தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நெகிழ வைத்த நிஜங்கள்

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sun Jun 23, 2013 6:17 pm

First topic message reminder :

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:16 pm

பசியை துரத்திய கருணை!

காலையில் ரோட்டு ஓரமாக சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன்பு ஒரு அம்மாவும் ஐந்தாறு வயது மதிக்கத்தக்க சிறுவனும் சென்று கொண்டிருந்தார்கள். அந்த அம்மா தன் மகனிடம், "மதியம் டிபன் பாக்சில் இருக்கும் டிபன் முழுவதையும் சாப்பிட்டுவிட வேண்டும். மீதம் வைக்கக்கூடாது'' என்று கூறிக் கொண்டே பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

கொஞ்ச தூரம் சென்றதும், ரோட்டு ஓரத்தில் ஒரு தாய் இரண்டு வயது பெண் குழந்தையை வைத்துக்கொண்டு, `குழந்தை பசியால் அழுகிறாள், ஏதாவது தர்மம் பண்ணுங்கய்யா' என்று போவோர் வருவோரை கையெடுத்து கும்பிட்டு பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது அந்த சிறுவன், தன் சாப்பாட்டுக் கூடையில் இருந்த டிபன் பாக்சை எடுத்து அந்தப் பெண்ணிடம் நீட்டி `இதில் இட்லி இருக்கிறது. இதை பாப்பாவுக்கு ஊட்டி விடுங்கள்` என்றான். அந்தப் பெண் தயக்கத்துடன் நின்றாள். சிறுவனின் அம்மாவோ, "உனக்கு மதிய சாப்பாட்டுக்கு வைத்திருக்கிறேன்" என்று வாய் திறந்தார். "அதான் எனக்கு பிஸ்கட் இருக்குல்ல, அதை மதியம் சாப்பிடுறேன். இந்த இட்லியை பாப்பாக்கு கொடுத்து விடுவோம்" என்றான். பிறகு சிறுவனின் தாய் டிபன் பாக்சில் இருந்த இட்லியை அந்த சிறுமிக்கு கொடுத்தாள்.

அவர்கள் பின்னாலேயே வந்த எனக்கு நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. சிறுவனுக்குத்தான் எவ்வளவு இரக்க குணம்! என்று வியந்தேன்.

ச.சோமசுந்தரி, கோவில்பட்டி.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:17 pm

பயணம் ஒன்று... ஆச்சரியம் இரண்டு!

நான் அரசு பணியில் இருக்கிறேன். அலுவலக வேலையாக ஊழியர்களுடன் சென்னைக்கு பயணம் செய்தோம். நாங்கள் தங்கியிருந்த லாட்ஜில் இருந்து அதிகாரிகள் அலுவலகம் செல்வதற்காக ஒரு ஆட்டோக்காரரை அழைத்தோம். எவ்வளவு கட்டணம்? என்று கேட்டோம். `உங்கள் விருப்பம்போல் கொடுங்கள்' என்றார். நாங்கள் இறங்கிய பிறகு 50 ரூபாயைக் கொடுத்தோம், அவர் மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொண்டார். நாங்கள் அவரை ஆச்சரியமாகப் பார்த்தோம்.

அன்று லாட்ஜ் திரும்பிய பிறகு ஊழியர் ஒருவரின் செல்போன் காணாமல் போயிருந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. திடீரென ஊரில் உள்ள அவரது மனைவியிடம் இருந்து எங்களது நண்பர் ஒருவருக்கு போன் வந்தது. ஆட்டோவில் போனை தவற விட்டுவிட்டதாகவும், ஆட்டோக்காரர் நம்பரில் தொடர்பு கொண்டு போனை பெற்றுக் கொள்ளும்படியும் கூறிவிட்டு ஆட்டோக்காரர் எண்ணைத் தந்தார். நாங்கள் ஆட்டோக்காரரை தொடர்பு கொண்டு செல்போனை பெற்றுக் கொண்டோம்.

அவரது நல்ல குணத்தைப் பாராட்டி பணத்தை பரிசாக கொடுக்க முன்வந்தோம். ஆனால் அவரோ பணத்தை வாங்க மறுத்து சென்றுவிட்டார். நாங்கள் மீண்டும் ஒருமுறை அவரை வியந்து பார்த்தபடி நின்றோம்.

ஆ.முனியப்பன் சேகர், தூத்துக்குடி.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:17 pm

படிப்பைத் தடுத்த தந்தை... ஜெயித்துக் காட்டிய மகள்!

என் பக்கத்து வீட்டினர் நடுத்தர குடும்பம். அந்த தம்பதிக்கு ஒரு மகள். நன்றாக
படிப்பாள். அவர்கள் வீட்டில் மின்சாரஇணைப்பு கிடையாது. சிம்னிவிளக்கு வைத்துதான் படிப்பாள்.

அவளுடைய தந்தை மது அருந்தும் பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு அவருடைய வீட்டு கஷ்டத்தையும், அடுத்தவர்கள் செய்த கெடுதலையும் சொல்லி சத்தம் போடுவார். இதனால் அவரது மகள் படிப்பில் முழுகவனம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டாள்.

`மகள் படிக்கிறாள், கொஞ்சம் அமைதியாக இருங்கள்'' என்று அவரது மனைவி சொல்லிப் பார்ப்பாள். ஆனால் அவரோ, "அவள் அதிகம் படித்தால் என்னை மதிக்க மாட்டாள்'' என்பார்.

இதை தினம் தினம் காதில் கேட்கும் அவரது மகளோ தன் தந்தை தன்னைப்பற்றி இப்படி எதிர்மறையாக சொன்னதை உடைத்துக் காட்ட வேண்டும் என்று வைராக்கியம் கொண்டாள். அதன்பிறகு தன் குடிகாரத் தந்தை என்னதான் கத்தினாலும் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் படிப்பு ஒன்றே குறியாக இருந்திருக்கிறாள். அந்த முயற்சி கைகொடுத்ததில் நன்றாகப் படித்து முடித்து இப்போது பெரிய கம்பெனியில் நல்ல வேலை கிடைத்து மாதம் 15 ஆயிரம் சம்பாதிக்கிறாள். அவள் மாதம் தோறும் சம்பளம் வாங்கியதும் முதலில் அப்பாவிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குகிறாள்.

"உன்னைப் படிக்க விடாமல் தடுத்தவரிடம் போய் சம்பளத்தைக் கொடுக்கிறாயே?'' என்று கேட்டால், "அவர் திட்டியதால் தான் நான் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று நினைத்து வைராக்கியத்துடன் படித்தேன். படித்தால் மதிக்க மாட்டேன் என்று சொன்னதை பொய்யாக்க, அவரிடமே சம்பளத்தைக் கொடுத்து அவர்மீது வைத்திருக்கும் மரியாதையை உறுதிப்படுத்திக் கொள்கிறேன். அதோடு அப்பாவும் இப்போது மாறி விட்டார். அந்த மாற்றத்துக்கும் மரியாதை கொடுத்துத்தானே ஆக வேண்டும்'' என்றாள்.

அந்தப் பெண்ணின் `அப்பா பாசம்' என்னை' நெகிழ வைத்துவிட்டது.

-எஸ்.கவுரி, பெரியகுப்பம்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:17 pm

மணவிழாவில் மகிழ்ச்சி தந்த இசைவிழா... !

எனது உறவினரின் மகளுக்குச் சமீபத்தில் திருமணம் நடந்தது. வரவேற்பு விழாவுக்கு மெல்லிசைக் குழு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அக்குழுவினரைப் பார்த்த எனக்கு வியப்பு. அவர்கள் அனைவருமே மாற்றுத் திறனாளிகள்.

ரிஷப்ஷனுக்கு வந்தவர்கள் அனைவருமே அவர் களுடைய இன்னிசை மழையில் நனைந்து சிலிர்த்துப் போனார்கள். இதுபற்றி உறவினரிடம் கேட்டபோது, "மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப் பளிக்கும்போது அவர்களுக்கு தன்னம்பிக்கையும், வருமானமும் கிடைக்கிறது. மேலும் மாற்றுத் திறனாளிகள் என்றாலே கேலியாகப் பார்ப்பவர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் சவுக்கடியாக அமையும்'' என்றார்.

மாற்றுத் திறனாளிகளை மதிக்கவும், அவர்களுக்கு நல்ல வாய்ப்பளிக்கவும் நாமும் முன்வருவோமே!

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:17 pm

கீழே விழுந்த வரும் மனதில் நின்றவரும்...

மெயின்ரோட்டில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது வாகன நெரிசல் மிகுந்த அந்த சாலையின் குறுக்காக கடக்க முயன்றார் ஒரு பெரியவர். சாலையின் நடுவில் வரும்போது திடீரென எதிர்பாராமல் கீழே விழுந்து விட்டார்.

அதேநேரம் வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் `சடன் பிரேக்' போட்டு வண்டியை நிறுத்தி வேகமாக இறங்கினார். அதே வேகத்தில் விழுந்து கிடந்த பெரியவரை நெருங்கிப்போய் அவரை தூக்கி விட்டார். தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை கொடுத்து தண்ணீரை பருகச் செய்தார். கொஞ்சம் தன்னை ஆசுவாசம் செய்துகொண்டு பெரியவர் இயல்பானதை உணர்ந்து கொண்டதும், வாகன இளைஞர் பெரியவரிடம், "அய்யா...என்னாயிற்று உங்களுக்கு? நன்றாகத்தானே சாலையை கடந்து கொண்டிருந்தீர்கள்...எதிர்பாராமல் விழுந்து விட்டீர்களே'' என்று கனிவாக கேட்டார்.

பெரியவரோ தனக்கு ரத்தக்கொதிப்பு நோய் உண்டென்றும், மதியம் சாப்பிடாமல் வந்ததால் இப்படி ஆகி விட்டது என்றும் கூறினார்.

உடனே இரு சக்கரவாகனத்தில் வந்தவர், பக்கத்தில் இருந்த ஓட்டலில் பெரியவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். `சாப்பிட்டு முடித்ததும் நிதானமாய் செல்லுங்கள்' என்று செல்லிவிட்டு தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு பயணித்தார்.

பத்து நிமிட நேரம் நடந்த இந்த பாசப்பரிவு காட்சியை பார்த்த எனக்கு வாகனத்தில் வந்த அந்த இளைஞர் மேல் மரியாதை கூடியது. வழக்கமாக இப்படி மற்றவர்கள் வாகனத்தில் வரும் நேரத்தில் யாராவது இப்படி குறுக்கே வந்து விட்டால், ஆத்திரத்தில் வள்ளென்று விழுவார்கள். அதை மட்டுமே இதுவரை பார்த்த என் கண்களுக்கு இந்தக்காட்சி ஆச்சரியமாகவே இருந்தது.

-கு.நவரோஜி, மேற்கு தாம்பரம்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:18 pm

டிக்கெட் பணத்தை `லபக்'கிய திருடி!

காலை நேர பரபரப்பில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அதனால் ஒரு பெண்ணிடம் பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்கச் சொன்னேன். இரண்டு நிறுத்தம் சென்றும் பயணச்சீட்டு வரவில்லை. அந்தப் பெண்ணிடம் கேட்டால், "கொடுத்திருக்கிறேன் வரும், பொறுங்கள்''
என்றாள்.

நான் இறங்குமிடம் நெருங்கிக் கொண்டிருந்ததால் மீண்டும் பயணச்சீட்டை நினைவுபடுத்தினேன். "நான் கொடுத்த பணத்தை எடுத் துக்கொண்டு அந்தப் பெண்மணி அப்போதே இறங்கிவிட்டாள்'' என்று பக்கத்தில் நின்ற பெண் கூறினார்.

என் கையில் வேறு பணமும் இல்லை.ளஅடுத்த நிறுத்தத்திலோ பயணச்சீட்டு பரிசோதகர்கள் நின்றனர். எனக்கு அழுகையே வந்துவிட்டது. "அம்மா பதற்றப்படாம அமைதியா இருங்க. பரிசோதகர் உள்ளே வந்து கேட்டால் நாங்கள் விவரம் சொல்கிறோம், அழாதீங்க" என்று மற்ற பயணிகள் கூறினர். அது ஒரு கல்லூரி நிறுத்தமாக இருந்ததால் கீழே நின்றபடியே டிக்கெட்டை பரிசோதித்து விட்டு சென்று விட்டனர். பஸ் நகர்ந்து நான் இறங்கும் நிறுத்தம் வரும்வரை எனக்கு மனம் திக்திக்கென்று பதற்றமாகவே இருந்தது. எப்படியோ டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கி அவமானப்படாமல் தப்பித்தேன்.''

முடிந்தவரை பயணச்சீட்டை நாமே வாங்குவது நல்லது என்பதை அந்த அனுபவம் எனக்குக் கற்றுத் தந்தது.

-த.காமாட்சி, கடம்பநல்லூர்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:18 pm

மாமியாருக்கு மரியாதை

சமீபத்தில் என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். உறவினர் வீட்டில் அவர் மாமியாரும் இருந்தார். அவருக்கு அதிக வயது காரணமாக கண்பார்வை மங்கி விட்டது. காதும் சரிவர கேட்காமல் இருந்தது.

நான் அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்தபோது நான் சென்றதோ, உறவினரிடம் பேசிக் கொண் டிருந்ததோ அந்த பாட்டிக்கு தெரியாது. இருப்பி னும் என் உறவுக்கார பெண் தன்மாமியாரிடம் என்னை அழைத்துச்சென்றார்.காதருகில் சத்த மாக என்அம்மா பெயரையும் உறவுமுறையையும் சொல்லி அறிமுகப்படுத்தினார். அந்த பாட்டியும் என் கரங்களைப் பற்றிக்கொண்ட என் அம்மா, எங்கள் குடும்பம் பற்றியெல்லாம் சில மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண் டார். அவர்களிடம் விடைபெறும்போது கைளை தலையில் வைத்து ஆசியும் வழங்கினார். மகிழ்ச்சியுடன் விடை பெற்றேன்.

இன்றைக்கு பெரும்பாலான முதியவர்கள் பிள்ளைகளின் அரவணைப்பின்றி முதியோர் இல்லங்களுக்கு பார்சல் பண்ணப்பட்டு விடுகிறார்கள். ஆனால் என் உறவினர்பெண் தன் மாமியாரை எந்தக்குறையும் இன்றி பராமரிப்பதோடு, வீட்டுக்கு வருகிற என் போன்ற உறவினர்களையும் அறிமுகப்படுத்தி வைத்து அவர்களின் மகிழ்ச்சிக்கு வகை செய்கிறார். நிஜமாகவே இப்படி ஒரு அன்பான மருமகள் கிடைக்க அந்த மாமியார் கொடுத்து வைத்தவர் தான்.

-பி.மரகதவள்ளி, வள்ளியூர்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:18 pm

திடீர் பாசம், திருடியின் நேசம்

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு கணவருடன் சென்றேன். பஸ்சில் அதிக கூட்டம் என்பதால், நான் முன்பக்க படிக்கட்டு வழியாக ஏறிக்கொண்டேன். கணவர் பின்பக்க படிக்கட்டு வழியாக ஏறி விட்டார்.

பஸ் இரண்டொரு ஸ்டாப்பில் நின்று போன போது இரண்டு பேர் கொண்ட ஒரு சீட் காலியானது அதில் நான் உட்கார்ந்து கொள்ள, என் அருகில் இன்னொரு பெண்ணும் அவசர மாக உட்கார்ந்தார். அவரை நான் முன்பின் பார்த்ததில்லை என்றாலும், பழகிய பெண் போல் சிரித்தார். என் கையில் வைத்திருந்த பேக்கை `அழகாய் இருக்கிறதே' என்று சொன்னபடி உரிமையுடன் வாங்கியவர், என் கண் முன்பே அதை திறந்து பார்த்து மூடினார். `நல்லாத்தான் இருக்கு' என்றவர், `காலம் கெட்டுக்கிடக்கு. தனியாகவா வந்தீர்கள்?' என்று கேட்டார். நான் அந்தப் பெண்ணிடம், என் கணவர் பின் சீட்டில் இருக்கிறார். கூட்டமாக இருந்ததால் நான் முன் வாசல் வழியாக ஏறி விட்டேன் என்றேன்.

நான் இப்படிச் சொன்னதுமே அந்தப் பெண்மணி முகத்தில் சின்னதாய் ஒரு அதிர்ச்சியை உணர்ந்தேன். அதற்கேற்ப அடுத்த ஸ்டாப்பில் அந்தப் பெண்மணி இறங்கிச் சென்று விட்டார். அத்தனைநேரம் அன்பும் அக்கறையுமாய் பேசியவர், போகும்போது ஒரு வார்த்தை சொல்ல வேண்டுமே...அது தான் இல்லை. அப்புறம் தான் புரிந்தது, அந்தப்பெண் தனியாக வரும் பெண்களிடம் அன்பாக பேசி அவர்கள் வைத்திருக்கும் பணம் மற்றும் பொருட்களை திருடிக் கொண்டு போகிறவர் என்று! அன்று என் கணவருடன் நான் வந்திருக்கிறேன் என்று சொன்னதால் என் கைப்பையில் இருந்த பணம் தப்பியது. தனியாக வரும் பெண் களை ஏமாற்றி பணம் பறிக்கும் பெண்களும் இப்படி கிளம்பி விட்டார்கள். அதனால் தனியாக பயணம் செய்யும் பெண்களே, கவனம்.

-எஸ்.பரிதாபானு, காயல்பட்டணம்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:19 pm

`இது எங்க ரோடு...தள்ளிப்போ..!'

கேம்ப் ரோட்டில் சில நாட்களுக்கு முன்பு காலை 9 மணிக்கு டிராபிக் அதிகமாக இருந்தது. இரண்டு பெரியவர்கள் பைக்கை ரோட்டில் நிறுத்திக்கொண்டு பேசிக் கொண்டி ருந்தார்கள். அவர்களும் டிராபிக் நெரிசல் ஏற்பட காரணமாக இருந்தார்கள்.

நான் கடையை விட்டு வெளியே வந்து "சார் கொஞ்சம் ஓரமாக நின்று பேசுங்கள். நீங்கள் நிற்பதால் டிராபிக் நெரிசல் அதிகம் ஆகிவிட்டது'' என்றேன். பதிலுக்கு அவர்கள், "டேய் உன் கடைக் குள்ளா வந்து நின்று பேசுகிறேன்? போ, போய் உன் வேலையைப் பார். நீ தள்ளு என்று சொன் னால் நான் தள்ளணுமா?

நீங்கள் நின்று வேசுவதால் பள்ளிக்கு, வேலைக்கு செல்பவர்களுக்கு கூட தாமதமாகி விடுகிறது. அதை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்'' என்றேன்.

அப்போதும் கூட வண்டியை நகர்த்தவில்லை. என்மேல் கோபப்பட்டு என்னை திட்டுவதை தொடர்ந்தார்கள். மனவேதனையுடன் அங்கிருந்து அகன்றேன். நம்மால் முடிந்த வரைக்கும் ரோட்டில் போகும் மற்ற வண்டிகளுக்கு இடைஞ்சல் வராமல் பார்த்துக் கொள்ளணும். ஆனால் இதுபோன்று செய்யும் செயல் நம்மை வேதனைப் பட செய்கிறது.

சிதம்பரம், சென்னை 73.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:19 pm

வீண் பேச்சால் உறவு கெட்டது

என் திருமணத்தன்று நடந்த சம்பவம் இது. வேலை மற்றும் பல காரணங்களால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலே இருந்து விட்டார், என் தந்தை. எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததால் 20 வருடங்களுக்குப் பிறகு தந்தை வழி சொந்தங்கள் நிறையபேர் என் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது உறவினர் ஒருவர், மணமக்களை வாழ்த்தி விட்டு வந்தவர், `பொண்ணு கட்டி யிருக்கிறது எட்டாயிரம் ரூபாய் பட்டுப்புடவை மாதிரி இல்லியே... வெறும் 2 ஆயிரம் ரூபாய் தான் இருக்கும். தாலி செயின் கூட 7 பவுன் போல இல்லை. வெறும் 5 பவுன்தான் இருக்கும்...' என்று கூறிவிட்டுச் சென்றார்.

சாப்பிட்டு முடித்த சொந்தபந்தங்கள் அனை வரும் அங்கங்கே அமர்ந்து பேசிக் கொண்டி ருந்தனர். 20 வருட பிரிவுக்குப் பிறகு சேர்ந்த சொந்தங்களின் முகத்தில் சந்தோஷமும், பாசமும் மிளிர்ந்தது. அந்த நேரம் பார்த்து உறவினர் ஒருவர் தாலி செயினையும் படவை பற்றியும் சொன்னது மற்றவர்கள் காதுக்கு வர, ஒரு நிமிடத்தில் வீடே சண்டை வீடாகி விட்டது. `யார் அப்படி சொன்னது? கூப்பிடு. இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்' என்று பெண் வீட்டுக்காரர்கள் மல்லுக்கட்டத் தொடங்க, கடைசியில் என் பெற்றோர் தலையிட்டு ஒருவழியாக சமாதானம் செய்தனர்.

விருந்துக்கு வரும் உறவினர்கள் கல்யாணத்துக்கு வந்தோமா, சாப்பிட்டோமா எனச் செல் லுங்கள். தேவையில்லாமல் எதையாவது கூறி சந்தோஷ நிகழ்வில் சஞ்சலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்.

சி.சித்ராதேவி, திருவள்ளூர் .
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:20 pm

உன் வாழ்க்கை உன் கையில்!

எனக்குத் தெரிந்த பெண்ணொருத்தி கிட்டத்தட்ட 30 வயது தாண்டியும் திருமணமாகாமல் இருந்தாள். துலக்கிய குத்துவிளக்கு போல் அத்தனை அழகு அவள்.தனியார் நிறுவன ஊழியரான அவளது தந்தை பணியில் இருந்து ஓய்வு பெற்றபிறகு குடும்பத்திற்கென்று வேறு வருமானமில்லை. பெரிதாக சொத்தும் கிடையாது.

இதனால் பணத்தை எதிர்பார்த்து பல வரன்கள் வந்து போனார்களே தவிர, அந்தப்பெண்ணின் அழகு அங்கு காட்சிப்பொருளாக மட்டுமே ஆகிப்போனது. அதனால் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

ஒருவழியாக 40 வயது நிரம்பிய ஒருவர் வந்து பெண் கேட்டார். அவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்தவர். பெண்ணின் பெற்றோர் தயங்கியபோது அந்தப் பெண்ணே தைரியமாக முன்வந்து திருமணத்துக்கு சம்மதித்தார்.

திருமணத்துக்கு தேதி முடிவான நிலையில் அந்தப் பெண்ணின் தாயாருக்குத் தான் மனம் கேட்கவில்லை. மகளிடம், "இந்த திருமணத்துக்கு நீ மனப்பூர்வமாகத்தான் சம்மதித்தாயா? அல்லது இன்னும் எத்தனை காலம் தான் பெற்றோருக்கு பாரமாக இருப்பது என்று சம்மதித்தாயா?'' என்றுகேட்டார்.

அதற்கு அந்தப்பெண், "நம் குடும்ப நிலை எனக்குத் தெரியும். இன்றைய ராஜகுமாரன்களும் கல்யாணச்சந்தையில் விலை போகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். பெண்ணைப் பார்த்து அவள் குடும்பம் பார்த்து, குணம் பார்த்து மணமுடிக்கிற எண்ணமெல்லாம் அவர்களிடம் இல்லவே இல்லை. அப்படியிருக்கும்போது கிடைக்காத வாய்ப்புக்கு ஏங்கிக் காத்திருப்பதை விட, தேடிவந்த வாய்ப்பை பற்றிக்கொள்வது தானே சரியாக இருக்கும். அதோடு நானும் மனுஷி தானே. எனக்கு மட்டும் குடும்பம்...வாழ்க்கை...வாரிசுகள் வேண்டாமா?'' என்று சொல்லியிருக்கிறாள்.

மகளின் பேச்சில் இருந்த யதார்த்தம் அந்தத் தாயை கண்ணீர் வடிக்க வைத்து விட்டது. இல்லாமை குடி கொண்டிருக்கிற இடத்தில், சூழலை புரிந்து கொண்டு தன் வாழ்க்கையை தானே தீர்மானித்த அந்தப்பெண் என்னை ரொம்பவே ஆச்சரியப்படுத்தினாள்.

இப்போது அந்தப்பெண் மணமாகி கணவருடன் சந்தோஷமாய் குடும்பம் நடத்துகிறாள்.

-டி.பத்மா, ராம் நகர்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:20 pm

நல்ல மனம் வாழ்க

சில நாட்களுக்கு முன்பு நான் நகரத்தில் உள்ள தபால் நிலையம் சென்றுவிட்டு பஸ்சில் வீடு திரும்ப தயாரானேன். பஸ் நிறுத்தத்தை நோக்கி ரோட்டோரமாய் நடந்து சென்று கொண்டிருந்தேன். திடீரென்று போகும்வழியில் `ஸ்பீடு பிரேக்கர்' இருந்தது தெரியாமல் கால் தடுக்கி கீழே விழுந்து விட்டேன். விழுந்த வேகத்தில் கல் குத்தி ரத்தம் பீறிட்டு வந்ததில் மயக்கம் அடைந்திருக்கிறேன்.

நான் மயக்க நிலையில் ரோட்டோரம் கிடந்ததை பார்த்த ஒருவர் உடனே அந்தத் தெருவில் வசிக்கும் பெண்மணி ஒருவரை துணைக்கு அழைத்திருக்கிறார். அந்த பெண்மணியும் அவரது வீட்டிற்கு என்னை கொண்டு சென்று முதல் உதவி செய்து, வீட்டருகே இருந்த டாக்டரையும் அழைத்து சிகிச்சை கொடுத்திருக்கிறார். சிறிது நேரத்தில எனக்கு மயக்கம் தெளிந்தது. உடனே எனக்கு சூடாக காபி கொடுத்தவர், என் செல்லை வாங்கி என் கணவருடன் பேசி அவரை வரவழைத்தார். கணவர் வந்தவுடன் நடந்ததை சுருக்கமாக சொல்லி `இப்போ உங்கள் மனைவிக்கு நன்றாகி விட்டது. நீங்கள் பத்திரமாக அழைத்துச் செல்லுங்கள்' என்று கூறி சிரித்தமுகமாய் வழியனுப்பியும் வைத்தார்.

தெரிந்தவர்களையே யார் என்று கேட்கும் இந்தக்காலத்தில், இப்படி நல்ல மனிதர்களை பார்த்ததில் என் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. கடவுள் மற்றவர்களுக்கு உதவ இவர்கள் மாதிரி மனிதநேயமுள்ளவர்களைப் படைத்திருக்கிறார் என்பதை மனதார புரிந்து கொண்டேன்.

-கே.சரண்யா, காட்டூர்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:20 pm

கருணைக்கு உயிர் கொடுத்தவர்!

சமீபத்தில் ஒருநாள் அலுவலகப் பணியை முடித்துவிட்டு டூவீலரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். வழியில் கும்பலாய் சிலர் நின்று எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம், "எதற்காக இப்படி கூட்டமாய் நிற்கிறீர்கள்?'' என்று கேட்டேன். அவர்கள் ரோட்டோரம் தேங்கிக் கிடந்த சாக்கடைக்குட்டையை காட்டினர்கள். அங்கே கோட்டும் சூட்டும் அணிந்த ஒரு பெரிய மனிதர் ஒருவர் சாக்கடைத் தண்ணீரில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்றை கொஞ்சமும் முகம் சுளிக்காமல் தூக்கிஎடுத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன்.

நாய்க்குட்டியுடன் அவர் தன் கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்தார். காரில் இருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தார். நாய்க்குட்டியை குளிப்பாட்டினார். அடுத்த கணம் டவல் ஒன்றால் துடைக்கவும் செய்தார்.

நான்அவரை நெருங்கி "இத்தனைபேருக்கு இல்லாத பொதுநலம் உங்களிடம் இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்'' என்றேன்.

பதிலுக்கு அவரோ, "இது பொதுநலம் இல்லை. சுயநலம் தான்'' என்றார். எப்படி என்று நான்ஆச்சரியமாய் கேட்க, அவர் சொன்ன பதில் இன்னும் ஆச்சரியமானது. "என்னால் செய்யக்கூடிய ஒரு காரியத்தை நான் பார்த்தபிறகும் செய்யாமல் போனால் அந்த உணர்வே என்னை நாள் முழுக்க ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும். இப்போது இந்த நாய்க்குட்டியை ஆபத்தான நிலையில் பார்த்தபிறகும் கண்டுகொள்ளாமல் போயிருந்தால், நாள் முழுக்க `நாய்க்குட்டிக்கு என்னாயிற்றோ? அது பிழைத்ததோ இல்லையோ தெரியவில்லையே' என்றெல்லாம் எனக்குள்ளாக ஒரு கவலை ஓடிக்கொண்டிருக்கும். இதனால் தூக்கமும் பறிபோய் விடும். அப்படியானால் இதில் என் மனம் சம்பந்தப்பட்ட சுயநலமும் தானே இருக்கிறது. அதேசமயம் உதவினால் நம்மால் செய்யமுடிந்த ஒரு நல்ல காரியம் என்ற மனநிறைவுடன் அடுத்த வேலையில் மனதைச் செலுத்துவேன்'' என்றார்.

இப்படியும் மனம் கொண்ட மனிதர்களா? நிஜமாகவே நெகிழ்ந்து போனேன்.

-சா.ஆனந்த் பிரகாஷ், நி.பஞ்சம்பட்டி.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:20 pm

மகனை ஓடவைத்த தாய்ப்பாசம்

என் உறவுக்கார பாட்டி ஒருவருக்கு மூன்று மகள்கள். ஒரு மகன். பாட்டி தனது மகள்களைக் காட்டிலும் மகன் மீது அதிக பாசத்தை கொட்டி வளர்த்தார்.

மகள்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அப்படியே மகனுக்கும் ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தார். மகனுக்கு அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் பிறந்தன. பாட்டியின் கணவர் விவசாயத்தை கவனித்ததால் குடும்பம் பணத்தட்டுப்பாடு இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. திருமணத்துக்குப் பிறகும் பாட்டி மகன் மீது காட்டிய அளவுக்கு அதிகமான பாசத்தால் மகன் வேலைக்குப் போவதையே மறந்தான்.

இந்நிலையில் பாட்டியின் கணவர் எதிர்பாராமல் இறந்து விட, மகன் வேலைக்குப் போய் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை. வேலைக்குப் போவதை பெரும் தண்டனையாக நினைத்த அந்த மகன் ஒருநாள் ராத்திரி எல்லாரும் அசந்து தூங்கிய நேரத்தில் வீட்டில் இருந்து ஓடிவிட்டான்.

அதிர்ச்சியடைந்த அவன் தாயார் மகனை சுற்று வட்டாரம் முழுக்க தேடிப்பார்த்தார். கிடைக்கவில்லை. எங்கிருக்கிறான் என்பதும் தெரியவில்லை. அவன் இப்படி ஓடிப்போய் இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. ஆனாலும் அவன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அந்த வயதான தாயார் தான் உழைத்து சோறு போடுகிறார்.

பாசம் காட்டி வளர்த்த பிள்ளை எப்படியாவது திரும்பி வருவான். தன் சுமையை மாற்றுவான் என்று நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார், அந்த அப்பாவித் தாய்.

-க.கருணாநிதி, கொட்டியப்படுகை.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:21 pm

கொட்டும் மழையில் கொட்டிய கருணை

நண்பர் ஒருவர் இரவுப்பணிக்காக தன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினார். அப்போது பார்த்து நல்ல மழை கொட்டத் தொடங்க, மழை நின்றதும் போகலாம் என்று வீட்டில் சொல்லியிருக்கிறார்கள். என்றாலும் அலுவலகத்துக்கு தாமதமாகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் மழையை பொருட்படுத்தாமல் அவர் மழைக்கோட்டை மாட்டிக்கொண்டு ஸ்கூட்டரில் கிளம்பி விட்டார்.

வழக்கமாக போகிற பாதையில் தெருவை அடைத்தபடி மழைத்தண்ணீர் ஓடியதால் வாகனம் பழுதாகி நின்று விடக்கூடும் என்ற அச்சத்தில் வேறு பாதையில் வாகனத்தை செலுத்தியிருக்கிறார். ஆனால் அந்த தெருவில் கேபிளுக்காக தோண்டிய பள்ளத்தை மழை நீர் நிரப்பியிருக்க, தெரியாமல் அந்த பள்ளத்தில் விழுந்து விட்டார்.

வண்டியுடன் விழுந்ததில் உடம்பில் நல்ல அடி. அவர் போட்ட கூச்சல் அந்த தெருவில் அப்போது வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோ டிரைவர் காதில் விழ, அவர் உடனே தனது ஆட்டோவில் அவரை தூக்கிப்போட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். அதோடு நில்லாமல் அவர் சட்டைப் பையில் இருந்த விசிட்டிங் கார்டில் இருந்து வீட்டு நம்பருக்கு போனில் பேசியும் இருக்கிறார். அவர்களும் பதறியடித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவருக்கு அன்பளிப்பாக ஒரு தொகையை கொடுத்திருக்கிறார்கள். அவரோ அதை வாங்க மறுத்ததோடு, இவர் விரைவில் குணமாக இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றும் சொல்லி விட்டு கிளம்பியிருக்கிறார். இப்படியும் மனிதர்கள்.

டி.ராஜன், கோச்சடை
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:21 pm

வலுப்படும் தாத்தா - பேரன் பாசம்

சமீபத்தில் என் தோழியின் வீட்டுக்குச்சென்றிருந்த போது தோழியின் மாமனார் ரேஷன் கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். அவருடன் தன் 5 வயது மகனையும் அனுப்பி வைத்தாள் தோழி.

`ரேஷன் கடைக்குத்தான் உன் மாமனார் போகிறாரே, பிறகு எதற்கு உன் சிறுபையனையும் ரேஷன் கடைக்கு அனுப்புகிறாய்?' என்று தோழியிடம் கேட்டேன். அதற்கு தோழி என்னிடம், `கடந்தமுறை என் மாமா ரேஷனில் பொருட்கள் வாங்கி வந்தபோது மறதியாக ரேஷன்கார்டை விட்டு விட்டு வந்து விட்டார். நல்லவேளையாக தெரிந்தவர்கள் கொண்டு வந்து வீட்டில் கொடுத்தார்கள். இப்போது என் பையனையும் கூட அனுப்புவதன் நோக்கம். மாமா எதையாவது மறந்து போனாலும் இவன் ஞாபகப்படுத்துவான். அதோடு போகும்போதும் வரும்போதும் தன் தாத்தாவின் கையை பிடித்துக் கொண்டு நடப்பதால் இயல்பாகவே தாத்தா மீது அவனுக்குள் அன்பு தழைத்து விடும். அதோடு அவன் தாத்தாவுக்கும் நாம் தனிமைப்படுத்தப் படுகிறோம் என்ற எண்ணம் வராது' என்றாள்.

பெரியவர்களை இன்றைய இளைய தலைமுறை மதிக்கவேண்டும் என்ற என் தோழியின் எண்ணமே உயர்வானது. அதற்காக அவளை மனதார பாராட்டி விட்டு வந்தேன்.

எஸ்.நித்யா, கரையான்சாவடி
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:21 pm

உடம்பை வளர்க்கும் ஹார்மோன் கோழிகள்

நெருங்கிய தோழியின் மகள் பூப்பெய்திய விழாவுக்கு போயிருந்தேன். தோழியின் தூரத்து உறவினர் பெண்ணான ஆசிரியையும் வந்திருந்தார். சடங்கு, சம்பிரதாய நிகழ்வுகள் முடிந்ததும் அந்த ஆசிரியை பூப்பெய்திய பெண்ணின் வயதைக் கேட்டார். 9 வயது என்றார்கள்.

இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை ஒரு அதிர்ச்சி தகவலை சொன்னார். `இன்றைய பல குடும்பங்களில் வாரம் ஒருமுறை தவறாமல் பிராய்லர் சிக்கன் கோழிகளை வாங்கி சமைக்கிறார்கள். ஆண்களுக்கு இது எப்படியோ, ஆனால் பெண்களுக்கு ஒருவிதத்தில் ஆபத்து' என்றார்.

பண்ணைகளில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் நாற்பதே நாளில் பருத்து வளர ஹார்மோன் இன்ஜக்ஷன் போடுவது உண்டாம். இந்தக் கோழிகளை சமைத்து சாப்பிடும் நமக்கும் ஹார்மோன் வேலை செய்கிறது. குறிப்பாய் பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு முன்னரே பருவம் எய்தும் வேலையை செய்கிறது. இது பிஞ்சு பழுக்கும் அபாயம் ஆகும்.

கோழிகளுக்கு போடப்பட்ட ஊசி நமக்கு எப்படி வேலை செய்கிறது என்கிறீர்களா? அந்த ஹார்மோன் உற்பத்தி செய்யும் வைரஸ்களை அழிக்கக்கூடிய அளவுக்கு நம் சமையல் கொதிநிலை போதாது. உலோகங்களை உருக்கத் தேவையான அளவு வெப்பமே அந்த ஹார்மோன்களை அழிக்கவல்லது என்றார்.

தோழியிடம் விசாரித்தபோது பூப்பெய்திய அவள் மகள் விரும்பி சாப்பிடும் உணவுப்பட்டியலில் பிராய்லர் சிக்கனுக்குத்தான் முதல் இடம் என்றாள். சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கூட கேட்பாளாம்.

பெண்களை பெற்றவர்களே, இம்மாதிரி வயதில் உங்கள் பெண் குழந்தைகளுக்குஎந்தெந்த உணவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதை டாக்டர்களிடம் கேட்டு பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

பி.ஜெயலட்சுமி, திருப்பூர்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:21 pm

ஆங்கிலப் படிப்பா, ஆளை விடு..!

என்னுடைய உறவினர் ஒருவர் முன்னாள் எம்.எல்.ஏ. படிப்பு வாசனை இல்லாதவர். பணமும் பதவியும் இருந்ததால் படிப்பு இல்லாதது ஒரு குறையாகத் தெரியவில்லை.

ஆனால் அவருக்கோ படித்தவர்களைக் கண்டாலே ஆகாது. அதுவும் அவர் எதிரில் தெரியாமல் யாராவது ஆங்கிலத்தில் பேசி விட்டால் அவ்வளவு தான். மட்டம் தட்டி அனுப்பி விடுவார்.

என் மூத்தமகன் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவன். உறவினருக்கு இருந்த செல்வாக்கு என் மகனுக்கு அவர் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தி வைத்திருந்தது. அந்த மரியாதையின் நிமித்தமாய் ஒருநாள் அவரை வீட்டில் சென்று சந்தித்தவன், தனக்கு ஏதாவது வேலைக்கு சிபாரிசு செய்யும்படி கேட்டிருக்கிறான்.அவரோ `என்ன படித்திருக்கிறாய்?' என்று கேட்க, இவனும் பெருமையாய் எம்.ஏ.ஆங்கில இலக்கியம் என்று சொல்லியிருக்கிறான். ஆங்கிலம் என்ற வார்த்தையைக் கேட்டதும் டென்ஷனானவர், `ஏண்டா இதெல்லாம் ஒரு படிப்பா? தமிழ்ல வேற ஏதாவது நல்ல படிப்பா படிச்சிட்டு வந்து கேளு. நீ எதிர்பார்த்ததை விட பெரிய வேலையா வாங்கித் தரேன்' என்றிருக்கிறார். அன்று முதல் அவரை எதிரில் பார்த்தாலே போதும், ஓட்டம் பிடித்து விடுகிறான் என் மகன்.

ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு மரியாதை இருக்கும். இதை படிப்பறிவு இல்லாத உறவினர் போன்றவர்கள் உதாசீனம் செய்யாதிருந்தாலே போதும்.

கே.பி.தேவிபெருமாள், மவுலிவாக்கம்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:21 pm

பழகிய வாகனம், பதறிய நெஞ்சம்!

நான் ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் தமிழாசிரியையாக பணியாற்றி வருகிறேன். அங்கு பணியில் இருந்த சீனியர் ஆசிரியர் ஒருவர் எப்போதும் ஒரு பழைய டூவிலரில் தான் பள்ளிக்கு வருவார். தெரிந்தவர்கள் முகத்துக்கு எதிரில் `ஓட்டவண்டி' என்று கிண்டல் செய்தாலும் சிரித்துக் கொள்வாரே தவிர கோபப்பட மாட்டார். அப்புறம்தான் அது அவர் அப்பா வாங்கிக் கொடுத்த வண்டி என்பதை தெரிந்து கொண்டேன்.

தன் அப்பாவின் `ரிடையர்மென்ட்' பணத்தில் தனக்கு அப்பா அன்புடன் வாங்கி கொடுத்த இருசக்கர வாகனம் 10 வருடங்களில் பழுதாகி விட்டதாகவும், அதை விற்க மனமில்லாமல் தன் நண்பன் ஒருவனின் `மெக்கானிக் ஷாப்பில்' 4,000 ரூபாய்க்கு விற்று விட்டதாகவும். அதன்பின் அந்த வண்டியின் நினைவில் மனம் வருந்தியதாகவும் கூறினார். ஒரு நாள் வேறு ஒரு நண்பனை பார்க்க சென்றபோது அந்த வழியில் இருந்த ஒரு காவல் நிலையத்தின் ஓரத்தில் தன் வண்டி கண்ணில் படவே, சற்றே பதற்றத்துடன் நின்று பார்த்திருக்கிறார். அது தன் நண்பனிடம் விற்ற வண்டி தான். மிகவும் மோசமான நிலையில் துருப்பிடித்து காணப்பட்டதை பார்த்து அதிர்ந்து போனவர், உடனே ஒரு பெரிய மனிதரின் உதவியுடன் அந்த வண்டியை மீட்டு, பழுது பார்த்து, புதிய வண்டிபோல மெருகேற்றி வைத்திருக்கிறார். வீட்டில் புதுவண்டி இருந்தாலும் தன் அப்பா வாங்கி கொடுத்த அந்த வண்டியை இன்றும் பயன்படுத்தி வருவதாக கூறினார். ``ஓட்ட வண்டி'' என கிண்டல் செய்தவர்களின் நடுவில் அவரின் ``அன்பு உள்ளம்'' இமயமாக தெரிந்தது எனக்கு.

-ஜாஸ்மின், சென்னை-49.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:22 pm

பெற்றோரின் ஆடம்பரத்தில் தொலைந்த பிள்ளைகள் கல்வி

எனக்கு தெரிந்த பெண் ஒருத்திக்கு 3 மகள்கள், ஒரு மகன். கணவன் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருந்ததால் இஷ்டத்திற்கு செலவழித்தாள். குழந்தைகளுக்கு ஆடம்பர ஆடைகளை அணிவிப்பது மட்டுமின்றி தானும் ஆடம்பரமாகவே இருந்தாள். கணவனுக்கு வெளிநாட்டில் நண்பர்கள் அதிகம்.

அவர்களில் சிலருக்கு தன் சக்தியை மீறி கடன்வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனால் யாரும் பணத்தை திருப்பித் தரவில்லை. அதனால் கடன் கொடுத்தவர்கள் தந்த நெருக்கடி காரணமாக ஆசையாக கட்டிய பெரிய வீட்டை விற்று கடனை அடைத்தார்.

அதற்குப்பிறகு நண்பர்களிடம் ஏமாந்த அதிர்ச்சியால் அங்கே வேலை பார்க்கப் பிடிக்காமல் ஊருக்கே வந்து விட்டார். இப்போது ஊரில் சின்னதாய் ஒரு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். தாயோ தனது 3 மகள்களுடன் வேலைக்கு போய் குடும்ப செலவை சமாளிக்கிறாள். மனைவியின் ஆடம்பரமும் கணவரின் வெகுளித்தனமும் சேர்ந்து அவர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதித்து விட்டது.

-செ.மணிமொழி, உள்ளூர்வட்டம்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:22 pm

நல்ல மனம் வாழ்க

நான் கடையுடன் கூடிய வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்து ஒட்டல் நடத்தி வந்தேன். மாதம் பிறந்ததும் வீட்டு உரிமையாளரிடம் கரெக்டாக வாடகை கொடுத்து விடுவேன். சில மாதங்களுக்கு முன் திடீரென்று எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினேன். இதனால் நான் தொழிலில் ஈடுபட முடியாமல் 3 மாத காலம் வருமானத்தை இழந்தேன்.

இருதய ஆபரேஷனுக்கான அதிக பட்ச செலவில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு நிலை குலைந்திருந்தேன். திடீரென்று ஒருநாள் வீட்டு உரிமையாளர் என்னை பார்க்க வந்திருந்தார். என் உடல் நலத்தை விசாரித்தவர், `வீட்டுக்கும், கடைக்கும் வாடகை கொடுக்கணுமே என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். நீங்கள் மீண்டும் கடை திறந்து நல்ல நிலைக்கு வரும்போது கொஞ்சம், கொஞ்சமாக கொடுத்தால் போதும்' என்று கூறி என்மன நெருக்கடியை குறைத்தார். அவரது பெருந்தன்மையில் என் தன்மானத்தையும் நிலைநிறுத்தினார். தற்போது மீண்டும் கடை நடத்தி, நிலுவையில் இருக்கும் வாடகை பாக்கியையும் அடைத்து வருகிறேன்.

இரா.மணிவண்ணன், கோவை.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:22 pm

திரும்பி வந்த சந்தோஷம்

வெளிïரில் இருக்கும் தங்கையை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்றேன். நான் போய் இறங்கிய நேரத்தில் தங்கை வீட்டில் இல்லை. வீடு பூட்டிக்கிடந்தது. வீட்டைப் பூட்டிவிட்டு எங்கே போயிருக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ள பக்கத்து வீட்டில் போய்க்கேட்டேன். தங்கை மார்க்கெட் போயிருப்பதாகவும் இப்போது வரும் நேரம் தான் என்றும் அவர்கள் சொல்ல, உடனே ஆட்டோ டிரைவருக்கு வாடகை கட்டணம் கொடுத்து அவரை அனுப்பி விட்டேன். கொஞ்ச நேரத்தில் தங்கையும் வந்து விட, அவளை பார்த்த மகிழ்ச்சியில் உற்சாகமாய் பேசியபடி வீட்டுக்குள் போனேன்.

அரை மணி நேரம்கூட ஆகியிருக்காது. என்னை தங்கை வீட்டில் இறக்கி விட்டுப் போன ஆட்டோ டிரைவர் மறுபடியும் ஆட்டோவை கொண்டு வந்து தங்கை வீட்டு வாசலில் நிறுத்தினார்.

ஆட்டோ கட்டணம் தான் கொடுத்து அனுப்பி விட்டோமே, மறுபடி இவர் எதற்காக வந்தார் என்ற யோசனையில் அவரை பார்த்தேன். அவர் என்னிடம், "அம்மா! ஆட்டோவில் இருந்து இறங்கும்போது எதையாவது எடுக்க மறந்தீர்களா?'' என்று கேட்டார். அப்போது பார்த்து சட்டென்று நான் எடுக்க மறந்துபோன பேக் நினைவுக்கு வர, `அய்யோ என் பேக்கை எடுக்க மறந்து விட்டேனே' என்று பதட்டமாய் கூறினேன். `இதுதானா பாருங்கள்' என்று பேக்கை காண்பித்தார். நானும் இதுதான் என்று கூறி பேக்கை பெற்றுக் கொண்டேன்.

என் பேக்கில் கொஞ்சம் நகைகளுடன் பணமும் வைத்திருந்தேன். அது அப்படியே இருந்தது. நான் அவருக்கு அன்பளிப்பாக பணம் கொடுத்தேன். அவர் வாங்க மறுத்து விட்டார். அப்படியானால்பேக்கை கொடுக்க வந்ததற்கான ஆட்டோ கட்டணத்தையாவது பெற்றுக் கொள்ளுங்கள் என்றேன். அதற்கும் மறுத்து விட்டார். அந்த நல்ல மனிதருக்கு மனதார நன்றி செலுத்தினேன்.

-கே.சந்திரவதனா, கிழக்கு கந்தசாமிபுரம்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:22 pm

தாய்மையின் சிறப்பு

நான் ஈரோடு செல்வதற்காக சேலம் பஸ் நிலையத்தில் நின்றிருந்தேன்.அப்போது இளைஞர் ஒருவர் தன் குழந்தையுடன் பஸ் ஏற வந்திருந்தார். அந்தக் குழந்தை தன் அப்பாவிடம், பால் வாங்கித் தருமாறு கேட்டது. உடனே அந்த இளைஞரும் பக்கத்தில் இருந்த டீக்கடையில் பால் வாங்கப் போனார். டீக்கடையிலோ அதிக கூட்டம். அதனால் பால் கேட்டவரிடம் ஆற்றாமல் அப்படியே கொடுத்து விட்டார், கடைக்காரர். அதை இவரும் கவனிக்காமல், சூடாக பாலை ஊட்ட, குழந்தை சூடு தாங்காமல் கதறி விட்டது.

இதைக் கண்டதும் தன் குழந்தைக்கு பால் வாங்கி ஆற்றிக் கொண்டிருந்த ஒரு பெண், அப்படியே இந்தக் குழந்தைக்கும் ஆற்றிய பாலைக் கொடுத்து பசியமர்த்தினார். இதைக்கண்டபோது தாய்மையின்சிறப்பே இது தான் என்று எண்ணி மகிழத் தோன்றியது.

-ஆர்.எழில்மாறன், நரிப்பள்ளி
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:23 pm

வருந்தினார்கள்... திருந்தினார்கள்...

அந்த காம்பவுண்டில் பத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. எல்லாருமே நன்கு அனுசரித்து பழகி வந்தனர். விதிவிலக்காக ஒரு குடும்பத்தினர் மட்டும் பிறரை மதிக்காத குணம் கொண்டவர்களாக இருந்தனர்.

குப்பைகளை பொது இடத்திலே போடுவது, தொலைக்காட்சியை சத்தமாக வைத்து படம் பார்ப்பது என்று எதையும் தங்கள் இஷ்டத்திற்கு செய்து வந்தனர்.

சமயங்களில், `தொலைக்காட்சி சத்தம் பக்கத்தில் படிக்கும் பிள்ளைகளின் படிப்பை பாதிக்கிறது. கொஞ்சம் வால்யூமை குறைத்துக் கொள்ளுங்கள்' என்றால், `எங்கள் வீட்டில் நாங்கள் கேட்கிறோம். உங்களுக்கென்ன?' என்று அலட்சியமாக பதில் வரும்.

அவர்களுக்கு பள்ளியில் படிக்கும் ஒரு மகனும் கல்யாண வயதில் ஒரு மகளும் இருந்தார்கள். அந்த மகள் மிகவும் அமைதியான குணவதியான பெண். அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தனர். நாலைந்து மாப்பிள்ளை வீட்டார் வந்து பார்த்தார்கள். பெண் பிடித்துப்போய், `மற்ற விஷயங்ளை பேச இன்னொரு நாளில் வருகிறோம்' என்று சிரித்த முகமாய் போவார்கள். ஆனால் வர மாட்டார்கள்.

இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் கவலைப்படத் தொடங்கினார்கள். எதனால் இப்படி என்று ஆராய்ந்தார்கள். அப்போது தான் பெண் பார்க்க வந்தவர்கள் புறப்பட்டுப் போகும்போது இவர்கள் குடும்பம் பற்றி அக்கம்பக்கத்து வீடுகளில் விசாரித்ததும், அவர்கள் இவர்களை அடாவடிக் குடும்பம் என்று சொன்னதும் தெரிய வந்தது.

இது தெரிந்ததோ இல்லையோ, அவர்கள் போக்கே மாறி விட்டது. `அடடா, எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம்...மற்றவர்களுக்கு உதவாவிட்டாலும் உபத்திரவமாக அல்லவா இருந்திருக்கிறோம்' என்று வருந்தியவர்கள், ஒவ்வொரு வீட்டிலும் சென்று மன்னிப்பு கேட்டதோடு, வீட்டை காலி செய்து விட்டார்கள்.

-ஓ.எஸ்.மசூது, சென்னை-1
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed on Sat Jul 20, 2013 11:23 pm

இழப்பு நேரத்திலும் கடமை தவறாத நெஞ்சங்கள்

எங்கள் பகுதியில் அண்ணாச்சி ஒருவர் மளிகைக் கடை வைத்திருந்தார். அவருக்குத் துணையாக அவரது மனைவியும் அவ்வப்போது கடைக்கு வந்துவியாபாரத்தை கவனித்துக் கொள்வார். இந்த தம்பதிகளுக்கு எட்டாவது படிக்கும் ஒரு மகன் இருந்தான். அந்த சிறுவன் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று பால் பாக்கெட், காலை நாளிதழ்களையும் வினியோகித்து விட்டு 8 மணிக்கெல்லாம் பள்ளிக்கும்
தயாராகி விடுவான்.

சமீபத்தில் ஒருநாள் அண்ணாச்சிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வதற்குள் இறந்து போனார்.

மறுநாள் காலையில் வழக்கம்போல் எல்லாருடைய வீட்டிலும் பால் பாக்கெட்டும் காலை நாளிதழும் போடப்பட்டு இருந்தது. தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பெரும் இழப்பையும் தாங்கிக்கொண்டு, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அண்ணாச்சியின் குடும்பம் நினைத்ததே இதற்குக் காரணம்.

இப்படியும் கடமை தவறாத மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

-சுமதிபாபு, கோவூர்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum