தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பரம ஏழைக்கும், இனி வெளிநாட்டு படிப்பு! - தமிழக அரசின் புதிய அறிவிப்பு

View previous topic View next topic Go down

பரம ஏழைக்கும், இனி வெளிநாட்டு படிப்பு! - தமிழக அரசின் புதிய அறிவிப்பு

Post by ஸ்ரீராம் on Fri Sep 13, 2013 6:35 pm”நம்ம வசதிக்கு… ஃபாரின் காலேஜுக்கெல்லாமா பிள்ளைங்கள அனுப்பி படிக்க வைக்க முடியும்? ஏதோ பக்கத்துல இருக்கிற கவர்மென்ட் காலேஜுக்குதான் அனுப்பமுடியும்”

- நடுத்தர வர்க்க பெற்றோர்கள் பலரும், தங்கள் பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமான பேச்சு வரும்போது இப்படி புலம்புவது உண்டு. இந்நிலையில், ”முயற்சித்தால் உங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் உயர் கல்வியை மேற்கொள்ள முடியும். முழுச் செலவையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்” என்றபடி இந்த ஆண்டு முதல் புதியதொரு வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது தமிழக அரசு.

அரசுக் கல்லூரிகளில் முதுகலை பயில்பவர்கள், ஐந்து கட்ட தேர்வுகளை முடித்தால்… லண்டன் சென்று பயிலும் வாய்ப்பை, இந்த ஆண்டிலிருந்து தொடங்கிஇருக்கிறது உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் ‘உயர்கல்வி மன்றம்’. இதற்கென, தமிழ்நாடு முழுவதும் இருந்து அரசுக் கல்லூரி மாணவிகள் 13 பேர், மாணவர்கள் 7 பேர் என மொத்தம் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கூடவே 5 ஆசிரியர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில்… திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசுக் கலைக்கல்லூரி இரண்டாம் ஆண்டு முதுகலை கணிதவியல் மாணவி ஆர்.வனிதாமணி மற்றும் சென்னை பிரெசிடென்ஸி கல்லூரி இரண்டாம் ஆண்டு எம்.எஸ்சி கணிதத்துறை மாணவி ஜெனிஷா ஆகியோரும் அடக்கம்.இதைப் பற்றி பேசிய உடுமலைப்பேட்டை அரசுக் கலைக் கல்லூரியின் முதல்வர், முனைவர் அன்பழகன், ”அரசுக் கல்லூரிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணாக்கர்களும் உலகத்தரம் வாய்ந்த உயர் கல்வியை பெற்று, திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் தொடங்கப்பட்டிருக்கும் திட்டம்தான்… ‘வெளிநாட்டில் கல்வி’ (Study abroad programme). மாணவர்கள், ஒரு செமஸ்டர் கல்வியை அங்கு பயிலலாம். ஒவ்வொருவருக்கும் ஆகும் 15 லட்ச ரூபாய் செலவுத் தொகையை அரசே ஏற்றுக்கொள்கிறது.

உயர்கல்வி மன்றம் மற்றும் தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து, கடந்த ஆண்டு தமிழக முதல்வர் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. லண்டனில் உள்ள எட்ஜ் ஹில் (Edge Hill), நாட்டிங்ஹாம் (Nottingham), ராயல் ஹாலோவே (Royal Holloway) மற்றும் பர்மிங்ஹாம் (Birmingham) ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கவும், பயிற்சி மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பயணச்சீட்டையும் அனுமதி கடிதத்தையும் தமிழக முதல்வர் நேரில் அழைத்து வாழ்த்துக்கள் சொல்லிக் கொடுத்தார். எங்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்த வனிதாமணியை நானும் வாழ்த்துகிறேன்!” என்றார்

லண்டன் செல்லும் ஆயத்தப்பணிகளில் இருந்த வனிதாமணியை, பல்லடம் அடுத்துள்ள சின்னவடுகபாளையம் கிராமத்தில் சந்தித்தபோது…

”அப்பாவும் அம்மாவும் பவர்லூம் ஃபேக்டரியில் தினக்கூலி வேலை பார்க்கறாங்க. தம்பி வீரவேல், பொறியியல் கல்லூரியில படிக்கிறான். சின்ன வயசுல இருந்தே எனக்கு கணக்குப் பாடம் நல்லா வரும். அதனாலதான் உடுமை அரசுக் கல்லூரியில எம்.எஸ்சி சேர்ந்தேன். இந்த நிலையில, ‘அரசுக் கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கலாம், முழு செலவையும் அரசே ஏற்கும்’ அப்படிங்கற தகவலை, நோட்டீஸ் போர்டில் பார்த்துட்டு பதிவு செய்தேன்.

தமிழ்நாடு முழுக்க இருந்து நிறைய பேர் விண்ணப்பிச்சுருந்தாங்க. தகுதித் தேர்வு, முதல் கட்டத் தேர்வு இப்படி ஐந்து கட்டமா தேர்வுகள் நடத்தினாங்க. ஆங்கிலம் மற்றும் நுண்ணறிவை சோதிக்கற தேர்வுகளும் உண்டு. இறுதியா 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டோம். பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய இன்னொரு தேர்வுல நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால… ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் படிக்கறதுக்கும் எனக்கு வாய்ப்புக் கிடைச்சுருக்கு. சிறந்த கணிதவியல் விஞ்ஞானி ஆகணும்ங்கிறதுதான் என் லட்சியம். இதை நிறைவேத்தறது மூலமா பெற்றோர், கல்லூரி மற்றும் தமிழக அரசுக்கு பெருமை தேடித் தருவேன்” என்று ஆர்வம் பொங்கச் சொன்னார்.

”நான் விரும்பிய, நம்பர் தியரி கிரிப்டோகிராபி போன்ற பாடங்களை புதிய சூழ்நிலையில் வெளிநாட்டில் படிக்கப் போவதை நினைத்தாலே உற்சாகமாக இருக்கிறது” என்று கண்களில் பல கனவுகளோடு ஆரம்பித்த சென்னை மாணவி ஜெனிஷா,

”சிட்டியில் உள்ள பல்வேறு மால்களுக்கும் எங்களை அழைத்துச் சென்று, லண்டன் குளிரைத் தாக்குப்பிடிக்கும் குளிர்கால உடைகள், ஷூ போன்ற அனைத்துத் தேவைகளையும் அரசே செய்து தந்ததில் மிக்க மகிழ்ச்சி. ப்ளஸ் டூ-வில் நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன். என்றாலும், தேங்காய் கடையில் வேலை பார்க்கும் என் அப்பாவால் பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்க முடியாத சூழல். அதனால்தான் அரசுக் கல்லூரியில் சேர்ந்தேன். இங்கு படித்ததால் இன்று எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. கல்லூரிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்!” என்றார் நன்றி பெருக்குடன்.

பிரஸிடென்ஸி கல்லூரி முதல்வர், டாக்டர் எம்.மொகமத் இப்ராஹிம், ”இதற்கு, ஆங்கிலத்தில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். இதற்காகவே, இனி மாணவர்களுக்கு இந்தத் தேர்வுக்கென சிறப்பு ஆங்கில மொழித்திறன் பயிற்சிகள் வழங்கப்படும். அது எங்கள் கல்லூரியில் இருந்து இன்னும் பல ஜெனிஷாக்கள் உருவாக வாய்ப்பாக அமையும்!” என்று சொன்னார்.

எட்டாக்கனியாக இருக்கும் வெளிநாட்டுக் கல்வியை, எளிய குடும்பத்து மாணவர்களுக்கும் சாத்தியமாக்கிஇருக்கும் தமிழக அரசின் உயர்கல்வி மன்றத்துக்கு ஒரு சல்யூட்!

நன்றி: விகடன்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 38085 | பதிவுகள்: 231383  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: பரம ஏழைக்கும், இனி வெளிநாட்டு படிப்பு! - தமிழக அரசின் புதிய அறிவிப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Sep 13, 2013 6:41 pm

கல்வி கண்ணை திறக்கட்டும்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: பரம ஏழைக்கும், இனி வெளிநாட்டு படிப்பு! - தமிழக அரசின் புதிய அறிவிப்பு

Post by சரண் on Sat Sep 14, 2013 8:18 am

பகிர்வுக்கு நன்றி.
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum