தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தோள் கொடுக்கும் தோட்டக்கலை!

View previous topic View next topic Go down

தோள் கொடுக்கும் தோட்டக்கலை!

Post by நாஞ்சில் குமார் on Tue Oct 21, 2014 10:27 pmஒளிகாட்டி : சூர்ய நர்மதா தோட்டக்கலை ஆலோசகர்

‘ஒரு செடி
தோட்டக்கலை பற்றி கூறுவதைவிட
அதிகமாக ஒன்றும்,
ஒரு கலைஞரால்
அவருடைய
கலையைப் பற்றிப்
பேசிவிட முடியாது!’ - பிரெஞ்சு எழுத்தாளர் ஜீன் காக்டீவ்

சம்பவம் 1

சூர்ய நர்மதாவின் அம்மாவுக்கு 50 வயதில் மூளைக்காய்ச்சல்... விளைவாக வலது கையும் இடது காலும் செயல்படவில்லை. நடக்க வேண்டும் என்கிற உந்துதல் இருந்ததால் பிசியோதெரபிக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார். ஆனால், கைக்குப் பயிற்சி கொடுக்க முன்வரவில்லை. உலர் மலர்களை பாடம் செய்து வைத்தால் வீட்டுக்குள் ஒரு மணம் பரவும். அதைக் காரணம் காட்டி, செவ்வந்தி, ரோஜாப்பூ இதழ்களை பிய்த்துத் தரச் சொன்னார் சூர்ய நர்மதா. அம்மா செய்ய ஆரம்பித்தார். பிறகு பட்டாணி தோல் உரிப்பு... வெங்காய தோல் உரிப்பது... கடைசியாக கொஞ்சம் கடினமான பயிற்சி... வெள்ளைப்பூண்டு தோல் உரிப்பது... கைகள் பழக ஆரம்பித்தன. இப்போது 63 வயதில் தானாகவே நடக்கவும் சமைக்கவும் செய்கிறார் அவர் அம்மா!

சம்பவம் 2

சென்னை, அண்ணா நகர் ‘மித்ரா மறுவாழ்வு மையம்’... மஸ்குலர் டிஸ்ட்ராபி, ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம் என பலவித மனநல பாதிப்புக்கு உள்ளான சிறப்புக் குழந்தைகள் அங்கே இருக்கிறார்கள். சூர்ய நர்மதாவின் கணவரின் தம்பி அங்கே பிசியோதெரபி சிகிச்சை தருபவர். பல குழந்தைகள் அதற்கு ஒத்துழைக்க மறுப்பதாக ஒருமுறை சொல்லியிருக்கிறார். அங்கே பயிற்சி அளிக்கப் போனார் சூர்ய நர்மதா. ஒரு சிறுவனுக்கு மஸ்குலர் டிஸ்ட்ராபி பிரச்னை. அதோடு எவ்வளவு முயற்சி செய்தாலும் நமக்குச் சேருவதைப் போல பெருவிரலும் ஆள்காட்டி விரலும் அந்தச் சிறுவனுக்கு ஒன்று சேரவில்லை. ஒரு கையால் வெட்டக் கூடிய கொஞ்சம் பெரிய கத்தரியைக் கையில் கொடுத்து அந்தச் சிறுவனை தோட்டத்துச் செடிகளை வெட்டச் சொன்னார். அவனும் ஆர்வமாக செய்தான். வெட்ட வெட்ட விரல்கள் ஒன்று சேர ஆரம்பித்தன. அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கை வர ஆரம்பித்தது. இன்றைக்கு அந்தச் சிறுவன் ஒரு ஜெராக்ஸ் கடையைத் தனியாக நடத்தும் அளவுக்கு முன்னேறியிருக்கிறான்.

சம்பவம் 3

அதே ‘மித்ரா மறுவாழ்வு மைய’த்தில் ஒரு பெண்... அவளுக்கு ‘பேரழகன்’ படத்தில் சூர்யாவுக்கு இருப்பது போல முதுகில் பெரிய வீக்கம். கை, கால்கள் சூம்பி இருந்தன. நடக்க முடியாது... ஊர்ந்துதான் போக வேண்டும். அது ஓர் உடல் கொல்லி நோய். ஆனால், அந்தப் பெண் நன்றாகப் பாடுவாள். அவளை ஒரு மேசையில் உட்கார வைத்து ‘கிஃப்ட் ப்ளான்ட்’ செய்யும் பயிற்சி கொடுத்தார் நர்மதா. மெல்ல மெல்ல ஆர்வமாகி, நம்பிக்கை வந்து, ஒரு மேடையில் ஏறி பாட்டுப் பாடும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தாள் அந்தப் பெண். மூன்று சம்பவத்திலும் சூர்ய நர்மதா இவர்களுக்குக் கொடுத்தது ‘ஹார்ட்டிகல்ச்சர் தெரபி’. இது மட்டுமல்ல... இவர் ஹார்ட்டிகல்ச்சர் / ஆர்பிட்ரேஷன் கன்சல்டன்ட். குறிப்பாக போன்சாய் வளர்ப்பு, மாடித் தோட்டம் அமைத்தல், பூ வளர்ப்புக்கு ஏற்பாடு செய்தல், சமையலறைத் தோட்டம் உருவாக்குதல், உலர் மலர்களை தயார் செய்தல், தோட்டத்துக்கான அடிப்படை உருவாக்கம் ஆகியவற்றிலும் நிபுணர். இதற்கெல்லாம் இவருக்கு உதவியாக, அடிப்படையாக இருப்பது இவர் படித்த‘தோட்டக்கலை’ எனும் ஹார்ட்டிகல்ச்சர் படிப்பு!

படித்த பின்னணியை, இந்தத் துறைக்கு வந்த அனுபவங்கள் குறித்து விரிவாகப் பேசுகிறார் சூர்ய நர்மதா... ‘‘திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூருக்குப் பக்கத்தில் இருக்கும் சீலாத்திகுளம் சொந்த ஊர். எட்டு ஸ்கூல்ல படிச்சேன்! அப்பாவுக்கு ஐ.ஓ.பி.ல வேலை. அவருக்கு டிரான்ஸ்ஃபர் ஆகும் போதெல்லாம் வேற வேற ஊர்ல இருக்குற ஸ்கூல்ல படிக்க வேண்டிய கட்டாயம். நாகர்கோவில் கொட்டாரத்துல படிப்பு ஆரம்பிச்சுது. அப்படியே சிவகாசி, கொல்கத்தா, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பழநி, மறுபடியும் திருநெல்வேலின்னு படிப்பு போச்சு. எனக்கு இயல்பாகவே அக்ரிகல்ச்சர்ல ஆர்வம்னு சொல்ல முடியாது. மேத்ஸ்ல கொஞ்சம் மார்க் குறைஞ்ச தால இன்ஜினியரிங், மெடிக்கல் எடுக்க முடியலை.

அப்பதான் அக்ரிகல்ச்சர் படிக்க, அதுவும் ஹார்ட்டிகல்ச்சர் படிக்க வாய்ப்பு வந்தது. அப்போ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தோடு இணைந்த படிப்பாக பெரியகுளம் பக்கத்துல இருக்குற காமாட்சிபுரத்துல மட்டும்தான் பி.எஸ்சி. ஹார்ட்டிகல்ச்சர் படிப்பு இருந்தது. அங்கே படிச்சேன். அப்புறம் எம்.எஸ்சி. ஹார்ட்டிகல்ச்சர் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல படிச்சேன். அப்பா ரொம்ப கண்டிப்பானவர். கட்டுக்கோப்பா வளர்த்தார். சுடிதார் போட கூட அனுமதி கிடையாது. கூட்டுக் குடும்பம்... என்னை படிக்க வைக்கவே யோசனை பண்ணினாங்க. பத்தாவது படிக்கும் போதே என் கல்யாணத்தைப் பத்தியெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதையெல்லாம் மீறித்தான் படிக்க வேண்டியிருந்தது. எம்.எஸ்சி.ல கோல்டு மெடல் வாங்கினேன். படிச்சுகிட்டு இருக்கும்போதே கல்யாணம்... என் கணவர் சொந்த மாமா பையன்தான்... வக்கீல். என் மாமனார் ஸ்பிக்ல ஹார்ட்டிகல்ச்சரிஸ்டா இருந்தவர்.

எனக்கு கல்யாணம் ஆனப்போ அவர் ரிட்டயர்டு ஆகியிருந்தார். அவரோட க்ளையண்ட்ஸையெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தி வச்சார். எம்.எஸ்சி. முடிச்சிட்டு வந்த மறுநாள்ல இருந்து நான் கன்சல்டிங்கை ஆரம்பிச்சுட்டேன். காலேஜ்ல கேம்பஸ் இன்டர்வியூவுல செலக்ட் ஆகியிருந்தாலும் வேற வேலை எதுக்கும் நான் போகலை. எம்.எஸ்சி. படிக்கும்போதே ஒரு ரிட்டயர்டு புரொபசர்கிட்ட போன்சாய் வளர்ப்பு கத்துகிட்டேன். அவர் எங்கெல்லாம் போய் போன்சாய் சம்பந்தமா கன்சல்டிங் குடுத்தாரோ அங்கெல்லாம் என்னை உதவிக்குக் கூட்டிட்டுப் போனார். அங்கே கத்துகிட்ட போன்சாய்தான் எனக்கு முதல் வருமானத்தை வாங்கிக் குடுத்தது. பல வீடுகளுக்குப் போய் போன்சாய் வளர்ப்பைப் பத்தி சொல்லிக் குடுப்பேன்.

போன்சாய்ங்கிறது விவசாய அறிவியல் சார்ந்த ஒரு கலை. அந்த அறிவியல் தெரிஞ்சாதான் அதுக்குத் துன்பம் தராம வளர்க்க முடியும். இந்திய தன்மைக்கேற்ப நான் போன்சாய் வளர்ப்பை செஞ்சேன். அப்புறம் வீட்டுத் தோட்டம் அமைத்தல், மாடித் தோட்டம் அமைத்தல் குறித்தெல்லாம் ஆலோசனை குடுத்தேன். மாடித் தோட்டம் அமைக்கும்போது மாடி பாதிப்படையாம எப்படி தோட்டம் அமைப்பது, எந்தெந்த காய்கறிகளை எந்தெந்த சீசனுக்குப் போடணும், ஒரு தொட்டின்னு எடுத்துகிட்டா எவ்வளவு காய்கறிகள் போடணும்கிற மாதிரி யான அடிப்படையெல்லாம் சொல்லிக் கொடுத்தேன். இதுக்கு நடுவுல ஹோம் கார்டனிங் கன்சல்டிங்கும் செஞ்சேன்.

தாம்பரம் ‘ஸ்பிக் ரூரல் டெவலப்மென்ட் சென்டர்’ல அஞ்சு வருஷம் ஃபேகல்டியா (சிறப்பு ஆசிரியர்) இருந்தேன். அப்போ அது மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜுக்குள்ள இருந்தது. இப்போ தூத்துக்குடிக்கு மாறிடுச்சு. ஓரளவு இன்வெஸ்ட் பண்ணி, நல்ல வருமானம் எடுக்குற தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கும் பெண்களுக்கும் சொல்லிக் குடுத்தேன். 3 நாட்கள் ஆண்களுக்கும் ஒரு வாரம் பெண்களுக்கும் வகுப்புகள் நடக்கும். நர்சரி, சிறுதொழில், விவசாயம் சம்பந்தப்பட்டவியாபாரம்னு பெண்களுக்கு சொல்லிக் குடுத்தேன். ஆண்களுக்கு நிலங்களை ஒண்ணு சேத்து விவசாயம் பண்ணினா நல்ல லாபம் பார்க்கலாம்னு சொல்லிக் குடுத்தேன். எனக்குத் தெரிஞ்சு நாலஞ்சு பேரு அசோசியேஷன் ஃபார்ம் பண்ணி, திண்டி வனத்துல மல்லிகை, வாழை எல்லாம் பயிர்பண்ணினாங்க.

இதெல்லாம் பண்ணிகிட்டு இருக்கறப்போவே ஆன்லைன்ல கன்சல்டிங் குடுத்துகிட்டு இருந்தேன். வீட்ல தோட்டம் போடுறதுல இருந்து 100 ஏக்கர் தோட்டம் போடுற வரைக்கும் ஆலோசனை. 5 ஏக்கர் நிலம் இருந்தா அது முழுக்க நெல், கரும்புன்னு போடுவோம். அப்படிப் போடாம, நெல்லு இல்லாம நாம வாழ முடியாது இல்லையா? அதை ஒரு ஏக்கர்ல விளைய வைக்கறது. சில ஊருக்குன்னு சில பயிர் இருக்கும்... வாழை, கரும்புன்னு. அதுக்கு ஒரு ஏக்கர். அப்புறம்... காய்கறி, பழத்துக்கு அரை ஏக்கர். இன்னொரு அரை ஏக்கர்ல பூவோ, கீரையோ! அடிக்கடி போட்டு, டெய்லி மார்க்கெட்டுக்கு போற மாதிரி. இன்னொரு ஏக்கர்ல மரப் பயிர்கள்... சவுக்கு மாதிரி. இப்படி பல பயிர் முறையை (மல்டி கிராப்பிங் சிஸ்டம்) சொல்லிக் கொடுத்தேன். பூவுல, கீரைல தினசரி வருமானம்.

காய்ல மாத வருமானம். பழங்களும் மரப் பயிர்களும் நீண்ட கால வருமானத்துக்கு. அதை பிள்ளைங்களோட படிப்பு, கல்யாண செலவுக்கு வச்சுக்கலாம். மாத, தின வருமானத்தை வைத்து விவசாயத்துக்குத் திரும்பப் பணம் போடவும் செலவுக்கும் பயன்படுத்தலாம்னு கன்சல்டிங் குடுக்க ஆரம்பிச்சேன். அதோட விவசாயம் சார்ந்த ஆர்பிட்ரேஷன் கன்சல்டன்டாகவும் இருக்கேன். பலபேர் சாதாரண தோட்டக்காரரை வச்சே தோட்டம் போட்டுடுவாங்க. எங்களை கூப்பிட்டா செலவாகும்கிற எண்ணம்தான் காரணம். அதனால இந்தத் துறையில வித்தியாசமா ஏதாவது செஞ்சுகிட்டே இருக்கணும். எந்தத் துறையா இருந்தாலும் மத்தவங்களோட சேர்ந்து ஆட்டு மந்தை மாதிரி போனா உரிய அங்கீகாரம் கிடைக்காது. புதுசு புதுசா ஏதாவது செஞ்சாதான் மேல வர முடியும். அதைத்தான் நான் செஞ்சேன்.

ஹார்ட்டிகல்ச்சர் தெரபிகூட பி.எஸ்சி. படிக்கும்போது நானா என் ஆர்வத்துல கத்துகிட்டதுதான். இப்போ ஆர்கிட் மலர் (ளிக்ஷீநீலீவீபீ) தொடர்பா கன்சல்டிங் குடுத்துகிட்டு இருக்கேன். அது 15, 20 நாள் கெடாம இருக்கும். அது மண்ணுல வளராது. செங்கல், கரி, தென்னை நெத்துல வளரும். வாரத்துக்கு ஒரு தடவை உரம், மருந்து எல்லாம் போடவேண்டியிருக்கும். ரொம்ப பாதுகாப்போட, பசுமை இல்லத்துலதான் பண்ண முடியும். ஆர்கிட் கோடிக்கணக்குல லாபம் ஈட்டித் தரக்கூடிய பணப்பயிர். ஒரு செடியோட விலையே 150 ரூபா. நட்சத்திர ஓட்டல்கள்ல இதைப் பார்க்கலாம். இது தவிர அக்ரிகல்ச்சர் லேண்ட் வேல்யூ பண்ணிக் குடுக்கறதையும் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

இயற்கைங்கிறது அற்புதம்! செடி, கொடிகள் நமக்குத் தோழி மாதிரி. யாரிடமும் சொல்ல முடியாத ரகசியங்களை தாவரங்களிடம் சொல்லலாம்... அவை கேட்கும். காயத்ரி மந்திரம் சொல்லி வளர்க்கப்பட்ட பலா மரம், நிறைய பலாப்பழங்களைக் கொடுத்ததை என் கண்ணால பார்த்திருக்கேன். ஜே.சி.போஸ் ‘இசையாலே செடி வளர்த்தேன்’னு சொன்னது இந்த அடிப்படையில்தான். காத்தே இல்லாத ரூம்ல ஒரு செடியை வைத்துவிட்டு, நாம் அசைந்தால், நம் அசைவுக்கேற்ப செடி அசையும். நம் அலைவரிசையும் அதன் அலை வரிசையும் ஒன்றாகிவிடும். நம்முடன் பேசும்...

இதையெல்லாம் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். விவசாயப் படிப்புக்கு இங்கே உரிய மரியாதை கிடையாது. ஆனா, அடுத்த 10 - 15 வருஷத்துக்கு விவசாயத்துக்கு முக்கியத்துவம் குடுத்தாதான் இந்தியப் பொருளாதாரம் நிலைத்து நிற்கும். அதனால இனி விவசாயம் படிக்கிற மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமா இருக்கும். என்ன... என்னை மாதிரி நாலஞ்சு விஷயத்துல கவனம் செலுத்தாம, ஒரே ஒரு விஷயத்துல கவனம் செலுத்தலாம். ஏலக்காய்னா அதுக்கு மட்டும் ஆலோசனை சொல்றது மாதிரி... அப்படி செஞ்சா இந்தத் துறையில மேலே மேலே போகலாம்!’’

- தினகரன்
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: தோள் கொடுக்கும் தோட்டக்கலை!

Post by முரளிராஜா on Sat Mar 14, 2015 8:54 am

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum