தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரூபாய் வெளிமதிப்பு அதிகரிப்பு.

View previous topic View next topic Go down

ரூபாய் வெளிமதிப்பு அதிகரிப்பு.

Post by நாஞ்சில் குமார் on Wed May 21, 2014 3:24 pm

டாலருக்கு நிகரான ரூபாய் வெளிமதிப்பு அதிகரிப்பால் பெட்ரோலியம், உரம், மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும். அதேசமயம் மருந்து, மோட்டார் வாகனம், ஜவுளி மற்றும் உருக்குத்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 மாதங்களில்...

டாலருக்கு நிகரான ரூபாய் வெளிமதிப்பு திங்கள்கிழமை அன்று 11 மாதங்களில் இல்லாத அளவிற்கு 58.60–ஆக உயர்ந்து இருந்தது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி டாலரை அதிக அளவில் வாங்கியதையடுத்து நேற்று ரூபாய் வெளிமதிப்பு 58.74–ஆக குறைந்தது. எனினும் கடந்த எட்டு மாதங்களில் இது 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் டீசல், மண்எண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை மத்திய அரசு நிர்ணயம் செய்த விலையில் விற்பனை செய்கின்றன. இது அடக்க விலைக்கும் குறைவாக இருப்பதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில்  ஏற்பட்ட வருவாய் இழப்பு சுமார் ரூ.1.40 லட்சம் கோடியாக உள்ளது.

கச்சா எண்ணெய்

ரூபாய் வெளிமதிப்பு அதிகரிப்பால் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் குறைந்து வருவாய் இழப்பு குறையும். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் டீசல் விலையை லிட்டருக்கு 1.09 ரூபாய் உயர்த்தின. இதன் காரணமாகவும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதாலும், இம்மாதம் 15–ந் தேதி வரையிலான இரு வாரங்களில் ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் ஏற்படும் வருவாய் இழப்பு 4.41 ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கு முன்னர் இந்த இழப்பு 6.80 ரூபாயாக இருந்தது.

உர நிறுவனங்கள், பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட் போன்ற உரங்களை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. ரூபாய் மதிப்பு அதிகரிப்பது இத்துறை நிறுவனங்களுக்கு சாதகமான அம்சமாகும். இதன் காரணமாக கோரமண்டல் இன்டர்நேஷனல், சம்பல் ஃபெர்ட்டிலைசர்ஸ், ஆர்.சி.எஃப். ஆகிய நிறுவனங்கள் பயன்பெறும்.

மின்சாரம்

ரூபாய் மதிப்பு அதிகரிப்பதால் நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யும் மின்துறை நிறுவனங்கள் பயன்பெறும். குறிப்பாக டாட்டா பவர் மற்றும் அதானி பவர் ஆகிய நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும்.

மேலும் அன்னியச் செலாவணியில் கடன்பெற்றுள்ள நிறுவனங்களின் வட்டிச் செலவினம் குறையும். நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுசுகி, பாரத ஸ்டேட் வங்கி, எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ், ஓபராய் ரியால்டி, எல்–டி, ஓ.என்.ஜி.சி, இந்துஸ்தான் பெட்ரோலியம், மதர்சன் சுமி, ஸ்ரீசிமெண்ட் ஆகிய 10 நிறுவனங்களின் பங்கு விலை உயர வாய்ப்புள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மருந்து நிறுவனங்கள்

இந்திய மருந்து நிறுவனங்கள் தமது வருவாயில் பெரும்பகுதியை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வாயிலாக ஈட்டுகின்றன. ரூபாய் மதிப்பு உயர்வால் இத்துறை நிறுவனங்களின் ஏற்றுமதி வருவாய் குறையும். குறிப்பாக, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ், லுப்பின், சிப்லா மற்றும் சன் பார்மா ஆகிய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் அன்னியச் செலாவணியில் அதிக அளவில் கடன்பெற்றுள்ள ரான்பாக்சி மற்றும் அரபிந்தோ பார்மா ஆகிய நிறுவனங்கள் பயன்பெறலாம்.

ரூபாய் மதிப்பு உயர்வதால் ஏற்றுமதி வாயிலாக அதிக வருவாய் ஈட்டும் மோட்டார் வாகனம் மற்றும் வாகன பாகங்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

உருக்கு பொருள்கள்

பொருளாதார மந்தநிலை காரணமாக உள்நாட்டில் உருக்கு பொருள்கள் விற்பனை குறைந்துள்ளது.

எனவே பல உருக்கு நிறுவனங்கள் ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைளில் இறங்கி உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

எதிர்பார்க்கப்படும் பொருளாதார முன்னேற்றத்தால் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு மற்றும் அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


நன்றி: தினத்தந்தி
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: ரூபாய் வெளிமதிப்பு அதிகரிப்பு.

Post by ஸ்ரீராம் on Wed May 21, 2014 3:33 pm

நானும் கவனித்து வருகிறேன்
தகவலுக்கு நன்றி.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37770 | பதிவுகள்: 230994  உறுப்பினர்கள்: 3539 | புதிய உறுப்பினர்: sargurusiva








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: ரூபாய் வெளிமதிப்பு அதிகரிப்பு.

Post by செந்தில் on Wed May 21, 2014 4:08 pm

பகிர்வுக்கு நன்றி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: ரூபாய் வெளிமதிப்பு அதிகரிப்பு.

Post by rammalar on Wed May 21, 2014 4:12 pm

2020 ல் வல்லரசாக ஆகிவிடும்...
-
கலாமின் கனவு பலிக்கட்டும்..!!
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5892

Back to top Go down

Re: ரூபாய் வெளிமதிப்பு அதிகரிப்பு.

Post by நாஞ்சில் குமார் on Wed May 21, 2014 10:10 pm

2020 ல் வல்லரசாக ஆகிவிடும்...
-
கலாமின் கனவு பலிக்கட்டும்..!!
-

நன்றி. கனவு நனவாகட்டும்.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum