தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
by rammalar

» திரை விமர்சனம்: மேயாத மான்
by rammalar

» 7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
by rammalar

» ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
by rammalar

» தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
by rammalar

» தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
by rammalar

» இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
by rammalar

» ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
by rammalar

» எங்கே செல்கிறோம்? பதிவு 3
by vivasayi

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by rammalar

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar

» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
by rammalar

» மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
by rammalar

» இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
by rammalar

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by rammalar

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

Top posting users this week
rammalar
 
vivasayi
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

View previous topic View next topic Go down

தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jul 05, 2013 12:00 pm

தர்மபுரி மாவட்ட கலப்பு திருமண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திவ்யாவின் கணவன் இளவரசன் , ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர்தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் ‌கூறுகின்றனர்.

காதல் திருமணத்தால் கலவரம்

தர்மபுரி மாவட்டம், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த, திவ்யாவுக்கும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனுக்கும், கலப்பு திருமணம் நடந்தது. இதையடுத்து, திவ்யாவின் தந்தை, தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்த சூழ்நிலையில் திவ்யாவின் தாயார் தேன்மொழி, தனது மகளை கடத்தி்ச் சென்று கட்டாய திருமணம் செய்ததாகவும் மீட்க கோரியும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக , கணவன் இளவரசனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என திவ்யா கூறியதாக தெரிகிறது. பின்னர் நேற்று இந்த வழக்கில் ஆட்கொணர்வு மனுவை தாய் தேன்மொழி வாபஸ் பெற்றார். வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இந்நிலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் ரயில் தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டனர். இன்று மதியம் தண்டவாளம் அருகே தனது பல்சர் பைக்கி்ல் வந்ததகவும், பைக்கை நிறுத்திவிட்டு மதுகுடித்ததாகவும், பின்னர் ரயில் அடிபட்டு தற்கொ‌லை செய்ததாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது சட்டை பையில் இரு கடிதங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

-- தினமலர்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jul 05, 2013 12:00 pm

தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கெட்டாய் நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன். செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. தீவிரமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி ஊரைவிட்டு சென்று திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

பெண்ணின் தரப்பில் கடத்தல் என்றும், பையன் தரப்பில் காதல் என்றும் போலீஸ் நிலையத்தில் வாதிட்டனர். போலீசாரும் இளவரசனையும் திவ்யாவையும் சேர்ந்து வாழ அனுப்பி வைத்தனர். மனம் உடைந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் தூக்கு கயிற்றில் உயிர் துறந்தார். அதன்பிறகு தர்மபுரியில் கலவரம் ஏற்பட்டது. இந்த சாதி மோதல் வடமாவட்டங்கள் முழுவதும் பரவியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் பத்து மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் 4-ம் தேதி திவ்யா தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன்பின்னர் திரும்பி வரவில்லை. இதையடுத்து தர்மபுரி டவுன் போலீசில் இளவரசன் புகார் செய்தார். இதற்கிடையே திவ்யாவின் தாய் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை ஐகோர்ட்டிற்கு வந்திருந்த திவ்யா, தனது தாயுடன் செல்ல விரும்புவதாக கூறினார். தன்னுடன் வரும்படி இளவரசன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். ஆனால் திவ்யா கண்டுகொள்ளாமல் இருந்தார்.

இதையடுத்து திவ்யாவை அவரது தாயாருடன் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று தாயாருடன் வந்திருந்த திவ்யா, இனிமேல் எந்த சூழ்நிலையிலும் காதல் கணவர் இளவரசனுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில், திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் தர்மபுரியில் இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தர்மபுரி அரசு கல்லூரியின் பின்புறம் உள்ள தண்டவாளத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அருகில் ஒரு மோட்டார் சைக்கிள், கைப்பை ஆகியவையும் கிடந்தன.

அவரது சட்டைப் பையில் இருந்து 2 கடிதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆதாரங்களைச் சேகரித்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை வாழ வைக்க ஒரு கோஷ்டியும், பிரித்து வைக்க ஒரு கோஷ்டியும் மல்லுக்கட்டி வந்த நிலையில், இளவரசனின் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-- மாலை மலர்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jul 05, 2013 12:01 pm

தருமபுரி காதல் ஜோடி - திவ்யா இளவரசன் காதல் விவகாரத்தில் திவ்யா இனி இளவரசனோடு சேர்ந்து வாழ்வதில்லை என்று நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில், இளவரசன், இன்று, தருமபுரி கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தருமபுரியில் இரு வேறு பிரிவைச் சேர்ந்த திவ்யா - இளவரசன் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டதால், திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அதை அடுத்து தருமபுரியில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது.

இந்த நிலையில், திவ்யாவின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவைத் தொடர்ந்து, திவ்யா தனது தாயாருடன் வாழ விரும்புவதாகக் கூறி தாயாருடன் தங்கியிருந்தார்.

நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா, தனது தாயாருடன் இருக்கவே விரும்புவதாகவும், கணவருடன் வாழப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையே, வியாழக்கிழமை காலை தருமபுரி அரசுக் கல்லூரி பின்புறம் ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கைப்பற்றப்பட்டது. மூளை சிதறிய நிலையில், அடிபட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து இளவரசனின் நண்பர்கள் தெரிவிக்கையில், உறவினர்களே அவரை அடித்துக் கொன்றிருக்கக் கூடும் என்றும், விபத்து ஏற்படுத்தியது போல் காட்ட முனைந்திருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர். மேலும், கடந்த நான்கைந்து நாட்களாக பெரும் பதட்டத்தில் இளவரசன் இருந்தான் என்றும், அவனை சமுதாயத் தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை, காப்பாற்றுவதற்கும் கைதூக்கி விடுவதற்கும் முன்வரவில்லை என்றும், அதனாலேயே பெரும் மன உளைச்சலில் இருந்தான் என்றும் அங்கே கூடியிருந்த நண்பர்கள் கூறினர். மேலும் சிலர், இளவரசனின் உடலை எடுக்க விடாமல் சூழ்ந்து கொண்டனர். போலீஸார் குறைவான அளவே அங்கே இருந்ததால், பதற்றமான சூழல் தென்பட்டது.

-- தினமணி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jul 05, 2013 12:02 pm

தருமபுரியில் இன்று மர்மமான முறையில் உயிரிழ்ந்து சடலமாகக் கிடந்த இளவரசன் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பக் கூடாது என்றும், தங்கள் பகுதியான நத்தம் காலனிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வற்புறுத்திய அவர்கள், போலீஸாரை அருகே விடவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே, பதற்றமான சூழ்நிலை கருதி, கிராமப் பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

-- தினமணி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு

Post by மகா பிரபு on Fri Jul 05, 2013 1:44 pm

இந்த சம்பவம் மனதளவில் ஒரு வித பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum