தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by rammalar

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» பயம் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மெய்வருத்தக் கூலி தரும் - கட்டுரை.

View previous topic View next topic Go down

மெய்வருத்தக் கூலி தரும் - கட்டுரை.

Post by ஸ்ரீராம் on Mon May 25, 2015 1:06 pm



இந்த உலகினில் தெய்வத்தால் செய்ய முடியாத காரியம் என்ற ஒன்று இருக்க முடியாது ,அப்படிப்பட்ட இறைவனாலேயே செய்ய இயலாத ஒரு காரியம் இருந்தாலும் ,அதனை ஒருவர் விடா முயற்சியுடன் செய்தால் அவருடைய உடல் உழைப்பிற்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும் .
சில வேளைகளில் நாம் ஒரு பணியை மேற்கொண்டு அதில் ஏற்படும் சிறு சிறு தோல்விகள் ,பிரச்சனைகளைக் கண்டு மனம் தளர்ந்து பாதியிலேயே நிறுத்தி விடுகின்றோம் .அவ்வாறாக இல்லாமல் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை நன்கு ஆராய்ந்து ,புதிய ஒரு கோணத்தில் அந்த பிரச்சனைக்கான தீர்வை பற்றி மட்டும் யோசித்து விடா முயற்சியுடன் தொடர்ந்து செய்வோமானால் வெற்றி நமக்கே .
ஒரு நிருபர் தாமஸ் ஆல்வா எடிசனை பார்த்து நீங்கள் மின்சார விளக்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் 1000 முறை தோல்வி அடைந்தீர்களே அதைப் பற்றி என்ன நினைகிறீர்கள் ? என்று கேட்டார் .அதற்கு எடிசன் நான் 1000 முறை தோல்வி அடையவில்லை இந்த மின்சார விளக்கு ஆயிரம் வழிமுறைகளை சோதித்த பிறகு கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பு .ஒவ்வொரு முறை நான் முயற்சி செய்யும்போதும் எந்த முறைகளில் எல்லாம் மின்சார விளக்கை எரிய வைக்க முடியாது என்று என்று கண்டு பிடித்தேன் என்றார் .
மற்றவர்களின் பார்வையில் ஒரு செயல் தோல்வியாக தெரிந்தால் அதைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை .நாம் யார், நம்முடைய குறிக்கோள் என்ன ,எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி நமக்குள்ளே மட்டுமே உள்ளது. எடிசனுக்கு முன்னரும் ,அவர் முயற்சி செய்த அதே காலத்திலும் பலர் மின்சார விளக்கை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் .அவர்கள் அனைவரும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகள் ,தடங்கல்களை எண்ணி பாதியிலேயே தங்கள் முயற்சியை நிறுத்தி இருப்பார்கள் .தொடர்ந்து முயன்ற எடிசன் வெற்றியைக் கண்டார் .
விடா முயற்சியைப் பற்றி விவாதிக்கும்போது ஒரு கருத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் ,விடா முயற்சி செய்யும் பொது அதற்கு முன்பே நமக்கு ஏற்பட்ட தோல்விகளின் மூலம் பாடம் கற்க வேண்டும் .ஒரு நண்பர் மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப் பகுதியில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தார் ,அவருடைய வியாபாரம் சரியாக நடைபெறாமல் நஷ்டத்தில் சென்று கொண்டிருந்தது ,விடா முயற்சி செய்கிறேன் என்று நினைத்த நண்பர் அடுத்த நாள் முதல் அந்த மலையின் உச்சியில் ஐஸ் வியாபாரம் செய்தார் அதிலும் நஷ்டம் ஏற்பட்டது ,பிறகு அங்கே மீன் வியாபாரம் செய்தார் அதிலும் நஷ்டமே ஏற்பட்டது .நண்பர்களே அந்த நண்பர் ஏற்பட்ட தோல்வியில் இருந்து சரியாக பாடம் கற்கவில்லை அவர் செய்ய வேண்டியது என்னவென்றால் முதலில் மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப் பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு வந்து தன்னுடைய தொழிலை துவங்கி இருக்கவேண்டும் .இந்த நண்பரைப் போலவே வாழ்க்கையில் நம்மில் சிலர் ஏற்பட்ட தோல்வியில் சரியாக பாடம் கற்காமல் விடா முயற்சி செய்கிறேன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று விரக்தி அடைகிறோம் .
உங்களுடன் படித்த ஒருவர் வெற்றி அடைகிறார் என்றால் உங்களாலும் வெற்றி அடைய முடியும் ,உங்களுடன் பணிபுரியும் ஒருவர் முன்னேறுகிறார் என்றால் உங்களாலும் முடியும் ,நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் துறையில் ஒருவர் பலகோடி ருபாய் சம்பாதிக்கிறார் என்றால் உங்களாலும் நிச்சயம் சம்பாதிக்க முடியும் .நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் அவர் தொழில் செய்யும் முறையைக் கற்க வேண்டும் ,அவரை விட சிறப்பாக செய்யும் முறையை ஆராய்ந்து விடா முயற்சியுடன் உழைத்தால் வெற்றி உங்களுக்கே .

நன்றி: சரவணன் பாலாஜி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38490 | பதிவுகள்: 231863  உறுப்பினர்கள்: 3564 | புதிய உறுப்பினர்: sanji








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மெய்வருத்தக் கூலி தரும் - கட்டுரை.

Post by செந்தில் on Wed Jun 10, 2015 7:33 pm

தன்னம்பிக்கையை வளர்க்கும் பகிர்வுக்கு நன்றி அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மெய்வருத்தக் கூலி தரும் - கட்டுரை.

Post by முரளிராஜா on Thu Jun 11, 2015 10:12 am

சிறப்பான கட்டுரை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மெய்வருத்தக் கூலி தரும் - கட்டுரை.

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 16, 2015 7:48 am

சிறப்பான கட்டுரை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21233

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: மெய்வருத்தக் கூலி தரும் - கட்டுரை.

Post by kanmani singh on Wed Sep 16, 2015 3:38 pm

கட்டுரைக்கு நன்றி!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4189

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum