தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar

» ஐங்கரன் என்று அழைக்கப்படுபவர் யார்?
by rammalar

» ஆன்மிகம்- கேள்வி - பதில்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விஷமாக அறிவிக்கப்பட்டது அமிலம்

View previous topic View next topic Go down

விஷமாக அறிவிக்கப்பட்டது அமிலம்

Post by நாஞ்சில் குமார் on Sun Apr 13, 2014 3:44 pm


சென்னை: வீடுகள், மருத்துவமனைகள், ரசாயன தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் அமிலங்களின் விற்பனை தொடர்பாக, தமிழக அரசு, புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, விஷம் பட்டியலில், இந்த அமிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

காரைக்காலை சேர்ந்த வினோதினி, ஒரு தலைக்காதல் காரணமாக, அமிலம் வீசப்பட்டு படுகாயம் அடைந்து, சிகிச்சைப் பலனின்றி இறந்தார். சென்னையை சேர்ந்த திவ்யா என்பவரும், அமில வீச்சில் படுகாயம் அடைந்தார். வட மாநிலங்களிலும் அமிலம் வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து, அமிலம் விற்பனை தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை, மத்திய மாநில அரசுகள் அறிவித்தன. அந்த வகையில், தற்போது அமிலம் விற்பனை தொடர்பாக, தமிழக அரசு, புதிய நிபந்தனைகளை அறிவித்துள்ளது.

இது குறித்து, தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர் அபூர்வா வர்மா வெளியிட்டுள்ள உத்தரவு: மத்திய அரசின், 1919 ம் ஆண்டின் விஷப்பொருட்கள் சட்டப்படி, அமிலம், விஷப் பொருளாக கருதப்படுகிறது. இதை விற்பனை செய்வோருக்கான உரிமத்தை, மாவட்ட நீதிபதி அளவிலான அதிகாரிகள் வழங்குகின்றனர். அமிலத்தை கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவ நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிலகங்கள், அரசுத் துறையினர், தனியாருக்கு, உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே, விற்பனை செய்ய வேண்டும். அமிலத்தை வாங்குவோரும், புகைப்படம் ஒட்டப்பட்ட அடையாள அட்டையின் நகலை, விற்பனையாளரிடம் கொடுத்தால் மட்டுமே, பொருளைப் பெற முடியும்; 18 வயதுக்குட்பட்டோர், அமிலம் வாங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அமிலம் விற்கும் நிறுவனங்களை, மாவட்ட நீதிபதி, மருந்து கட்டுப்பாட்டு அலுவலர், காவல்துறை அதிகாரிகள், உதவி மருத்துவ அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள், எந்த நேரத்திலும் ஆய்வு செய்யலாம். பதிவேட்டுக்கும், இருப்புக்கும் வித்தியாசம் இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கலாம். மேலும், அமிலத்தை, பாதுகாப்பான கொள்கலன்களில் வைத்து, அதன் மீது, 'விஷம்' என்ற எச்சரிக்கை வாசகத்தை, எழுதியிருக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அமிலங்கள்:

எடையில், 25 சதவீத அடர்வை மீறிய அசிட்டிக், அசிட்டிக் அன்ஹைட்ரைடு, 5 சதவீத அடர்வை மீறிய சல்ப்யூரிக், 5 சதவீத அடர்வை மீறிய ஹைட்ரோகுளோரிக், பாஸ்போரிக், ஹைட்ரோபுளூரிக், பெர்கால்ரிக், 10 சதவீத அடர்வை மீறிய பார்மிக், ஹைட்ரோசயானிக், நைட்ரிக், ஆக்சாலிக், பாதரச பெர்குளோரைடு, பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, சோடியம் ஹைட்ராக்சைடு, 50 சதவீத அடர்த்தியை மீறிய ஹைட்ரஜன் பொராக்சைடு, 25 சதவீத அடர்வை மீறிய பார்மால்டிஹைடு, 3 சதவீத அடர்வை மீறிய பினால், சோடியம் ஹைட்ரோகுளோரைடு சொல்யூஷன் என, 19 வகையான அமிலங்களை, விஷம் பட்டியலில், அரசு சேர்த்துள்ளது.

நன்றி: தினமலர்.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: விஷமாக அறிவிக்கப்பட்டது அமிலம்

Post by ஸ்ரீராம் on Sun Apr 13, 2014 6:54 pm


பகுதி மாற்றம் சொந்த கவிதைகள் பகுதியிலிருந்து செய்திகள் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38659 | பதிவுகள்: 232075  உறுப்பினர்கள்: 3573 | புதிய உறுப்பினர்: முனைவர் ப. குணசுந்தரி








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: விஷமாக அறிவிக்கப்பட்டது அமிலம்

Post by முரளிராஜா on Sun Apr 13, 2014 7:07 pm

அறியத்தந்தமைக்கு நன்றி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: விஷமாக அறிவிக்கப்பட்டது அமிலம்

Post by செந்தில் on Sun Apr 13, 2014 7:38 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: விஷமாக அறிவிக்கப்பட்டது அமிலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum