தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முத்துக்கள் மூவாயிரம்

View previous topic View next topic Go down

முத்துக்கள் மூவாயிரம்

Post by முழுமுதலோன் on Mon Jan 19, 2015 11:51 am

+ம் பதிவு 


அச்சம்


ஆத்திரமென்பது கருனை யென்ற கண்களுக்கு திரையாகும்
அச்சமென்பது முயற்சியென்ற கால்களுக்கு விலங்காகும்


ஏழையாய் பிற‌ந்து நிச்சயம் உன் குற்றமல்ல
கோழையாய் இருப்பது நிச்சயம் உன் குற்றமே
கற்றவர் பழிக்கு அஞ்சுவார்
கல்லாதவர் சபைக்கு அஞ்சுவார்
சோம்பர்கள் உழைக்க அஞ்சுவார்
கயவர்கள் எதற்கு அஞ்சுவார்


மழைக்கு பயந்து குடை பிடித்தோம்
காற்றுக்கு பயந்து கதவு அடைத்தோம்
வழிக்கு பயந்து துணை சேர்த்தோம்
வாழ்வுக்கு பயந்து பொள் சேர்த்தோம்


புத்தியில்லாதவன் கை பிடித்த  கத்தியும் பேரழிவே
மந்தியாணவன் கை பிடித்த தீக்குச்சியும் பேரழிவே


மின்சாரத்துக்கு கை பயப்படும்
சம்சாரத்துக்கு கணவர் பயப்படுவார்
விபச்சாரத்திற்க்கு கற்பு பயப்படும்
கலாச்சாரத்திற்கு கயமை பயப்படும்


தற்காப்பும் முற்காப்பும் அறிவினால் வந்த சொந்த புத்தி
ஒதுங்குதலும் பதுங்குதலும் அச்சத்தினால் வந்த மந்த புத்தி
அச்சத்தால் இரத்தம் மட்டுமல்ல‌


நீதியின் பேனா மையும் உறைந்து விடும்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: முத்துக்கள் மூவாயிரம்

Post by முழுமுதலோன் on Mon Jan 19, 2015 11:54 am

தாமதம்


தனித்து போடப்பட்ட இரும்ம்பு துருபிடித்து அழிகிறது
தள்ளி போடப்பட்ட செயலும்   உருமாறி அழிகிறது


நீ தூக்கிப் போடும்  குப்பைகள் உன் காலை வந்து இடறும்
நீ தள்ளிப் போடும் செயல்கள் உன் வாழ்வை வந்து இடறும்


தாமதமாக உறங்கி விரைவாக எழுந்தால் சுறுசுறுப்பு வரும்
தாமதமாக தொடங்கி விரைவாக செய்தால் பரபரப்பு வரும்


உண்மை புறப்பட்டு வாசல் வருவதற்குள் 
கயமை வானத்தை சென்று விடும்
வாய்மை வாய் திறந்து பெசுவதற்குள் வ
லிமை உலகத்தை விழுங்கி விடும்


உழைக்காமல் ஏய்த்து வாழ்வார் வாழ்வு வாலறுந்த நரி  போலாடுமே
உறங்கியே  ஏய்த்து வாழ்பவர் வாழ்வு வாலறுந்த நரி போலாடுமே


நாளை ஒன்று தருகிறேன் என்றவன் என்றும் தருவதில்லை
நாளை ஒன்று செய்கிறேன் என்றவன் ஒன்றும் செய்வதில்லை


கயிற்றில் தொங்கும் உயிர்கள் மூச்சடைத்து சாகும்
காலத்தால் தேங்கும் காரியங்கள் பெச்சழிந்து சாகும்


காலம் என்பது பல காரியங்களை ஆற்றும்


காலதாமதம் என்பது பல காயங்களை வளர்க்கும்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: முத்துக்கள் மூவாயிரம்

Post by முழுமுதலோன் on Mon Jan 19, 2015 11:56 am

பழமை

வலையை அறுத்துக் கொண்டு வெளிவர கத்தி வேண்டும்
பழமையை அறுத்துக் கொண்டு வெளிவர புத்தி வேண்டும்


பழசாகி விட்டதனால் தங்குமும் வைரமும் பழதாவதில்லை
பழமை என்பதற்காக உண்மையும் ஒழக்கமும் மதிப்பிழப்பதில்லை


பழமையும் பழங்கிழமையும் பேசி 
வீணே மகிழ்வார் அறிவில்லாதவர்
புதுமையும் புதிய வளமையும் சேர்த்து 
நாளும் மகிழ்வார் அறிவியலார்


முடமான கால்களும் 
மூடமான எண்ணங்களும் செயல்படுவதில்லை
சடமான உடல்களும் 
மடமான மனிதர்களும் முன்னேற்றமடைவதில்லை


பழமை என்பது மடமை
புதுமை என்பதே வளமை
கடமை என்பது நம் உடமை
அருமை என்பதே நமக்கு பெருமை


பலன் தராத பழைய பொருள்களால் வீடு தூசாகும்
பயன் படாத பாழைய கருத்துக்களால் நாடு நாசமாகும்


ஒட்டையுள்ள பாத்திரத்தில் நீரும் நிலைப்பதில்லை
ஒழக்கமில்லாத சாத்திரங்கள் ஊரில் விற்பதில்லை


பயனுள்ளது பழமையாயிருந்தாலும் போதை தரும் கள் போல‌
பயனந்நது புதுமையென்றாலும் போய் விழம் குப்பையிலே


கல்லாமை என்றொடு சாபம் தீர்க்கும் நாளே விடுதலை நாள்


இல்லாமை என்றொடு தாபம் தீரும் நாளே திருநாள்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: முத்துக்கள் மூவாயிரம்

Post by முழுமுதலோன் on Mon Jan 19, 2015 11:59 am மடமை


மனிதனால் மட்டும்தான் மற்றவரை சிரிக்க வைக்க முடியும்
மனிதனால் மட்டும்தான் மற்றவர் சிரிக்கும்படி வாழ முடியும்


மூடர்கள் செயல்கள் அறிஞர்களுக்கு பைத்தியகாரத்தனமாக தோன்றும்
அறிஞர்கள் செயல்கள் மூடர்களுக்கு அதைவிட அதிகமாகத் தோன்றும்


பிறவிக் குருடர்கள் கண் தெரியாமல் தடுமாறி விழுகிறார்கள்
அறிவுக் குருடர்கள் கண் தெரிந்தே தடுமாறி வீழ்கிறார்கள்


அழையாத வீட்டில் விரும்பாத விருந்தாளி கோமாளி
விளையாத நிலத்தில் அரும்பாத விதையே அறிவுரை


அறிஞரோ ஒரு முறை தவறுவார் கயவரோ தவறையே தொடருவார்
குருடரோ ஒரு முறை  இடறுவார் மூடரோ வாழ்வெல்லாம் இடறுவார்


கண்டதெல்லாம் காட்சி 
உண்டதெல்லாம் உணவு என்று மயங்குவது மடைமை
கண்டறிந்து மாட்சி உணர்ந்து 
காலமெல்லாம் உழைத்து வாழ்வது கடமை


சிலர் விளையாடுகிறார் பலர் அதை பார்த்து கைதட்டி மகிழ்கிறார்கள்
சிலர் போதிக்கிறார் பலர் அதை கேட்டு கை கொட்டி சிரிக்கிறார்


நட்பில்லாதவனுக்கு பெரிய நகரமும் யாருமில்லாத காடே
கல்வியொன்றில்லாதவனுக்கு சொன்ன சொல்லும் பொருளில்லாத ஒளியே


நதியின் நீர்ப்பெருக்கிலே நாட்டின் வறுமை யெல்லாம் தீரும்
மதியின் சொற்பெருக்கிலே மக்களின் மடமையெல்லாம் மாறும்


அடைக்காத பலூனுக்குள் காற்று நிற்பதில்லை


அடையாத மூடனுக்குள் கல்வி நிலைப்பதில்லை

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: முத்துக்கள் மூவாயிரம்

Post by முழுமுதலோன் on Mon Jan 19, 2015 12:02 pm

 அறியாமை


சிந்திக்காதவன் சொல் குருடன் எறிந்த கல்லாகும்
அறியாதவன் சொல் கழுதை பாடிய பாடலாகும்


சிறு பங்கு அறியும் பெரும்பங்கு அச்சமுள்ள மனிதன் மிருகமே
ஒரு பங்கு அன்பும் பெரும்பங்கு  ஆசையுமுள்ள மனிதனும் மிருகமே


ஆடியில் தெரிவது பிம்பம் அடியில் தொடர்வது நிழல்
காதில் கேட்பது பொய் கண்ணில் காண்பது மாயை


குருட்டு அரசனுக்கு கொளுத்தி விளக்கின் முன்னே
இருட்டு அறையிலிருந்து கண்சிமிட்டி என்ன பயன்


அழுக்கானவரிடையே அழகானவர் இருந்தாலும் அறுவெறுப்பாக இருக்கும்
ஆடையில்லாதவரிடையே ஆடையணிந்திருந்தாலும் கூச்சமாக இருக்கும்


புசிக்க புசிக்க என் பசிப்பிணி புரிந்து கொண்டேன்
படிக்க படிக்க என் அறியாமை அறிந்து கொண்டேன்


ஞானம் இல்லாதவர் ஞானியை சோதிப்பது நன்றோ அது
வேலை  இல்லாதவர் யாணைபல்லை சோதிப்பதும் ஒன்றே


கல்லாமையும் பொய் சொல்லாமையும் நீங்கினால் 
இல்லாமை தீருமே உலகில்
கள்ளுண்ணாமையும்  காமமில்லாமையும் 
சிறந்தால் தள்ளாமை சேருமோ உடலில்


ஆகாயத்தில் கோட்டை என்றாலும் ஆவென்று ஏமாறும் வாக்காளர்கள்
ஆலிலையில் பெட்ரோல் என்றாலும் ஆமென்று ஏமாறும் வாடிக்கையாள்ர்கள்


அறிந்தவனுக்கு அறவுரை சொல்லத் தெவையில்லை


அறியாதவனுக்கு அறிவுரை சொல்லிப் பயனுமில்லை

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: முத்துக்கள் மூவாயிரம்

Post by முழுமுதலோன் on Mon Jan 19, 2015 12:07 pmஉண்பதும் உறங்குவதும் மட்டுமே உள்ள மனிதனும் மிருகமே
கண்டது காமுறும் உள்ளமே உள்ள மனிதனும் மிருகமே


முயலாமையில் பெரிய தாழ்ச்சி உலகில் எதுவும் இல்லை
இயலாமையில் பெரிய வீழ்ச்சி உலகில் எதுவும் இல்லை
உழைத்து உறங்கியவர்களை எழப்பி விடலாம்
உழைக்காது உறங்கியவர்களை எழப்ப முடியாது
உழைத்தவன் வாழ்விலே கனவுகள் எல்லாம் நனவாகும்
உறங்கியவன் வாழ்விலே நனவுகள் எல்லாம் கனவாகும்


பொதுமையிலே புதுமை படைப்பவன் உழைப்பாளி
தனிமையிலே இனிமை காண்பவன் சீக்காளி


பசுமையான பூவின் படுக்கையென வாழ்க்கையை எண்ணி
உறங்கி மகிழ எத்தனம் செய்வார் ஏழையரே


தூக்காமென்பது துக்கமே ஊக்கத்தை கெடுக்கும் ஆக்கத்தை அழிக்கும்
ஏக்காமென்பது வெட்கமே துக்கத்தை கொடுக்கும் தூக்கத்தை சிதைக்கும்


தூண்டில் பிடித்தவன் தூங்கி விட்டால் மீன்கள் பிடிபடுவதில்லை
நாட்டை ஆள்பவன் தூங்கி விட்டால் நாடும் வளர்வதில்லை


நீருக்கு தவிக்குது பயிர்கள் நாட்டினிலே
தாலிக்குது தவிக்குது தளிர்கள் வீட்டினிலே
பசித்து தவிக்குது உயிர்கள் நாட்டினிலே


புசித்து உறங்குதே பதர்கள் வீட்டினிலே.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: முத்துக்கள் மூவாயிரம்

Post by முழுமுதலோன் on Mon Jan 19, 2015 12:11 pm பகை/வெறுப்பு


நெருப்பு எரிய எரிய சந்தன மரமும் கரிக்கட்டையாகும்
வெறுப்பு எரிய எரிய சந்தன மனமும் கரிக்கட்டையாகும்


அறிஞனாக முயற்சித்து தோற்றவர் தீவிரவாதியாகிறார்  சிலர்
மனிதனாக முயற்சித்து தோற்றவர் அரசியல்வாதியாகிறார் சிலர்


நன்மை பகைவர் வெறுக்கிறார் என்பது கற்பனையானதே
நாம் பகைவரை வெறுக்கிறோம் என்பது உண்மையானது


நீரானது தெளிய தெளிய அழுக்குகள் ஆழத்துக்குப் போகும்
உள்ளமது தெள்ய தெளிய வழக்குகள் தீர்ந்து போகும்


அறிவு வழி சென்றால் எங்கும் அன்பு மயமாகும்
ஆத்திர வழி சென்றால் எங்கும் அழிவு மயமாகும்


பொறுப்பு என்பது நட்பை வளர்க்கும் சிறப்பு
வெறுப்பு என்பது பகையை வளர்க்கும் நெருப்பு


உட்பகை தலைவலி போல என்றும் தீராதது
வெளிப்பகை வயிறுவலி போல மீண்டும் வருவது


மாறாத நீரும் தேங்கி அசுத்தமாகி விடும்
மாறாத மனமும் ஏங்கி அசுத்தமாகி விடும்


விரும்பி எவரும் உண்ணும் கரும்பு
கரும்பும் கைப்பது என்றால் அது உன் வாய்க்குற்றமே


கண்ணுக்கு கண்ணும் கைக்கு கையும் பகையாவது உண்யே தந்தையே


நாட்டுக்கு நாடும்  மனதுக்கு மனமும் பகையாவதென்ன விந்தையே

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: முத்துக்கள் மூவாயிரம்

Post by முழுமுதலோன் on Mon Jan 19, 2015 12:16 pmபிரிவரிய ஊசி வழி பின் தொடரும் நூல் போல‌
அறிவால் பேரறிவின் அரிய வழி தொடரும் நல் மனமே


வண்ண‌ங்கள் மலருக்கு அழகு சேர்க்கும்
எண்ணங்கள் மனதுக்கு அழகு சேர்க்கும்


நோக்கம் என்பது நன்மையை காண்பது
ஆக்கம் என்பது எதிலும் நன்மையே செய்வது


நல்ல எண்ணைய் நிறைந்த விளக்கின் தீபம் மிளிரும்
நல்ல எண்ணங்கள் நிறைந்த மனத்தின் முகம் ஒளிரும்


உடலானது நல்ல எண்ணங்களால் விரிவடைந்து வளர்கிறது
உண்மையானது நல்ல எண்ணங்களால் விரிவடைந்து வளர்கிறது


இதயத்தின் வாசல் விரிந்தால் உலகனைத்தும் உள்ளே வரும்
ஆசையெனும் வாயே விரிந்தால் அத்தனையும் வெளியே போகும்


பெரியாராய் யாரும் பிறப்பதில்லை 
நல்ல எண்ணத்தால் அவர் சிறந்தாரே
ஆன்றோராய் யாரும் பிறந்ததில்லை 
நல்ல செயலால் அவர் உயர்ந்தாரே


வண்ணங்கள் ஒளியாலே அழகும் மெருகும் கூடும்
எண்ணங்கள் ஒழுக்கத்தாலே அழகும் மெருகும் கூடும்


உள்ளத்தில் நஞ்சில்லாத போது மகிழ்வு தானே வரும்
சொல்லில் வஞ்சமில்லாத போது புகழும் தானே வரும்


உறுதியான எலும்புகள் உடலுக்கு வனப்பு தரும்
உறுதியான எண்ணங்கள் உள்ளத்துக்கு அழகு தரும்_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: முத்துக்கள் மூவாயிரம்

Post by முரளிராஜா on Mon Jan 19, 2015 4:54 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: முத்துக்கள் மூவாயிரம்

Post by செந்தில் on Mon Jan 19, 2015 8:46 pm

முத்தான நாற்பத்தோராயுரம் பதிவுகளை கடந்த உங்களுக்கு என் நன்றிகள் அண்ணா.
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum