தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எது மென்மை ?
by rammalar

» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by rammalar

» குவியல்
by rammalar

» என்னைப்பற்றி
by rammalar

» உஷாரய்யா ....உஷாரு....!!
by rammalar

» வாட்டர் சர்வீஸ் பண்ணிட்டு வரேன்...!!
by rammalar

» நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
by rammalar

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
by rammalar

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
by rammalar

» நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
by rammalar

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by rammalar

» போர் முரசு பழுதாகி விட்டது...!!
by rammalar

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

View previous topic View next topic Go down

நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by mohaideen on Wed Jun 18, 2014 6:27 pm

'ஆறே வாரத்தில் சிகப்பழகு!’ என க்ரீம் விளம்பரங்களில் அள்ளிவிடுபவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துவருகிறார் நந்திதாதாஸ்.
''கொஞ்சம் சிகப்பா மாறுனீங்கனா செம ரோல். அடுத்த ஸ்ரீதேவி நீங்கதான். இப்படி பில்டப் பண்ணுபவர்களுக்குத் தெரியாது. நான் எவ்வளவு அழகென்று'' என்கிறார் நந்திதா.
ஆம். அவர் இப்படி 'கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என சொல்வதன் பின்னணியில் இருக்கும் விஷயங்க¬ளைக் கேட்டால் ஷாக் ஆவீர்கள். கடந்த 2008-ல் 397 மில்லியன் டாலர்களாக இருந்த சிகப்பழகு க்ரீம்களின் இந்திய சந்தை வியாபாரத்தின் மதிப்பு தற்போது 650 மில்லியன் டாலர்களைத் தாண்டி விட்டது. ஸ்கின் மாய்ச்சரைஸர் உள்ளிட்ட இதர க்ரீம்கள் மட்டும் கடந்த இரண்டே வருடங்களில் 84 சதவிகிதக் கூடுதல் விற்பனையாம். இந்தியர்கள் பொதுவாகவே மாநிற தேகம் கொண்டவர்கள். இங்கே சிகப்புதான் அழகு என்ற கான்செப்ட்டை மக்கள் மனதில் விதைத்துவிட்டால் பணத்தை அறுவடை செய்யலாம் என்பது, இந்த வியாபார நரிகளின் தந்திரம். சிகப்புதான் அழகு என்ற கருத்து 90 சதவிகித இந்தியர்களிடம் உள்ளது. பெண்களை மட்டுமே இவர்கள் குறிவைக்கவில்லை. வாழ்வில் ஒருமுறையேனும் க்ரீம் பூசாத இந்திய ஆண்கள் உண்டா? அவர்களுக்கும் இங்கே பெரிய மார்க்கெட் இருக்கிறதே. அதற்கு சாட்சியாக ஷாரூக்கானும் சூர்யாவும் முக்கிக்கொண்டு 'பெண்களுக்கான சிவப்பழகு க்ரீமைத் தொடாதே... இதை வாங்கு’ எனக் கத்துகின்றனர்.
2009-ல் 'பியூட்டி பியாண்ட் கலர்’ என்ற அமைப்பை சில தன்னார்வ பெண் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உருவாக்கினார்கள். அமெரிக்காவில் பரவிய இந்த அமைப்பு பின்னாளில் 'டார்க் இஸ் பியூட்டிஃபுல்’ என்ற அமைப்பாக மாறியது. அந்த அமைப்பின் இந்தியப் பிரதிநிதியாக  அறிவிக்கப்பட்டுள்ளார் நந்திதா. ''அழகான பெண்ணாகவே என்னை எப்போதும் உணர்கிறேன். அதனால் இந்த அமைப்பு என்னை அணுகியபோது பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தொடர்ந்து சினிமாவில் படிப்படியாக வளர்ச்சி கண்டபோதும் ஒரே ஒரு கேள்வி மட்டும் என் முன்னால் எப்போதும் வைக்கப்படும். மிகுந்த எரிச்சலூட்டும் அந்தக் கேள்வி என்ன தெரியுமா? 'கருப்பாக இருந்தாலும் எப்படி எப்போதும் தன்னம்பிக்கையாக இருக்கிறீர்கள்?’ என்பதே அது. அதுவே இந்த அமைப்பில் என்னைச் சேரத் தூண்டியது. பொருளாதாரரீதியாகவும் கல்விரீதியாகவும் முன்னேறிய என்னையே இந்தக் கேள்வி துரத்தும்போது சாதாரண இந்தியப் பெண் எந்த மாதிரியான உளவியல் சிக்கலுக்கும் சமூகச் சிக்கலுக்கும் உள்ளாவாள். இந்த அமைப்பில் சேர்ந்து இன்று வரை என் இ-மெயில் இன்பாக்ஸானது 'தற்கொலையிலிருந்து காப்பாற்றியதற்கு நன்றி’ என்கிற ரேஞ்சிலான இளம் பெண்களின் கடிதங்களால் நிரம்பி வழிகிறது. பொறுப்பை உணர்ந்ததால், சினிமாவுக்கான நேரத்தைக்கூட குறைத்துக்கொண்டு இந்த அமைப்பில் முழுநேரமாக இயங்குகிறேன். முதன்முறையாக என் போட்டோ தாங்கிய இந்த அமைப்புக்கான விழிப்பு உணர்வு விளம்பரம் பத்திரிகையில் வந்தது. அதை ஒரு பாட்டியிடம் காட்டி எப்படி இருக்கு இந்தப் பொண்ணு என்று கேட்டேன். நான் யாரென்று தெரியாத அந்தப் பெண்மணி. 'அழகா லட்சணமா இருக்கா. ஆனா, ஆண்டவன் இவளைக் கொஞ்சம் கருப்பாப் படைச்சிட்டான்’ என பரிதாபத் தொனியில் பேசினார். இங்கிருந்துதான் என் பயணம் தொடங்குவதாக முடிவெடுத்துக்கொண்டேன்'' என்கிறார்.
இந்த அமைப்பு இப்போது டி.வி-க்களில் ஒளிபரப்பப்படும் சிகப்பழகு க்ரீம்களின் விளம்பரங்களுக்கென தணிக்கை அனுமதி வேண்டி 15,000 பேரிடம் கையெழுத்து வாங்கி இருக்கிறது. அதேபோல மேட்ரிமோனி வெப்சைட்களில் வீட்டிஷ் பிரௌன்(wheatish), ஃபேர் (fair) என நிறத்தை அளவீடாக வைத்து வரன் தேடுவதற்கான தடையைக் கோரியுள்ளது.
இந்த ஆண்டு மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற நினா தவலுரி, மும்பை ஃபேஷன் டிஸைனர் ஏக்தா கோஷ் போன்றோர் இந்த அமைப்பில் இப்போது உறுப்பினர்களாக இருக் கிறார்கள்.
இந்த அமைப்பு சிகப்பழகு க்ரீம்களைத் தயாரிக்கும் கம்பெனிகள் மீது அதன் விளம்பரங்களுக்காக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 'ஷாரூக்கான் பரிந்துரை செய்த சிகப்பழகு க்ரீமைப் பூசியும் நான் சிகப்பாகவில்லை’ என ஷாரூக்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
''மக்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தும் இந்த விளம்பரங்களை நிறுத்தாமல் ஓய மாட்டோம்'' என்கிறார் நந்திதாதாஸ். நந்திதாதாஸ் இந்த அமைப்பில் இருக்கிறார் என்பது பாராட்டத்தக்க விஷயம் என்றால், சிகப்பான கங்கணா ரணவத், ''க்ரீம் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டேன்'' என்று சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார்.
உங்களுக்கெல்லாம் முன்னாடி 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா... நின்றன் கருமை நிறம் தோன்றுதய்யா நந்தலாலா’ன்னு பாடினவங்கய்யா நாங்க!

http://cinema.vikatan.com/articles/news/28/5153

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நாஞ்சில் குமார் on Sat Jun 28, 2014 5:08 pm

அருமையான பகிர்வு.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by kanmani singh on Mon Jun 30, 2014 12:33 pm

பதிவு மிக அருமை!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by ரானுஜா on Mon Jun 30, 2014 3:08 pm

அதானே ...

சூப்பர்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by செந்தில் on Mon Jun 30, 2014 3:32 pm

அவசியமான விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by ஜேக் on Mon Jun 30, 2014 6:22 pm

சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்...

அதனால நிறம் மாறித்தான் ஆகணும்... புரிகிறதா?! பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by முரளிராஜா on Mon Jun 30, 2014 7:32 pm

@ஜேக் wrote:சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்...

அதனால நிறம் மாறித்தான் ஆகணும்... புரிகிறதா?! பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
அத கருப்பான நீங்க சொல்ல கூடாது  புன்முறுவல் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by ஜேக் on Tue Jul 01, 2014 5:17 am

இதிலிருந்து என்ன தெரிகிறது...

நான் பொய் சொல்ல விரும்பலைன்னு தெரிகிறதா?

(ஆனா நீங்க ...?)
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum