தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விதி என்ற சொல்லை விலக்கிவிடு

View previous topic View next topic Go down

விதி என்ற சொல்லை விலக்கிவிடு

Post by முழுமுதலோன் on Thu Jan 01, 2015 11:04 am

விதியின் பெயரைச் சொல்லி சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால் ஒரு நாளும் பலனைப் பெறமுடியாது. பலம் படைத்தவராகவும் வாழ முடியாது. ஒரு கை மட்டும் அசைந்தால் ஓசை வராது.

‘விதி என்பது வீணர்களின் சொல்’ என்கிறார் குருநானக்! நாம் விதியைப் பற்றி ஒருநாளும் எண்ண வேண்டாம். செயலைச் செய்வோம். செல்வத்தைப் பெறுவோம். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையை கௌரவமாக நடத்த பணம் அவசியமாகிறது. பணமா மனிதனைச் சம்பாதிக்கிறது? மனிதன் அல்லவா பணத்தைச் சம்பாதிக்கிறான் என்று விவேகானந்தர் கூறுகிறார். பணம் ஓர் அத்தியாவசியப் பொருள். அது நம்முடைய உழைப்புக்கும் உறுதுணையாக நிற்கிறது. பணம் வந்ததும் அறிவற்றவன் கூட அறிவாளியாகிவிடுகிறான். அவனுடைய வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளும் சட்டமாக மாறும் என்கிறார் அறிஞர் ஜான்சாட்.

செல்வம் வந்ததும் செல்வாக்கும் வந்துவிடுகிறது. தங்கத்திற்கு அரசர்கூட தங்களின் தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்துவார் என்பது பழமொழி. ‘பணம் மட்டும் சேர்த்துவிடு. உலகம் முழுவதும் உன்னை ஒரு பண்பாளன் என்று கூறத் தயங்காது’ என்கிறார் பெர்னாட்ஷா. பணம் யாருடைய கையில் இருந்தாலும் ஆற்றல் அளிக்கும்.

‘பணம் கொடுப்பதாகக் கூறி ஒருவரிடம் வேலையை ஒப்படைத்தால் வேலை விரைவிலேயே நடக்கும்’ என்று சொல்கிறார் இங்கர்சால். பணத்திற்கு இவ்வளவு ஆற்றல் இருக்கும்போது சாதாரண விதியை அதனால் மாற்றமுடியாதா என்ன? கட்டாயம் முடியும். நாம் மனம் வைத்து பணத்தைச் சம்பாதித்துவிட்டால் விதியைப் பற்றி எண்ணிப் பார்க்கக்கூட நேரம் இருக்காது. பணத்தைச் சரியான முறையில் பயன்படுத்தினால் அது மாபெரும் ஆற்றலாக விளங்கும்.

வங்கிகளிலும், கடைகளிலும் ஆண்டுக்கு இரண்டு முறைகணக்கு எடுத்து வரவு செலவு எடுத்து பார்ப்பது வழக்கம். இதேபோல் நாம் சம்பாதிக்கும் பணத்தின் வழிமுறைகளைக் கணக்குப் பார்த்து சரிகட்டும்போது விதி எங்கிருந்து உள்ளே வரமுடியும்?

வாழ்க்கையின் அடித்தளத்தில் அவதியுற்று எதிர்காலத்தைப் பற்றி சற்றும் நம்பிக்கை இல்லாத நிலையில் வாழ்பவர் சிறுவயதில் இருந்தே கடுமையாக உழைத்ததன் காரணமாகத்தான் பிரகாச மான எதிர்காலத்தைக் காணமுடிந்தது.

விதியைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்பட்டதே இல்லை. சின்ன வயது உழைப்பு எதிர்காலத்தில் அற்புதமான பல சாதனைகளைச் செய்வதற்கு ஆதாரமாக இருந்திருக்கிறது.

இரும்பு உருக்குத் தொழிலின் முன்னோடி என்று கருதப்படும் ஹென்சி பெசிமர் தன்னுடைய ஆராய்ச்சி தொடர்பாக பதினான்காவது வயது முதற்கொண்டே கடுமையான உழைப்பை மேற்கொண்டு பெரும் பணக்காரரானார்.

துணி நெசவு இயந்திரத்தைக் கண்டுபிடித்த சாமுவேல் ஸ்லேட்டர் என்றவிஞ்ஞானி பதினெட்டு வயதிலிருந்து கடுமையாக செயல்பட்டதன் மூலம் செல்வந்தரானார். காகிதம் தயாரிக்கும் முறையினை உலகத்திற்கு அறிவித்த நிக்லஸ் லூயிராபர்ட் தன்னுடைய பதினைந்தாவது வயதிலிருந்து ஆராய்ச்சி தொடர்பான முயற்சியில் ஈடுபட்டு முன்னேறி கோடீஸ்வரர் ஆனார்.

நீராவி இயந்திரத்தின் அடிப்படை அம்சத்தை ஜேம்ஸ்வாட் கண்டறிந்த போது அவருக்கு வயது பதினைந்துதான். அந்த வயதில் இருந்து கடுமையாக உழைத்து உயர்வு பெற்றார். தன்னுடைய சாதனைக்கு அவர் உருவம் கொடுத்தார். இவர்கள் யாராவது விதி பற்றி நினைத்துப் பார்த்து இருப்பார்களா? அல்லது விதி தான் என்னவென்று தெரியுமா? வாழ்க்கையில் தங்கள் திறமையை முன் நிறுத்தி மேம்பாடு அடைய வேண்டும் என்று தானே அவர்கள் விரும்பி இருக்கிறார்கள். சிறிய வயதிலே உழைத்தார்கள். மேம்பாடு அடைந்தார்கள்.

இவர்களைப் போன்றவர்களின் வாழ்க்கையை முன்நிறுத்தி அதேமாதிரி நடக்க வேண்டுமே தவிர தேவை இல்லாமல் விதியைப் பற்றி ஆராய்ந்து கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண தொழிலாளியின் வயிற்றில் உதித்த பலரும் தங்களது அரும்பெரும் முயற்சியினால் அகிலம் போற்றும் மனிதர்களாகத் திகழ்ந்து இருக்கிறார்கள். வையகம் போற்றும் வனப்புமிகு கவிதைகளைப் படைத்த பைரன் ஒரு வாட்மேனின் மகன். சிதறுண்டு கிடந்த இத்தாலியை ஒன்றுபடுத்திய மாவீரன் கரிபால்டி ஏழை மீனவர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தவர்.

பிரெஞ்சு நாட்டின் எழுத்துலகில் எழு ஞாயிறாகத் திகழ்ந்த பால்சாக் உழவுத் தொழிலாளியின் மகன். பூட்டு ரிப்பேர் செய்பவரின் மகனாகப் பிறந்தவர்தான் ஓம் என்றவிஞ்ஞானி. விதி என்றசொல்லைப் படைத்து அதனைச் சமுதாய ஓடையில் உருக்கி ஊற்றிவிட்ட படியினால் அதனுடைய வழிவழி வந்தவர்களும் விதியை எவராலும் வெல்ல முடியாது என்றஎண்ணத்தை உருவாக்கிவிட்டார்கள்.

விதியை மதியால் வெல்ல முடியும் என்பதனை என்றும் நினைவில் வைக்க வேண்டும். “எல்லாவற்றிற்கும் விதி தான் காரணம் என்று வீணாக உரைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. நாம் தான் அவற்றிற்கு எல்லாம் காரணம்” என்கிறார் தீரர் சத்தியமூர்த்தி.

“எழுந்து நில்லுங்கள்; ஊக்கத்தைக் கைவிடாதீர்கள். உங்கள் விதியைப் படைப்பவர்கள் நீங்களே என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள். உங்கள் எதிர்காலத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார் விவேகானந்தர். இந்த வரலாற்று உண்மையை எல்லாம் தெரிந்து கொண்டபிறகு இனிமேல் விதியைப் பற்றியே நினைத்துக் கூடப் பார்க்கக்கூடாது



தினமலர்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: விதி என்ற சொல்லை விலக்கிவிடு

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 01, 2015 12:03 pm

பகிர்வுக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: விதி என்ற சொல்லை விலக்கிவிடு

Post by செந்தில் on Thu Jan 01, 2015 2:34 pm

தன்னம்பிக்கை தரும் பகிர்வுக்கு நன்றி அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: விதி என்ற சொல்லை விலக்கிவிடு

Post by முரளிராஜா on Sat Jan 03, 2015 12:18 pm

பகிர்வுக்கு நன்றி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum