தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தொப்புள்கொடி பந்தம்

View previous topic View next topic Go down

தொப்புள்கொடி பந்தம்

Post by நாஞ்சில் குமார் on Wed Feb 11, 2015 9:03 pmதாய்க்கும் குழந்தைக்குமான உறவை தொப்புள்கொடி பந்தம் எனச் சொல்வதுண்டு. கருப்பையில் கரு உருவாகி, குழந்தையாக வளர்ந்து, பிறக்க உதவி செய்வது ‘பிளசென்ட்டா’ எனப்படுகிற நஞ்சு. தொப்புள் கொடியானது இதன் நடுவில் இருந்து  ஆரம்பித்து, குழந்தையின் தொப்புள் வரை நீண்டிருக்கும். கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான உணவையும் ஆக்சிஜனையும் அம்மாவின் ரத்தத்தில் இருந்து எடுத்துக் குழந்தைக்குக் கொடுப்பது இதன் வேலை. கருக்குழந்தையின் ரத்தத்தை தொப்புள்கொடி வழியாகப் பெற்று, அதன் கழிவுகளையும் அகற்றுகிறது. இந்த நஞ்சுதான் குழந்தைக்குக் கவசம் போன்றது. அம்மாவுக்கும், குழந்தைக்குமான உயிர் பாலமான இந்த நஞ்சே பல நேரங்களில் அந்தக் குழந்தையின் உயிர் பறிக்கிற எமனாகவும் மாறலாம். இந்த விஷயத்தில் இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் அம்மாக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

இந்த விஷயத்தைக் கேள்விப்படுகிற போது, கண்ணதாசனின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது... கருடா சவுக்கியமா...’ என்கிற அந்தப் பாடலில், ‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே... கருடன் சொன்னது’ என்கிற அந்த வரிகள் இந்த விஷயத்துக்கு மிகவும் பொருத்தம்.

‘‘இருக்க வேண்டிய இடத்தை விட்டு, இன்னொரு இடம் மாறும் நஞ்சுக் கொடி, பல நேரங்களில் குழந்தைகளின் உயிரை இறுக்கும் தூக்குக் கயிறாவதும் உண்டு...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். நஞ்சுக் கொடி இடம் மாறுகிற ‘அப்ரப்ஷியோ பிளசென்ட்டா’ பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ‘‘நஞ்சுக் கொடியானது கர்ப்பப் பையின் மேல் இருப்பதுதான் நார்மல் பொசிஷன். கருவானது பதியும்போதே கர்ப்பப்பையின் வாய் பக்கம் பதிந்து விட்டால் அது ஆபத்தானது. ஆரம்பக் கட்டத்தில் இதனால் பிரச்னைகள் இருக்காது. கரு வளர, வளர, கர்ப்பப்பையின் வாயை மூடிவிடும்.

குழந்தை வெளியே வர இடமிருக்காது. இந்த நிலை 100 சதவிகிதம் ஆபத்தானது. ரத்தப் போக்கு உண்டா னாலும் நிறுத்துவது சிரமமாகும். உடனடியாக டெலிவரி பார்க்க வேண்டியிருக்கும். இதில் 3 நிலைகள் உள்ளன. நஞ்சுக் கொடி எந்த ளவுக்குப் பிரிந்திருக்கிறது என்பதைப் பொறுத்து (அதாவது, ஒரு பகுதியா அல்லது முழுவதுமா) இந்த நிலை கணக்கிடப்படும். முதல் 2 நிலைகளும் பாதிப்புகள் குறைவானவை. இந்த நிலைகளை ஓரளவுக்கு பிரச்னைகள் இன்றி சமாளித்து விடலாம். 5, 6 மாதங்களுக்குப் பிறகு, கர்ப்பத்தின் இறுதி மாதங்களில் கர்ப்பப்பை விரிய ஆரம்பிக்கும் போது கருவானது இடம் பெயர்ந்து விடும்.

இந்தக் கட்டத்தில் ஏற்படுகிற மூன்றாம் நிலை மிகவும் ஆபத்தானது. நஞ்சுக் கொடியில் இன்ஃபெக்ஷன் உண்டாகி, ரத்தப்போக்கும் உண்டாகும். இது குழந்தைக்கு மிகவும் ஆபத்தானது. குறைப்பிரசவம் நிகழலாம். பெரும்பாலும் சிசேரியன்தான் செய்ய வேண்டியிருக்கும். நஞ்சுக் கொடியானது எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஒன்றுக்கு மேலான கர்ப்பம் சுமக்கும் பெண்களுக்கு அழுத்தம் தாங்காமலும் உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும் திடீரென கர்ப்பப்பையை விட்டுப் பிரிந்து விடும். வலி எதுவும் இருக்காது. ஆனால், அளவுக்கதிகமான ரத்தப் போக்கு இருக்கும். அதை உடனடியாக நிறுத்த வேண்டும் அல்லது பிரசவம் பார்க்கப்பட வேண்டும்.

அடிக்கடி உண்டாகிற கருக்கலைப்பு காரணமாக கர்ப்பப்பை சவ்வு புண்ணாகியிருக்கும். அப்படிப் புண்ணான இடத்தில் கரு பதிந்தாலும் இந்தப் பிரச்னை வரலாம். முதலில் நடந்த சிசேரியன் பிரசவத்தின் தழும்பில் அடுத்த கரு ஒட்டி வளர்வதாலும் வரலாம். அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு, பாலிஹைட்ராமினாஸ் போன்றவையும் காரணங்கள். இதை அவசர சிகிச்சையாகக் கருதி தாமதமின்றி உடனடியாகக் கையாள வேண்டியது அவசியம். ஸ்கேன் மூலம் நஞ்சுக் கொடியின் இடத்தைக் கண்டறிவார் மருத்துவர். ஒருவேளை அது கீழே இருப்பது தெரிந்தால் அதிகபட்ச கவனத்துடன் அந்தக் கர்ப்பிணிக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, தாயும் சேயும் காப்பாற்றப்படுவார்கள்...’’

வாவ் வாலுஸ்!

தன்னில் பாதியும், தன்னவரில் மீதியுமாக இருவரின் கலவையாக இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்ததில் இசைக்கலாவுக்கு இன்பமான இன்பம்! மேக்னா, மேனகா என அவரது 2 வயது ரெட்டைச் சுட்டிகளும் செய்கிற சேட்டையில் அந்த ஏரியாவே கலகலக்கிறது. உதவிக்கு ஆளின்றி, ஒற்றை நபராக இருவரையும் சமாளிக்கிற இசைக்கலாவின் பேச்சிலோ, முகத்திலோ அந்த அலுப்பு கொஞ்ச மும் இல்லை.‘‘என் கணவரோட வழியில ட்வின்ஸ் இருக்காங்க. அந்த வகையில தான் எங்களுக்கும் வந்திருக்கணும். 3வது மாசம் ஸ்கேன்ல ட்வின்ஸ்னு தெரிஞ்சப்ப அழுகையும், சிரிப்புமா மாறி மாறி வந்த அந்த உணர்வு இப்பவும் நினைவிருக்கு.

8வது மாசம் வரைக்கும் என்னை என் கணவர்தான் பார்த்துக்கிட்டார். ‘ரெட்டைப் புள்ளையா... ரொம்பக் கஷ்டம்... எப்படித்தான் வளர்க்கப் போறீங்களோ’னு என்னை பயமுறுத்தினவங்கதான் அதிகம். அதனால எக்கச்சக்கமா பயந்து போயிருந்தேன். அந்தப் படபடப்புலயே எனக்கு பிபி அதிகமாயிடுச்சு. 9வது மாசம் அம்மா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. சாதாரண செக்கப்புக்கு டாக்டரை பார்க்கப் போன போது பிபி ரொம்ப அதிகமா இருக்கிறதால 2 நாள் அட்மிட் ஆகச் சொன்னாங்க. பிபி குறைஞ்சபாடா இல்லைனு உடனே ஆபரேஷன் பண்ணி, குழந்தைங்களை எடுத்துட்டாங்க. ஒருத்தி 1.400ம், இன்னொருத்தி 1.600ம் வெயிட் இருந்தாங்க. இன்குபேட்டர்ல வச்சிருந்தாங்க. பிறந்த 8வது நாளே ஒருத்திக்கு திடீர்னு மூச்சுத் திணறல் வந்தது.

கண்ணெல்லாம் மேலே செருகிடுச்சு. ரத்தத்துல உள்ள கிருமி, மூளை வரைக்கும் பரவிடுச்சுனு சொல்லி, வேற பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போங்கனு சொல்லிட்டாங்க. அவங்க சொன்னபடியே பிரைவேட் ஆஸ்பத்திரியில 6 நாள் வச்சிருந்து பார்த்தோம். தினம் ஒரு டெஸ்ட் பண்ணணும், அதுக்கு தினம் 5 ஆயிரம் ஆகும்னு சொன்னாங்க. எத்தனை நாள் டெஸ்ட் பண்ண வேண்டியிருக்கும்னு இப்போ சொல்ல முடியாதுனு சொன்னதைக் கேட்டு எங்க எல்லாருக்கும் மயக்கமே வந்திருச்சு. எங்க சொத்தை எல்லாம் வித்தாக் கூட அவ்வளவு பணத்தைப் புரட்ட முடியாதேனு அழுதேன். அப்புறம் மறுபடி அங்கிருந்து குழந்தைங்க பிறந்த ஆஸ்பத்திரிக்கே போகச் சொன்னாங்க. கார்ல குழந்தைங்களை வச்சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பினா, பேய் மழை கொட்டுது. பாதி கார் வெள்ளத்துல மூழ்கிடுச்சு.

ஒவ்வொரு நொடியும் லேட் ஆக, ஆக என் குழந்தையைக் காப்பாத்த முடியுமாங்கிற பதற்றம் அதிகமாயிட்டே இருந்தது. அங்கே போய் பிரசவம் பார்த்த டாக்டர்கிட்ட அழுதேன். ‘எப்படியாவது உங்கக் குழந்தையைக் காப்பாத்திக் கொடுத்துடறேன். கவலைப்படாதீங்க’ன்னாங்க. ஆனாலும், எனக்கு பயங்கர டென்ஷன். அவசரமா ஒரு மருந்து வாங்கிட்டு வரச் சொன்னாங்க. அந்த மருந்தைத் தேடி அலைஞ்சிட்டு, எங்கேயும் கிடைக்கலைனு திரும்பி வந்தார் என் கணவர். டென்ஷன் இன்னும் அதிகமாச்சு. அப்புறம் டாக்டரே ஏற்பாடு பண்ணி மருந்தை வரவழைச்சாங்க. ஒருநாள் விட்டு ஒரு நாள் அந்த மருந்தைக் கொடுத்து, ஒருவழியா என் குழந்தையைக் காப்பாத்திட்டாங்க. ஒன்றரை வயசு வரைக்கும் அம்மா வீட்லதான் இருந்தேன். அம்மா, அக்கானு பார்த்துக்க ஆட்கள் இருந்தாங்க.

அப்புறம் நானும் கணவருமா சேர்ந்து பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணினோம். இப்ப 2 வயசாகுது. ரெண்டு பேரும் அநியாய வாலுங்க. பொம்பிளைப் பசங்கன்னா சொன்ன பேச்சைக் கேட்டுட்டு, உட்கார வச்ச இடத்துலயே சமத்தா இருப்பாங்கன்றதையெல்லாம் என் பொண்ணுங்க பொய்யாக்கிட்டாங்க. பசங்க தோத்தானுங்க... அவ்வளவு சேட்டை... குழந்தை பிழைக்குமாங்கிற தவிப்புல ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியா தூக்கிட்டு அலைஞ்சப்ப பட்ட மனக் கஷ்டமெல்லாம், இப்ப இவளுங்க பண்ற அமர்க்களத்துல மறந்து போகுது.

ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடறதையும், மழலையில கொஞ்சிக்கிறதையும் பார்க்கிறப்ப புல்லரிக்குது. நான் கொஞ்சம்கூட சோகமா இருக்கக் கூடாது... லேசா முகம் வாடினாலும் அவங்களால தாங்க முடியாது... ‘அம்மா... அழாதம்மா... நாங்க தப்பு பண்ணியிருந்தா சாரிம்மா’னு கண்ணைத் துடைச்சு விடுவாங்க. அந்தப் பிஞ்சு விரல்களோட கதகதப்புல என் கண்ணீரெல்லாம் காணாமலே போயிடும்...’’ - ஆனந்தக் கண்ணீர் வடிய அம்மா சொல்லி முடிக்க, ‘அச்சச்சோ.... அழக்கூடாது’ என அம்மா கண் துடைக்கிறார்கள் அழகுக் குட்டிச் செல்லங்கள்!

இசைக்கலாவின் டிப்ஸ்

‘‘எங்கம்மா எனக்குச் சொன்ன அட்வைஸை தான் நான் மத்தவங்களுக்கும் சொல்ல விரும்பறேன். ரெட்டைப் புள்ளைங்க எல்லாருக்கும் கிடைச்சிடாது. அது ஒரு வரம். அந்த வரம் உனக்குக் கிடைச்சிருக்குன்னா நீ அந்தக் கடவுளுக்கு ரொம்ப ஸ்பெஷல்னு சொல்வாங்க. உதவிக்கு ஆள் இல்லாம ரெண்டு பிள்ளைங்களையும் வச்சுக்கிட்டுக் கஷ்டப்படற போதெல்லாம் எங்கம்மா சொன்ன இந்த வார்த்தைகளைத்தான் நினைச்சுப்பேன். எவ்வளவு பெரிய கஷ்டமும் மாயமாயிடும்...’’

- தினகரன்
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: தொப்புள்கொடி பந்தம்

Post by kanmani singh on Thu Feb 12, 2015 12:12 pm

அருமையான கட்டுரை! இரண்டு முறை படித்தேன்!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: தொப்புள்கொடி பந்தம்

Post by முரளிராஜா on Fri Feb 13, 2015 12:14 pm

மிக சிறப்பான கட்டுரை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தொப்புள்கொடி பந்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum