தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
by rammalar

» ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
by rammalar

» சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
by rammalar

» உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
by rammalar

» புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
by rammalar

» காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
by rammalar

» ஒரே பந்தில் ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
by rammalar

» பார்வையில் நனைந்தேன்…! -கவிதை
by rammalar

» நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை…!! – கவிதை
by rammalar

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar

» .மிக அருகில் குழந்தைகள்
by rammalar

» வயலும் வாழ்வும் – எக்ஸ்பிரஸ் கவிதைகள்
by rammalar

» வாழ்வியல் எது? - கவிதை
by rammalar

» வரிசையாய் எறும்புகள்
by rammalar

» மெனோபாஸ் – கவிதை
by rammalar

» பாடல் – கவிதை
by rammalar

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by rammalar

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by rammalar

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by rammalar

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by rammalar

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by rammalar

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by rammalar

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar

» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அழிவுக்கு காரணமானவரே, இலங்கை தமிழருக்குக் குரல் கொடுப்பதாக நாடகமாடுகிறார்! - ஜெயலலிதா சாடல்

View previous topic View next topic Go down

அழிவுக்கு காரணமானவரே, இலங்கை தமிழருக்குக் குரல் கொடுப்பதாக நாடகமாடுகிறார்! - ஜெயலலிதா சாடல்

Post by செந்தில் on Thu Sep 13, 2012 8:03 pmஅழிவுக்கு காரணமானவரே, இலங்கை தமிழருக்குக் குரல் கொடுப்பதாக நாடகமாடுகிறார்! - ஜெயலலிதா சாடல்


தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாயிருந்தவர், இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போல் நாடகமாடுகிறார் என்று, திமுக தலைவர் கருணாநிதியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சாடியுள்ளார்.சிறிரங்கத்தில் இன்று நடந்த விழாவில் உரையாற்றிய அவர்,

தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை அளித்திட உத்தரவிட்டு, அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது. இலங்கை அப்பாவித் தமிழர்கள் மீது போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் துணிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றினேன்.

இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் இன்னமும் கிடைக்கவில்லை என்பதால், அதற்கு நம் தமிழகத்தின் எதிர்ப்பை, உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை தடை செய்தேன்.

இவை காரணமாக, தமிழக மக்கள் மட்டுமல்லாமல், உலக வாழ் தமிழர்களும் எனது அரசின் நடவடிக்கைகளை பாராட்டி வருகின்றனர். எனினும் இலங்கையிலிருந்து சுற்றுலா, ஆன்மீகப் பயணம் போன்றவற்றிற்காக தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் சிங்களர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் எனது அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

ஆனால், தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாயிருந்தவர், இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போல் நாடகமாடுகிறார். இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட போது, இலங்கை அரசிற்கும், ராணுவத்திற்கும் ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய இடங்களில் மீன் பிடிப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், அதற்கு ஒரு வலுவான எதிர்ப்பினை மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

இருப்பினும், மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க இயலாதவர், இலங்கைத் தமிழர்களுக்காக என கூட்டப்பட்ட கூட்டத்தின் பெயரையே மாற்றிவிட்டார். இவ்வாறு தமிழர் மானத்தை காப்பாற்றுபவர் தான் இலங்கைத் தமிழர் நலன் காக்கும் எனது அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறார்.

தன்மானம் பெரிது என்று வாழ்பவன்தான் தமிழன். தன்மானம் உள்ளவர்கள் இலங்கைத் தமிழர்களைப் பற்றி பேசலாம். மற்றவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனை சீர்குலைக்கும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எனது நடவடிக்கைகளுக்கு களங்கம் கற்பிக்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அழிவுக்கு காரணமானவரே, இலங்கை தமிழருக்குக் குரல் கொடுப்பதாக நாடகமாடுகிறார்! - ஜெயலலிதா சாடல்

Post by முரளிராஜா on Thu Sep 13, 2012 8:27 pm

இப்படியே ஒருத்தர ஒருத்தர் சாடி அறிக்கை கொடுத்துகிட்டு இருங்க
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum