தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar

» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின்சார சிக்கனம்-எளிய வழிகள்

View previous topic View next topic Go down

மின்சார சிக்கனம்-எளிய வழிகள்

Post by முழுமுதலோன் on Sat Mar 28, 2015 1:58 pmஇன்றைய காலகட்டத்தில் மின்சாரம் இல்லாத உலகம் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. சிறிய பங்க் கடை முதல் பெரிய தொழிற்சாலைகள்வரை மின்சாரம் இல்லாமல் இயக்க முடியாத அளவு மின்சாதனங்களை பயன்படுத்தி வருகிறோம். இன்றைய மின்சார செலவு என்பது வரம்பு மீறி வீட்டு பட்ஜெட்டில் பெரிய செலவு என்ற நிலை வந்து கொண்டிருப்பதை மறுக்க முடியாது. நாம் சரியான விழிப்புணர்வுடன் வீட்டு பயன்பாட்டு மின்சாரத்தை கட்டுப்படுத்தாவிட்டால் சம்பளத்தில் பெரும்பகுதி மின்கட்டணமாக சென்றுவிடும் நிலை ஏற்படலாம். மின் நுகர்வை நம்மால் தவிர்க்க முடியாது ஆனால் சிக்கன படுத்தலாம் இதன் மூலம் மின்வெட்டு மற்றும் மின்சார பில்லை பார்த்ததும் வரும் தலைவலியை போக்கி வாழ்க்கையை சுகமானதாக மாற்றிக்கொள்ளலாம்.

இதோ உங்களுக்காக மின்சாரம் சிக்கனம் செய்வதற்கான சில வழிமுறைகள்...

1. தற்சமயம் குண்டு பல்புக்கு பதில் டியூப் லைட் பயன்படுத்துகிறோம் இதில் எலக்ட்ரானிக் சோக்குகள் உள்ள டியூப்லைட் பயன்படுத்தினால் மின்சாரம் சேமிக்கலாம்.

2. டியூப்லைட்டுக்கு மாற்றாக சிஎஃப்எல் (கம்பேக்ட் ஃப்ளோரெஸன்ட் லேம்ப்) வந்துவிட்டது. இவைகள் மின்சார நுகர்வு குறைவானதாகவும் அதிக வெளிச்சம் தரக்கூடியதும் ஆகும். எதிர்காலத்தில் எல்.ஈடி (லைட் எமிட்டிங் டயோட்) வகை பல்புகள் மிகமிக குறைந்த மின் நுகர்வையும் அதிக ஒளியையும் தருவதால் அதிகமான அளவில் பயன்பாட்டுக்கு வரும் என்பது நிச்சயம். ஏனெனில் 60 வாட் குண்டு பல்பு தரும் வெளிச்சத்தை 15 வாட் எல்ஈடி பல்பு தருவதால் எவ்வளவு மின்சாரத்தை மிச்சபடுத்தலாம்.

3. எந்த மின்சாதனம் வாங்கும்போதும் தரமானதாகவும், நீடித்து உழைக்குமாறும், மிஷிமி தரச்சான்றுபெற்ற தயாரிப்புகள் வாங்கும்போது நமக்கு பாதுகாப்பு மற்றும் சரியான மின் நுகர்வு ஆகியவை கிடைக்கும்.

4. ஆர்க் விளக்குகள், நியான் விளக்குகள், சோடியம் ஆவி விளக்குகள், பாதரச விளக்குகள் போன்றவை மிக அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் ஆகையால் இவ்வகை விளக்குகளை மிக அவசியத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

5. எக்ஸாஸ்ட் பேன் வீண் செலவு என்று கருதாமல் அது உடல்நலத்திற்கு அவசியம் என்பதை கருத்தில் கொண்டு இதனை பயன்படுத்தலாம். அதே சமயம் தேவையில்லாமல் இயங்குவதை கவனித்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் ஜன்னல்கள் திறந்து வைத்தாலே அறையிலுள்ள புகை வெளியேறி வெப்பசமநிலை உருவாகும்.

6. வீட்டு அறைகளின் மேல்தளம் மொட்டை மாடியாக இருந்தாலும், ஒரு பக்க சுவர் வெயில் படும்படி இருந்தாலும் இரவில் பேன் பயன்படுத்தும்போது சுவற்றிலிருந்து வெப்பம் வெளியாகி வெப்பகாற்று வீசும். இதற்குதான் பலர் சீலிங் மற்றும் ஸ்டேன்டிங் பேன் என இரண்டு பேன்களை பயன்படுத்துவார்கள். இதனை தவிர்க்க மொட்டை மாடியில் வெயில் தடுப்பு போட்டால் வெயில் தாக்கம் குறைந்து ஒரே பேனில் குளிர்ச்சியான காற்று கிடைக்கும்.

7. கிரைண்டர் பெல்ட் தளர்ந்து போயிருந்தாலும், அழுக்கு காரணமாக டைட்டாக இருந்தாலும் அதிக நேரம் ஓட்ட வேண்டிய நிலை உருவாகும் அதனால் மின்செலவு அதிகரிக்கும். எனவே குறிப்பிட்டகாலத்திற்கு ஒரு முறை பெல்ட் மாற்றிவிடுவது நல்லது. பலர் கிரைண்டர் ஸ்விட்ச்சை மட்டும் நிறுத்திவிட்டு பிளக்பாயின்ட் ஸ்விட்சை நிறுத்தாமல் விடுவார்கள் இது தவறு எந்த மின்சாதனத்தையும் ரிமோட் மூலம் மட்டும் நிறுத்தாமல் பிளக்பாயின்ட் ஸ்விட்சை நிறுத்தினால் மட்டுமே மின்நுகர்வு முழுமையாக நிறுத்தப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

8. பெருமளவு வெந்நீர் தேவைப்படும் விடுதிகள், மருத்துவமனைகள் போன்றவற்றில் மொட்டைமாடியில் சூரியசக்தி(சோலர்) வெப்பசாதனத்தை பயன்படுத்துவது பெருமளவு மின் சேமிக்கலாம்.

9. ஏசி அறைகளில் மேலே தெர்மாகோல் கூரை, சுவற்றில் வெப்பம் கடத்தா பெயின்ட் பூச்சி மற்றும் தரைவிரிப்புகள் பயன்படுத்தினால் அதிக நேரம் குளிர்ச்சியை தாங்கி நிற்கும் அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்டகால இடைவெளியில் குளிர்சாதன பெட்டியை சர்வீஸ் செய்வதால் மின் நுகர்வு குறையும்.

10 பிரிட்ஜ் அடிக்கடி அணைத்து வைக்க வேண்டியதில்லை. ஏனெனில் தேவையான குளிர்ச்சியடைந்ததும் தானாகவே ஆஃப் ஆகிவிடும். ஆனால் அடிக்கடி திறந்து மூடினாலும் தேவையான கொள்ளளவை விட பெரியஃபிரிட்ஜ்கள் ஆகியன மின் செலவை அதிகமாக்கும் பிரிட்ஜ் மீது நேரடியாக சூரியஓளி படாமலும், ஃபிரிட்ஜ் பின்புறம் காற்றோட்டம் இருக்குமாறும் வைப்பதால் மின்நுகர்வு குறையும்.

11. வாஷிங் மெஷின் டிரை யரை வெயில் நாட்களில் தவிர்க்க வேண்டும். இது துவைப்பதற்கு பயன்படும் மின்சாரத்தின் அளவே டிரையருக்கும் தேவைப்படுகிறது இது இரண்டு முறை துவைப்பதற்கு ஆகும் மின்செலவுக்கு சமம். அதே போல் தொலைக்காட்சி பெட்டி வாங்கும்போது வீட்டிற்கு தேவையான அளவுள்ள டிவியைமட்டுமே தேர்ந்தெடுத்தல் நல்லது ஏனெனில் பெரிய அளவு டிவிக்கள்அதிக மின்நுகர்வு எடுத்துக்கொள்ளும்.

12. மின்சாரத்தை விட பேட்டரி மற்றும் ஜெனரேட்டர் பயன்படுத்தி மின்செலவை மிச்சபடுத்தலாம் என்பது தவறு. ஏனெனில் அந்தசாதனங்களை பராமரிப்பது அதிக செலவை உண்டாக்கிவிடும். வீட்டின் ஜன்னல்களுக்கு திரையிட்டு மூடாமல் இயற்கை வெளிச்சத்தை பயன்படுத்தி கொள்வது மிகமுக்கியமானதாகும். இதனை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

13. பொதுவாக அயர்ன் செய்யும்போது பேன் போட வேண்டாம். உயரம் குறைவான இறக்கை கொண்ட பேன்களை பயன்படுத்தலாம், ஸ்விட்ச்போர்டு இன்டிகேட்டர் லைட்டால் மின்செலவு ஏற்படாது, குளிர்சாதனத்தை 18 டிகிரியில் இயக்குவதைவிட 22 டிகிரியில் இயக்கினால் மின்செலவு குறைவாகும்.

அதே போல் வெளியூர்களுக்கு செல்லும் நேரத்தில் மெயின் ஸ்விட்சை நிறுத்திவிட்டு சென்றால் மிகவும் நல்லது. நமது நாட்டை பொருத்தவரையில் மக்கள் தொகைக்கு ஏற்ப மின் உற்பத்தி இல்லை என்பது தான் உண்மை. தற்போது மின்வெட்டால் தொழிற்சாலைகள் மற்றும் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைவு மற்றும் வேலை வாய்ப்பு குறைவு ஆகிய பிரச்சனைகள் பூதாகரமாக உருவாகி வருகிறது.

இத்தகைய சவால்களை சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் தான் வீட்டிற்கும் நல்லது நாட்டிற்கும் நல்லது.

தினமலர்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: மின்சார சிக்கனம்-எளிய வழிகள்

Post by mohaideen on Sat Mar 28, 2015 3:14 pm

அவசியமான வழிமுறைகள்


நன்றி

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: மின்சார சிக்கனம்-எளிய வழிகள்

Post by ஸ்ரீராம் on Sat Mar 28, 2015 4:33 pm

நல்லதொரு கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா.#spm2

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979  உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மின்சார சிக்கனம்-எளிய வழிகள்

Post by முரளிராஜா on Sun Mar 29, 2015 11:26 am

மின்சார சிக்கனத்துக்கு பயனுள்ள வழிகள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மின்சார சிக்கனம்-எளிய வழிகள்

Post by kanmani singh on Mon Mar 30, 2015 1:20 pm

நாட்டுக்கு அவசியமான பதிவு!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: மின்சார சிக்கனம்-எளிய வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum