தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாழ்க்கையின் மூலதனம்

View previous topic View next topic Go down

வாழ்க்கையின் மூலதனம்

Post by முழுமுதலோன் on Wed Jun 10, 2015 10:55 am

வாழ்க்கை என்பது மனப்பக்குவம் அடைவதுதான். வாழ்க்கையை நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு சிறைச்சாலை அல்ல. வாழ்க்கை ஒரு வெகுமதி. யார் தகுதியுடையவர்களோ அவர்களுக்கும், யார் உழைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இது கடவுளால் ஆசிர்வதித்துக் கொடுக்கப்படுகின்றது. உழைப்பவர்கள் அனைவருக்கும் அதை அனுபவிக்கும் உரிமையும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. புத்தர் கூறுகின்றார், உங்கள் வேலையை ஒருபோதும் அடுத்தவர்களின் தேவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் அதற்காக அலட்சியப்படுத்தாதீர்கள். இந்த வரி நமக்கு ஒருவேளை சுயநலம் போல் தோன்றலாம். இதுதான் உங்களை தவறான பாதையிலிருந்து நேர்மையான பாதைக்கும், நேர்மையான பாதையிலிருந்து உள்ளார்ந்த ஆத்ம திருப்திக்கும் உயர்த்தும் என்று கூறுகின்றார். இது அதிகச் சுமையுடன் உயரமான மலை உச்சிக்கு ஏறும் செயலுக்கு ஒப்பானது. இதை நீங்கள்தான் செய்ய வேண்டும். வேறு யாரும் நம்மைத் தோளிலே சுமந்து செல்ல மாட்டார்கள். நீங்கள்தான் உங்கள் உழைப்பால் வாழ்க்கையின் உச்சத்தை அடையமுடியும்.

வாழ்க்கை என்பதின் முதல் எழுத்து வா. உலகிற்கு வா! வந்து என்ன செய்வது? அதன் முதல் எழுத்தும் இரண்டாம் எழுத்தும் நம்மைப் பார்த்து வாழ் என்று கூறுகிறது. வாழ்ந்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டால், அதன் முதலெழுத்தும் கடைசி எழுத்தும் சேர்ந்து, வாகை கிடைக்கும் என்று சொல்கிறது. வாகை - வெற்றி, எப்படிக் கிடைக்கும்? வாக்கு அதாவது சொற்சுத்தம் உடையவராக இருந்தால் வாகை கிடைக்கும். வாக்கு மட்டும் சுத்தமாக இருந்தால் போதுமா? இறுதி எழுத்து கை உழைப்பை வலியுறுத்துகிறது. இப்படி வாழ்வில் வாகை சூட <உழைப்பு அவசியம். மின்மினிப் பூச்சிகூட பறந்தால்தான் ஒளிர்கிறது. 


உழைப்பும் ஊக்கமும் சேரும் சமயம், நம் கைகளிலே வரும் இமயம், தொட்டதெல்லாம் சீராய் அமையும், மகிழ்ச்சியில் பூக்கும் இதயம். மனிதனின் வாழ்வில் பல நிலைகள் உள்ளன. அவன் குழந்தையாக உள்ளபோது, நான், எனது என்கிறான். அவன் பெரியவனாகிப் பிள்ளைகள் பெறும்போது நாம், நமது என்பான். பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்து முதுமையில் அவர்கள் தனிமையாய் இருக்கும் போது, அவர்கள், அவர்களுடையது என்கிறான். அவர்கள், அவர்களுடையது என்று மற்றவர்கள் நலனைப் பற்றிச் சிந்திக்கின்ற முதிர்ச்சியை இளமையிலேயே ஒருவன் பெற்றுவிட்டால் வாழ்வில் முடியாதது என்று ஒன்றுமில்லை. இந்த மாற்றத்தைக் கொண்டு வர ஒவ்வொருவரும் முயல வேண்டும். இந்த முயற்சி வெற்றி அடைய நம்முள் நம்பிக்கை பிறக்க வேண்டும். இதற்கு முதலில் இறை நம்பிக்கை வேண்டும்.

பூமியை விடப் பெரியது சூரியன். ஆனால் அது பூமியை விட்டு வெகு தூரத்தில் இருப்பதால் சிறிய தட்டுப் போலத் தெரிகிறது. அப்படித்தான் இறைவனை விட்டு நாம் தொலைவில் உள்ளபோது, அவரது அருளை முழுமையாக அறிந்துகொள்ள முடிவதில்லை. இறைவனின் அருகில் உள்ளபோது நமக்கு அவரின் அருமை நன்கு புரியும். பழமானது தன் தசையைக் கத்திக்குத் தந்து மனிதனுக்குச் சுவையைத் தருகிறது; நிலம் தன்னை அகழ்பவரைப் பொறுத்துக் கொண்டு அவருக்கே நீரைத் தருகிறது. அப்படி மனிதனும் சோதனைகளைச் சாதனைகளாக்க வேண்டும். 


முடியுமா? முடியும் என்பதே வாழ்க்கையின் மூலதனம், முடியாது என்பது மூடத்தனம். ஏழைத் தொழிலாளியின் மகன் ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க அதிபர் ஆனது போல, முடியும் என்ற நம்பிக்கையால் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இன்று நீ ஒருவனுக்கு மீனை உண்ணக் கொடுத்தால் நாளையும் நீ தரமாட்டாயா என எதிர்பார்க்கும் மனோபாவம் வளரக் கூடும். அதைவிட அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் அவன் தன் வாழ்க்கையை அதன் மூலம் நடத்தக் கூடும். இந்த மாற்றம் காலப்போக்கில் ஏற்படுமேயானால் எதுவும் முடியும் என நமக்குப் புரியும். இப்படிப்பட்ட ஏமாற்றம் இன்பத்தைத் தரும். லட்டு கொடுத்தால் இன்பம் வருமா? பட்டு கொடுத்தால் இன்பம் வருமா? நகை நட்டு கொடுத்தால் இன்பம் வருமா? துட்டு கொடுத்தால் இன்பம் வருமா? இல்லை; விட்டுக்கொடுத்தால்தான் இன்பம் வரும். 


உண்மைகளையும், யதார்த்தங்களையும், புரிந்து கொண்டு வாழ்க்கையை செப்பனிட்டுக் கொள்ள மனம் பக்குவப்பட வேண்டும். மனம் பக்குவப்பட நமக்கு வாழ்க்கையில் விழிப்பு உணர்வு அவசியமாகின்றது. தெளிவோடு இறைநம்பிக்கை சேரும் போது தன்னம்பிக்கை பிறக்கும். மாற்றங்களைக் கொண்டு வர இயலும். மாற்ற முடியாதது என ஒன்றுமில்லை என்று வாழ்ந்து காட்டுவோம்.


தினமலர் 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: வாழ்க்கையின் மூலதனம்

Post by kanmani singh on Wed Jun 10, 2015 12:21 pm

அருமையான கட்டுரை!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4189

Back to top Go down

Re: வாழ்க்கையின் மூலதனம்

Post by செந்தில் on Wed Jun 10, 2015 3:35 pm

சிறப்பான கட்டுரை.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum