தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இயல்பான உணவும் வலுவான உடலும்

View previous topic View next topic Go down

இயல்பான உணவும் வலுவான உடலும்

Post by செந்தில் on Fri Oct 10, 2014 7:59 pm

போட்டி நிறைந்த இன்றைய உலகத்தில் நம் ஒவ்வொருவருடைய உடைமைகளையும், உடலையும் பாதுகாத்துக் கொள்ளும் பெரும் போட்டியில் ஈடுபட்டிருக்கிறோம். அந்தப் போட்டியில் நம் உயிரையும் உடல் நலத்தையும் பாதுகாத்துக் கொள்ள இன்சூரன்ஸ் என்னும் உயிர் உடல் பாதுகாப்பு அமைப்புகளைத் தஞ்சம் அடைகிறோம். உடல் நலக் காப்பீட்டு வணிகள் (Health Insurance) ஆண்டுக்கு 20 சதவீதம் வளர்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உங்களது உடல் நலக் காப்பீடு உங்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தருகிறதா என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?
எல்லாவற்றையும் நிரந்தரமாக்கிக் கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கின்ற நாம் வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் என்பதை மறந்து விடுகிறோம். நம் இலக்கு எது என்னவென்பதும், எப்போது நாம் இறக்கி விடப்படுவோம் என்பதும் நம்மில் எவருக்கும் தெரியாத ரகசியம். எதையும் நிரந்தரமாக்கிக் கொள்ள முடியாத நிலையில், நம்மில் எத்தனை பேர் இதை உணர்ந்து இயற்கையுடன் ஒன்றி வாழ வேண்டும் என்ற உணர்வுடன் இருக்கிறோம்.
உலகத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்துக்கும் உணவு என்னும் சக்தி தேவைப்படுகிறது. ஆனால் இங்குள்ள உயிரினங்களின் தாவரங்கள் மட்டுமே சூரிய ஒளியைப் பயன்படுத்தி, ஒளிச்சேர்க்கை (Photo synthesis) என்னும் முறையில் தங்களுக்கு வேண்டிய சக்தியைப் பெறுகின்றன. பிற உயிரினங்கள் அனைத்தும் தங்கள் வாழ்க்கைக்கு ஒன்றினை ஒன்று சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது. இந்த வாழ்க்கை முறையில் மனித இனம் முதல் வரிசையில் உள்ளது. மனிதன் தாவரங்களை நேரடியாகவோ அல்லது சாகபட்சிணிகள் எனப்படும் புல் பூண்டுகளை உண்டு வாழ்கின்ற விலங்குகளையோ அல்லது அந்த சாக பட்சிணிகளை உண்டு வாழ்கின்ற மாமிசச பட்சணிகள் எனப்படும் விலங்குகளையோ உண்டு தான் உயிர் வாழ்கிறான். முடிவாகப் பார்க்கின்ற போது மனிதன் பெறுகின்ற சக்தி தாவரங்கள் மூலம் பெறப்படுபவையே.

இறைவனது படைப்பில் மிக உயர்ந்த நிலையில் இருப்பதாகக் கருதப்படும் மனிதர்களால் ஏன் சூரிய ஒளியின் உதவி கொண்டு தன் உடலுக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை. ஏனெனில் தாவரங்கள் பெற்றிருக்கும் அந்தச் சிறப்பு மிக்க ஒளிச்சேர்க்கை (Photo synthesis) முறையை மனித உடல் பெற்றிருக்கவில்லை. ஆனால் அதற்கு மாற்றாக தாவரங்கள் தருகின்ற சத்துக்களைத் தரப்படுத்திப் பயன்படுத்திக் கொள்கின்ற திறத்தை இயற்கை நம் உடலுக்குத் தந்திருக்கிறது. உண்ணுகின்ற உணவைக் சீரணித்து நம் உடலுக்கு வலுவளிக்கின்ற வகையில் நமது சீரண உறுப்புக்கள் அமைக்கப் பெற்றுள்ளன.

இந்த அடிப்படைக் கருத்தை அறிந்து செயல்படாமையே நமது உடல்நலக் குறைபாடுகளுக்கெல்லாம் காரணம். ஆதி மனிதர்கள் தங்களுக்கு வேண்டிய சக்தியைப் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும், கிழங்குகளையும் உண்பதன் மூலம் பெற்றுள்ளனர். இதை இன்றைய மனிதர்கள் மறந்தே விட்டனர். இயற்கை உணவுகளை உண்டு அவற்றைச் செரிக்கச் செய்வதற்கு என்றே தமது செரிமான உறுப்புகள் அமைக்கப் பெற்றுள்ளன என்ற உண்மையை இன்றைய மனிதர்கள் உணராமல் போனார்கள். தம் உடலுக்குத் தேவையான சக்தியை, உடல் திறனை வேதியியல் பொருட்களை (Chemicals) அளவின்றிக் கொண்டுள்ள ஆயத்த உணவுகள் (Redy made foods) மூலம் பெறத் தொடங்கியுள்ளனர். இயற்கை நமக்கு அளித்த அற்புதமான சீரண, செரிமான உறுப்புகளைச் செயல்பட விடாது முடமாக்கி விட்டுத் தமக்கு வேண்டிய சக்தியைப் பொடிகள் (Powders) நீர்மங்கள் (Syrup) மாத்திரைகள், வில்லைகள் வடிவில் உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

Supplement என்ற ஆங்கில வார்த்தைக்கு பற்றாக் குறையை இட்டு நிரப்புவது, நிறைவாக்குவது, கூடுதல் வளம் பெறச் செய்வது என்று பொருள். அதற்கு முழுமையான என்று பொருளில்லை. உடல் செரிமான உறுப்புகளில் சில சறு குறைபாடுகள் காரணமாகச் சில பொருள்களை உட்கிரகிக்க முடியாமல் போகலாம். உண்ணுகின்ற உணவில் ஓரிரு சத்துப் பொருள்கள் குறைவாக இருக்கலாம். அது போன்ற வேளைகளில் பற்றாக் குறைப் பொருளை அளித்து நிரப்புவதே Supplement களின் வேலை. அவ்வாறின்றி ஒரு போதும் அவை முழு உணவாக மாட்டா என்ற உண்மையை நாம் உணர வேண்டும். எனவே ஏதாவது ஒன்றிரண்டு பற்றாக்குறை ஏற்படும் போது Supplement என்பவற்றை நாம் உட்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் நமக்குத் தேவையான அனைத்துச் சக்தியையும், சத்துப் பொருள்களையும் கண்ணாடிக் குப்பிகளிலும் பிளாஸ்டிக் டப்பாக்களிலும் விற்கப்படுகின்ற ஆயத்த உணவுகளால் அடைய முடியாது.

சுருக்கமாகச் சொல்லப் போனால் நாம் உண்ணுகின்ற உணவுப் பொருள்களை நமது சீரண உறுப்புகள் குளுகோசாகவும், அமினோ அமிலங்களாகவும், கொழுப்பு அமிலங்களாகவும் மாற்றம் பெறச் செய்து உடலுக்குள் கிரகிக்கின்றன. உணவில் குளுகோஸ் சற்று அதிகமானால் அது கிளைகோஜனாக ஈரலில் சேமித்த வைக்கப்படுகிறது. கால்ஷியம் சற்று அதிகமானால் எலும்புகளில் சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர் தேவைப்படும் போது இவை உதவுகின்றன. மேலும் இயற்கை உணவுகளில் பல நுண்ணிய சத்துப் பொருள்களும் உள்ளன. இவைகளை உண்ணுவதைத் தவிர்த்து பதனப் பொருட்களும் (Preservative) வண்ணங்களும் (Colour) வாசனைப் பொருட்களும் (Essence) மற்றும் பிற வேதிகளும் (Chemicals) சேர்க்கப்பட்ட ஆயத்த உணவுகளை உண்டு நமக்குத் தேவையான சக்தியைப் பெறலாம் என எண்ணுவது அறிவுடைமை ஆகாது. இயற்கையான உணவுப் பொருள்கள் உடலுக்குள் சென்று ஆக்ஸிஜனேற்றம் பெற்றுச் சக்தியாக மாறி உடலுக்குள் சேர்வது தான் உடலுக்கு நலம் தரும் அவ்வாறின்றி ஆயத்த உணவுகளை உண்டு உணவுத் தேவையை அகற்றி விட நினைப்பது பெட்ரோல் காரில் டீசலை நிரப்பி ஓட்ட முயல்வது போலாகும்.

நன்றி - உணவு நலம்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இயல்பான உணவும் வலுவான உடலும்

Post by முரளிராஜா on Sun Jan 18, 2015 11:38 am

மிகவும் உபயோகமான ஆரோக்கிய கட்டுரை 
பகிர்ந்தமைக்கு நன்றி செந்தில்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இயல்பான உணவும் வலுவான உடலும்

Post by ஸ்ரீராம் on Sun Nov 01, 2015 5:38 pm

நல்லதொரு பயனுள்ள தகவலுக்கு நன்றி செந்தில்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 38490 | பதிவுகள்: 231868  உறுப்பினர்கள்: 3564 | புதிய உறுப்பினர்: sanji
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum