Latest topics
» சிந்தனை கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar
» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar
» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar
» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar
» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar
» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar
» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar
» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar
» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar
» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar
» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar
» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar
» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar
» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar
» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar
» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar
» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar
சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
கவிக்கோ அப்துல் ரகுமானின் பித்தன் கவிதைத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் போல் இருப்பதால் இவருடைய கவிதைகளையும் ரசித்தேன் - பகிர்ந்தேன்.
புத்தபிரானிடம்
ராகுலன் கேட்டான்
”தந்தையே..
என்ன சொல்கிறீர்கள்
எனக்கு?
தலைகுனிந்தபடி
புத்தபிரான் முணுமுணுத்தார்
”பிச்சையிடு”
புத்தபிரானிடம்
ராகுலன் கேட்டான்
”தந்தையே..
என்ன சொல்கிறீர்கள்
எனக்கு?
தலைகுனிந்தபடி
புத்தபிரான் முணுமுணுத்தார்
”பிச்சையிடு”
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
மழைபெய்து
பசுமையாய் இருந்தது வனம்.
மகிழ்ச்சி பொங்கக்
கூவினான் சீடன்.
”குருவே..
வனம் எப்படிக்
பூத்திருக்கிறது பாருங்கள்.”
”ஹும்... இப்பொழுதுதான்
பூத்திருக்கிறது போலிருக்கிறது
உன் மனம்”
என்றார் குரு.
பசுமையாய் இருந்தது வனம்.
மகிழ்ச்சி பொங்கக்
கூவினான் சீடன்.
”குருவே..
வனம் எப்படிக்
பூத்திருக்கிறது பாருங்கள்.”
”ஹும்... இப்பொழுதுதான்
பூத்திருக்கிறது போலிருக்கிறது
உன் மனம்”
என்றார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
கரையோரம் நின்று
பார்த்தபடி இருந்தான் சீடன்.
ஏன் என்றார் குரு..
”குளிக்க வந்தேன்
வெள்ளப் பெருக்கு
வேகமாய் இருக்கிறது”
என்றான் சீடன்.
”குதி..
நீந்து..
கரைசேர்..”
சொல்லி நகர்ந்தார் குரு.
பார்த்தபடி இருந்தான் சீடன்.
ஏன் என்றார் குரு..
”குளிக்க வந்தேன்
வெள்ளப் பெருக்கு
வேகமாய் இருக்கிறது”
என்றான் சீடன்.
”குதி..
நீந்து..
கரைசேர்..”
சொல்லி நகர்ந்தார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
திடீரென்று
எழுந்தோடினார் குரு..
சீடனும் பின்தொடர்ந்து
ஓடினான்..
ஆயசமாய் ஓரிடத்தில்
அமர்ந்தார் குரு..
”என்ன ஆயிற்று குருவே..”
என்றான் சீடன்.
”எப்படி ஓடினாலும்
என் நிழல் என்னைத்
துரத்துகிறதே”
என்றார் குரு.
எழுந்தோடினார் குரு..
சீடனும் பின்தொடர்ந்து
ஓடினான்..
ஆயசமாய் ஓரிடத்தில்
அமர்ந்தார் குரு..
”என்ன ஆயிற்று குருவே..”
என்றான் சீடன்.
”எப்படி ஓடினாலும்
என் நிழல் என்னைத்
துரத்துகிறதே”
என்றார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
வீணையின் தந்திகளை
அறுத்துக் கொண்டிருந்தார்
குரு...
”அருமையான வீணை
தந்திகளை அறுத்து
என்ன பயன்?” என்றான் சீடன்.
“தந்திகள்
அறுபடும் இசையை
ரசித்துக் கொண்டிருக்கிறேன்”
என்றார் குரு.
அறுத்துக் கொண்டிருந்தார்
குரு...
”அருமையான வீணை
தந்திகளை அறுத்து
என்ன பயன்?” என்றான் சீடன்.
“தந்திகள்
அறுபடும் இசையை
ரசித்துக் கொண்டிருக்கிறேன்”
என்றார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
எங்கோ ஒரு பறவை
இசைத்துக் கொண்டிருந்தது..
குரு தன்போக்கில்
கத்திக் கொண்டிருந்தார்..
”என்ன குருவே..
இப்படிக் கத்துகிறீர்கள்?“
என்றான் சீடன்..
”மகனே..
பறவை அதன் போக்கில்
பாடுகிறது..
நானும் என் போக்கில்
பாடுகிறேன்..
உன்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை
என்றால்
நான் என்ன செய்ய முடியும்?”என்றார் குரு..
இசைத்துக் கொண்டிருந்தது..
குரு தன்போக்கில்
கத்திக் கொண்டிருந்தார்..
”என்ன குருவே..
இப்படிக் கத்துகிறீர்கள்?“
என்றான் சீடன்..
”மகனே..
பறவை அதன் போக்கில்
பாடுகிறது..
நானும் என் போக்கில்
பாடுகிறேன்..
உன்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை
என்றால்
நான் என்ன செய்ய முடியும்?”என்றார் குரு..
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
“உறக்கமே வருவதில்லை
குருவே” என்றான் சீடன்.
”எப்போது
விழித்துக் கொண்டிருந்தாய்
இப்போது உறங்குவதற்கு?“
எனறார் குரு.
குருவே” என்றான் சீடன்.
”எப்போது
விழித்துக் கொண்டிருந்தாய்
இப்போது உறங்குவதற்கு?“
எனறார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
விரல்களால்
நட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிருந்தார்
குரு..
“இப்படி எண்ணி முடிப்பது
சாத்தியமா குருவே“
என்றான் சீடன்..
“இங்கு
வந்து போவோரையும்
இப்படித்தானே
எண்ணிக் கொண்டிருக்கறீர்கள்?”
என்றார் குரு.
நட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிருந்தார்
குரு..
“இப்படி எண்ணி முடிப்பது
சாத்தியமா குருவே“
என்றான் சீடன்..
“இங்கு
வந்து போவோரையும்
இப்படித்தானே
எண்ணிக் கொண்டிருக்கறீர்கள்?”
என்றார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
கிளிஞ்சல்களை வைத்து
விளையாடிக் கொண்டிருந்தார்
குரு...
பார்த்துக் கொண்டிருந்த
சீடன் சிரித்தான்..
“என்ன குருவே..
நீங்கள் போய்
கிளிஞ்சல்களை வைத்தா
விளையாடுவது?”குறும்பாகச் சொன்னார்
குரு..
”முத்துக்களை வைத்து
விளையாடினால்
விட்டுவிடுவாயா நீ?“
விளையாடிக் கொண்டிருந்தார்
குரு...
பார்த்துக் கொண்டிருந்த
சீடன் சிரித்தான்..
“என்ன குருவே..
நீங்கள் போய்
கிளிஞ்சல்களை வைத்தா
விளையாடுவது?”குறும்பாகச் சொன்னார்
குரு..
”முத்துக்களை வைத்து
விளையாடினால்
விட்டுவிடுவாயா நீ?“
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
மூச்சிரைக்க
ஓடியது நாய்.
“எதற்குத்தான் இந்த
ஓட்டமோ குருவே“
என்றான் சீடன்..
“என்னிடம் ஏன்
கேட்கிறாய்..
உனக்குள் கேட்டுக்கொள்”
என்றார் குரு.
ஓடியது நாய்.
“எதற்குத்தான் இந்த
ஓட்டமோ குருவே“
என்றான் சீடன்..
“என்னிடம் ஏன்
கேட்கிறாய்..
உனக்குள் கேட்டுக்கொள்”
என்றார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
படுக்கையில் கிடந்தார்
குரு.
ஊசலாடிக் கொண்டிருந்தது
உயிர்.
சொட்டுக் கண்ணீர்த்துளி
பட்டுக் கண்மலர்ந்த குரு
ஏன் என்பதுபோல் பார்த்தார்.
”தங்களைப் பிரியும்
தருணமோ குருவே”
என்றான் சீடன்..
“இல்லை...நீ
குருவாகப்
பிறக்கும் தருணம்”
என்றார் குரு..
குரு.
ஊசலாடிக் கொண்டிருந்தது
உயிர்.
சொட்டுக் கண்ணீர்த்துளி
பட்டுக் கண்மலர்ந்த குரு
ஏன் என்பதுபோல் பார்த்தார்.
”தங்களைப் பிரியும்
தருணமோ குருவே”
என்றான் சீடன்..
“இல்லை...நீ
குருவாகப்
பிறக்கும் தருணம்”
என்றார் குரு..
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
இருட்டில் நடக்கத்
தொடங்கினார் குரு..
விளக்கேற்றி வந்தான் சீடன்
சட்டென அணைத்த
குரு சொன்னார்..
“இருட்டில் நடக்கப்
பாதை தெரியாவிட்டால்
வெளிச்சத்தில் எப்படிப்
பார்த்து நடப்பாய்?
தொடங்கினார் குரு..
விளக்கேற்றி வந்தான் சீடன்
சட்டென அணைத்த
குரு சொன்னார்..
“இருட்டில் நடக்கப்
பாதை தெரியாவிட்டால்
வெளிச்சத்தில் எப்படிப்
பார்த்து நடப்பாய்?
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
புதிய ஆடையைக்
கிழித்துக் கொண்டிருந்தார் குரு.
“என்ன குருவே..
புதிய ஆடையைப் போய்க்
கிழித்துக் கொண்டிருக்கிறீர்கள்?“
என்றான் சீடன்.
“எது புதிய ஆடை?
என் கைக்கு வந்த
பழைய ஆடையைப்
புதிதாய்
நெய்து கொண்டிருக்கிறேன்”
என்றார் குரு.
கிழித்துக் கொண்டிருந்தார் குரு.
“என்ன குருவே..
புதிய ஆடையைப் போய்க்
கிழித்துக் கொண்டிருக்கிறீர்கள்?“
என்றான் சீடன்.
“எது புதிய ஆடை?
என் கைக்கு வந்த
பழைய ஆடையைப்
புதிதாய்
நெய்து கொண்டிருக்கிறேன்”
என்றார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
கண்ணாடியில்
முகம்பார்த்தான் சீடன்.
“என்ன பார்க்கிறாய்?“
என்றார் குரு..
“என் முகத்தைத்தான்
பார்க்கிறேன் குருவே“
என்றான் சீடன்..
“உன் முகம் உனக்குத்
தெரிந்து விட்டால்
கண்ணாடி எதற்குப்
பார்க்கப் போகிறாய்“
என்றபடி நகர்ந்தார் குரு.
முகம்பார்த்தான் சீடன்.
“என்ன பார்க்கிறாய்?“
என்றார் குரு..
“என் முகத்தைத்தான்
பார்க்கிறேன் குருவே“
என்றான் சீடன்..
“உன் முகம் உனக்குத்
தெரிந்து விட்டால்
கண்ணாடி எதற்குப்
பார்க்கப் போகிறாய்“
என்றபடி நகர்ந்தார் குரு.
Re: சென்னிமலை தண்டபாணி கவிதைகள்
யாசகம் பெறப்
புறப்பட்டார் குரு...
”நானிருக்கத் தாங்கள்
போகலாமா பிச்சைக்கு?“
என்றான் சீடன்..
இன்னும் எனக்குள்
“நானிருப்பதால் “ தான்
போகிறேன் பிச்சைக்கு“
என்றார் குரு.
புறப்பட்டார் குரு...
”நானிருக்கத் தாங்கள்
போகலாமா பிச்சைக்கு?“
என்றான் சீடன்..
இன்னும் எனக்குள்
“நானிருப்பதால் “ தான்
போகிறேன் பிச்சைக்கு“
என்றார் குரு.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum