தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மறைந்து வரும் கோலி சோடா

View previous topic View next topic Go down

மறைந்து வரும் கோலி சோடா

Post by mohaideen on Tue Oct 01, 2013 7:22 pm

மறைந்து வரும் கோலி சோடா


போச்சம்பள்ளி, :  வளர்ந்து வரும் நாகரீக மோகத்தால் சோடா கலர் பானத்திற்கான மவுசு மிகவும் டல்லடிப்பதால், அதன் தயாரிப்பும் வெகுவாக குறைந்து விட்டது.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்வரை பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை கலர் என்றாலே அது கோலி சோடா தான். மண் பானை, சிமெண்ட் தொட்டிகளில் தண்ணீர் ஊற்றி அதனுள் சோடா பாட்டிலை போட்டு குளிர்ச்சியாக வைத்திருப்பார்கள். அந்த கோலி சோடாவை உடைத்து குடிப்பதற்கே தனி பயிற்சி வேண்டும். தாகத்துக்கு மட்டுமல்ல. சோர்வடைந்து, மயக்கமானவர்களுக்கும் இது உடனடியாக குளுகோஸ் மாதிரி கொடுக்கப்படும். மேலும், கோலி சோடாவில் ஒரு ஸ்பூன் உப்பையும் எலுமிச்சை சாறையும் கலந்து குடித்தால் எப்பேர்பட்ட வாய்வு பிடிப்பு, வயிற்று வலியும் ஓடிப்போகும் என்று கோலி சோடாவின் அருமை, பெருமைகளை நம் பாட்டன், பாட்டி முதல் தாய், தந்தையர் வரை சொல்லக் கேட்டிருக்கிறோம். நம்மில் பலர் அதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம் என்பது தான் உண்மை.
இப்படி பழம்பெருமை வாய்ந்த சோடாவை 1872ல் லண்டனை சேர்ந்த குளிர்பான நிறுவனம் ஒன்று தான் அறிமுகப்படுத்தியது. வெகு விரைவில் நம் நாட்டிலும் கோலி சோடா தயாரிப்பு குடிசை தொழிலாக அறிமுகமாகி பரவலான வரவேற்பை பெற்றது. கார்பன்டை ஆக்சைடை தண்ணீரில் கரைத்து அதை பாட்டிலில் அடைத்து விற்கும் எளிய வழி முறைகளை கொண்ட சோடா தயாரிப்பு மின்சார பயன்பாடு இல்லாத தொழிலாகும். கோலிசோடா, பன்னீர் சோடா, ஆரஞ்சு சோடா, கோலா சோடா, ஜிஞ்சர் சோடா, கலர் என்று பல விதங்களில், ஒரு சோடா கலர் முப்பது பைசாவுக்கு விற்கப்பட்டது.  இந்த தொழில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைத்தது.
இப்படி கொடி கட்டி பறந்த சோடா விற்பனை இன்று ஒரு நாளைக்கு பத்து பாட்டில் விற்றாலே அதிசயம் தான் என்ற நிலையில் உள்ளது. தற்போது வெளிநாட்டு குளிர்பானங்கள் வாங்கி குடிப்பதை பெருமையாகவும், நாகரிகமாகவும் கருதும் மக்கள், உள்ளூரில் தயாரிக்கப்படும் பக்க விளைவுகளற்ற சோடா பானங்களை குடிப்பதை கவுரவ குறைச்சலாக எண்ணி தவிர்த்து வருகின்றனர்.
சோடா பான வகையை இரு மாதங்களுக்கு மேல் இருப்பு வைத்தாலும் அவை கெட்டுப் போகாது. ஆனால் இன்று உள்ளூரில் தயாரிக்கப்படும் சோடா குடிப்பதை தவிர்த்து உடலுக்கு ஒவ்வாத ரசாயனம் கலந்த வெளிநாட்டு குளிர் பானங்களை மக்கள் குடித்து வருகின்றனர்.
கோடை காலத்தில் மட்டுமின்றி குடும்ப விழாக்களிலும், பொதுக் கூட்டங்களிலும் கூட குளிர் பானங்கள் விநியோகிப்பது வழக்கமாகி விட்டது. அதை வாங்கி குடிப்பதை கிராமப்புற மக்களும் பெருமையாகவே கருதுகின்றனர். கிராமப் புறங்களிலும் சோடா பருகுவோரின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து விட்டதால் சோடா விற்பனையும் சரிந்து போனது. இதனால் தமிழகத்தில் பாரம்பரிய சோடா தயாரிப்பும் வெகுவாக குறைந்து போனது.
போச்சம்பள்ளி, மத்தூர் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட சோடா தயாரிப்பு கம்பெனிகள் நடத்தி வந்தனர். இதன் மூலம் பலர் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். தற்போது சோடா கலருக்கு மவுசு குறைந்து விட்டதால் பலர் மாற்றுத் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
லாபம் கிடைக்கிறதோ, இல்லையோ நம் முன்னோர் கற்றுத் தந்த கைத்தொழிலை விடக்கூடாது என்று நடத்தி வருவதாக கூறுகின்றனர் அதன் உரிமையாளர்கள்.
இது குறித்து போச்சம்பள்ளி சோடா கடை உரிமையாளர் சண்முகம் (52) கூறியதாவது: நான் சிறு வயதில் இருந்தே சோடா கடை நடத்தி வருகிறேன். முன்பெல்லாம் நல்ல வருவாய் கிடைத்தது. தற்போது வெளிநாட்டு குளிர்பான மோகத்தால் மக்கள் சோடா கலரை மறந்து விட்டனர். இதனால் எங்கள் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. சோடா தயாரிப்புக்கு மின்சாரம் தேவை இல்லை என்பதால் தான் இன்றும் என்னால் சோடா கலர் தொழில் செய்ய முடிகிறது. இவ்வாறு சண்முகம் கூறினார்.
இந்நிலை இப்படியே நீடித்தால் இன்னும் ஒரு சில வருடங்களில் கோலி சோடா பாட்டிலை அருங்காட்சியகத்தில் தான் பார்க்க முடியும் என்ற நிலை வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
 
http://kulasaisulthan.wordpress.com/2013/09/25/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE/#more-5304

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: மறைந்து வரும் கோலி சோடா

Post by sawmya on Tue Oct 01, 2013 8:37 pm

உண்மை. உண்மை...
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: மறைந்து வரும் கோலி சோடா

Post by ரானுஜா on Tue Oct 01, 2013 10:37 pm

சூப்பர் சூப்பர் 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: மறைந்து வரும் கோலி சோடா

Post by ஸ்ரீராம் on Wed Oct 02, 2013 12:02 am

நிதர்சன உண்மை எற்றுக்கொள்கிறேன் 

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 38085 | பதிவுகள்: 231383  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மறைந்து வரும் கோலி சோடா

Post by முழுமுதலோன் on Wed Oct 02, 2013 9:07 am

சிறிய வயதில் நிறைய குடித்த அனுபவம் உண்டு இப்போதும் எங்கேயாவது பார்த்தால்  வாங்கி சுவைப்பதுண்டு .நினைவு படுத்தியமைக்கு மிகவும் நன்றிகள் பலப்பல

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum