தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar

» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆன்லைனில் சம்பாதிக்க எளிய வழிகள்

View previous topic View next topic Go down

ஆன்லைனில் சம்பாதிக்க எளிய வழிகள்

Post by நாஞ்சில் குமார் on Tue Nov 04, 2014 10:18 pm
வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள் இன்டர்நெட் மூலமாக எளிதாக பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. ஆனால், பலர் டேட்டா என்ட்ரி, ஜாப் ஒர்க், எம்எல்எம், எஸ்எம்எஸ் என்று ஏதாவது ஒன்றின் மூலமாக தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதால் ஆன்லைன் ஜாப் என்றாலே அலறியடித்து ஓடுகிறார்கள்.

தினமும் சிறிது நேரத்தை செலவு செய்து நேர்மையாகவும், எளிதாகவும் பணம் சம்பாதிக்க வழிகள் இதோ.....

'ஆன்லைன் சர்வீஸ்' மூலமாக டிக்கெட் புக்கிங், பில் பேமண்ட், மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ், என வீட்டில் இருந்தபடியே அனைத்து பணிகளையும் செய்து முடிக்கக்கூடிய வசதிகள் வந்து விட்டது. ஆனால் இந்த சேவைகளை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் என்று பார்த்தால் ஏற்கனவே தொழிலில் இருப்பவர்கள் தான். அதாவது மேல் வருமானத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சேவையை ஒரு கடையை வாடகைக்கு எடுத்து நடத்த வேண்டும் என்றால் கடை வாடகை, மின்சார கட்டணம், அட்வான்ஸ் என முதலீடு அதிகரிக்கும். அதே வேளையில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது (நம் அணுகுமுறையை பொறுத்து). ஆனால் இந்த சேவைகளை வீட்டில் இருந்தபடியே தொழிலாக செய்ய வேண்டுமென்றால் கண்டிப்பாக நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் வீடு இந்த சேவைகளை செய்ய ஏற்றதாக இருக்க வேண்டும். வீட்டின் முன்புறம் கடைபோல அல்லது ஒரு கம்ப்யூட்டர் வைக்கும் அளவுக்கு அறை இருந்தால் நல்லது.

* டிக்கெட் புக்கிங்:

டிக்கெட் புக்கிங் என்று பார்த்தால் ரயில், பஸ், சினிமா போன்றவைகள் முக்கியமானவை. ரயில் முன்பதிவு இப்போது அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் இதற்கான சேவை வழங்கும் மையங்கள் குறைவு தான். எனவே ரயில் டிக்கெட் புக்கிங்கை தைரியமாக செய்யலாம்.

சேவை தளங்கள்:

1. IRCTC - www.irctc.co.in. irctc என்பது அரசிடம் ரயில் முன்பதிவு செய்ய அனுமதி வாங்கிய நிறுவனம். மற்ற தனியார் நிறுவனங்கள் இவர்களிடம் உரிமம் வாங்கித்தான் தொழில் நடத்தி வருகின்றனர். ஆனால், irctc தளத்தை வீட்டில் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். தொழில் ரீதியாக பயன்படுத்த வேண்டுமென்றால் நிறுவனத்தில் இருந்து ஏஜென்சி எடுக்க வேண்டும். வீட்டில் இருந்தபடியே நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டும் சேவை செய்து சம்பாதிக்க நினைப்பவர்கள் இந்த தளத்தை பயன்படுத்தலாம். எந்த முன்பணமும் செலுத்தாமல் நாம் எடுக்கும் டிக்கெட் செலவுக்கு மட்டும் இன்டர்நெட் பேங்கிங் வழியாக பணம் செலுத்தினால் போதும்.

நீங்கள் வீட்டில் இருந்தபடியோ அல்லது கடையில் இருந்தோ தொழில் ரீதியில் பயன்படுத்த நினைத்தால் நிச்சயம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தொழில் நடத்தும் உரிமை பெற்றிருக்க வேண்டும். நீங்கள் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு கூட்டு சேவை அளிக்கும் நிறுவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கும்.

பேருந்து முன்பதிவு:

பேருந்து முன்பதிவு இன்னும் அரசு பேருந்துகளில் அனுமதிக்கவில்லை. அதனால், தனியார் பேருந்துகளுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். தனியார் பேருந்துகள் முன்பதிவு செய்வதற்கு ticketgoose.com, redbus.in ஆகிய இரண்டு தளங்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய முன்னணி இணையதளங்கள் ஆகும். இவர்களிடம் முன்பணம் செலுத்தாமல் டிக்கெட் எடுத்தால் வாடிக்கையாளர்களிடம் தான் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்க முடியும். இவர்களிடம் உரிமம் பெற்றால் டிக்கெட் விலையில் நிறுவனம் நமக்கு கமிஷன் கொடுக்கும்.

சினிமா டிக்கெட்:

சினிமா டிக்கெட்டில் அதிக வருமானம் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், டிக்கெட் விலையை விட இணையதள நிறுவனமே 15 முதல் 25 ரூபாய் அதிக விலைக்கு விற்று வருகின்றன. ஏதாவது ஒரு படத்துக்கு அதிக தேவை இருக்கும் போது பணம் பார்க்கலாம். சினிமா டிக்கெட் சேவை வழங்கும் முன்னணி தளங்கள்

1. www.ticketnew.com
2. www.shanticinemas.com
3. www.thecinema.in

பில் பேமண்ட்:

இப்போது அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களுடைய பில் பேமண்டுகளை ஆன்லைன் வழியாக செலுத்தும் வகையில் கொண்டு வந்து விட்டன. அதனால், இந்த சேவை நிச்சயம் லாபம் கொடுக்கும்.

சேவை துறைகள்:

1. இன்சூரன்ஸ்
2. தொலைபேசி கட்டணம்
3. மின் கட்டணம்

இவற்றில் இன்சூரன்ஸ் மற்றும் தொலைபேசி கட்டண சேவைகள் மட்டும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் உரிமம் பெற்று நடத்தலாம். மின்கட்டணம் செலுத்தும்படி எந்த நிறுவனமும் இதுவரை உரிமம் பெறவில்லை. ஆனால், நீங்கள் அரசு இணையதளத்திலேயே பலருக்கு பில் கட்டும் வகையில் சேவைகள் வந்து விட்டது.

அரசு இணையதள முகவரி: www.tnebnet.org/awp/tnep/ உங்கள் வீட்டில் இருந்து மின்கட்டணம் கட்டும் இடம் தொலைவில் என்றால் தாராளமாக இதை தொடங்கலாம். ஒரு கார்டுக்கு 15-20 வாங்கினால் கூட வரும் வருமானத்தில் உங்கள் வீட்டு மின் கட்டணத்தையோ, இன்டெர்நெட் பில்லையோ கட்டி விடலாம்.

அனைத்து சேவைகளையும் தரும் நிறுவனங்கள்:

கீழே உள்ள நிறுவனங்கள் அனைத்து சேவைகளையும்(கூட்டு சேவை) ஒரே உரிமத்தில் வழங்குகிறார்கள். அதாவது மொபைல்ரீசார்ஜ், டிடிஎச்ரீசார்ஜ், பேருந்து முன்பதிவு, ரயில் முன்பதிவு, விமானம் முன்பதிவு, தொலைபேசி கட்டணம் போன்ற சேவைகள் அனைத்தையும் ஒரே உரிமத்தில் குறைந்த விலைக்கு வழங்குபவை. அவை www.onestopshop.in, www.mysuvidhaa.com. www.itzcash.com, www.icashcard.in, www.beam.co.in ஆகியவையாகும்.

கவனிக்க:

* ஆரம்பத்திலேயே எந்த ஒரு நிறுவனத்திலும் உரிமம் வாங்கி நஷ்டம் அடைந்து விட வேண்டாம். முதலில் இன்டெர்நெட் பேங்கிங் வழியாக பயன்படுத்தி பார்த்து லாபம் உறுதியானால் மட்டும் உரிமம் பெறவும்.

* உரிமம் பெரும் முன் சரியான நிறுவனத்தையும், குறைந்த விலைக்கு உரிமம் கொடுக்கும் நிறுவனத்தையும் தேர்ந்தெடுக்கவும்.

* அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வீட்டில் இந்த சேவைகளை பயன்படுத்த நினைத்தால் பகுதி நேரமாக செய்யவும்(மாலை 2 மணி நேரம் செய்தாலே போதுமான அளவு லாபம் பார்க்க முடியும்)

* இனிவரும் காலங்களில் ஆன்லைன் சேவையாக வர இருப்பதால் இது நிச்சயம் எதிர்காலம் உள்ள தொழில் தான்.

மேலே கூறப்பட்ட சேவைகள் தவிர்த்து பள்ளி, கல்லூரி தேர்வு முடிவுகள், வேலைவாய்ப்பு பதிவுகள், புதுப்பித்தல் என பல சேவைகள் உள்ளன. திறமையாகவும், சரியான கணிப்பும் இருந்தால் நிச்சயம் இந்த தொழில் மூலமே சரியான எதிர்காலத்தை அமைத்து கொள்ளலாம். எந்த தொழிலாக இருந்தாலும் நம் வெற்றி நம் அணுகு முறையிலும், முழு ஈடுபாட்டிலும் தான் உள்ளது.

- தினகரன்
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: ஆன்லைனில் சம்பாதிக்க எளிய வழிகள்

Post by முரளிராஜா on Wed May 13, 2015 12:59 pm

ஆன்லைனில் சம்பாதிக்க உபயோகமான வழிகள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ஆன்லைனில் சம்பாதிக்க எளிய வழிகள்

Post by செந்தில் on Thu May 14, 2015 4:24 pm

உபயோகமான தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: ஆன்லைனில் சம்பாதிக்க எளிய வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum