தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆர்வமே மனிதனின் ஆணிவேர்

View previous topic View next topic Go down

ஆர்வமே மனிதனின் ஆணிவேர்

Post by முழுமுதலோன் on Mon Dec 22, 2014 11:50 am

மனிதச் செயல் எவ்வளவு சின்னஞ்சிறு வடிவில் இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய வடிவில் அது வெளிப்பட்டாலும் சரி, இரண்டு செயலுக்கும் மூலமுதற் காரணமாக இருப்பது ஆர்வமே. எந்த அளவு ஆர்வம் மனிதனிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த அளவு சிறப்புடையதாக செயல் அமைகின்றது என்பது மறுக்க முடியாததாகும்.

ஆர்வம் மிக்க மனிதர்களிடம் இருந்து, எப்போதும் அதிசயத்தக்க ஆற்றல் வெளிப்பட்ட வண்ணம் இருக்கும்.அவர்களை பார்த்தமாத்திரத்திலேயே, அனைவருக்கும் பிடித்துவிடும். ஆர்வமிக்கவர்கள் எந்நேரமும், சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் இருப்பார்கள். மேலும் ஆர்வத்துடன் செய்யப்படுகின்ற எந்த வகையான வேலையும், எளிமையாக முடிவதுடன், இனிமையானதாக அமையும். அதுபோல் ஆர்வத்துடன் எவ்வளவு அதிகமான வேலை செய்தாலும், களைப்பு என்பதே தோன்றாது. ஆர்வத்திற்கு அடிப்படையானது விருப்பமாகும். வெறும் விருப்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு இருந்தால் நாம் ஒன்றும் சாதிக்க முடியாது. எப்போது விருப்பத்துடன் ஆர்வமும், செயல்பாடும் ஒன்றுசேர்ந்து வெளிப்படும்போது தான் அது வெற்றியாக அமையும்.

நம்பிக்கை என்னும் மையப்புள்ளியில் இருந்துதான் ஆர்வம் என்னும் அற்புதம் உற்பத்தியாகின்றது. நம்மிடம் இருந்து வெளிப்படும் ஆர்வம் நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் பிரதிபலிக்கும். அந்த அற்புத சக்திக்கு முன் அனைவரும் கட்டுப்பட்டு இயங்க காத்திருப்பார்கள் என்றால் அது மிகையாகாது.

ஆர்வம் எத்தகைய தன்மை படைத்த மனிதரிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த மனிதரின் உன்னதத் தன்மையை அது உணர்த்தும். உதாரணத்திற்கு, ஒரு ஞானியின் ஆர்வம் மிகப்பெரிய உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்கும். ஒரு வியாபாரியின் ஆர்வம், மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தருவதாக அமையும். ஒரு இளைஞனின் ஆர்வம், மிகப்பெரிய காரியத்தை, சாதித்துக் காட்டக்கூடியதாக இருக்கும்.

இப்படி ஆர்வத்தின் மூலம் இந்த உலகத்தில் தன்னை அடையாளப்படுத்திவிட்டுப் போனவர்கள் நிறைய. அந்த வகையிலே நாம் நம் ஆர்வத்தின் மூலம் நம்மை எப்படி அடையாளப்படுத்தப் போகின்றோம்? என்பது சிந்திக்கத்தக்கதாகும்.

ஆர்வத்தோடு அதற்கே உண்டான செயல்பாடும், தன்னம்பிக்கையும் சேருமானால் இந்த உலகில் முடியாதது என்ற ஒன்று இருக்காது. உதாரணத்திற்கு, கல்லுக்குள்ளே இருக்கும் கடவுளை வெளியே கொண்டு வரவேண்டும் என்கின்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. அதைச் செதுக்கி, சீர் செய்து, அணுஅணுவாய் ரசித்து ரசித்து ஒட்டுமொத்த அழகையும் வார்த்தெடுக்கும் திறமையும், பொறுமையும், தன்னம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இத்தகைய ஆர்வத்தை நமக்குள் எப்படி எல்லாம் வளர்க்கலாம் என்றால்,

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தை முதலில் நல்ல வண்ணம் ஆக்கல் வேண்டும்
நம்மில் நேர்மறை எண்ணங்களுக்கு நிறைய இடம் கொடுக்க வேண்டும்
நாளும் நம் திறமையின் மீது நமக்கிருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்த வேண்டும்
செய்யப்போகும் செயலால் வரக்கூடிய, மகிழ்வை, சந்தோசத்தை, அடிக்கொரு முறை நினைத்துப் பார்க்க வேண்டும்
நம் உற்சாகத்தை ஊக்குவிக்கக்கூடிய உந்துசக்தி நமக்குள்ளே உள்ளது என்பதை உணர வேண்டும்
நம் சுற்றுப்புறச் சூழலை உற்சாகம் மிக்கதாக இருக்கும்படி எந்நேரமும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்
நல்ல உடல் நலத்தோடும், சமநிலை கொண்ட மனநிலையுடனும், எப்போதும் நம் ஆரோக்கியத்தை காப்பதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்
நாம் உடுத்தும் உடையில், உருவ ஒப்பனையில், நம்முடைய அணுகுமுறையில் தேவையான மாற்றத்தை தெரிந்து அவ்வப்போது மாற்றி அமைக்க வேண்டும்
எத்தகைய செயலில் ஈடுபட்டாலும் அதற்கே உண்டான, அறிவுச் செரிவுடனும், செயல்முறை யுக்தியுடனும் இருக்க வேண்டியது முக்கியமாகும்.
இதுபோன்ற இன்னும் பல்வேறு வழிகளை நாம் படித்த, பட்ட அனுபவங்களில் இருந்து தேடிப்பிடித்து நம்முடைய ஆர்வத்தை அதிகரித்துக் கொண்டே இருப்போம். நம் ஆர்வம் என்னும் ஆணிவேர் அறுந்து போகாத வரை, நம் ஆர்வம் என்கின்ற ஜீவ ஊற்று வறண்டு போகாத வரை, நம்மால் முடியாது ஒன்றுமே கிடையாது. நம் சாதனைக்கும் எல்லை என்பதே இருக்காது.

தன்னம்பிக்கை

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ஆர்வமே மனிதனின் ஆணிவேர்

Post by முரளிராஜா on Thu Jan 22, 2015 9:22 am

ஆர்வம் இல்லையேல் வாழ்க்கையே இல்லை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum