தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar

» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முன்னோர் வழங்கிய மூலிகை: சின்னி

View previous topic View next topic Go down

முன்னோர் வழங்கிய மூலிகை: சின்னி

Post by நாஞ்சில் குமார் on Thu Oct 30, 2014 10:11 pmபுல்லிடத்திற் போய்ப் பொருள் தனக்குக் கையேந்தப்
பல்லை மிகக் காட்டி பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா பொருளெனக்கு தாராயோ!’’

சிலவற்றை பார்த்திருந்தாலும், அதன் பெயர், பயன் தெரியாமலேயே இருப்போம். அதன் பயன்களை தெரிந்தபின் அதுவா இது! என ஆச்சரியத்தில்  ஆழ்ந்திடுவோம். அந்த வகையில் சின்னியும் ஒன்று. வண்ண வண்ண பூக்களுடன் வேலிகளில் படர்ந்து கிடக்கும் செடிதான் சின்னி. கொடிபோல்  படர்ந்து வளரும் செடியினம். தண்டுகளில் சிறிய முட்கள் நிரம்பியிருக்கும். வெருட்டல் மணம் கொண்டது. இதன் பூக்கள் இளம் சிவப்பு, மஞ்சள்,  வெள்ளை என பல்வேறு நிறங்களுடன் காட்சியளிக்கும்.

தமிழகம், புதுவையில் சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் செழித்து வளர்ந்திருக்கும். இதன் இலை, கிழங்கு ஆகியவை மருத்துவ பயன் உடையவை  ஆகும். இதன் இலைக்கு வண்டு கடி நஞ்சு நீக்குதல், இடுமருந்தை முறித்தல், ஓடுகின்ற வாத நோயை போக்குதல், என்வென்றே தெரியாத கடி  நஞ்சை முறித்தல். மேகம் மற்றும் கணக்காய்ச்சல், மந்தம் அனைத்தும் குணமாக்கும் தன்மை கொண்டது. வண்டு கடித்தால் சிலருக்கு அமாவாசை  நாட்களில் உடலில் தடுப்பு ஏற்படும்.

அவர்களுக்கு சின்னி இலையை கைப்பிடி அளவு எடுத்து, ஒரு பூண்டு, 10 மிளகு ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்து மூன்று நாட்கள் தொடர்ந்து  காலை மாலை கொடுத்து வந்தால் வண்டுக்கடியால் ஏற்படக்கூடிய உடல் தடிப்பு மற்றும் அரிப்பு முதலியவை நீங்கும். மருந்து உண்ணும் நாட்களில்  பத்தியமாக உப்பு, புளி நீக்கவேண்டும். வண்டு கடித்தால் சிலருக்கு அமாவாசை நாட்களில் உடலில் தடுப்பு ஏற்படும். அவர்களுக்கு சின்னி இலையை  கைப்பிடி அளவு எடுத்து, ஒரு பூண்டு, 10 மிளகு ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்து மூன்று நாட்கள் தொடர்ந்து காலை மாலை கொடுத்து  வந்தால் வண்டுக்கடியால் ஏற்படக்கூடிய உடல் தடிப்பு மற்றும் அரிப்பு முதலியவை நீங்கும். மருந்து உண்ணும் நாட்களில் பத்தியமாக உப்பு, புளி  நீக்கவேண்டும்.

இடு மருந்து என்று சொல்கின்ற வசிய மருந்து உண்டவர்கள் தனது சுய சிந்தனையை இழந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு சின்னியின் இலையை  தட்டி பிழிந்து, அதனுடன் தண்ணீர் கலந்து 50மிலி அளவில் கொடுத்தால் வாந்தி ஏற்படும். அப்போது அதனுடன் வசிய மருந்தும் வந்து விழும். மேலும்  அந்த மருந்து செரித்து ரத்தத்தில் கலந்து இருந்தாலும் மூன்று நாட்கள் காலை வேலையில் மட்டும் கொடுத்து வந்தால் நஞ்சு முறிந்து அந்த நபர்  மீண்டும் பழைய நிலைக்கு வருவார். சின்னியின் வேரை தோண்டினால் கிழங்கு இருக்கும். பன்றி கறிக்கு நிகரான குளிர்ச்சி மிக்கது. அந்த கிழங்கை  எடுத்து ஆவியில் வேகவைத்து மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை நேரத்தில் உண்டு வந்தால் மூலம் தீரும். ரத்தகழிச்சல் போகும்.

மனிதர்களை வாட்டி வதைக்கும் மலசிக்கலை போக்கும் ஆற்றல் சின்னிக்கு உண்டு. சின்னி இலைப்பொடி 5 கிராம், இசப்புகோல் 50 கிராம், நிலாவரை  30 கிராம், கடுக்காய் 15 கிராம் எடுத்து அனைத்தையும் இடித்து சூரணமாக்கி சலித்து இரவு படுக்கைக்கு போகும் முன்பு 2கிராம் அளவில்  இளஞ்சூடான நீரில் கலந்து குடித்துவரவேண்டும். இதனால் காலையில் மலம் எளிதாக வெளியேறும். இது ரோஸ்லோ என்ற பெயரில் சித்த மருந்தாக  கடைகளில் கிடைக்கிறது. இதை வாங்கி 3 கிராம் அளவில் நாள்தோறும் பயன்படுத்தலாம்.சின்னி இலையை மைய அரைத்து தேள் கொட்டிய  இடத்தில் வைத்து கட்டினால் விஷம் இறங்கி குணம் கிடைக்கும். கிராமங்களில் தேள்கடிக்கு மறை பொருளாக இன்றைக்கும் இதை பயன்படுத்தி  வருகின்றனர்.

கடிவிடமுங் காணாக் கடிவிடமும் மாதர்
இடுவிடமும் ஓடுமிது வன்னி- நெடியவிழிக்
கன்னிகையே மேகங் கணக்காய்ச்சல் மாந்தமும்போம்
சின்னி யிலைக்குத் தெரித்து’’
சின்னிக் கிழங்கு சிறுசிரங்கு புண்வளர்க்கும்
உன்னிலது ஆர்ப்பன்றிக் கொவ்வுங்காண்-அன்னமே
மூல மறுக்குமது மோதுரத்தஞ் சீர் மாற்றும்
தால மறியுநிசந் தான்.’’

என்கின்றது அகத்தியர் குணவாடகம் நாம் அறிந்த செடியின், நாம் அறியாத பல்வேறு பயன்களை ஆராய்ந்து, அவற்றை மனித வாழ்விற்கு  வழங்கியவர்கள் நமது முன்னோர்கள். அவர்கள் வழியில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வாழ்வில் நலமுடன் வாழ்வோம்.

- தினகரன்
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: முன்னோர் வழங்கிய மூலிகை: சின்னி

Post by முரளிராஜா on Fri Jan 09, 2015 9:29 am

அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum