தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கனவு - கவிதை
by rammalar

» செயல் - கவிதை
by rammalar

» படி! படி! - சிறுவர் கவிதை
by rammalar

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by rammalar

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by rammalar

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by rammalar

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by rammalar

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சமந்தா வரவேற்பு!
by rammalar

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by rammalar

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by rammalar

» தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
by rammalar

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by rammalar

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by rammalar

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by rammalar

» சனீஸ்வரா காப்பாத்து!
by rammalar

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by rammalar

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by rammalar

» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
by rammalar

» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
by rammalar

» கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா
by rammalar

» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
by rammalar

» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
by rammalar

» பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு
by rammalar

» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
by rammalar

» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
by rammalar

» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
by rammalar

» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
by rammalar

» ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
by rammalar

» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
by rammalar

» 17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
by rammalar

» சாயம் – கவிதை
by rammalar

» மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
by rammalar

» காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
by rammalar

» காதலர் தின கொண்டாட்டம்: லக்னோ பல்கலை எச்சரிக்கை
by rammalar

» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
by rammalar

» 7 மொழிகளில் வெளியாகும் தென் இந்திய திரைப்படம்!
by rammalar

» கலகலப்பு 2 - திரை விமர்சனம்
by rammalar

» திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு தீவிர பரிசீலனை

View previous topic View next topic Go down

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு தீவிர பரிசீலனை

Post by சரண் on Mon Sep 02, 2013 8:17 am

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு கொண்டு வருவது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகவும் குறைவு என்பதால், வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.இதற்காக மத்திய அரசு அதிக அளவில் அன்னிய செலாவணியை பயன்படுத்துகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது உயர்ந்து இருப்பதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளதாலும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடும் தொகை மிகவும் அதிகரித்து உள்ளது.

ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி இழப்பு

பெட்ரோலிய பொருட்களை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விற்க முடியாததன் காரணமாக, 2013–2014–ம் நிதி ஆண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக உயர்ந்து விடும் என மத்திய அரசு கருதுகிறது.இதனால் சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்த வேண்டும் என்றும், மேலும் பெட்ரோல், டீசல், மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரி பெட்ரோலிய துறை மந்திரி வீரப்ப மொய்லி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருக்கிறார்.

சிக்கன நடவடிக்கை

இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும் செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பெட்ரோலிய துறை அமைச்சகத்தை மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டு உள்ளார்.பெட்ரோல், டீசல் விற்பனையை குறைக்கும் வகையில் சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுபற்றி மந்திரி வீரப்ப மொய்லி நேற்று கூறியதாவது:–
காலை 8 மணி இரவு 8 மணி வரை

நாம் இப்போது ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருப்பதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாத வகையில் சில சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே சில நாடுகளில் எடுக்கப்பட்டு உள்ளன. பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.அதில் ஒன்று, நகர்ப்புறங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் விற்பனை நிலையங்களை திறந்து வைப்பது. அதாவது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை விற்பனையை நிறுத்தி வைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முறையை அமல்படுத்தும் பட்சத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இந்த யோசனை பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் இதுபற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

விழிப்புணர்வு பிரசாரம்

இந்த சிக்கன நடவடிக்கையின் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு குறைக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரி வருகிற 16–ந் தேதி முதல் 6 வாரங்களுக்கு நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. பெட்ரோல், டீசலின் பயன்பாட்டை 3 சதவீதம் குறைக்கும் பட்சத்தில் ரூ.16 ஆயிரம் கோடி சேமிக்க முடியும் என்று கருதுகிறோம்.இவ்வாறு மத்திய மந்திரி வீரப்ப மொய்லி கூறினார்.

பா.ஜனதா எதிர்ப்பு

இரவில் பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூடும் யோசனைக்கு பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறுகையில்; பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறந்து இருப்பது மிகவும் அவசியம் என்று கூறிய அவர், காலை நேரத்தில் விற்பனை நிலையங்கள் மூடி இருந்தால் மக்கள் தங்கள் வாகனங்களுக்கு எப்படி பெட்ரோல், டீசல் நிரப்புவார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

--நன்றி
தினத்தந்தி.
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு தீவிர பரிசீலனை

Post by Muthumohamed on Mon Sep 02, 2013 10:54 am

நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்றே தோணுகிறது
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு தீவிர பரிசீலனை

Post by மகா பிரபு on Mon Sep 02, 2013 11:02 am

கள்ள சந்தை பெருகும்..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு தீவிர பரிசீலனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum