தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
by rammalar

» ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
by rammalar

» சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
by rammalar

» உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
by rammalar

» புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
by rammalar

» காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
by rammalar

» ஒரே பந்தில் ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
by rammalar

» பார்வையில் நனைந்தேன்…! -கவிதை
by rammalar

» நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை…!! – கவிதை
by rammalar

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar

» .மிக அருகில் குழந்தைகள்
by rammalar

» வயலும் வாழ்வும் – எக்ஸ்பிரஸ் கவிதைகள்
by rammalar

» வாழ்வியல் எது? - கவிதை
by rammalar

» வரிசையாய் எறும்புகள்
by rammalar

» மெனோபாஸ் – கவிதை
by rammalar

» பாடல் – கவிதை
by rammalar

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by rammalar

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by rammalar

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by rammalar

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by rammalar

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by rammalar

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by rammalar

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar

» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மரபுக் கதைகள் சொல்லும் அழகுக் கிராமம் 'அச்சுவேலி'

View previous topic View next topic Go down

மரபுக் கதைகள் சொல்லும் அழகுக் கிராமம் 'அச்சுவேலி'

Post by நிலா on Sun Oct 10, 2010 10:29 pm'அச்சு' என்ற சொல்லுக்கு தேயம், அகத்தி, மரம், அச்சுத்தினை எனவும் அடையாளம், தேரச்சு, முத்திரை எனவும் மதுரை தமிழ்ப் பேரகராதி பொருள் கூறுகின்றது. மேலும் அச்சுக் கட்டு என்பதற்கு நெல் பயிரிடத்தக்க நிலம் என்ற பொருளும் கூறப்பட்டுள்ளமையைக் காணலாம். அத்துடன் அச்சு என்பது வடமொழி 'AKSHA' என்ற சொல்லின் திரிபென்று கதிரவேற்பிள்ளையின் தமிழ் அகராதி கூறுகின்றது. அச்சன்வேலி, அச்சுவேலி ஆயிற்று. ஏனெனில் அச்சன் குளம், அச்சன்துறை, அச்சன் பேட்டை, அச்சன் குட்டைப்பட்டி முதலிய தானப் பெயர்களை நோக்கினால் அச்சுவேலி என்பதில் உள்ள 'அச்சு' என்பது 'அச்சன்' என்னும் பதத்தின் சிதைவு எனத் துணிதல் கூடும் என யாழ்ப்பாண வைபவ கௌமுகி (333-334) கூறுகின்றது.

மேலும் 'ஈழத்து இடப்பெயர் ஆய்வு' எனும் நூலில் 'வேலி' என்பது முள், கழி, முதலியவற்றாலான அரண், மதில், காவல், நிலம், வயல் ஒரு நில அளவு பசுக்கொட்டில், காற்று எனப் பொருள்படும். வேலி பழந்தமிழ்ச் சொல் என்பதும் நிலங்களுக்கு எல்லையாக வேலி அமைக்கும் மரபு பண்டை நாள் முதலாக இருந்துள்ளது என்பது 'வேரலவேலி வேர்க் கோட்பலவு' (குறுந்தொகை 8 ) தமிழர் பண்பாட்டில் அறியப்படும் செய்திகளாகும்.

முன்னர் எல்லையைச் சுட்டிய வேலி என்ற சொல் சோழர் காலத்தில் நில அளவைப் பெயராகப் பொருள் வளர்ச்சி பெற்றுள்ளது. வேலி என்பது சோழர் காலத்து நில அளவுப் பொருட்களில் ஒன்று என்பதைப் பின்வரும் கல்வெட்டுச் சான்று பகர்கின்றது. 'உடையார் ஸ்ரீ ராஜராஜச்சரம்

உடையார்க்கு நிவந்தக் காரராக

நிவந்தமாய் பங்கு செய்த படிபங்கு வழ

ஒன்றினால் நிலன்வேலியினால்......'

நாகசுவாமி (பதிப்பு) தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டு ( 1: 54 : 55)

ஊராட்சி முறையில் ஊர்களுக்கு எல்லை வகிக்கும் போது இயற்கை செயற்கை நிலங்களில் 'வேலி' எனப் பொருள் வைக்கப்பட்டது. அத்துடன் 'நிவந்தம்' அல்லது 'இறையிலி' நிலம் அரசனால் வழங்கப்பட்ட போது 'வேலி' என்ற அடிப்படையிலும் நிலம் அளந்து கொடுக்கப்பட்டமையையும் நோக்கலாம்.

இவ்வாறாக அச்சுவேலி எனப் பெயர்பெற்ற இப்பிரதேசம் வட இலங்கையில் யாழ் குடா நாட்டில் வலிகாமம் என்ற பிரதேசத்தில் கோப்பாய் பிரதேச சபைப் பிரிவில் வடமராட்சியையும் வலிகாமத்தையும் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இப்பிரதேசம் வடக்கே தொண்டமனாற்றையும் மேற்கே வசாவிளான் மற்றும் பலாலியையும் எல்லைகளாகக் கொண்டது.

இப்பகுதி 19.8 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. பத்தமேனி, கதிரிப்பாய், தம்பாலை, இடைக்காடு, வளலாய், தோப்பு, தென்மூலை, நவக்கிரி, கலட்டி, தச்சன்தோட்டம், நாவற்காடு, மடத்தடி, பயிர்தோலை, கொட்டடி, அச்சுவேலி தெற்கு முதலான 15 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த பிரதேசமாக அச்சுவேலி காணப்படுகின்றது. அச்சுவேலி பிரதேசம் இன்று ஏழு கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன

J/2 81 - பத்தமேனி
J/2 83 - தம்பாலை, கதிரிப்பாய்
J/2 84 - இடைக்காடு
J/2 85 - வளலாய்
J/2 86 - அச்சுவேலி வடக்கு
J/2 87 - அச்சுவேலி மேற்கு
போன்ற கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. கோப்பாய் பிரதேச சபை பதிவேட்டின் (2009) தகவல்களின்படி16002 பேர் வசிக்கின்றனர். மேலும் இப்பகுதியில் சைவசமயம் புராதன காலந்தொட்டு முதன்மை பெற்று விளங்குகிறது.

1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் ஐரோப்பியர் ஆளுகைக்கு உட்பட்ட போது ஐரோப்பிய ஆட்சி அச்சுவேலி பிரதேசத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து ஆகிய மதங்களும் செல்வாக்கு பெற்று விளங்குகின்றது.

இப்பிரதேசத்தில் சைவசமய கோவில்களாக கந்தசுவாமி கோவில், காளிகோவில், பிள்ளையார் கோவில்கள், முத்துமாரி அம்மன் கோவில், சிவசக்தி கோவில், மீனாட்சியம்மன் கோவில் என்பன குறிப்பிடத்தக்கன. மேலும் மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் இங்குள்ள்ன. குறிப்பாக சூசையப்பர் தேவாலயம் முக்கியமானதொரு தேவலாயமாக விளங்குகின்றது. மற்றும் ஒரு புரட்டஸ்தாந்து தேவாலயமும் இங்கு காணப்படுகின்றதுடன் இப்பகுதியில் வாழுவோரில் 15376 பேர் சைவர்களாகவும் 626 பேர் கிறிஸ்தவர்களாகவும் இருக்கின்றார்கள்.

அத்துடன் இங்கு எட்டு பாடசாலைகள் இயங்குகின்றன. இதில் அச்சுவேலி மத்திய கல்லூரி, அச்சுவேலி தெரேசா மகளிர் கல்லூரி ஆகியன பிரபல்யமான பாடசாலைகளாக விளங்குகின்றன. இவ்வாறாக அச்சுவேலி பிரதேசம் நீர் வளமும் நில வளமும் ஒருங்கே கொண்டிருப்பதுடன் இப்பகுதியில் விவசாயம் அன்றுதொட்டு இன்றுவரை முதன்மை பெற்று விளங்குகின்றது.

பி.ராஹினி (பி.ஏ)
யாழ். பல்கலைக்கழகம்
avatar
நிலா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 173

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum