தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன்

» MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
by thiru907

» காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
by thiru907

» AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
by thiru907

» TODAY'S ALLEPAPERS 18-01-2018
by thiru907

» ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
by thiru907

» FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
by thiru907

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன்

» ஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு
by thiru907

» ஆயக்குடி மையத்தின் பொது தமிழ் மாதிரி தேர்வு (200 mark)
by thiru907

» TNPSC CCSE IV தேர்வுக்கான நோக்கில் தயாரிக்கப்பட்ட முக்கிய 635 வினாக்கள்
by thiru907

» குரூப் 4 தேர்விற்கு தேவையான முக்கிய குறிப்புக்கள்
by thiru907

» அன்னை IAS ACADEMY நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV WEEKLY TEST
by thiru907

» கணிதத்தில் 1 மணிநேரம் செய்து பாருங்கள்
by thiru907

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» திண்ணை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம்-தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark நடப்பு நிகழ்கவுகள்
by thiru907

» அகரம் A2 ACADEMY இப்போது நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV தேர்வு
by thiru907

» Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) SINGLE PDF
by thiru907

» ENGLISH GRAMMAR FROM 6th to 10th Samacheer books
by thiru907

» RADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு
by thiru907

» சிகரம் அகாடமி வெளியிட்ட முக்கிய மாதிரி தேர்வுகள் விடைகளுடன்
by thiru907

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» RADIAN ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல்
by thiru907

» பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்து important points to remember(full book)
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (07-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» FOR GENERAL ENGLISH STUDENT NOTES ONLY FULL PAGES NOTES FROM GK TODAY. ECONOMY,HISTORY,SCIENCE,GEOG
by thiru907

» பொது அறிவு உலகம் [EXCLUSIVE MAGAZINE][HD QUALITY] march to jan 2018
by thiru907

» இந்திய வரலாறு முழு புத்தகம் from ஆகாஷ் IAS அகடாமி
by thiru907

» சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!
by rammalar

» விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
by rammalar

» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
by rammalar

» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
by rammalar

» திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான்
by rammalar

» அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
by rammalar

» கதாநாயகியாக அறிமுகம் 'பிக் பாஸ்' ஜூலி!
by rammalar

» விசுவாசம்' இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகல்?
by rammalar

» 10 ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாஸுடன் இணைவது மகத்தானது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மன அழுத்தம் என்றால் என்ன?

View previous topic View next topic Go down

மன அழுத்தம் என்றால் என்ன?

Post by நாஞ்சில் குமார் on Tue Oct 21, 2014 10:00 pmநாம் ஒவ்வொரு நாளும் எத்தனையோ முகங்களைப் பார்க்கிறோம். அவற்றில், எத்தனை முகங்களில் சிரிப்பையோ, சிறு புன்னகையையோ பார்க்க முடிகிறது? ஏன் முகங்களில் இத்தனை இறுக்கம்? ஒரு நாளில் எத்தனை முறை மகிழ்ச்சியாக மனம் விட்டு சிரிக்கிறீர்கள்? எத்தனை முறை கோபம் / பதற்றம் / பயம்/ கவலை கொள்கிறீர்கள்? ‘இவ்வுலகில் எனக்கு எந்த பிரச்னையுமே இல்லை’ எனச் சொல்லும் யாராவது ஒருவரை இதுவரை நீங்கள் சந்தித்ததுண்டா?

தொந்தரவுகள், ஏமாற்றங்கள், காலக்கெடுக்கள் என எல்லாம் கலந்ததாகவே உள்ளது நம் அன்றாட வாழ்க்கை. பள்ளி செல்லும் குழந்தைகளைக் கேட்டால் படிப்பு, ஆரோக்கியமற்ற குடும்பச் சூழல், இணக்கமில்லாத சக மாணவர்கள் போன்றவை பிரச்னை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள். டீன் ஏஜ் குழந்தைகளோ, பாடத்திட்டப் பளுவுடன் அவர்களின் வயதுக்குரிய விஷயங் களான காதல், தோற்றம், புரிந்து கொள்ளாத பெற்றோர், ஆசிரியர், கேலி செய்யும் நண்பர்கள் என பல்வேறு விஷயங்கள் தினம் தினம் தாக்குவதாகச் சொல்கிறார்கள்.

வேலைக்குச் செல்வோரோ அதிக வேலைப்பளு, மோசமான சூழல், குறைந்த சம்பளம், நிரந்தரமற்ற வேலை, இணக்கமற்ற மேனேஜர், சக ஊழியர்கள், சலிப்பு தட்டும் வேலைத் தன்மை, விருப்பமில்லாத வேலையைப் பார்ப்பது என பல விஷயங்கள் பிரச்னை அளிப்பதாகக் கூறுகிறார்கள். வெளியில் செல்கிறவர்களுக்குத்தான் இவ்வளவு பிரச்னை என்றால், வீட்டிலேயே இருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு பிரச்னை இல்லையா என்ன? புகுந்த வீட்டினருடன் சுமுக உறவு இல்லாதது, அதனால் சண்டை சச்சரவுகள், குடிகார கணவன், அனுசரித்துப் போகாத கணவன், தொந்தரவு கொடுக்கும் பிள்ளைகள், வேலைக்காரி பிரச்னை எனப் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதாகச் சொல்கிறார்கள்.

முதியோர் களோ நலிந்து வரும் உடல்நலம், பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை, வீட்டுச்சூழல், போதிய பணமின்மை, தனிமை, வெறுமை, கணவன்/மனைவியின் மரணம், எப்போதும் ‘சும்மா’வே இருக்க வேண்டிய நிர்பந்தம், தங்கள் கருத்தை யாரும் மதிப்பதில்லை என்ற உறுத்தல், கடைசி காலம் குறித்த பயம் போன்றவை தொந்தரவு அளிப்பதாகக் கூறுகிறார்கள். பிரச்னைகளின் காரணிகள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம்... ஆனால், அந்தப் பிரச்னை களைச் சமாளிக்க முடியாமல், நவீன வாழ்க்கை முறையில் மன அழுத்தத்துக்கு ஆளாகாதவர்களை(Stress)  பார்ப்பது மிக அரிது.

பெரும்பாலும் மனஅழுத்தம் என்றாலே அது மனதுக்கும் / உடலுக்கும் ஒவ்வாத விஷயங்களாலேயே ஏற்படும் என பலர் நம்புகின்றனர். அது தவறு. Eustress எனப்படும் மன அழுத்தமானது திருமணம், குழந்தைப் பிறப்பு, வேலை மாற்றம் என வாழ்வில் நல்ல தருணங்களில் ஏற்படக் கூடியது. Distress என்பது நெருங்கியவரின் மரணம், வேலை இழப்பு, காதல் தோல்வி எனப் பல விரும்பத்தகாத சம்பவங்களால் ஏற்படுவது. இக்காலத்தில் ஆரோக்கிய வாழ்வுக்குப் பெரிய சவாலாக இருக்கும் மன அழுத்தம், நம் உயிரைக் காப்பாற்றவே உருவானது என சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்தானே?

ஆதிகாலத்தில், மனிதன் காட்டில் நடமாடும் போது, ஒரு புலி அவன் முன் திடீரெனத் தோன்றினால், அவன் அதனை எதிர்த்து போரிட வேண்டும் (Fight) அல்லது ஓட வேண்டும் (Flight ). ஆபத்திலிருந்து காப்பாற்ற நம்மை தயார் நிலையில் வைப்பதற்காக உடலில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. நம் நரம்பு மண்டலம் புலியை பார்த்தவுடனேயே, பலவிதமான ஹார்மோன்களை (Adrenaline - Cortisol) சுரக்கச் செய்கிறது. இவை அவசர நடவடிக்கை எடுக்க வசதியாக மனிதனுக்குள் சில மாற்றங்களை செய்கின்றன.

இதயத்துடிப்பு அதிகரிக்கும்.
தசைகள் இறுகும்.
ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
மூச்சு இரைக்கும்.
புலன்கள் கூர்மையாகும்.

இந்த உடல் ரீதியான மாற்றங்கள் நம்முடைய வலிமையையும் சகிப்புத்தன்மையையும் கூட்டி, கவனத்தை அதிகரிக்கச் செய்து, ஆபத்திலிருந்து காப்பாற்றும். மன அழுத்தத்தினால் ஏற்படும் இவ்வகை மாற்றங் கள் உடலுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து (Physical threats  மிருகங்கள்/திருடர்களின் தாக்குதல், இயற்கைப் பேரழிவு, விபத்து போன்ற நிகழ்வுகள்) ஒரு மனிதனைக் காப்பாற்றவே செயல்படுகின்றன. புலியிடமிருந்து தப்பித்தவுடன் மனஅழுத்தம் குறைந்து, உடல் பழைய நிலைக்கு திரும்பி விடும். இன்றைய காலகட்டத்திலோ நம் உயிருக்கு ஏற்படும் இவ்வகை அச்சுறுத்தல்கள் குறைந்து நவீன கால பிரச்னைகளான பணத்தேவை, தேர்வு, நச்சரிக்கும் கணவன்/மனைவி, வேலைப்பளு, அலுவலகப் பிரச்னை, பிடிக்காத திருமணம்/வேலை போன்றவை அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

பல நேரங்களில், உளவியல் அச்சுறுத்தல்களை (Psychological threats) ஏற்படுத்தும் காரணிகளை விட்டு ஒருவரால் தப்பிக்க இயலாது (திருமணம், தேர்வு போன்றவை...). இப்படி அன்றாடம் ஏற்படும் உளவியல் அச்சுறுத்தல்களால், மன அழுத்த ஹார்மோன்கள் தொடர்ந்து சுரந்து கொண்டி ருக்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது. இப்படித் தொடர்ந்து ஏற்படும் ரசாயனம் மற்றும் நரம்பியல் மாற்றங்களால் பல்வேறு உடல் பாகங்கள் சேதம் அடைகின்றன. இது இன்னும் பல மோசமான விளைவுகளை உடலுக்கும் மனதுக்கும் ஏற்படுத்தும்.

ஏன் இவ்வளவு மன அழுத்தம் உங்களுக்கு? இப்படி யாரைக் கேட்டாலும், பல வெளிக்காரணிகளை பட்டியல் இடுவார்கள். உண்மையில், பல நேரங்களில் வெளிக் காரணங்களால் மட்டுமே மன அழுத்தம் ஏற்படுவதில்லை. ஒருவர் தமக்குத் தாமே அதிக அளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்வதும் உண்டு. எப்படி? உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் குறுகிய கால மன அழுத்தமானது (மிருகம் / திருடன் தாக்குதல், இயற்கை சீற்றம்) எல்லா மனிதனுக்குமே ஒரே மாதிரி தாக்கத்தையே ஏற்படுத்தும். இதர வகை காரணங்களால் ஏற்படும் மன அழுத்தங்கள் எல்லா மனிதனையும் ஒரே விதமாகத் தாக்குவதில்லை. ஒருவருக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சம்பவம்/காரணி, மற்றொருவருக்கு சிறிய தாக்கத்தைக்கூட ஏற்படுத்தாமல் இருக்கலாம். சிலர் சிறிய பிரச்னைக்கே மனம் தளர்ந்து போய் விடுவார்கள்.

சிலரோ, பெரிய பிரச்னைகளை சந்தித்தாலும், அதனை மன உறுதியோடு எதிர்கொண்டு மீண்டு வருவார்கள். பிரச்னை ஒன்றே என்றாலும், அதனை எதிர்கொள்பவரின் மனநிலைக்கேற்ப அதன் விளைவுகள் நிர்ணயிக்கப்படுகின்றன.  குமார் மற்றும் சேகர் ரயிலில் பிரயாணம் செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். இருவருக்குமே ஒரு பெரிய நிறுவனத்தில் காலை 10 மணிக்கு இன்டர்வியூ. திடீரென ரயில் ஏதோ காரணத்தினால் நின்று விடுகிறது. சரியாக 10 நிமிடம் கழித்து ரயில் நகர்ந்தது. இடைப்பட்ட 10 நிமிடத்தில்  இருவரும் எப்படி இந்த பிரச்னையை  அணுகினார்கள் எனப் பார்ப்போம்.

ரயில் நின்றவுடன் குமார் ஏகத்துக்கும் டென்ஷன் அடைந்து, ‘ரயில்வே துறையே இப்படித்தான்... இவர்களெல்லாம் ஒழுங்கா வேலை செய்றதே இல்ல... இதே வேலையாப் போச்சு’ என அருகில் இருப்பவர்களிடம் புலம்பித் தள்ளினான்.  படபடப்புடன் காணப்பட்டான். ‘எனக்கு மட்டும் இப்படி நடக்கிறதே’ என மனம் வெறுத்தான். ‘இந்த வேலையும் கண்டிப்பாகக் கிடைக் காது’ என நினைத்தான். வீட்டிலிருந்து அந்நேரம் போன் வரவே, ‘உன்னால்தான் லேட்’ என மனைவியிடம் எரிந்து விழுந்தான். மீண்டும் ரயில் நகர்ந்தால், அலுவலகத்துக்குச் சரியான நேரத்தில் போய் சேர்ந்தான். கோபமும் படபடப்பும் இன்னும் குறையாத குமார், இன்டர்வியூவில் தேர்வாகவில்லை. தன் தோல்விக்கு தன் மனைவியும் தன் நேரமும் காரணமென மேலும் வருத்தமடைந்து தன் டென்ஷனைக் குறைக்க மது அருந்தினான். பின்னர் வீட்டுக்குத் தாமதமாக சென்று மனைவியுடன் மேலும் சண்டையிட்டு, தன் வாழ்க்கையை நொந்து கொண்டான்.

சேகர் ரயில் நின்றவுடன் வெளியே  எட்டிப் பார்த்து நிலவரத்தைப் புரிந்து கொண்டான். இறங்கி நடந்து போக வழி உள்ளதா எனப் பார்த்தான்... வழி ஏதுமில்லை என தெரிந்தவுடன், வீட்டுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தான். இந்த விஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை உணர்ந்தவனாக, ‘நடப்பது எல்லாம் நன்மைக்கே’ என தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டான். ‘வருத்தப்படுவதால் மட்டுமே வண்டி நகராது’ என்பதை உணர்ந்து, ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான். ரயில் நகர்ந்ததால், அலுவலகத்துக்கு சரியான நேரத்தில் போய் சேர்ந்த சேகர், கேட்ட கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்ததால் வேலையும் கிடைத்தது. மகிழ்ச்சியுடன் இனிப்பு வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.
இக்கட்டான தருணத்தில் ரயில் நின்றது என்பது, இருவருக்குமே பெரிய அளவு மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சம்பவம்.

இருவரும் அதை அணுகிய விதம்தான் வேறு. இதற்குக் காரணம் இவர்களின் ஆளுமை (Personality). பொதுவாக மனிதர்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவது அவர்களது உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள்தானே? பிரச்னைகளை அணுகும் போது அதை எந்தளவு வெற்றிகரமாகச் சமாளிக்கிறார்கள் என்பதை, அவர்களின் ஆளுமை நிர்ணயிக்கிறது. சேகரைப் போல சரியான விதத்தில் மன அழுத்தத்தை சமாளித்தால் (Adaptive Coping Mechanism), அது உடலை பாதிக்காமல் காப்பாற்றலாம். குமாரைப் போல, தவறான வழியில் (maladaptive coping mechanism) அதைச் சமாளிக்க முற்பட்டால், அதுவே உடல் / மன ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவித்து விடும். இந்த உதாரணத்தில், குமாருக்கு மன அழுத்தம் அதிகமாவதற்கு அவரின் ஆளுமை முக்கிய காரணம். மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடிய மற்றும் மன அழுத்தத்தை தங்கள் வாழ்வில் உருவாக்கிக் கொள்கிற சில ஆளுமைகளைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.  
கல்பனாவுக்குஎன்ன கவலை?

6 மாத காலமாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பதற்றமாகவும் பயமாகவும் இருப்பதாக கூறினார் கல்பனா. ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. ‘எதைப் பார்த்து பயப்படுகிறீர்கள்’ என கேட்டபோது, ‘இதுதான்’ என அவரால் குறிப்பிட்டுச் சொல்லமுடியாதபடி, பணம், ஆரோக்கியம், வேலை, குடும்பம் என ஒன்றன் பின் மற்றொன்றாக அவரை கவலையில் ஆழ்த்துவதாகக் குறிப்பிட்டார். நடுக்கம், தலைவலி, எரிச்சல், ஜீரணக் கோளாறு போன்றவை அடிக்கடி ஏற்படுவதால், நிறைய விடுப்பு எடுக்க வேண்டியிருப்பதாகவும் வருத்தப்பட்டார். எந்த நேரமும் எதையேனும் நினைத்துக் கவலையடைவதாகவும் கூறினார். அலுவலகத்தில் யாரேனும் சாதாரணமாகக் கோபப்பட்டால் கூட, அதையே நினைத்து பல மணி நேரம் வருத்தப்படுவதாகவும் இதனால் தன் வேலை பறிபோய் விடுமோ என பதற்றமாவதாகவும் சொன்னார்.

எந்த விஷயத்திலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதாகவும் ‘ஏதோ ஆபத்து நேர்ந்து விடுமோ’ என மனம் படபடப்பாக உள்ளதாகவும் பயந்தபடியே கூறினார். இவை காரணமற்ற கவலைகள் என உணர்ந்தாலும், கவலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறிக் கொண்டே குலுங்கி அழ ஆரம்பித்தார். கல்பனா பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து, எந்த உடல்நல பிரச்னையும் இல்லை என அறிந்த பிறகே, என்னிடம் வந்தார். சில உளவியல் பரிசோதனைக்கு பின்னர், கல்பனாவுக்கு ஏற்பட்டது ஒருவித மனப்பதற்ற நோய் (Generalized Anxiety Disorder) என்பது தெரிய வந்தது. இந்த மனநலக் கோளாறு ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

மரபணு ஓரளவு பங்கு வகித்தாலும் பொதுவாக ஒருவரின் வாழ்க்கையில் அதிக மன அழுத்தம் ஏற்படும் தருணத்தில் இம்மாதிரியான உளநோயின் அறிகுறிகள் வெளிப்படையாக உணரப்படும். கல்பனா சிறு வயதிலிருந்தே அவர் அம்மாவைப் போன்று பயந்த சுபாவம் கொண்டவர். அவரது தாயார், தன் கணவனின் குடி மற்றும் சந்தேக புத்தியால் விவாகரத்து பெற்று கல்பனாவை தனியே வளர்த்து வந்துள்ளார். சென்ற ஆண்டி லிருந்து மாப்பிள்ளை தேடுவதாக அவர் அம்மா சொன்னதிலிருந்து, கல்பனாவுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. திருமணம் பற்றிய பயம்,  அவநம்பிக்கை, ஆண்கள் மேலுள்ள வெறுப்பு ஆகியவை இனம் புரியாத பயத்தை ஏற்படுத்தியுள்ளன.

பல வாரங்கள் மனநல ஆலோசனைக்குப் பின்னர் கல்பனாவின் உடல் ரீதியான பிரச்னைகள் மற்றும் கவலைகள் குறைந்தன. சில மாதங்களில், கல்பனா வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை சமாளி க்கும் பக்குவம் பெற்றார். திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார். எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லை என்பதையும் உணர்ந்தார். இப்போது, வேலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து, மனநிறைவுடன்திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் கல்பனா.கல்பனா மற்ற இளம் பெண்களைப் போலத்தான் தோற்றம் கொண்டுள்ளார். ஆனால், அவர் அனுபவிக்கும் மன உளைச்சலை, அவராலும் ஒரு மனநல ஆலோசகராலும் மட்டுமே உணர முடியும்.

மனநலம் குன்றியவர்களைத் தோற்றத்தைப் பார்த்தே கண்டுபிடித்து விடலாம் என்பது தவறான எண்ணம். அப்படியோர் கருத்து ஊடகத்தினாலும் சாலையோரம் பார்க்கும் மனச்சிதைவு நோயினால் (Schizophrenia) பாதிக்கப்பட்டவர்களைப் பார்ப்பதாலும் ஏற்படுகிறது. பெரும்பாலான மனநலம் குன்றியவர்கள், நாம் தினசரி வாழ்வில் பார்க்கும் பத்து பேரில் ஒருவராகவும் இருக்கலாம். மனநோய் குறித்த தவறான கண்ணோட்டம் மாறினால்தான் பலரும் விழிப்புணர்வுடன் கல்பனாவைப் போல தங்கள் பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுக்க முன் வந்து, நிம்மதியாக வாழ்வை ரசிக்க முடியும்.

- தினகரன்
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: மன அழுத்தம் என்றால் என்ன?

Post by முரளிராஜா on Fri Jan 16, 2015 6:45 am

மன அழுத்தம் பற்றிய விரிவான விளக்கத்துக்கு நன்றி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மன அழுத்தம் என்றால் என்ன?

Post by செந்தில் on Sat Jan 17, 2015 3:59 pm

மன அழுத்தம் பற்றிய சிறப்பான பகிர்வுக்கு நன்றி அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மன அழுத்தம் என்றால் என்ன?

Post by mohaideen on Sun Jan 18, 2015 1:02 pm

நல்ல தகவல்கள்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: மன அழுத்தம் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum