தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar

» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காலத்தின் கேள்வி

View previous topic View next topic Go down

காலத்தின் கேள்வி

Post by முழுமுதலோன் on Tue Nov 18, 2014 12:23 pm

காலம் மனிதனிடம் ஒரு கேள்வி கேட்டது! ‘நீ விரும்புவது விடுதலையையா... ஜெயிலையா?’ என்று! ‘விடுதலையைத்தான் விரும்புகிறேன்’ என்று மனிதன் சொன்னான். அவனிடமே, ‘மரணத்தைக் கண்டு அஞ்சுவாயா?’ என்றது காலம். ‘ஆமாம்’ என்று பதிலளித்தான் மனிதன்.

‘பந்த சிறைக்குள் சிக்கிக் கிடக்கும் உங்களுக்கு முதுமையை தந்து வாழ்க்கையில் முற்றுபெரும் விடுதலையை அளிக்கிறேன். ஆனால் அதற்கு மரணம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு அழுது புரள்கிaர்களே...! ஏன்?’ என்று கேட்டது காலம்.

மனிதன் பதிலளிக்காமல் தலை குனிந்து நின்றான்!

பறவைபோல் ஆனந்தமாக பறந்து திரியும் ஆன்மா, பந்த சிறைக்குள் சிக்கி தாய் வயிற்றில் குழந்தையாகிறது. தாய் வயிற்று, குழந்தைக்கு முதல் சிறை அது நிறைவாகும் போது, திறந்த வெளி ஜெயிலான இந்த பூ உலகுக்குள் பிரவேசம். உண்மையில் இந்த உலக வாழ்க்கை மிக மிக குறுகலான, நெருக்கடியான பந்தச் சிறை.

பிறக்கும் குழந்தையானது இருவருக்கு மகன், சிலருக்கு தம்பி, அடுத்தவர்களுக்கு மருமகன்... மாமா... சித்தப்பா...! அவர்கள் ஒவ்வொருவரும் உறவு முறை என்றதொரு கம்பிக் கூண்டோடுதான் அவனை நெருக்குகிறார்கள். சில கூண்டு ஜெயில்கள் அவனை அடைக் கின்றன. சிலவற்றுக்குள் அவனே போய் அடைபட்டுக்கொள்கிறான். வளரும் போது, உறவுக் கூண்டுகள் அவனை பலவாறு இறுக்கிக்கொள் கின்றன. பந்தச் சங்கிலிகள் பலவாறு அவனை முறுக்கிக்கொள்கின்றன.

அவைகள் மட்டுமா...?

பெண்ணின் அன்பில் விசாரணைக் கைதியாக இருந்து காதல் சிறைக்குள் சிக்குகிறான்.

இன்னொரு குடும்பத்தால் துப்பறிந்து விசாரிக்கப்பட்டு, கல்யாண ஆயுள் சிறைக்குள் விரும்பிப் போகிறான். சில இடங்களில் பாச மிரட்டலோடு உள்ளே தள்ளப்படுகிறான். பெரும் பாலான பந்த சிறைகளுக்குள் காற்று புகுவதில்லை. வெளிச்சமும் இல்லை. இருட்டு, கும்மிருட்டு, மனப் புழுக்கம்.

மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ காலம் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறது. எந்த கவலையும் இன்றி ஆடிப்பாடி ஆனந்தமாய் வளர, சிறு வயது பருவம் கிடைத்தது. ஆனால் இளமைப் பருவத்தில் நின்றுகொண்டு, கடந்து போன சிறு வயதை நினைத்து ஏங்குகிறார்கள். முதுமை வந்த பின்பு, அனுபவிக்க மறந்து போன இளமையை நினைத்து இயலாமை பெருமூச்சு விடுகிறார்கள். மரணம் வரும்போது அதை ஏற்றுக் கொள்ளவோ - பந்தச் சிறையில் இருந்து விலகிப் போகவோ மனமின்றி, ‘தான் இன்னும் சில காலம் முதுமையுடனாவது வாழலாமே’ என்று நினைக்கின்றார்கள். மரணம் தேடினாலும் வரப்போவதில்லை. விலகினாலும் தள்ளிப்போவதில்லை!

முதலில் கேள்வி கேட்ட காலம் இப்போது கை நீட்டிக் காட்டியது சமீபத்தில் திருமணமான ஒரு வீட்டை. அங்கு கணவன்- மனைவி- மாமியார் என மூவர். பெண்களான இருவருக்குள்ளும் ஓயாத மாமியார் - மருமகன் சண்டை.

காலம் சொன்னது, ‘வயதில் மூத்த பெண்களுக்கு விலகிக்கொள்ளும் பக்குவம் வரவே இல்லை’ 25 வயதுவரை நான் என் மகனை வளர்த்தேன் கவனித்தேன்.

அப்பாடா இப்போது அவனுக்கு ஒரு மனைவி கிடைத்துவிட்டாள். இனி அவனை அவள் பார்த்துக்கொள் வாள். எனக்கு இனி கவலையில்லை... நல்ல ஓய்வு’ என்று அந்த சுமையை மருமகள் தோளில் ஏற்றிவிட்டு, ஒதுங்கிக்கொள்ளாமல் ஏன், ‘அப்படி நட... இப்படிச் செய்’ என்று சிறை கண்காணிப்பாளர் போல் நடந்து கொள்கிறார்கள்.

மகன் தன் மூலமாகப் பிறந்ததால், தான் மரணமடையும் வரை அவனுக்கு விடுதலை கொடுக்கமாட்டேன் என்றால் எப்படி?’ கேட்டது காலம். பதிலுக்கு திகைத்து நின்றான். மனிதன்.

விலகுதல் என்பது பேராண்மை. அந்தந்த பருவத்திற்கு வரும்போது, அந்தந்த பொறுப்பிற்கு வரும் போது சிலவற்றில் இருந்து விலகும் மனம் வேண்டும். வயதாகும் பேது உணவில், உணர்வில், எண்ணங்களில், நடத்தையில் விலகுதல் ஏற்பட்டால் 75 சதவீத பக்குவம் வந்துவிடும். விலகிப்பாருங்கள் பிரச்சினைகள் உங்களிடமிருந்து முற்றிலுமாக விலகிப் போய் விடும். சிலருடனான உறவுகளில், சில ஆசைகளில், சில பந்தங்களில் இருந்து விலக முடியாததா¡ல் பலர் எத்தனை இழ்புகளை சந்திக்கிறார்கள்!

‘விலகுவது என்பது சரி. ஆனால் ஒரு சில பந்தயங்களில இருந்து விலகவே முடியாதே!’ என்ற ஒரு கேள்வி எழுவது இயல்புதான். சிலவற்றிற்கு விதிவிலக்கு எல்லா விஷயத்திலும் உண்டு.

ஒரு பெண் சொன்னாள். ‘என் கணவர் எனக்கு செய்யக்கூடாத கொடுமையை செய்துவிட்டார். அவரிடம் இருந்து நான் விலக விரும்புகிறேன். ஆனால் ஒரு குழந்தை பிறந்துவிட்டது. அதன் எதிர்காலம் கருதி என்னால் எந்த எதிர் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை’ என்கிறாள். 25 வயதில் திருமணமாகி 28 வயதில் தாயானதால், 30 வயதோடு வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று முற்றுப்புள்ளி வைத்துவிட முடியுமா? ஒரு குழந்தைக்கு தாயானதால் அதோடு அந்தப் பெண் ணின் வாழ்க்கையே முடிந்துவிடுமா? தாய்மை வாழ்க்கையின் முடிவா?

இந்தப் பிரச்சினை பெண்ணுக்கு மட்டுமல்ல, பெண்ணால் ஆணுக்கும் வருகிறது. விலகலை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் கர்மாவை நம்புங்கள். ‘போன பிறப்பில் உள்ள கஷ்டக் கடனை நான் இந்த ஜென்மத்திலே சரிசெய்தாக வேண்டும். இந்த கஷ்டத்தை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த பந்தத்தில் இருந்து விலகாமல் வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்று கர்மாவை நினைத்து கஷ்டத்தை தாங்கிக் கொள்ளுங்கள். அந்த சொந்த சிறையை விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் ஏற்றுக் கொண்ட பின்பு, அங்கிருந்து தூற்றிக் கொண்டிருக்க கூடாது. தூற்றிக்கொண்டேதான் இருப்பேன் என்றால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

ஒரே வாழ்க்கையை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ரோஜாவும் இருக்கிறது. அதில் முள்ளும் இருக்கிறது. ஒருவர் ‘ரோஜாவில் முள் இருக்கிறதே’ என்று அந்த முள்ளையே நினைத்து வருந்தலாம். இன்னொருவரோ, ‘முள்ளில் ரோஜா இருக்கிறதே’ என்று ரோஜாவை ரசித்து மகிழவும் செய்யலாம்! முள்ளும் இருக்கிறது. மலரும் இருக்கிறது இரண்டிற்கும் இடையில்தான் வாழ்க்கை இனிக்கிறது...!

விலகல் என்பது பந்தத்திற்கு மட்டுமல்ல, பருவத்திற்கும் பொருந்தும் உடலுக்கும் பொருந்தும் உடலில் இருந்து உயிர் விலகிச் செல்ல விரும்பும் போது ஏற்படும் மரணத்திற்கும் பொருந்தும்.

மரணத்தை ஒவ்வொரு மனிதனும் தன் உடல் மூலம்தான் நினைத்துப் பார்க்கிறான்.

உலகமே, மனித உடலைச் சுற்றித்தான் இயங்குகிறது. பிறந்த போது 3 கிலோ. இன்று 60... 70 கிலோவாக வளர்ந்திருக்கிறோம். இத்தனை கிலோவாக இந்த உடலை வளர்க்கத்தான் எத்தனை மெனக்கெட்டிருக்கிறோம். உச்சி முதல் உள்ளங்கால் வரை எவ்வளவு கவனம் செலுத்துகிறோம்.

இந்த உடலுக்காகத்தான் தூங்கினோம். இந்த உடலுக்காகத்தான் விழித்தோம். விலை உயர்ந்த சோப் தேய்த்துக் குளித்து கமகமக்கும் பவுடர் பூசி, முகத்திற்கு மட்டும் ஐஸ் கியூப் ஒத்தடம் கொடுத்து, ஆளையே அசத்தும் சென்ட் அடித்து, பளிச்சென்று பகட்டாய் உடை அணிவித்து...! அடடே அத்தனையும் இந்த உடலுக்காகத்தானே!

உடலை பராமரிக்க பணம் வேண்டும். அதற்காக வேலை பார்த்தோம். உடலை குஷிப்படுத்த கோடை வாச ஸ்தலங்குளுக்கெல்லாம் பயணப்பட் டோம். ருசியாக நிறைய சாப்பிட வேண்டும் என்பதற்காக எத்தனை ஹோட்டல்களில் ஏறி இறங்கி சாப்பிட்டிருக்கிறோம். உடலுக்கு நோய் என்று எத்தனை டாக்டர்களைப் பார்த்து ஆலோசனை பெற்றோம். தலையில் ஒரு நரை. முகத்தில் ஒரு கருப்பு புள்ளி. சர்மத்தில் லேசான சுருக்கம் எத்தனை கவலை அடைந்தோம். எவ்வளவு பணத்தை இறைத்தோம்!

வயதுக்கு வந்து உடலில் பருவம் ஏறி அமர்ந்த போது எத்தனை கர்வப்பட்டோம். குழந்தையாக இருந்த போது சுவை தெரியாத முத்தம் நிறைய கிடைத்தது. சுவை தெரிந்த பின்பு திருமணமாகும் வரை அதற்காக ஏக்கத்தோடு காத்திருக்க வேண்டியிருந்தது. கல்யாணத்திற்கு ஜோடி தேடிய போதுகூட அம்மா, இவன் உயரத்திற்கும், உடல் அமைப்பிற்கும் பொருத்தமான பெண் வேண்டும் என்று அளவு எல்லாம் பார்த்தானே! எவ்வளவு முக்கியத்துவம் இந்த உடலுக்கு!

எல்லா செல்வத்தையும் காலம் எல்லோருக்கும் ஒரே மாதிரி கொடுப்பதில்லை. பலருக்கு ஓரவஞ்சனை செய்கிறது. ஆனால் எல்லா பருவ வாழ்க்கையையும் எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பிறப்பு முதல் முதுமை வரை எல்லோருக்கும் எல்லா வருவத்தையும் காலம் அள்ளிக் கொடுக்கிறது. அதை வைத்து அனுபவிக்கிறார்களா? அல்லது அல்லல்படுகிறார்களா என்பது அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது.

முகநூல்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: காலத்தின் கேள்வி

Post by ஸ்ரீராம் on Sat May 02, 2015 4:54 pm

அருமை
நல்லதொரு கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979  உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: காலத்தின் கேள்வி

Post by thamiliniyan on Sat May 02, 2015 5:53 pm

பெறுமதி மிக்க பகிர்வு ! சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

Re: காலத்தின் கேள்வி

Post by முரளிராஜா on Sun May 03, 2015 3:24 pm

மிக சிறப்பான கட்டுரை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காலத்தின் கேள்வி

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun May 03, 2015 7:34 pm

ரோஜாவில் முள் போல்இயற்கையாக அமைந்துள்ளது

மனிதன் தான் தன் இன்பத்தையும் துன்பத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: காலத்தின் கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum