Latest topics
» சிந்தனை கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar
» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar
» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar
» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar
» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar
» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar
எங்கிருக்கிறாய்?
எங்கிருக்கிறாய்?
இருமுறை காத லித்து
இருதயம் நொறுங்கிப் போனேன்!
பெருந்திரைக் கடலிற் சென்று
கலப்பது போல எண்ணி
சிறுகுட்டை நாடி கங்கை
சித்தமே கலங்கி நின்றேன்!
சருகிலை ஒளிச்சேர்க் கைதான்
செய்யவோர் வழியு முண்டோ?
கணிச்சிபோல் கண்ணீர் வீழ்ந்து
கன்னத்திற் காயம் செய்ய
அனிச்சமென் மலரின் மேனி
அழகியர் நினைவு கொல்ல
தனிச்சுவை காணா னாகித்
தனிமையை மணமு டித்தேன்
இனிச்சுவை காண்ப தற்கு
இவனுக்கோர் விதியு முண்டோ?
வாலிபம் வடிய வில்லை
உணர்ச்சிகள் மடிய வில்லை
நாளுமே இரவு கொல்லும்
நட்டவான் நிலவு கொல்லும்
சாலவே இமைய ணைத்தால்
சிறுதூக்கம் கொள்வேன்; ஆனால்
பாழுமென் இமைகள் கண்ணைப்
பழிவாங்கும் கசைசொ டுக்கி!
மொத்தமும் வாழ்ந்து தேர்ந்து
முடித்தவன் போல நானும்
தத்துவம் பேசி னாலும்
தனிமையிற் கிடக்கும் வேளை
தொத்திடும் ஓர்நி னைவு!
தூயநற் காதல் பேசி
முத்தெழிற் பெண்ணொ ருத்தி
மார்பினிற் சாய்தற் போலே!
பெரும்பிழை யில்லை யென்பேன்
புலவனென் எண்ணம் தன்னில்!
மரக்கட்டை யல்ல நானும்!
மானிட வாழ்வில் என்றும்
ஒருமுறை மட்டும் காதல்
உதித்திடும் என்ப தான
கருத்தினில் உடன்பா டில்லை
காலமும் இதையே சொல்லும்!
கசையிருள் நீங்கு தற்கு
கதிரவன் வேண்டு மென்பேன்!
விசையுடன் கதிரெ ழுந்து
விடியலைத் தரவி லையேல்
நசையுடன் நிலவு கொள்வோம்!
நிலவுமே தொலைந்து போனால்
வசையிலை வெளிச்சத் திற்கோர்
விளக்கினை ஏற்றிக் கொள்வோம்!
இன்னார்க்கு இன்னார் என்று
இறைவன்தான் எழுதி வைத்தப்
பொன்னான கணக்கிற் கேற்ப
பூமியில் நமக்கும் காதல்
அன்னாரோ டமைந்து விட்டால்
அடுத்தொரு குழப்ப மில்லை!
மன்னவன் சதிகள் செய்தால்
மனிதர்நாம் என்ன செய்வோம்?
முடிந்ததை எண்ணி யெண்ணி
முனகினால் லாப மில்லை!
வடித்திடுங் கண்ணீ ராலே
வருவது ஏது மில்லை!
எடுத்ததோர் பிறவி தன்னை
எழிலுடன் வாழ்ந்தி ருப்போம்
வடிந்தது நுரைதான்; மிச்சம்
இருப்பதோ கடலே என்பேன்!
தனித்தது போதும்; நாளும்
தவித்தது போதும்; கண்ணே!
இனித்தடம் மறைத்து என்னை
இளைத்திடச் செய்தல் வேண்டாம்!
எனக்கெனப் பிறந்த பாவாய்
இன்முகம் காட்டு; ஈது
உனக்கெனப் பிறந்து வந்த
உயிர்விடும் தூது; ஆமாம்!
மலர்வனச் சோலை கண்டு
வண்டுமே கூடும் போது
அலைகடல் தன்னிற் சென்று
நதியுமே கலக்கும் போது
மழைத்துளி கூட மண்ணின்
மடியிலே வீழும் போது
அலைப்புறும் எந்தன் நெஞ்சை
அணங்குநீ ஏய்ப்ப தேனோ?
கண்ணீரில் நனைந்த வென்றன்
கன்னங்க ளிரண்டை யுன்றன்
பொன்னிதழ் சிந்தும் முத்தச்
சூட்டிலே உலர்த்து; வானின்
மின்னலில் நூலெ டுத்து
விண்மீன்கள் கோத்தெ டுத்து
உன்னிடை மீதில் நானும்
மேகலை பூட்ட வேண்டும்!
தாவியே எந்தன் மார்பில்
தண்முகம் வைப்பாய்; வண்ணம்
தூவிடும் சிரிப்புச் சிந்தி
தலைகுனி வாய்;உன் கூந்தல்
நீவிய படியே அந்த
நிமிஷங்கள் வடியு முன்பே
காவியத் தமிழில் நூறு
கவிதைநான் பாட வேண்டும்!
சூரிய னையெ டுத்துப்
பாக்காக வைத்து; ராவில்
ஏறிடும் வெண்ணி லாவைச்
சுண்ணாம்பு தடவி; நீலம்
வீறிடும் விரிவா னத்தை
வெற்றிலை யாய்ம டித்து
நேரிழை யே!தாம் பூலம்
போட்டுநான் துப்ப வேண்டும்!
-------------ரௌத்திரன்
இருதயம் நொறுங்கிப் போனேன்!
பெருந்திரைக் கடலிற் சென்று
கலப்பது போல எண்ணி
சிறுகுட்டை நாடி கங்கை
சித்தமே கலங்கி நின்றேன்!
சருகிலை ஒளிச்சேர்க் கைதான்
செய்யவோர் வழியு முண்டோ?
கணிச்சிபோல் கண்ணீர் வீழ்ந்து
கன்னத்திற் காயம் செய்ய
அனிச்சமென் மலரின் மேனி
அழகியர் நினைவு கொல்ல
தனிச்சுவை காணா னாகித்
தனிமையை மணமு டித்தேன்
இனிச்சுவை காண்ப தற்கு
இவனுக்கோர் விதியு முண்டோ?
வாலிபம் வடிய வில்லை
உணர்ச்சிகள் மடிய வில்லை
நாளுமே இரவு கொல்லும்
நட்டவான் நிலவு கொல்லும்
சாலவே இமைய ணைத்தால்
சிறுதூக்கம் கொள்வேன்; ஆனால்
பாழுமென் இமைகள் கண்ணைப்
பழிவாங்கும் கசைசொ டுக்கி!
மொத்தமும் வாழ்ந்து தேர்ந்து
முடித்தவன் போல நானும்
தத்துவம் பேசி னாலும்
தனிமையிற் கிடக்கும் வேளை
தொத்திடும் ஓர்நி னைவு!
தூயநற் காதல் பேசி
முத்தெழிற் பெண்ணொ ருத்தி
மார்பினிற் சாய்தற் போலே!
பெரும்பிழை யில்லை யென்பேன்
புலவனென் எண்ணம் தன்னில்!
மரக்கட்டை யல்ல நானும்!
மானிட வாழ்வில் என்றும்
ஒருமுறை மட்டும் காதல்
உதித்திடும் என்ப தான
கருத்தினில் உடன்பா டில்லை
காலமும் இதையே சொல்லும்!
கசையிருள் நீங்கு தற்கு
கதிரவன் வேண்டு மென்பேன்!
விசையுடன் கதிரெ ழுந்து
விடியலைத் தரவி லையேல்
நசையுடன் நிலவு கொள்வோம்!
நிலவுமே தொலைந்து போனால்
வசையிலை வெளிச்சத் திற்கோர்
விளக்கினை ஏற்றிக் கொள்வோம்!
இன்னார்க்கு இன்னார் என்று
இறைவன்தான் எழுதி வைத்தப்
பொன்னான கணக்கிற் கேற்ப
பூமியில் நமக்கும் காதல்
அன்னாரோ டமைந்து விட்டால்
அடுத்தொரு குழப்ப மில்லை!
மன்னவன் சதிகள் செய்தால்
மனிதர்நாம் என்ன செய்வோம்?
முடிந்ததை எண்ணி யெண்ணி
முனகினால் லாப மில்லை!
வடித்திடுங் கண்ணீ ராலே
வருவது ஏது மில்லை!
எடுத்ததோர் பிறவி தன்னை
எழிலுடன் வாழ்ந்தி ருப்போம்
வடிந்தது நுரைதான்; மிச்சம்
இருப்பதோ கடலே என்பேன்!
தனித்தது போதும்; நாளும்
தவித்தது போதும்; கண்ணே!
இனித்தடம் மறைத்து என்னை
இளைத்திடச் செய்தல் வேண்டாம்!
எனக்கெனப் பிறந்த பாவாய்
இன்முகம் காட்டு; ஈது
உனக்கெனப் பிறந்து வந்த
உயிர்விடும் தூது; ஆமாம்!
மலர்வனச் சோலை கண்டு
வண்டுமே கூடும் போது
அலைகடல் தன்னிற் சென்று
நதியுமே கலக்கும் போது
மழைத்துளி கூட மண்ணின்
மடியிலே வீழும் போது
அலைப்புறும் எந்தன் நெஞ்சை
அணங்குநீ ஏய்ப்ப தேனோ?
கண்ணீரில் நனைந்த வென்றன்
கன்னங்க ளிரண்டை யுன்றன்
பொன்னிதழ் சிந்தும் முத்தச்
சூட்டிலே உலர்த்து; வானின்
மின்னலில் நூலெ டுத்து
விண்மீன்கள் கோத்தெ டுத்து
உன்னிடை மீதில் நானும்
மேகலை பூட்ட வேண்டும்!
தாவியே எந்தன் மார்பில்
தண்முகம் வைப்பாய்; வண்ணம்
தூவிடும் சிரிப்புச் சிந்தி
தலைகுனி வாய்;உன் கூந்தல்
நீவிய படியே அந்த
நிமிஷங்கள் வடியு முன்பே
காவியத் தமிழில் நூறு
கவிதைநான் பாட வேண்டும்!
சூரிய னையெ டுத்துப்
பாக்காக வைத்து; ராவில்
ஏறிடும் வெண்ணி லாவைச்
சுண்ணாம்பு தடவி; நீலம்
வீறிடும் விரிவா னத்தை
வெற்றிலை யாய்ம டித்து
நேரிழை யே!தாம் பூலம்
போட்டுநான் துப்ப வேண்டும்!
-------------ரௌத்திரன்
Re: எங்கிருக்கிறாய்?
கணிச்சிபோல் கண்ணீர் வீழ்ந்து
கன்னத்திற் காயம் செய்ய
அனிச்சமென் மலரின் மேனி
அழகியர் நினைவு கொல்ல
தனிச்சுவை காணா னாகித்
தனிமையை மணமு டித்தேன்
இனிச்சுவை காண்ப தற்கு
இவனுக்கோர் விதியு முண்டோ?
இனி சோகம்தான் இன்பம் தருவதாக இருக்கும்... காதலின் சாபமோ வரமோ இதுதான்....
Re: எங்கிருக்கிறாய்?
மிக சிறப்பான கவிதை. பகிர்வுக்கு நன்றி ரௌத்திரன்
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39290 | பதிவுகள்: 232946 உறுப்பினர்கள்: 3592 | புதிய உறுப்பினர்: சேதுராமன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum