன் நாட்டின் நிர்வாகத்திலாக இருக்கட்டும் இவ்வனைத்திலும் ஏதோ ஒரு வகையில் முரண்பாடுகள் தொடர்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. 


முரண்பாடுகள் கட்டாயமாக தீமையானது என்பதல்ல. மாற்றுக்  கருத்துக்களில் இருந்து முரண்பாடுகள் தோன்றுகின்றன. இரு நபர் ஒருவிடயத்தை இருகோணங்களில் பார்ப்பார்களானால் நிச்சயமாக அங்கு முரண்பாடு ஏற்படத் துவங்கிவிடும். இவ்வுடன்பாடின்மை சாதாரனமானவையே. மக்களின் மத்தியில் இருக்கின்ற வித்தியாசமான கலாசார பின்னணிகள், சூழல் காரணிகள், மக்களின் வேறுபட்ட அபிலாசைகள், அரசியல் சமயக் காரணிகள், மற்றும் மாறுபட்ட தொடர்பாடல் முறைகள் இம் முரண்பாடுகளிடையே செல்வாக்குச் செலுத்துகின்றன.


உண்மையில் முரண்பாடானது அபிப்பிராயங்கள் அல்லது கருத்துக்கள் அல்லது சிந்தனைகள் வேறுபடுவதனாலேயே எழுகின்றது. இம்முரண்பாடுகளை சிலர் நேர் மறையாக நோக்குகின்றனர், மற்றும் சிலர் எதிர்மறையாகவே நோக்குகின்றனர்  மற்றுமொரு பகுதியினர் முரண்பாட்டை போட்டியாகவும் சவாலாகவும் அல்லது மாற்றமானதொன்றாகவும்; நோக்குகின்றனர். 


முரண்பாடு என்பது சம்பந்தப்பட்ட மக்களின் போக்குகளையும் நடத்தைகளையும் பொறுத்து வேறுபடுகின்றது. அது உடன்பாடானதாக அல்லது எதிர்மறையானதாக மாற்றப்படுவதென்பது அம்முரண்பாட்டுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதிலேயே தங்கியுள்ளது. நாம் அன்றாடம் சந்திக்கின்ற முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கு அது சம்பந்தமான மக்களின் போக்குகளை அல்லது நடத்தையை அவதானிப்பது மாத்திரம் போதாது  அதற்கு அப்பால் சென்று அம்முரண்பாடுகள் ஏற்படுவதற்கான காரணங்களையும் அதற்குச் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினரதும் நோக்கங்களை அவதானிக்க வேண்டும்.


முரண்பாடுகளைக் குறைப்பதற்கு அல்லது அதற்குத் தீர்வு காண்பதற்கு தொடர்பாடல் இன்றியமையாததாகும். மேலும் அவ்வாறான முரன்பாடுகளை தீர்க்க பரஸ்பர புறிந்துணர்வு இன்றியமையாதது.  முரண்பாடுகள் ஏற்படுமிடத்து முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு பல்வேறு வகையான உத்திகள் கையாளப்படுகின்றன.

 
    * முரண்பாடுகள் ஏற்படாது தவிர்த்தல்.
    * முரண்பாடுகளில் இருந்து விடுபட்டு உடன்பாட்டுக்கு வருதல்.
    * முரண்பாடுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் இருந்தால்.
    * முரண்பாட்டுக்கு உரியவருக்கு இடமளித்து வாய்ப்பை வழங்கதல்.
    * முரண்பாடுகள் ஏற்படுவதனைத் தவிர்ப்பதற்கு  கூட்டச் செயற்பாட்டுக்கு முன்வருதல்.


நாம் ஒவ்வொரு பிணக்குகளைக் கையாண்டு தீர்வுகாண்பதற்கு பல்வேறு வகையான வழிமுறைகளைக் கையாளுகின்றோம். ஒரு முரண்பாட்டுக்கு அல்லது பிணக்குக்கு தீர்வு காண்பதற்கான சிறந்த வழி அம்முரண்பாடு அல்லது பிணக்கு எவ்வகையானது என்பதிலேயே தங்கியுள்ளது. அநேகமான முரண்பாடுகள் தப்பபிப்பிரயாயத்தின் காரணமாகவே ஏற்படுகின்றன.


நாம் சேர்ந்து வாழக்கூடிய சூழலில் முரண்பாடுகள் ஏற்படுவதென்பது தவிர்க்க முடியாதவொன்று. இத்தகைய சந்தர்ப்பத்தில் அதிகமான விட்டுக்கொடுப்புக்களும், பரஸ்பரப் புரிந்துணர்வும், உடன்பாடுகளும் அவசியப்படுகின்றன. மேலும் முரண்பாடான நபர்களுக்கிடையேயோ அல்லது குழுக்களுக்கிடையோ முரண்பாட்டுக்கான தீர்வைக் காணமுயலும் போது இருதரப்பினரும் திருப்தியடையக் கூடியதும் வெற்றி பெறக் கூடியதுமான வழிமுறையொன்றை தேடிப்பெற்றுக் கொள்வதே முக்கியமானதாகும்.


இதற்கென பிரத்திகரமான வழிமுறைகள் தேவையில்லை. அதாவது நாம் ஏனையோருடன் மேற்கொள்கின்ற பரஸ்பர சந்திப்புக்களின் போதும் தப்பபிப்பிராயம் குறித்து அறிந்து கொள்வதன் மூலம் பல முரண்பாடுகளில் இருந்து தவிர்ந்து கொள்ள முடியும். அத்தோடு இயன்றளவு முரண்பாடுகளைக் குறைக்க வேண்டுமானால் நாம் இவ்வொருவரும்  வாழும்  சூழலுக்கேற்ப இயைபாக்கம் அடைவது இன்றியமையாததாகும்.


நன்றி: டமிள்நோட்ஸ்.காம்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: முரண்பாடுகள்

Post by செந்தில் on Mon Aug 03, 2015 4:53 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: முரண்பாடுகள்

Post by ஸ்ரீராம் on Wed Aug 05, 2015 9:56 am

சிறப்பான கட்டுரை பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953  உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: முரண்பாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum