தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நல்ல நட்பை வளர்த்துக் கொள்ள ...

View previous topic View next topic Go down

நல்ல நட்பை வளர்த்துக் கொள்ள ...

Post by முழுமுதலோன் on Thu Jan 01, 2015 11:01 am

1. பிறர் சொல்லும் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்கப் பழகிக் கொள்ளுங்கள்.

2. மற்றவர்களிடம் தேவையான கருத்துக்களை மட்டும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

3. நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகுங்கள்.

4. உங்கள் நண்பர்களை உற்சாகப்படுத்தும்படி பேசுங்கள். உற்சாகப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடுங்கள்.

5. பிறரின் நம்பிக்கைக்குரியவராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

6. நல்லவற்றையே தேர்ந்தெடுத்துப் பேசுங்கள்.

7. பிறரோடு பேசும்போது மற்றவர்களின் கண்களை நேராகப் பார்த்துப் பேசுங்கள்.

8. சிரித்த முகத்தோடு இருக்கப் பழகுங்கள்.

9. உங்கள் உரையாடலை மிகவும் சுருக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

10. உரையாடலைத் தொடங்கும்போது நீங்கள் சுற்றுச்சூழலை அடிப்படையாக வைத்துத் தொடங்குங்கள்.

11. நட்புணர்வோடு பழகியவர்களிடம் தொடர்ந்து நட்பை தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

12. உங்கள் நண்பரை மற்றநண்பர்களிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அறிமுகப்படுத்துங்கள்.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: நல்ல நட்பை வளர்த்துக் கொள்ள ...

Post by முழுமுதலோன் on Thu Jan 01, 2015 11:01 am

13. நண்பர்களிடம் கலந்து பேசும்போது பொதுவான விசயங்களைப் பேசினால் பெரும்பாலும் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

14. மனம் திறந்து நண்பர்களோடு உரையாடுங்கள்.

15. உங்கள் நண்பருக்கு நல்ல நண்பராக இருக்கும்படி உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

16. தேவைப்படும்போது உங்கள் நண்பருக்கு தகுந்த ஆலோசனை சொல்லுங்கள்.

17. கூட்டத்தில் ஒரே நண்பருடன் பேசிப் கொண்டிருப்பதற்குப் பதில் மற்றவர்களையும் நண்பராக்க முயற்சி செய்யுங்கள்.

18. இயற்கையாகவே நட்பு உருவாகட்டும். வலிந்துபோய் நட்பைத் திணிக்காதீர்கள்.

19. புதிய இடத்தில் வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்காதீர்கள். உண்மையா நட்புணர்வோடு பழகுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தோற்றத்தைப் பார்த்துக்கூட நட்பு உருவாகலாம்.

20. உங்களைப் பற்றி நீங்களே அதிகமாகப் புகழ்ந்து பேசாதீர்கள். “தற்பெருமை பேசுபவர்” என்று உங்களை மற்றவர்கள் ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.

21. நண்பர்கள் வட்டத்தில் நீங்கள் தான் எப்போதும் தலைவர் என்பது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

22. நண்பர்களுக்குத் தேவையில்லாமல் கட்டளையிடாதீர்கள். நண்பர்களிடம் வீண் அதிகாரம் செய்யாதீர்கள்.

23. பரிசுகள் கொடுத்தும், பணத்தைக் கொடுத்தும் நட்பை வளர்க்காதீர்கள். நட்புக்கு விலை பேசுவது முடிவில் பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.

24. நண்பர்களிடம் பேசும் போது ‘வளவள’ என்று நீண்ட நேரம் பேசாதீர்கள்.’அறுவைகேஸ்’ என்று உங்களை ஒதுக்கிவிடுவார்கள்.

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: நல்ல நட்பை வளர்த்துக் கொள்ள ...

Post by முழுமுதலோன் on Thu Jan 01, 2015 11:02 am

25. நட்புக்கு பொறுமை அவசியம் தேவை. விட்டுக்கொடுத்து வாழும் பழக்கம் நல்ல நட்பை உருவாக்கும்.

26. “வேண்டாம்” என்று எவரையும் ஒதுக்காதீர்கள். எதிரிகள் உருவாகிவிடுவார்கள்.

27. உங்கள் குடும்பத்திற்கு நன்கு தெரிந்தவர்களை முதலில் நண்பர்களாக்குவது நல்லது.

28. தன்னம்பிக்கையோடு காட்சி தாருங்கள். தன்னம்பிக்கை கொண்டவர்களை மக்கள் விரும்புவார்கள்.

29. நண்பர்களிடம் சிரித்துப் பேசி மகிழ்ந்துவிட்டு, பின்னர் அந்த நண்பரின் முதுகுக்குப் பின்னால் குறைசொல்லாதீர்கள். இந்த செயல் பெரும் சிக்கலை உருவாக்கிவிடும்.

30. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தால் நட்பு உருவாகும் என்று நினைக்க வேண்டாம். நேர்மறையாக (Positive) சிந்தித்து, நம்பிக்கையுடன் செயல்பட்டாலே நல்ல நண்பர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள்.

31. இந்த நண்பனால் நமக்கு என்ன லாபம்? என்று லாப நட்ட கணக்குப்போட்டு பழகிக்கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். மாறாக, என்னால் இந்த நண்பனுக்கு என்ன செய்ய முடியும்? என்பதைச் சிந்தித்து செயலாற்றுங்கள்.

32. உங்கள் நண்பரின் செயல் உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அவரைப்பற்றி மற்றவர்களிடம் குறைசொல்லாதீர்கள்.

33. “கொடுங்கள். அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்”. உங்கள் நேரத்தை உங்கள் நண்பருக்குக் கொடுங்கள். உங்களின் நல்ல அன்பை நண்பருக்கு வழங்குங்கள். உங்கள் கவனத்தையும், விசுவாசத்தையும் நண்பருக்கு வழங்கினால் அந்த நட்பு நீடித்து நிலைத்து நிற்கும்.

34. உங்கள் நண்பர்களை நீங்கள் விரும்பியபோதெல்லாம் எந்த நேரத்திலும், எப்போதும் சென்று சந்திக்க முயற்சி செய்யாதீர்கள். இந்த தேவையில்லாத சந்திப்பு சில வேளைகளில் உங்கள் நண்பருக்கு இடையூறாக அமையும்.இதனால் நட்பில் இடைவெளி உருவாகிவிடும்.

35. புதிய நண்பர்களை உருவாக்குங்கள். ஆனால் அதேவேளையில் பழைய நண்பர்களை மறந்துவிடாதீர்கள். ஏனென்றால் அவர்களில் ஒருவர் முக்கியமானவர் என்னும் முன்னோர்கள்

சொன்னக் கருத்தை மனதில் நிறுத்தி நல்ல நண்பர்களோடு பழகும் பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள்

“நல்ல நண்பர்கள்” எனக்கு வேண்டும் என்று விரும்புபவர்கள் முதலில் தங்களை நல்ல நண்பர்கள் என்று மற்றவர்கள் போற்றும்படி நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நல்ல நண்பர்கள் நமக்குக் கிடைப்பார்கள்.

எந்த நிறக் கண்ணாடியைப் போட்டு இந்த உலகத்தைப் பார்க்கிறோமோ அந்த நிறத்திலேயே பார்ப்பவைகள் தெரிவதுபோல நல்ல நட்புக்கான குணங்களோடு நண்பர்களைத் தேடினால் சிறந்த நண்பர்கள் நிச்சயம் நமக்குக் கிடைப்பார்கள்

தினமலர்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: நல்ல நட்பை வளர்த்துக் கொள்ள ...

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 01, 2015 12:03 pm

பகிர்வுக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: நல்ல நட்பை வளர்த்துக் கொள்ள ...

Post by செந்தில் on Fri Jan 02, 2015 1:58 pm

சிறப்பான ஆலோசனை.நன்றி அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: நல்ல நட்பை வளர்த்துக் கொள்ள ...

Post by முரளிராஜா on Sun Jan 04, 2015 10:14 am

சிறப்பான ஆலோசனைகள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நல்ல நட்பை வளர்த்துக் கொள்ள ...

Post by mohaideen on Sun Jan 04, 2015 5:55 pm

சிறந்த ஆலோசணைகள்

பதிவிற்கு நன்றி

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum