தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆதரவற்றவர்களாகப் பிறக்கலாம்... இறக்கக் கூடாது!''

View previous topic View next topic Go down

ஆதரவற்றவர்களாகப் பிறக்கலாம்... இறக்கக் கூடாது!''

Post by செந்தில் on Sat Sep 15, 2012 6:34 pm


ஆதரவற்றவர்களாகப் பிறக்கலாம்... இறக்கக் கூடாது!''

உடுமலைப்பேட்டையில் வசிக்கும் உமர் அலி இரும்புத் தொழில் செய்பவர். இளகிய மனம் கொண்ட மனிதர். மனிதாபிமானம் என்பது அரிதாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், இவரோ தனி நபர் முயற்சியாக இதுவரை 473 ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்துள்ளார்.

சாலை ஓரங்களில் திரியும் ஆதரவற்ற, மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பிறகு மனநலக் காப்பகத்தில் சென்று சேர்க்கிறார். உடுமலை அன்னை தெரசா அறக்கட்டளை என்றொரு சங்கம் நிறுவி 12 பேர் கொண்ட குழுவினர் துணையுடன் கடந்த 22 வருடங்களாக இதுபோன்ற சேவைகளைச் செய்து வருகிறார்.

உமர் அலியிடம் பேசினேன். '' 1990-ம் வருஷம். திருமூர்த்தி மலைக்குப் போயிருந்தேன். அணையில் ஒரு பிணம் மிதந்துட்டு இருந்தது. ஆனால், யாருமே அதைக் கண்டுக்கலை. ஒரு நொடி என் மனசுல 'ஆதரவு இல்லாமப் பிறக்கிறதுகூடப் பரவாயில்லை. ஆனால், யாருமே இல்லாம இறக்கக் கூடாது’னு தோணுச்சு. உடனே, போலீஸிடம் தகவல் தெரிவிச்சு, அவங்க அனுமதியோடு அந்தப் பிணத்தை நான்தான் அடக்கம் செஞ்சேன்.

ஒரு பிணத்தை அடக்கம் செய்ய இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் செலவு ஆகும். அடக்கம் செய்றதுக்காக நாங்களே சொந்தமாக ரெண்டு ஆம்புலன்ஸ் வெச்சு இருக்கோம். யாராவது இறந்துபோய் அடக்கம் செய்ய வழி இல்லாம, வசதி இல்லாமக் கூப்பிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாங்க அங்கே இருப்போம். எங்களோட சேவைக்காகப் பல நல்ல உள்ளங்களும் உதவி செய்றாங்க. அவங்களுக்கு எப்பவுமே நான் நன்றிக்கடன் பட்டு இருக்கேன். மனிதர்களுக்கு மட்டுமில்லை... சாலையில், விபத்தில் சிக்கி இறந்துபோகும் விலங்குகளையும் இயற்கையாக இறந்துபோகும் விலங்குகளையும் அடக்கம் பண்றேன். இவை தவிர, உடுமலையைச் சுற்றி உள்ள சுல்தான்பேட்டை, குண்டடம், மடத்துக்குளம், உடுமலை, குடிமங்கலம் உள்ளிட்ட பல ஊர்களில் இருக்கிற அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருளுதவி செஞ்சு இருக்கேன். ஒவ்வொரு வருஷமும் அன்னை தெரசா பிறந்த நாள் அன்னைக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்றோம். உடுமலை அருகே மானுபட்டியில் ரெண்டு ஏக்கர் நிலப்பரப்புல ஆதரவற்றவர்களுக்கான ஆசிரமம் கட்டி இருக்கோம். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் எல்லாம் எங்கள் சேவையை நேரில் வந்து வாழ்த்தி இருக்காங்க. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வருடம் தோறும் எங்களுக்கு நிதி உதவி அளிக்கிறார்'' என்றார் நிறைவாக!

வாழ்த்துகள்!
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: ஆதரவற்றவர்களாகப் பிறக்கலாம்... இறக்கக் கூடாது!''

Post by முரளிராஜா on Fri Sep 21, 2012 7:18 am

உமர் அலியின் இந்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது
பகிர்வுக்கு நன்றி செந்தில்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ஆதரவற்றவர்களாகப் பிறக்கலாம்... இறக்கக் கூடாது!''

Post by பூ.சசிகுமார் on Fri Sep 21, 2012 4:39 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: ஆதரவற்றவர்களாகப் பிறக்கலாம்... இறக்கக் கூடாது!''

Post by மகா பிரபு on Fri Sep 21, 2012 6:33 pm

இதை படிக்கும் போது உடலில் புல்லரிக்கிறது. கண்ணீர் வடி
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ஆதரவற்றவர்களாகப் பிறக்கலாம்... இறக்கக் கூடாது!''

Post by Manik on Fri Sep 21, 2012 7:17 pm

இன்றைய ஜென்மத்தின் பலனை இவர் அடைந்துவிட்டார்

வாழ்க உங்கள் நல்ல உள்ளத்திற்கு

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum