தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்
by rammalar

» இருபது வயது, மூணு மாசம்’ன்னு சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க!!
by rammalar

» இணையத்தில் ரசித்தவை - தொடர் பதிவு
by rammalar

» நகைச்சுவை- ரசித்தது (தொடர்பதிவு)
by rammalar

» எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்...!!
by rammalar

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by rammalar

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by rammalar

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by rammalar

» முல்லா நஸ்ருதீன்!
by rammalar

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by rammalar

» முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சா
by rammalar

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by rammalar

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by rammalar

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by rammalar

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by rammalar

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by rammalar

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by rammalar

» பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்
by rammalar

» நெட் ஜோக்
by rammalar

» கந்தல் – கவிதை
by rammalar

» நினைவுகள் – கவிதை
by rammalar

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar

» இருபது வயது, மூணு மாசம்’ன்னு சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க!!
by rammalar

» ஒரே இடத்தில் 108 திவ்ய தேசம்
by rammalar

» இரண்டும் ஒரே திசையில்....
by rammalar

» ஜன்னல் தத்துவம்
by rammalar

» சொர்க்க வாசல் திறக்காத கோயில்
by rammalar

» இவளுக்கு அது எதுக்கு? - ஒரு பக்க கதை - -
by rammalar

» அனுபவம் - ஒரு பக்க கதை
by rammalar

» சமையல் - ஒரு பக்க கதை
by rammalar

» ஏன் சிரிச்சான்?
by rammalar

» மாறிப்போனவள் - ஒரு பக்க கதை
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு

View previous topic View next topic Go down

மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு

Post by Manik on Fri Oct 05, 2012 5:37 pm

மதுரை: ""உலகளவில் தனித்துவம் வாய்ந்தது மதுரை மல்லிகை என்பதைக்
குறிக்கும் வகையில், "புவிசார் குறியீடு' (ஜி.ஐ.,) கிடைத்துள்ளது,'' என,
மதுரை விவசாயக் கல்லூரி டீன் வைரவன் தெரிவித்தார்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்
மாவட்டங்களை உள்ளடக்கிய, "பழைய மதுரையின்' மண்வளம், மல்லிகைக்கு ஏற்றது.
இந்த மண்ணில் விளையும் மல்லிகைக்கு மட்டும் கூடுதல் மணம், வெண்மை உண்டு.
இரண்டு நாட்கள் வரை பூக்கள் வாடமல் நன்றாக இருக்கும். பூவின் காம்பும்,
இதழ்களும் சம உயரத்தில் இருக்கும். மதுரை மல்லி வாசம் என்றே சிறப்புடன்
காலம் காலமாக போற்றப்படுவதே, மதுரை மல்லிகைக்கு சிறப்பு. தமிழகத்தின் பல
இடங்களில், பரவலாக மல்லிகைப் பூக்கள் விளைந்தாலும், மதுரையின் சிறப்பு
வேறிடத்தில் இல்லை. மதுரை மார்க்கெட்டிற்கு மட்டும் பிப்ரவரி, ஏப்ரல்
மாதங்களில் 15 முதல் 20 டன் பூக்கள் வரத்து இருக்கும். நவம்பர், டிசம்பரில்
வேறெங்கும் பூக்கள் உற்பத்தி இருக்காது; மதுரையில் மட்டும் குறைந்தளவு
உற்பத்தி இருக்கும். இந்த சிறப்புகளுக்காக, மதுரை மல்லிகைக்கு "புவிசார்
குறியீடு' கிடைத்துள்ளது. நாட்டில் ஒரு பூவிற்கு "புவிசார் குறியீடு'
கிடைத்தது, இதுவே முதல்முறை.

இதுகுறித்து டீன் கூறியதாவது:

இரண்டு ஆண்டுகளாக, மதுரை விவசாயக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில்,
மல்லிகைக்கு "புவிசார் குறியீடு' பெறும் முயற்சியில் ஈடுபட்டோம். தனிநபர்
பெயரில் வாங்க முடியாது என்பதால், தானம் அறக்கட்டளை மூலம், ஆறு மாவட்ட
மல்லிகைப்பூ உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து, சங்கம் அமைத்தோம்; இதில் 200
பேர் உறுப்பினர்களாக உள்ளனர்; தொழில்நுட்ப ரீதியான ஆவணங்களை, மார்ச்
2011ல், சென்னையில் உள்ள அலுவலகத்தில் சமர்ப்பித்தோம்; மீண்டும் சில
ஆவணங்கள் தேவைப்பட்டதால், திருத்தப்பட்டு, மார்ச் 2012 ல், மீண்டும்
விண்ணப்பித்தோம். இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது "அறிவுசார்
சொத்துரிமை' (ஐ.பி.ஆர்.,) இதழில், "மதுரை மல்லிகை'க்கு "புவிசார் குறியீடு'
வழங்கப்பட்டுள்ளதாக, வெளியிடப்பட்டுள்ளது. தொல்காப்பியம், பரிபாடல்,
திருவிளையாடற் புராணங்களில் "மதுரை மல்லிகை' பற்றி கூறப்பட்டுள்ள ஆவணங்களை,
திரட்டியுள்ளோம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது "பேக்கிங்'
முக்கியம். அதற்கான தொழில்நுட்பத்தையும் விவசாயிகள், விற்பனையாளர்களுக்கு
கற்றுத்தர உள்ளோம். நவம்பர், டிசம்பரில், உற்பத்தியை அதிகரிப்பதற்கான
தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன்:

இதனால் பூ வர்த்தகம் இன்னும் அதிகரிக்கும். "மதுரை மல்லிகை' என்று
பெருமையாக சொன்னாலும், நான்கு ஆண்டுகளில் உற்பத்தி 30 சதவீதம்
குறைந்துவிட்டது. விளைநிலங்கள் மனையாகி விட்டன; பத்தியை மீண்டும் அதிகரிக்க
வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தற்போது துபாய், கனடா, தென்கிழக்கு
ஆசிய நாடுகளுக்கு, சென்னையிலிருந்து தான் ஏற்றுமதி செய்கிறோம். மதுரை விமான
நிலையத்தில் பன்னாட்டு சேவை துவங்கினால், அதிகமாக ஏற்றுமதி செய்ய
முடியும். அதற்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடு செய்யலாம்.
கலப்படம் செய்தால் "காப்பு'

* புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால், வெளிநாட்டு ஏற்றுமதிக்கு, குறிப்பிட்ட விலையை இனி நிர்ணயிக்க முடியும்.

* விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

* இப்பெயரில், மற்ற பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்களை கலப்படம்
செய்ய முடியாது. அப்படி செய்தால், 2 லட்சம் ரூபாய் அபராதம், ஐந்தாண்டு சிறை
தண்டனை உண்டு.

"புவிசார் குறியீடு' என்றல் என்ன:
ஒரு
குறிப்பிட்ட இடத்தையோ (புவியியல்) அல்லது தோற்றத்தையோ, குறிப்பிடும்
பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம், "புவிசார்
குறியீடு' (ஜியாகிரபிக்கல் இண்டிகேஷன்) எனப்படுகிறது. இக்குறியீடு, அந்த
பொருளின் சொந்த இடத்தின் தரத்தையும், நன்மதிப்பையும் பறை சாற்றும் சின்னமாக
விளங்கும். இந்தியாவில் பாரம்பரியம் மிக்க பொருட்களுக்கு, மத்திய அரசு
அங்கீகாரம் அளித்து பாதுகாக்கிறது. இச்சட்டம் 1999ம் ஆண்டு
அறிமுகப்படுத்தப்பட்டு, செப்.15, 2003ம் ஆண்டு அமலுக்கு வந்தது.
இதன்படி மத்திய அரசால் பதிவு செய்யப்பட்ட தமிழக பொருட்கள்:* சேலம் பேப்ரிக்
* காஞ்சிபுரம் பட்டு
* பவானி ஜமுக்காளம்
* மதுரை சுங்குடி
* கோவை வெட் கிரைண்டர்
* தஞ்சாவூர் வண்ண ஓவியங்கள்
* நாகர்கோவில் கோவில் நகைகள்
* தஞ்சாவூர் கலை தகடுகள்
* ஈஸ்ட் இந்தியா லெதர்
* சேலம் வெண்பட்டு
* கோவை கோரா பட்டு
* ஆரணி பட்டு
* சுவாமிமலை வெண்கலப் பொருட்கள்
* ஈத்தாமொழி நெட்டை தென்னை
* தஞ்சாவூர் பொம்மை
* விருப்பாச்சி மலை வாழை
* சிறுமலை மலை வாழை
* தற்போது மதுரை மல்லி

தினமலர்

எங்க ஊர் மல்லினா சும்மாவா

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு

Post by மகா பிரபு on Fri Oct 05, 2012 6:04 pm

தகவலுக்கு நன்றிஃ
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு

Post by முரளிராஜா on Sat Oct 06, 2012 7:18 am

மகிழ்ச்சியான செய்திதான்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு

Post by சிவ சங்கர் on Sat Oct 06, 2012 7:38 am

சூப்பர்
avatar
சிவ சங்கர்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 26

Back to top Go down

Re: மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு

Post by Manik on Sat Oct 06, 2012 4:47 pm

ரொம்ப அழகா கார்ல உட்காந்திருக்கீங்க சிவசங்கர் ரொம்ப ஜாலி

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு

Post by சிவா on Sat Oct 06, 2012 10:05 pm

அருமையான தகவல் நன்றி செல்லம் அண்ணா
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum